Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழை மறக்காமல் இருக்க.
#21
வணக்கம் அஜீவன் ! குருவிகளின் கருத்துக்கள் உங்களுக்கு எனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் என நம்புகிறேன். நான் முற்றுமுழுதாக சினிமா எதிர்பாளியல்ல. சினிமா , தொலைக்காட்சி அது கண்ணுணரும் ஒரு இனிய சாதனம். அது சமூகத்தைக் குழியில் புதைக்கும் கருத்துக்கள் பாடல்களைத் தருவதால் அந்தச்சமூகத்தின் ஆணிவேரே பாறுவதற்கு வழியமைக்கும். அந்த குறுக்குத்தனமான உளைப்பையே நான் எதிர்க்கிறேன். அது மணிரத்தினமாக இருந்தாலென்ன பாலுமகேந்திராவாக இருந்தாலென்ன அது நீங்களாக இருந்தாலும் நான் எதிர்ப்பேன்.

சினேகன் பேசிய பட்டிமன்றத்தில் இன்னும் பலர் பேசினார்கள். ஆனால் அவர்களின் பேச்சுக்கள் முழுவதையும் கேட்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அதுபற்றியும் சொல்லியிருக்கலாம். ஒரு நாளில் காலை 8இலிருந்து 5மணிவரையும் எனது நேரத்தில் பாதி பேரூந்தில் கழிகிறது. அங்குகூடப்பல விடயங்களைக் கேட்கிறேன். பார்க்கிறேன். அதில் என் கண்டனத்துக்குரிய பலவும் நடக்கின்றன. அதை எதிர்க்க எதிர்த்துக் கருத்துக்கூற உரிமையிருக்கிறது. அதற்காக அந்த நேரத்தை ஒதுக்க என்னால் முடியாது. ஏனெனில் நான் பேரூந்தில் பயணிக்க வேண்டிய தேவையிருக்கிறது.

குடிகுடியைக்கெடுக்கும். குடித்து விட்டுத்தான் குடி கெடுதியானது என்று சொல்கிறார்களா ? அல்லது எழுதுகிறார்களா ? அனுபவங்களே அதையெல்லாம் உணர்த்துகிறது.

ஓ இது வேலியே பயிரை மேயும் செயல் என்பதா கருத்து ?
Reply
#22
shanthy Wrote:வணக்கம் அஜீவன் ! நான் முற்றுமுழுதாக சினிமா எதிர்பாளியல்ல. சினிமா , தொலைக்காட்சி அது கண்ணுணரும் ஒரு இனிய சாதனம். அது சமூகத்தைக் குழியில் புதைக்கும் கருத்துக்கள் பாடல்களைத் தருவதால் அந்தச்சமூகத்தின் ஆணிவேரே பாறுவதற்கு வழியமைக்கும். அந்த குறுக்குத்தனமான உளைப்பையே நான் எதிர்க்கிறேன். அது மணிரத்தினமாக இருந்தாலென்ன பாலுமகேந்திராவாக இருந்தாலென்ன அது நீங்களாக இருந்தாலும் நான் எதிர்ப்பேன்.

எனது குறும்படம் எச்சில்போர்வை யாழ்களத்தின் கடின உழைப்பில் களமாடி நிற்கிறது.

தவிர என்னோடு கரம் சேர்த்து உழைத்த புலம் பெயர் கலைஞர்களின் உழைப்போடும் தாகங்களுடனும் உருவான 13 நிமிட குறும்படத்துக்கு உங்கள் விமர்சனத்தை அல்லது கருத்தை முன் வையுங்கள்.

இதை நம் அனைத்துக் கலைஞர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.அதைத் தொடர்ந்து செய்யுங்கள்.........

நாம் ஏன் நம்மவரது படைப்புகளை பார்க்காமல் ,அவற்றை கண்டு கொள்ளாமல் அடுத்தவரை பற்றிப் பேச வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் நாம் ஏதாவது நமக்காக செய்ய வேண்டும். அடுத்தவரிடமிருக்கும் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.அவர்களை பற்றி ஏளனப் பேச்சு பேசி பேசியே நாமே நம்மை எள்ளி நகையாடப்பட வைத்து விடக் கூடாது என்று என்னோடு வேலை செய்யும் கலைஞர்களுக்கு சொல்வேன்.

எனக்குத் தெரிந்த எதையும் மறைக்காமல் சொல்லிக் கொடுப்பேன். என்னோடு இருப்பவர்கள் என் நண்பர்களல்ல,அவர்கள் எனக்குள் ஒரு அங்கம்.கலைஞர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் என்னுள் ஓர் மூச்சுதான்.

எனவே உங்களைப் போன்றவர்கள் நல்லதை மட்டும் துாவி பயிரிட வேண்டி விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம் சாந்தி.

கலை என் உயிர் மூச்சுக் காற்று அதுவே என் ஜீவன்................ -அஜீவன்
Reply
#23
திருவாளர் கனகராயனார் அவர்களின் கவனத்திற்கு,
'பனங்கொட்டைத் தமிழ்' என்று நான் குறிப்பிட்டதுக்கு மனம் வருந்துகிறேன்.

இனிவரும் காலங்களில் இம்மாதிரியான சொறிபிரயோகங்களை தவிர்க்க முயற்சிக்கிறேன்.

மீண்டும் . . உங்களை காயப்படுத்தியதுக்கு மனம்வருந்துகிறேன்.

மற்றும் உங்கள் வீட்டில் தமிழ் பற்றி எனக்கும் உடன்பாடே.
Reply
#24
[quote]எனது குறும்படம் எச்சில்போர்வை யாழ்களத்தின் கடின உழைப்பில் களமாடி நிற்கிறது.

தவிர என்னோடு கரம் சேர்த்து உழைத்த புலம் பெயர் கலைஞர்களின் உழைப்போடும் தாகங்களுடனும் உருவான 13 நிமிட குறும்படத்துக்கு உங்கள் விமர்சனத்தை அல்லது கருத்தை முன் வையுங்கள்.

இதை நம் அனைத்துக் கலைஞர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.அதைத் தொடர்ந்து செய்யுங்கள்.........

நாம் ஏன் நம்மவரது படைப்புகளை பார்க்காமல் ,அவற்றை கண்டு கொள்ளாமல் அடுத்தவரை பற்றிப் பேச வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் நாம் ஏதாவது நமக்காக செய்ய வேண்டும். அடுத்தவரிடமிருக்கும் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.அவர்களை பற்றி ஏளனப் பேச்சு பேசி பேசியே நாமே நம்மை எள்ளி நகையாடப்பட வைத்து விடக் கூடாது என்று என்னோடு வேலை செய்யும் கலைஞர்களுக்கு சொல்வேன்.

எனக்குத் தெரிந்த எதையும் மறைக்காமல் சொல்லிக் கொடுப்பேன். என்னோடு இருப்பவர்கள் என் நண்பர்களல்ல,அவர்கள் எனக்குள் ஒரு அங்கம்.கலைஞர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் என்னுள் ஓர் மூச்சுதான்.



நன்றி வணக்கம் சாந்தி.

கலை என் உயிர் மூச்சுக் காற்று அதுவே என் ஜீவன்................ -அஜீவன்

உங்கள் குறும்படங்கள் எதையும் இன்னும் பார்க்கும் வசதி கிடைக்கவில்லை. தாயகத்தில் வெளியான படங்களில் 90வீதமானவை பார்த்துள்ளேன். தங்கள் படங்களை எனக்கும் அனுப்பி வையுங்கள். எனது கருத்தினை எழுதுகிறேன்.

நாங்கள் எதிலும் நல்லவற்றை எடுத்துக்கொண்டு தீயவற்றை விலக்கத்தயார். இவற்றைப் பிரித்தறியாது , பிரித்துப்பார்க்காது எல்லாவற்றையும் மொண்டுகொள்ளும் சமூகம் உருவாக நாம் வழிசமைக்கக்கூடாது. அதுவே என் விருப்பு.

உங்களுக்குத் தெரிந்த எதையும் மற்றவருக்குச் சொல்லிக்கொடுக்கும் பண்புள்ளம் உங்களிடம் இருக்கிறது. அதுவே உங்களை மேன்மைப்படுத்தும். உங்கள் போன்ற எமது கலைஞர்களை நமது கலையுலகு உள்வாங்க வேண்டும். உங்களிடமிருந்து நிறையக்கற்றுக் கொள்ள வேண்டும். திறக்க வேண்டிய கண்கள் விழிமடல் திறந்து உங்களை உள்வாங்க என் பிரார்த்தனையும் கூடவே உள்ளது.
Reply
#25
மன்னிக்க . . சொற்பிரயோகங்கள் . .மாறி வந்திட்டுது.
Reply
#26
Quote:திருவாளர் கனகராயனார் அவர்களின் கவனத்திற்கு,
'... தமிழ்' என்று நான் குறிப்பிட்டதுக்கு மனம் வருந்துகிறேன்.

இனிவரும் காலங்களில் இம்மாதிரியான சொறிபிரயோகங்களை தவிர்க்க முயற்சிக்கிறேன்.

மீண்டும் . . உங்களை காயப்படுத்தியதுக்கு மனம்வருந்துகிறேன்.

நண்பரே,
என்றன் வேண்டுகோளை ஏற்றதற்கு மெத்த நன்றி. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நெகிழ்வுடன்

கணக்காயனார்

-
Reply
#27
சாந்தி அவர்களே,
அயீவன் அவர்கள் ஆக்கிய 'எச்சிற் போர்வை' இக்களத்தில், 'குறும்படங்'கள் எனும் பிரிவில், 'யாழில் எச்சில் போர்வை' எனும் இழையில் உள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=520

-
Reply
#28
Quote:தென்னிந்தியத்தமிழ்ச் சினமாத்திரைப்படங்கள் எம்தமிழ்க்குழந்தைகள் தமிழை மறக்காமல் இருக்க உதவுகிறதா ? உதவுகிறது எனச்சில பெரியவர்கள் சொல்கிறார்கள். இதுபற்றி

உங்கள் கேள்வியை சற்;று மாற்றிக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு பதிலாக எமது அடுத்த சந்ததி என போட்டுக்கொள்வோமா?
இது சரியாக இருக்கும்.

தென்னிந்திய திரைப்படங்கள் எமது அடுத்த சந்ததி தமிழை மறக்காமல் இருக்க உதவுகிறதா? அதாவது தமிழ் மொழி அவர்களிடம் ஏதோ ஒருவிதமாக ஒட்டிக்கொண்டிருக்க இந்த சினிமா உதவுகிறதா? என்ன சரிதானே. நல்ல கேள்விதான்.

சினிமா தயாரிக்கப்படுவது வேறு ஒரு குறிக்கேளுக்காக. அது பெரும்பாலும் வியாபாரம்தான் மிகச் சிலபடங்கள் கலைக்காக என எடுத்துக்கொள்வோம்.
அவர்;கள் குறிக்கோள் வேறாக(வியாபாரம்) இருக்கும் போது அந்தசினிமா இன்னொரு குறிக்கோளை நிறைவேற்றும் என் எப்படி எதிர்பார்க்க முடியும்.

உங்கள் வீட்டின் முன்பக்கம் புூந்தோட்டம் உள்ளது அதற்காக நீங்கள் பாத்தி கட்டி தண்ணீhக் விடுகிறீர்கள் அது எப்படி வீட்டின் பின் பக்கம் இருக்கும் காய்கறிதோட்டத்திற்கு பயனாக இருக்கும் என் எதிர்பார்ப்பது.

எமது அடுத்த சந்ததி தமிழை மறக்காமல் இருக்க நாம் எத்தனையோ ஆக்கபுூர்வமான காரியங்களை செய்யலாம்.செய்ய வேண்டும். சினிமா எப்படி; இந்த உதவியைச்செய்யும் என எதிர்பார்கிறீர்;;கள். சினிமா நிச்சயம் உதவாது. நாம் தான் தமிழ் அழிந்துவிடாது பார்த்துக்கொள்ள வேண்டும்.

வியாபாரிகளிடம் எப்படி கேட்பது தமிழ் கற்றுக்கொடுக்க படம் கொடு என. ஒன்று செய்யலாம் அந்தக்காலத்து தமிழ்ப்படங்களை வேண்டுமென்றால் பார்த்து எமது ஆற்றலை வளர்த்துக்கொள்ளலாம். புதிய சந்ததியினருக்கு அதைப் பார்க்க பொறுமை இருக்ககுமா? விருப்பம் இருக்ககுமா? ஆகவே விட்டுவிடுங்கள்வேறு யாரும் கிடைக்காமலா போய்விடுவார்கள். தமிழ்ப் பத்திரிகைகளிடம் கொடுத்துவிடுவோமே அந்தப்பொறுப்பை. என்ன சரிதானே.[/quote]
Reply
#29
இங்கே இன்னொன்றை சொல்ல மறந்தததால் அந்த சொல்ல மற்ந்த கதையைச்சொல்கிறேனே.

இந்தவருடம் தையில் சென்னையில் மாபெரும் புத்தக்கண்காட்சி நடந்தது. அங்கு ஒரு புத்தகவிற்பயையாளனாக நானும் பங்கு பற்றினேன். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தலைப்பில் ஒவ்வெருவர் வந்து பேசுவார்கள். இறுதியில் அவர்களிடம் கே;ள்விகள் கூட கேட்கலாம். ஓரு நாள் சுஜாத்தா ஒருநாள் கமல் என் பலர். எனக்கு நேரம் கிடைக்கவில்லை அவர்கள் பேச்சை எல்லாம் கேட்க.

ஒருநாள் பட்டிமனற்ப்பேச்சாளர் சாலமான் பாபாபையா வந்து இருந்தார்;. அவருக்கு கொடுத்த தலைப்பு தமிழ் இனி மெல்லச் சாகும்.

அவர் நிறையப்பேசினார். இறுதியில் ஒன்று சொன்;னார் 'தமிழ் சாகாது தமிழைக்காப்பாற்ற தமிழ் நாட்டு தமிழன் இல்லை என்பது உண்மை தான். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கிறாhகள். அவர்கள் அழியவிட்டுவிடமாட்டார்கள் " என்று.

என் கண்களில் கண்ணீர் அருவியாக ஒடியது.
Reply
#30
உங்களுக்கு சென்னையில் நேரம் கிடைக்காது எனக்குத் தெரியும்.. நீங்கள் சென்னையில் இருந்தால்த்தானே சொன்னையில நேரம் கிடைக்க.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)