Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆபாசத் தளங்களில் நுழைவதை நிறுத்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தரு
#1
ஆபாசத் தளங்களில் நுழைவதை நிறுத்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தரும் வசதி

இணைய தளங்கள் மக்களுக்கு எல்லாவிதமான தகவல்களையும் தந்து வருகின்றன. இதனால் தான் இப்போது கம்ப்யூட்டர் வாங்கும் அனைவரும் கூடவே இன்டர்நெட் இணைப்பையும் சேர்த்தே வாங்குகின்றனர். கம்ப்யூட்டர் விற்பனை செய்திடும் நிறுவனங்களும் கூட இலவச இணைப்பாக மூன்று அல்லது ஆறு மாத இணைய இணைப்பை இலவசமாக வழங்குகின்றன.

தங்கள் பிள்ளைகளின் கல்விக்கும், அறிவு வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் இன்டர்நெட் பெரிதும் பயன்படும் என்று பெற்றோர்கள் எண்ணுகின்றனர். அது உண்மையும் கூட.

எனினும் சில நேரங்களில், பிள்ளைகள் இன்டர்நெட் பயன்படுத்தும் போது அவர்கள் வயதில் காணக்கூடாத பல தளங்களில் நுழைந்து விடுகிறார்கள். ஆபாசம், வன்முறை, இன/மத/மொழி வெறி போன்றவற்றை துõண்டுகிற தளங்களில் நுழைந்து நேரத்தை வீணடிப்பதுடன் சிந்தனையையும் மாசு படுத்திக் கொள்கின்றனர்.

பொதுவாகவே புத்திமதிகள் கூறுவதை குழந்தைகள் விரும்புவது கிடையாது. அதே நேரத்தில் அவர்களை எந்நேரமும் நம்மால் கண்காணித்துக் கொண்டிருக்கவும் முடியாது. அப்படியானால் மோசமான தளங்களை அவர்கள் காண இயலாமல் எப்படித் தடுக்க முடியும்? இதற்காகவே சில சாப்ட்வேர் தொகுப்புகள் உள்ளன. இவற்றை Parental control என அழைக்கின்றனர்.

Parental control எனப்படுகிற இந்த சாப்ட்வேர்

தொகுப்புகளில் ஒன்றை (எ.டு.Netnanny, Cyber patrol, cyber sitter, surf control போன்றவை) நாம் நம் கம்ப்யூட்டர்களில் நிறுவிக் கொள்ளலாம். ஆனால் மோசமான தளங்களில் நுழையவிடாமல் தடுக்கிற இவ்வகை பேரன்டல் கன்ட்ரோல் சாப்ட்வேர்கள் பெரும்பாலும் இலவசமாக கிடைப்பதில்லை. சரி விலைக்கு வாங்கலாம் என நினைத்தால் அவற்றை விற்பனை செய்திடும் நிறுவனப் பிரதிநிதிகள் இந்தியாவில் யாரும் இல்லை. அப்படியானால் இதற்கு வழி தான் என்ன? இங்குதான் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நமது உதவிக்கு வருகிறது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் Content Advisor மூலம் மோசமான தளங்களில் நுழையவிடாமல் தடுக்க முடியும். பாஸ்வேர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே இவற்றில் நுழையும்படி செய்யலாம்.

இன்டர்நெட் எக்ஸ்புரோரரை இயக்குங்கள். Tools=>Internet options ஆகியவற்றை அழுத்துங்கள். டயலாக் பாக்ஸ் ஒன்று கிடைக்கும். அதன் content என்ற டேபை கிளிக் செய்யுங்கள். Enable என்பதை கிளிக் செய்யுங்கள். Ratings என்பதன் கீழ் Language, Nudity, sex மற்றும் violence ஆகியவற்றிற்கான தளங்களில் நுழையவிடாமல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தடுத்துக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.

ஒவ்வொன்றிற்கான ஸ்லைடரையும் இழுத்து இந்த செட்டிங்குகளில் நீங்கள் மாறுதல்களைச் செய்யலாம்.

அணீணீணூணிதிஞுஞீ குடிtஞுண் டேபை அழுத்தி, அங்கே அனுமதிக்க விரும்புகிற அல்லது அனுமதிக்க கூடாத தளங்களின் பெயர்களை டைப் செய்ய வேண்டும். தளத்தின் பெயரை டைப் செய்து Approved Sites பட்டனை அழுத்தினால் அந்த தளம் அனுமதிக்கப்படும் Never பட்டனை அழுத்தினால் அந்த தளம் அனுமதிக்கப்படாது.

General டேபை அழுத்துங்கள். Users can see sites that have no rating என்பதை தேர்வில் இருந்து கழற்றிவிடுங்கள். இனிமேல் அனுமதிக்கப்பட்ட தளங்களைத் தவிர வேறு எந்த தளத்திலும் இவர்கள் நுழைய முடியாது. Supervisor can type a passwod to allow users to view restricted content என்பதைத் தேர்வு செய்யுங்கள். அனுமதிக்கப்படாத தளத்தின் வெப் பக்கம் திரையில் தோன்ற ஆரம்பிக்கும்பொழுது பாஸ்வேர்டை டைப் செய்யும்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கூறும். சரியான பாஸ்வேர்டை டைப் செய்தால் அந்த வெப் பக்கம் திரையில் தெரியும்; இல்லையெனில் தெரியாது.

அனுமதிக்கப்படாத தளங்களின் ஒவ்வொரு வெப் பக்கமும் டவுன்லோடாகும் பொழுது பாஸ்வேர்ட் கேட்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Supervisor password என்ற பகுதியில் உள்ள Create password பட்டனை அழுத்தி Content Advisor என்பதற்கான பாஸ்வேர்டை டைப் செய்யுங்கள். மறுபடியும் அதே பாஸ்வேர்டை மீண்டும் டைப் செய்யுங்கள். பாஸ்வேர்டை நினைவில் வைத்திருப்பதற்கான சிறு குறிப்பை டைப் செய்து Okசொல்லுங்கள்.

இனிமேல் Content Advisor என்பதற்கான செட்டிங்கை மாற்ற முயலும்பொழுது அல்லது அது வேண்டாம்/வேண்டும் என செட்டிங் கொடுக்கும் பொழுது இந்த பாஸ்வேர்டை டைப் செய்ய வேண்டும். எனவே பாஸ்வேர்டை மறந்து விடாதீர்கள்.

Ok பட்டனை அழுத்தி Content Advisor டயலாக் பாக்ஸை மூடுங்கள். இனி இணையத்தில் வேண்டாத தளங்கள் எதுவும் பெற முடியாது.

நன்றி: தினமலர்
மாற்றுவதற்கான உதவி: பொங்கு தமிழ் (நன்றி)
Reply
#2
தினமலரில் இந்த கட்டுரை வின்டோஸ் 98 ஐ மனதில் இருத்தி எழுதபட்டிருக்கவேண்டும் என நினைக்கின்றேன். எனெனில் General tab ல், user can see the sites that have no rating என்ற வசனம் வின்டோஸ் 2000 (IE version 5.00) காணப்படவில்லை
Reply
#3
நன்பா சாமி, நீங்கள் கொடுத்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி.உங்கள் சேவை தொடரட்டும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)