Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Yahoo குழுக்களுக்கு இந்தியாவில் தடை
#1
இன்டர்நெட் தொடங்கப்பட்ட காலத்தில் அது யாருக்கும் சொந்தமானது அல்ல என்ற கருத்து பரவலாக இருந்தது. இன்டர்நெட் இணைப்பில் உள்ள ஏழை பணக்காரர் ஆகிய யாவரும் இது தொடர்பாக தகவல்களை சமமாக பெற்றுக்கொள்ளலாம்.

இன்டர்நெட்டின் உடனடி பயனாக இமெயில் இருந்தது. அதன் பின் குரூப் எனப்படும் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதாவது எந்த ஒரு துறையில் ஆர்வம் உள்ளவர்களும் அது தொடர்பான விஷயங்களை விவாதித்துக் கொள்ள இன்டர்நெட்டில் குழுக்களை தொடங்கினர்.

உதாரணமாக ரஜினி ரசிகர்களோ, போன்சாய் மரம் வளர்ப்பவர்களோ, விண்வெளி நிகழ்ச்சிகளுக்காகவோ, அண்டை நாடுகள் தொடர்பாகவோ எத்தனையோ காரணங்களுக்காக அவர்கள் குழுக்களை தொடங்கி அது தொடர்பான உடனடித் தகவல்களை பரிமாறி வந்தனர். இதற்கு முதலில் உதவியது யாஹூ நிறுவனம்தான். முகவரி: http://groups.yahoo.com/groups/ இத்தளத்தில் யார்வேண்டுமானாலும் வேண்டிய குழுக்களை தொடங்கிக் கொள்ளலாம்.

இதில் சாதகமான அம்சங்களும் இருந்தது, பாதகமான அம்சங்களும் இருந்தது. அதாவது கலாசாரத்துக்கு பொருந்தாத சட்டத்துக்குப் புறம்பான விஷயங்கள் கூட விவாதிக்கப்பப்பட்டன பேசப்பட்டன. இங்குள்ள தகவல்கள் எல்லை கடந்தது என்பதால் பாகிஸ்தானை புகழ்பாடுபவர்களும், இந்தியாவின் செயல்களை இழிந்துரைப்பவர்களுக்கும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. மேகலாயாவில் அரசுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளுக்கு இக்குழுக்கள் பரிந்து பேசியிருக்கின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தொலைதொடர்பு துறை வெளியிட்ட அறிக்கை மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைப்படுத்துவதற்கு பதிலாக அரசு இந்த குழுக்கள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக தடை செய்துள்ளது.

இதனால் சில பயனுள்ள தளங்களை நடத்தியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இந்தவிவாதக் குழுக்களில் களை எடுப்பதற்கு இது போன்ற அதிரடி நடவடிக்கைகளை வேண்டும். யாஹூ குழுத்தளத்துக்கு தற்போது இணைப்பு இல்லை. ஆனால் கூகுள் குரூப் வழக்கம் போல் செயல்படுகிறது. முகவரி: http://groups.google.com

நன்றி : தினமலர்
Reply
#2
ஏன் யாழ் களம்.. என்னவாம்..? இதுகும் ஒரு குறூப்புத்தானே..? MSN YAHOO AOL GOOGLE எல்லாரும் எல்லாக்குழுக்களையும் தடைசெய்தால் யாழ் களமும் எழும்பீடும்.. இல்லையோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)