Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அனுபவம்
#1
வணக்கம்
எழுதிப்பழகுங்கள்
வேதனையான ஒருவிடயத்தை உங்கள்முன் வைத்துக்கொள்கின்றேன். எழுதிப்பழகுகங்கள் எழுதப்பழகுங்கள்.
கடந்த இரண்டு வருடங்களாக எழுத்துவேலை குறைந்து வந்துள்ளது. அதனால் இப்போது எழுதமுற்பட்டால் கையில் ஒரு நடுக்கம். எழுத்து வழுக்கி ஓடும் தன்மை. ஏற்படுகின்றது. அதை எண்ணி கவலைப்படுகின்றேன். எக்காரணம்கொண்டு எழுதிக்கொள்வதை தவிர்த்துக்கொள்ளாதீர்கள். அலுவலகவேலைகளிலும் சரி வீட்டிற்கு கடிதம் எழுதுவதிலும் சரி நான் கணனிமூலமே செய்துகொள்வேன். கைகொண்டு கையொப்பம் மட்டும் இட்டுக்கொள்வேன். அதன் பலாபலனை இப்போது அனுபவிக்கின்றேன். கவிதைகூட கணனியில் எழுதி எழுதி பழகியதால் கையால் பேனையை எடுத்து எழுதுமுயன்றால் கை பதறுகின்றது
எனவே அன்பு நண்பர்களே
உங்கள் எழுத்துப்பழக்கத்தை எக்காரணம் கொண்டும் என்னைப்போல பின்னுக்கு போடாதீர்கள். அதன் பலனை நான் இப்போது அனுபவித்துஅனுபவித்து வேதனைகொள்கின்றேன். அழகுற எழுதுபவன் நான் என்று படிக்குமு; காலத்தில் பெருமிதம் கொள்வேன். தற்பேர்து எனது எழுத்தே எனக்கு வெறுப்பைத்தருகின்றது. இது ஒரு அவமானவிடயமாகவே நான் கருதிக்கொள்கின்றேன். இப்படியான அனுபவங்கள் உங்களிற்கும் இருக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நட்புடன்
பரணீதரன்
[b] ?
Reply
#2
கவலையான உண்மை.

பாடசாலை நாட்களில் ஒவ்வொரு வருடமும் சொல்வதெழுதல், பார்த்தெழுதல் இரண்டிலுமே
எனது அழகிய(பிழையில்லாத) கையெழுத்துக்காக முதற் பரிசைப் பெற்றுக் கொள்வேன்.

தற்போது முடிவதில்லை.
எப்போதாவது தேவையேற்பட்டு எழுதினாலும் எனது கையெழுத்து எனக்கே வெறுப்பைத் தருகிறது.
nadpudan
alai
Reply
#3
பார்த்தெழுதலுமா?<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#4
சுரதா/suratha Wrote:பார்த்தெழுதலுமா?<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ம்... ஆனால்.. பக்கத்து ஆளினுடையதையல்ல.
எனக்குத் தரப் பட்டதை.
nadpudan
alai
Reply
#5
பார்த்து எழுதுவதிலும் பிழை வரும்தானே பக்கத்தில் இருப்பவன் சரியா எழுதினால்தானே அவனும் எப்பவும் பிழைதான்
[b] ?
Reply
#6
Karavai Paranee Wrote:பார்த்து எழுதுவதிலும் பிழை வரும்தானே பக்கத்தில் இருப்பவன் சரியா எழுதினால்தானே அவனும் எப்பவும் பிழைதான்
தம்பி.. பரணி.. எப்பவும்.. பத்தத்தானைப்பற்றி.. கவலைப்படுறியள்.. உங்கடை.. கையெழுத்ழுத்தை.. பக்கம்.. முழுவதும்.. பார்த்து.. எழுதுங்கோ.. எல்லாம்.. திரும்ப.. வரும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#7
ரத்திவாத்தியாரின் பிரம்படி
எழுதவாராத எழுத்தும் உறுப்பாகி
எத்தனை எழுத்துத்திறன் போட்டிகள்
எத்தனை பரிசில்கள்.....? இப்பவும் நினைவாய்....!

கணணியைக் கண்ட பின்னால்
கையாலெழுதிக் கனகாலம்
பரிசுபெற்ற உறுப்பெழுத்து
பார்க்கவே சகிக்கவில்லை.

ஊர்போன போது நண்பரொருவர்
உருக்கமாகவும் , உரிமையுடனும்
உரைத்த வரிகளிவை....

'உன்ர கையெழுத்திலை வாற கடிதமே
எங்களை உன் கல்லு}ரி நாளை நினைக்க வைக்கிறது
உந்தக் கணணியிலை பதிஞ்சனுப்பிற எழுத்து
கடவுளாணைச் சகிக்;கேல்ல"

கனடாவிலையிருக்கிற எங்கடை ரத்திவாத்தியார்
இதைக் கேள்விப்பட்டா கடவுளாணாச் சொல்றன்
கத்தியோடைதான் வருவார்.
ஏனெண்டா உறுப்பெழுத்துக்கு உதாரணம் காட்டின
என்ர கையெழுத்துக் ணணியுக்கை புதைஞ்சு போச்சு.

கவிப்பரணி ! நான் மட்டும்தானெண்டு நாவடக்கியிருந்தன். ஓ...அலை....பரணி....இன்னும் எத்தனைபேரோ.....கடதாசியிலை எழுதுறதெண்டா கனநேரம் செல்லுது. என்ரை கடைக்குட்டி கூடச் சிரிக்குது. அம்மாக்கு எழுதத்தெரியாதாம். இதைக்கெதியாய் மாத்தவேணும். ஏனெண்டா என்ரை எழுத்து எனக்கும் சகிக்குதில்லை.
Reply
#8
கணனியில் பதிந்த கைகள் எழுதுகோலெடுத்தெழுத
பிணங்குகிறதெனப் பலரும் பகர்ந்தது கேட்டதுண்டு--
சுணக்கமாயிருந்தாலும் மனம்விட்டு வரும் கருவை
தணலிட்ட பொன்னாக மிளிரச்செய்ய ;வகையுண்டு
மைகொண்டு தாளில் வடித்தெடுத்து வாசித்து
மெய்தானோவெனச் சரிபார்த்து தவறகற்றி
கணனியில் ஏற்றிட்டால் செதுக்கிய சிற்பமென ஆக்கம் வரும் காலத்தாலழியாது நிற்கும்..

தலையெழுத்து தாறுமாறாய் போனதுபோல்..எந்தன்
கையெழுத்தும்;இடையிடையே தடம் புரள்வதுண்டு
ஆனாலும் அழகாயெழுத நினைத்திருந்தால் இப்போதும்
முத்துமுத்தாய் குண்டாய் முழுமையாய் வருவதுண்டு..

-
Reply
#9
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#10
ஆஹா நான் மட்டும்தான் குழும்பியிருக்கின்றன் என பார்த்தால் இங்கு எல்லோருமே அப்படியா சந்தோசம்
[b] ?
Reply
#11
Karavai Paranee Wrote:ஆஹா நான் மட்டும்தான் குழம்பியிருக்கின்றன் என பார்த்தால் இங்கு எல்லோருமே அப்படியா சந்தோசம்
சந்தோஷப்படுற.. விஷயம்தானே.. நல்லா.. சந்தோஷப்படுங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#12
தாத்தா சிரிக்கிறியள்போலகிடக்கு
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)