Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்ச் சங்கம்
#1
வணக்கம் நண்பர்களே...

சங்கம் வளர்த்த தமிழ் என்று தமிழுக்குப் புகழ் உண்டு. அந்தவகையில் சங்கங்கள் பற்றிய விபரங்களை அறிய ஆசைப்படுகிறேன். முதற் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று கூறுகிறார்கள். இதற்கு அடுத்து எந்தச் சங்கங்களும் தோன்றவில்லையா? தமிழ்ச் சங்கம் என்றால் என்ன? அவற்றின் தொழிற்பாடுகள் யாவை? அறிந்தவர்கள் விளக்குவீர்களா?

சங்கங்கள் தவிர்ந்து, வேறு என்ன தமிழ் வரலாற்றில் உண்டு? அதாவது நான் கருதுவது: ஐந்திணைகள் என்கிறார்கள். அவை என்ன? முத்தமிழ் அறிவேன். அதுபோல வேறு என்னென்ன உண்டு? தயவு செய்து அறியத் தாருங்கள்.

ஆவலுடன் காத்திருக்கிறேன்...


Reply
#2
இளைஞன், சங்கம் வைத்து தமிழை அந்நாளில் வளர்த்தார்கள்.
சங்கம் முடிவுற்ற காலம் கி.பி. 50 எனக் குறிப்பிடுகிறார்கள். இந்தக் காலத்திற்கு முன்னர் தமிழை வளர்க்க கடை, இடை, முதல் சங்கங்கள் மொத்தமாக 9950 ஆண்டுகள் இருந்ததாக களவியலுரை கூறுகிறது.
தொல்காப்பியமானது கி:மு. 4ம் நு}ற்றாண்டு என்று வரையறை செய்திருக்கிறார்கள். இதில் தொல்காப்பியம் இடைச் சங்கத்து இலக்கணம்
குறிஞ்சி, பாலைமருதம், நெய்தல் ஆகிய ஐவகை நிலத்தில் உள்ள தமிழர் காதல் அகழ்வாழ்வின் ஒழுக்கத்தைக் குறிப்பதுதான் ஐந்திணை என நினைக்கிறேன்.
வேறு யாராவது மேலதிக விளக்கங்கள் தருவார்கள்.[/color]
Reply
#3
தமிழரும் தமிழ்நாகரிகமும்



பேராசிரியர், திரு. கா.பொ.இரத்தினம்

10-3-1914 இல் யாழ்ப்பாணத்து வேலணையில் பிறந்தார். தந்தையார் பொன்னம்பலம்; தாயார் பத்தினிப் பிள்ளை. இலண்டன் பல்கலைக்கழக பி.ஏ. (ஆனர்சு), சென்னைப் பல்கலைக் கழக பி.ஓ.எல்., எம்.ஏ, வித்துவான் முதலிய பட்டங்களைப் பெற்றார். இலங்கை அரசினரின் தமிழ் ஆராய்ச்சிப் புலமைப் பரிசில் பெற்ற, சென்னைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டுகள் தமிழாராய்ச்சி செய்தார். கொழும்பு அரசினர் ஆங்கில ஆசிரியர் கல்லூரியில் பன்னிரண்டு ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். சென்ற ஐந்தாண்டுகளாக இலங்கை அரசகரும மொழித் திணைக்களத்தில் தமிழாராய்சித் தலைவராகப் பணியாற்றி வருகிறார். திருக்குறளை உலகெங்கும் பரப்பும் நோக்குடன் தமிழ்மறைக்கழகத்தை நிறுவி நடத்துகிறார். மாஸ்கோவில் நடைபெற்ற கீழை நாட்டியற் புலவர்களின் உலகமாநாட்டில் சொற்பொழிவாற்றியுள்ளார். 'இலங்கையில் இன்பத் தமிழ்' போன்ற பல அரிய தமிழ் நூல்களை இயற்றியுள்ளார்.

இவ்வுலகில் ஈராயிரத்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு மொழிகள் உள. இவற்றுள், பத்துலட்சத்துக்கு மேற்பட்ட மக்களாற் பேசப்படும் மொழிகள் இருநூறு; நாலு கோடிக்கு மேற்பட்ட மக்களாற் பேசப்படுவன இருபது. இந்த இருபது மொழிகளிலே தமிழும் ஒன்றாகும். எனினும், இது சமஸ்கிருதம், கிரிக்கு, இலத்தின் என்பனவற்றைப் போன்றதொரு உயர்தனிச் செம்மொழியாகவும் விளங்குகிறது. தமிழோடு பழைமைபாராட்டும் மொழிகள் மாற்றமடைந்தும், இறந்தும் போய்விடத் தமிழ்மொழி மட்டும் இன்றும் இளமையோடு இலங்குகின்றது. மொழிவரலாற்றிலே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல் இன்றும் குன்றாத இளமையுடன் வாழும் உயர் தனிச் செம்மொழிக்கு உதாரணமாகத் தமிழ்மொழியினை மட்டுமே குறிப்பிடலாம்.

இப்பொழுது தமிழ்மொழி தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமின்றி மலாயா, சிங்கப்பூர், பர்மா, பிச்சித்தீவுகள், மொறிசியசு, தென் ஆப்ரிக்கா முதலிய இடங்களினும் வழங்கி வருகிறது.

"தமிழகம்" எனுஞ் சொல்லே தமிழ் வழங்கும் நாடுகளைக் குறித்தற்குப் பழந்தமிழ் இலக்கியங்களில் வழங்கப்பட்டுளது. இச்சொல்லை, தொலமி என்பார், 'தமரிக்கா' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திலே தமிழினைப் பேசி வாழ்ந்த மக்கள் தமிழர் எனப்பட்டனர். தமிழர்கள் இந்தியாவின் பழங்குடியினரே, பின்னர் வந்த ஆரியர்களையும் பிற சாதியினரையும் போல வேறிடத்திலிருந்து இந்தியாவுக்குட் புகுந்த குடியினரோ என்பது முன்னர் விவாதத்துக்குரியதாயிருந்தது. ஐரோப்பிய அறிஞர்களும் இந்திய அறிஞர்களும் இது பற்றிப் பல கருத்துக்களை வெளிப்படுத்தியுளர்.

கால்டுவெல் (A Comparative Grammar of the Dravidian Languages), கனகசபைப் பிள்ளை (Tamils 1800 years ago), மாசுமன் (History of India), பேக்குயூசன் (History of Indian and Eastern Architecture), கென்னடி J.R.S. Journal, திருப்பதி (Ancient India) முதலானோர் தமிழர் தோன்றியவிடம் இந்தியாவுக்கு வெளியே எனக் குறிப்பிட்டுளர் எனினும் இவர்களுடைய கொள்கைகள் பொருத்தமற்றனவெனவும் தமிழர்கள் தென்னிந்தியாவுடன் தொடர்ந்து பரந்திருந்த இலெமூரியாக் கண்டத்தையே தம் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் எனவும் பூரணலிங்கம் பிள்ளை (History of Tamil Literature and Tamil India) முதலானோர் கூறியுளர். மொகஞ்சதாரை, ஆரப்பா முதலிய இடங்களில் எடுக்கப்பட்ட புதை பொருள்களும் பழந்தமிழ் இலக்கியங்களும் இவர்களுடைய கருத்தை அரண் செய்கின்றன.

இலெமூரியாக்கண்டம் இக்காலத் தமிழ்நாடுகளையுள்ளடக்கி இந்து சமுத்திரத்திற் பெரும் பகுதியிற் பரவியிருந்தது. (Lost Lemuria - Scott Eliot) தமிழ் இலக்கியங்கள் இக்கண்டத்தையே சம்புத்தீவு அல்லது நாவலந்தீவு எனக் குறிப்பிடுகின்றன என்பர். அடுத்தடுத்து உண்டான பெருங்கடல் கோள்களினால் இப்பரந்த கண்டம் மறைந்து போக விந்தியமலைக்குத் தெற்கேயுள்ள தக்காணம் மட்டுமே எஞ்சிற்று. புவிவரலாற்றியல், மனிதவியல், சரித்திரம் முதலிய துறைகளிலே தேர்ந்த பேரறிஞர்கள் இக்கடல்கோள்கள் நிகழ்ந்தனவென்பதை ஏற்றுளர். பேராசிரிய சிக்கில் (History of creation and Pedigree of Man) மனித இனத்தின் தொட்டிலைப் பற்றிக் கொண்டுள்ள கருத்தும் தக்காணம் மிகப்பழையதொரு நிலப்பகுதியென்பதை வலியுறுத்துகிறது. இறைசினி (The Peoples of India - H.Risely, p.) என்பார் தக்காணம் உலகின் மிகப்பழைய பூப்பகுதிகளில் ஒன்று என்றுரைத்துளர். இவற்றால், தக்காணம் பல்லாயிர ஆண்டுகளாக நிலைத்துள்ள பூப்பகுதி என்பது தெளிவாகின்றது. எனவே இறைசிலி என்பார் கூறுவது போலத் தக்காணத்திலே தமிழர் சரித்திர காலந்தொடக்கம் மட்டுமன்றி, அளவிட்டுக் கூறமுடியாத காலமாக ஆங்கு வாழ்ந்து வருகிறார்கள் எனலாம். தமிழ்ச் சொற்களையும், தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களையும் ஆராய்ந்து தமிழர் தென்னிந்தியாவின் பழங்குடிகளே என, பி.டி.žனிவாச ஐயங்கார் (History of the Tamils, p.23.) முடிவு செய்துளர்.

இவ்விடத்திலே திருக்குறள் செய்யும் ஒன்றிலே வரும் பழங்குடி எனுஞ்சொல்லுக்குப் பரிமேலழகர் கூறும் விளக்கவுரை குறிப்பிடத்தக்கது. "தொன்று தொட்டு வருதல் சேரசோழ பாண்டியரென்றாற்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டுவருதல்" என்கிறார் பரிமேலழகர். புறப்பொருள் வெண்பாமாலையிலே ஒரு குடியின் பழைமை "கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு, முற்றோன்றி மூத்தக்குடி" எனக் கூறப்பட்டுளது. இவையெல்லாம் தமிழர் கடல்கோள்களுக்கு இரையான இலெமூரியாக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் இக்கண்டத்தில் இப்பொழுது தக்காணமே எஞ்சியுளது என்பதையும் நன்கு புலப்படுத்துகின்றன.

"திராவிடர்களின் பிறப்பிடம் இந்தியாவின் தென்பகுதி எனக்கொள்ளலே மிகப் பொருத்தமானது. இந்தியாவுக்கு வெளியேயுள்ள எப்பகுதியுடனும் அவர்களை இணைக்கும் ஐதீகக் கதை ஒன்றுமில்லை. அவர்கள் உறவு கொண்டாடத்தக்க இனத்தவர்களும் இந்தியாவுக்கு வெளியேயில்லை. யாமறிந்த அளவில் அவர்கள் இந்தியாவின் பழங்குடிகளே யாவர்" எனக் கலாநிதி பேக்குயூசன் (Linguistic Survey of India Vol.IV.) கூறியுளர். இவருடைய கூற்றைக் கலாநிதி கிறையேசனும் வலியுறுத்தியுளர். இந்தியாவின் மொழியியற்கணிப்பு எனும் நூலில் கிறையேசன் பின்வருமாறு கூறியுளர்: திராவிடர்கள் பொதுவாக இந்தியாவிலே அன்றேல் தென் இந்தியாவிலே தோன்றியவர்கள் என்றே கொள்ளப்படுகின்றனர். இவர்கள் தென்னிந்தியாவின் பழங்குடிகள் அல்லர் என்பதை அறிவிக்கும் சான்றொன்றுமில்லை". டாக்டர் மாக்கிலைன் (Manual of Madras Administration, Vol. 1.) என்பவரும் இக்கருத்தையே வெளிப்படுத்தினார்.

இலெமூரியாக் கண்டத்தில் அன்றேல் அதன் ஒருபகுதியாகிய தக்காணத்தில் வாழ்ந்த பழந்தமிழர் வட இந்தியாவுக்கும் இந்தியாவுக்கும் வெளியிலும் சென்று வாழ்ந்தனர். (India and Pacific World p.279-Kalidas Nag.) இதனாலேயே கி.மு. 3000 ஆண்டில் மொகஞ்சதாரை அரப்பா எனுமிடங்களிலே மிகச் சிறந்த நாகரிகம் படைத்த மக்கள் வாழ்ந்தனரென அறிகிறோம். மொகஞ்சதாரை நாகரிகத்தைக் கெராசு அடிகளார் திராவிடரின் நாகரிகத்துடன் இணைத்துக் காட்டியுளர். (Sight of the Mohenja Daro Riddle - The New Review - No. 19. Vol. IV.)திராவிடருக்கு இத்தகைய பழமையை அளிக்க விரும்பாத சிலர் மொகஞ்சதாரை நாகரிகத்தை இன்னும் திராவிட நாகரிகம் என்று முற்றாக ஒப்புக் கொள்ளவில்லை.

சிவ வழிபாடு தென்னிந்தியத் தமிழருக்கேயுரிய தனி வழிபாடென்பதை மாக்சுமுல்லர், போப் போன்ற மேனாட்டு அறிஞர்களும் ஒப்புக் கொண்டுளர். (South Indian Bronzes P. 47, G.O. Gangly.) சிவன் திராவிடருடைய கடவுளே என்பதை கே.எம்.பணிக்கர் அவர்களும் 'இந்திய வரலாற்றுக் கணிப்பு' எனும் தமது நூலிற் சிறப்பாக எடுத்துக் காட்டி நிறுவியுளர். மொகஞ்சதாரை மக்களிடையே காணப்பட்ட சிவவழிபாடு அவர்களைத் திராவிடருடன் எவ்வித ஐயத்துக்குமிடமின்றி இணைக்கின்றது.

சேர்யோன்மாகஸ் என்பவர் "மொகஞ்சதாரை நாகரிகம் பிற நாடுகளிலிருந்து புகுந்தது என்றோ, அதன் இயல்பு பிற நாடுகளாற் பாதிக்கப்பட்டதென்றோ கொள்ளுதற்கு எவ்வித காரணமுமில்லை" என்று எழுதியுளர். (Monenjo Daro and Indian Civilization) எனவே, மொகஞ்சதாரை நாகரிகம் ஆரிய நாகரிகத்துக்கு முந்திய இந்திய நாகரிகத்தின் திராவிட நாகரிகமே என்பதும் புலப்படுகின்றன. "இந்தியக்குடா நாட்டின் பழங்குடிகள் திராவிடரேயாவார். அவர்களுடைய நாகரிகமே மொசப்பொத்தேமியாவுக்குப் பரவிச் செமிற்றிற்கு நாகரிகத்தின் அடிப்படையாக விளங்கிற்று" என்று இறைசிலி கூறுவதும் கருதத்தக்கது. "அணிமைக் கீழை நாடுகளின் பழைய வரலாறு" எனும் நுலில் ஓல் என்பாரும் இத்தகைய கருத்துகளை வெளியிட்டுளர். "இந்திய நாகரிகமும் பண்பாடும் ஆரியர் வருகைக்கு முன்பே தோன்றியன; இந்திய ஆரியருடைய நாகரிகமும் தாழ்வும் திராவிடராலேயே உண்டானவை" எனவும் ஓல் கூறியுளர். (Ancient History of the Near East - J.R. Hall) மொகஞ்சதாரை நாகரிகத்துக்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்குப் பின், கி.மு. 1500 அளவில் பஞ்சாப்பு வெளியினுள்ளே ஆரியர்கள் புகுந்தனர். அப்பொழுது அவர்கள் அங்கிருந்த மக்களைத் தாசர்கள் என வழங்கினர்; அவர்களுடன் போரிட்டனர். இப்போரே வேத நூல்களின் சரித்திரப் பின்னணியாகும்.

மொகஞ்சதாரை நாகரிகத்துக்குத் திராவிட நாகரிகத்தோடு சிறப்பாகத் தமிழ் நாகரிகத்தோடு உள்ள தொடர்பு எத்தகையதாயிருப்பினும், இந்தியத் தமிழர் ஆரியர் இந்தியாவுக்கு வருவதற்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே மிகச் சிறந்துயர்ந்த நாகரிகத்தை உடையவர்களாயிருந்தனர் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாததோர் உண்மையாகும்; நேரு, சிலேற்றர், இறாப்சன், ஓல் முதலிய பலரும் இதனை எடுத்தியம்பியுளர். (Discovery of India - Jawaharlal Nehru. Dravidian Element in indian Culture - G. Slater, Ancient India-Robson) "ஆரியர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னரே தமிழ்மொழி நல்வளர்ச்சி யடைந்திருந்தது" எனக் குமயூம் கபீர் என்பார் தமது "இந்திய மரபுரிமை" எனும் நூலிற் கூறியுளர். (The Indian Heritage - Humayun Kabir) இருக்கு வேதப் பாடல்களும் இவ்வுண்மையை நன்கு புலப்படுத்துகின்றன. "தாசர்கள் அல்லது தமிழர்கள் எனப்படுவோர் இந்தியா முழுவதிலும் பல்வேறு நகரங்களில் வாழ்ந்தனர். அவர்களுடைய அரசர்கள் பெருஞ்செல்வர்களாயிருந்தனர்; அளவில்லாப் பசுக்களையும் குதிரைகளையும் தேர்களையும் உடையவர்களாயிருந்தனர். இவையாவும் நூறுகதவுகளையுடைய கோட்டைகளாயிருந்தன. தாசர்கள், பொன் வைர நகைகளை அணிந்து தம்மை அழகுபடுத்தினர். அவர்கள் ஆரியருடைய சமயக் கிரியைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. வணிகர்கள் 'பணிக்கர்' என வழங்கப்பட்டனர். இவர்கள் ஐரோப்பிய ஆப்பிரிக்க நாடுகளுடனும் கடல் வழியாகவும் நிலவழியாகவும் வியாபாரஞ் செய்தனர்".

உவில் துறந்து என்பார் திராவிட மக்களைப் பற்றிப் பின்வருமாறு "எமது கீழைத் தேயமரபுரிமை" எனும் தமது நூலிற் கூறியுளர். "ஆரியர்கள், திராவிடர்களிடையே புகுந்தபொழுது திராவிடர்கள் முன்னரே நாகரிகமடைந்த மக்களாயிருந்தனர். திராவிடவணிகர்கள் சுமேரியாவுக்கும் பாபிலோனியாவுக்கும் கப்பல்களிற் சென்றனர். அவர்களுடைய நகரங்களில் போகப் பொருள்கள் பல இருந்தன. அவர்களிடமிருந்தே ஆரியர்கள் கிராமச் சமுதாயம், நிலவாட்சி, வரி முதலியனவற்றைக் கற்றனர். இன்றுவரை தக்காணம் மக்கட்குலம், பழக்கவழக்கங்கள், மொழி, இலக்கியம், கலைகள் முதலியவற்றிலும், சிறப்பாகத் திராவிடமாகவே இருக்கிறது".

ஆரிய நாகரிகமும், சமஸ்கிருதமொழியும், வடஇந்திய மொழிகளும் தமிழரின் நாகரிகத்தாலும், தமிழ் மொழியாலும் வளப்படுத்தப்பட்டன. படிப்படியாக ஆரியர் வடஇந்தியாவிலிருந்த பழங்குடிகளோடு கலந்து வடஇந்தியாவில் பெரும்பான்மைச் சாதியினராக ஆகினர். எனினும், தென் இந்தியாவில் வாழ்ந்த மக்களை ஆரியர் தம் வலிமையினால் அடக்கி ஆளமுடியாதவர்களாயினர். வட இந்தியப் பேரரசருள் ஒருவராக விளங்கிய அசோகரும் தமது மவுரியப் பேரரசைக் கலிங்கம் வரையுமே விசாலிக்கச் செய்தார். காவேரி, தாமிரவருணி எனும் ஆறுகளின் வளம்மிக்க வெளிகள் ஆரியரைக் கவர்ந்தன. எனவே அவர்கள், குடியேற்றுக்காரர்களாகவும், ஆசிரியர்களாகவும், சமயக்குருக்களாகவும் தமிழகத்திலே நுழையத் தொடங்கினர். இவ்வாறு நுழைந்தவர்கள் தமிழ் அரசர்களிடத்துப் பெருஞ் செல்வாக்கு உடையவர்களாகவும் ஆகினர். ஆரியருடைய நுழைவினால் ஆரியருடைய பழக்க வழக்கங்களும், சமயக்கோட்பாடுகளும், பிறவும் தமிழரிடையே பரவத் தொடங்கின. எனினும், தமிழருடைய சமுதாய அமைப்பும், மொழியும், பழக்க வழக்கங்களும் இன்றும் பெரும் மாறுபாடு அடையாமற் றனித் தனித்தன்மையுடன் நிலைத்து நிற்கின்றன.

தமிழகத்திலே நுழைந்த ஆரியர்களும் பெரும்பாலானோர் பிராமணர்களாவார். இவர்களே இப்பொழுது தமிழகத்திற் காணப்படும் சாதிவேற்றுமைகளையும் குருட்டுப் பழக்க வழக்கங்களையும் நிலைநாட்டினர். பிராமணர்கள் தங்களை உலகத்தில் மிக உயர்ந்த சாதியினர் இவ்வுலகத்தேவர் (பூசுரர்) எனக் கூறிக் கொண்டு தம் தரத்துக்காகச் சைவசமயத்திலும் சாதிவேற்றுமையைப் புகுத்தினர். இவர்கள் தங்கள் சமஸ்கிருத மொழியைத் தேவபாடை என்று போற்றித் தமிழை இழித்தனர். தமிழின் தனித்தன்மையையும் முதன்மையையும் பழமையையும் மறைத்து அதனைச் சமக்கிருதத்தின் ஒரு கிளை மொழியாக்கிவிட முயன்றனர். இப்பிராமணர்கள் பிற மக்களோடு கலவாது தனித்து வாழ்ந்தனர். இவர்கள் வாழ்ந்த இடங்கள் "சதுர்வேதிமங்கலம்" எனவும் "பிரமபுரம்" எனவும் வழங்கப்பட்டன. இவ்விடங்கள் வேதப்படிப்பின் இருப்பிடங்களாக விளங்கின.

பௌத்தமும், சமணமும் தென்னிந்தியாவிற் பரவின பொழுது அவை ஆரிய நாகரிகத்தைத் தென்னிந்தியாவிற் புகுத்தித் தமிழரின் நாகரிகத்தை மாற்ற முனைந்தன. பௌத்தர் சமணர்களின் இலக்கிய இலக்கண நூல்கள் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதே.

சரித்திரத்துக்கு முற்பட்ட காலந் தொடக்கம் தென் இந்தியாவிலுள்ள தமிழகத்தில் வாழ்ந்துவரும் தமிழரின் வரலாற்றினை நன்கு அறிதற்குச் சான்றுகள் இன்னும் போதிய அளவுக்குக் கிடைக்கவில்லை. எனினும், சேர சோழ பாண்டியப் பேரரசுகளைப் பழங்காலத்திலேயே பல நாடுகள் அறிந்திருந்தன. கி.மு. நாலாம் நுற்றாண்டில் வரையப்பட்ட அசோகரின் கல்வெட்டுக்கள் இவற்றைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. (Rock Edicts, II, xiii) சந்திரகுப்த மவுரிய அரசவையிலே கிரேக்க தூதராகயிருந்த மெகத்தெனிசு பாண்டிய அரசையும், அதன் செல்வம், படை முதலியவற்றையும் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். கி.மு. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கருதப்படும் சமக்கிருத இலக்கண ஆசிரியராகிய காத்தியாயனர் இப்பேரரசுகளைப் பற்றிக் கூறியுளர். வால்மீகியின் இராமாயணமும் பாரதமும் இவற்றைப் பற்றி வருணித்துள. இசுத்தாபோ ஒரு பாண்டிய அரசனைக் குறிப்பிட்டுளர் (கி.மு.22). பெரிப்பிளசும் (கி.மு.81) தலமியும் (கி.பி.180) தென்னிந்தியாவில் சிறந்த துறைகளைப் பற்றிய விவரங்களைத் தந்து அத்துறைகள் மிகப் பழமையுடையன என்று கூறியுளர்.

இத்தகைய பிறநாட்டாரின் குறிப்புக்களைவிடத் தமிழரின் பழைய வரலாற்றையும் அவர் தம் நாகரிகத்தையும் நாம் அறிந்து கொள்ளுதற்கு இப்பொழுது சங்க இலக்கியங்களே உதவுகின்றன.

தமிழிலக்கண விலக்கியங்களும், பரம்பரை வரலாறுகளும் ஏறக்குறையக் கிறித்துவுக்குபின் மூன்று சங்கங்கள் ஒன்றையடுத்தொன்றாக நிலைத்து விளங்கின என்றுரைக்கின்றன. இவற்றைப் பற்றிய வரலாறுகளை இறையனார் அகப்பொருளுரையிலே காணலாம். இவ்வுரை முதற் சங்கம் கிறித்துவுக்குப் பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியதெனக் கூறுகிறது. இதன் ஆண்டுக் கணக்குகளையும் பிற விவரங்களையும் பலர் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். எனினும், இச் சங்கங்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குமுன் இருந்தன என்பதை மறுத்தல் முடியாது. (The Pandyan Kingdom, P.36-K.A.M. Sastri) இச் சங்கங்களைப் பற்றி இலக்கிய இலக்கண நூல்களினும், புராணங்களிலும் கல்வெட்டினும் காணப்படும் செய்திகளை இலகுவில் ஒதுக்கித் தள்ளல் ஒண்ணாது.

தக்காணத்தின் பழைய வரலாறு இன்னும் நன்கு ஆராயப்படவில்லை. தென்னிந்தியாவிலே புதைபொருள் ஆராய்ச்சி தொடக்க நிலையிலேதான் இருக்கிறது. புதைபொருள் ஆராய்ச்சி வளர்ச்சியடைந்தால் இச்சங்கங்களின் வரலாற்றை மட்டும் அன்றிப் பழந்தமிழரின் நாகரிகத்தையும் நன்கு அறிதற்கு ஏற்ற புதைபொருள்கள் பல கிடைத்தல் கூடும். இதற்குத் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட பிணத்தாழிகளையும் இரும்புக் கருவிகளையும் உதாரணமாகக் கூறலாம். கி.மு. 1200 அளவில் ஆதிச்சநல்லூரிலே தமிழர் நெல்லைப் பயிரிட்டனர். அங்கேயே இரும்புக் கைத்தொழிலும் தோன்றிற்று.

கி.மு. 4000 ஆண்டளவிலேயே சால்தியர் போன்ற பழங்குடி மக்களுடனும் (Hibbert Lectures p.137-Prof. A.S.Sayce.) சாலமோன் போன்ற அரசர்களுடனும் (Kings, IX-X.) வியாபாரஞ் செய்த தமிழர் சிறந்த கல்வியும் உயர்ந்த நாகரிகமும் உடையவர்களாகவே இருந்திருப்பார். திசையறி கருவி கண்டுபிடிக்கப்படாத பழங்காலத்திலே திரைகடலோடி வாணிகஞ் செய்த தமிழர் புவியியல், கணிதம் முதலியவற்றை நன்கு அறிந்தவர்களாகவும் பிறநாட்டு மக்களின் மொழிகளைப் பயின்றவர்களாகவும் இருந்திருப்பர்.

முன்னர்க் குறிப்பிட்ட தமிழ்ச்சங்கங்களைத் தமிழ் அரசர்களே நடத்திவந்தனர். நன்முறையில் நிறுவப்பட்ட அரசாங்கம் கல்வியை வளர்ப்பதற்குப் புலவர்களுக்குப் பொருளுதவி செய்து அவர்களை ஆதரிப்பது விந்தையான செயலன்று. அரசர்களின் ஆதரவினால் புலவர்கள் தம் வாழ்நாளை இலக்கியத்தைப் படைத்தலிலே கழித்தனர்.

இச் சங்கங்களின் காலத்திலே தோன்றியனவெனக் கூறப்படும் நூல்களில் இப்பொழுது தொல்காப்பியமும், மேற்கணக்குக் கீழ்க்கணக்கு நூல்களுமே கிடைக்கின்றன. ஏனையவெல்லாம் கடலாலும், நெருப்பாலும் கரையானாலும் அழிக்கப்பட்டன. இரண்டாஞ்சங்க காலத்தில் நிகழ்ந்த கடல்கோளினால் அழிக்கப்பட்ட நூல்களைப் பற்றித் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.

தொல்காப்பியமே இப்பொழுதுள்ள தமிழ்நூல்களில் மிகப் பழையதெனக் கொள்ளப்படுகிறது. தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றிக் கருத்து வேற்றுமைகள் உண்டு. (The Chronology of the Ancient Tamils appendix, IX-Sivaraja Phillai) தொல்காப்பியப் பாயிரத்திலே ஐந்திரம் எனும் வடமொழி இலக்கண நூலைப் பற்றிக் குறப்படுவதால் தொல்காப்பியம் கி.மு.ஏழாம் நூற்றாண்டிலே தோன்றியதெனக் கூறப்படும் பாணினீய இலக்கண நூலுக்கு முந்தியதெனச் (இலக்கிய வரலாறு - கா.சு.பிள்ளை, பக்கம், 59.) சிலர் கருதுகின்றனர்.

கடைச்சங்க நூல்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முந்தியவை என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட முடிவாகும். தொல்காப்பியமே இக்கடைச் சங்க நூல்களுக்கு இலக்கணமாக யிருந்ததென்பர். தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாதலின் அதற்குமுன் பல இலக்கிய நூல்களிலிருந்திருத்தல் வேண்டும். தொல்காப்பியத்திலேயே இதற்குப் பல சான்றுகள் உண்டு. ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த காலத்திலேயே சிறந்த தமிழர்கள் பல நூல்களை ஆக்கியிருப்பார்கள் என்பதும், அந்நூல்கள் யாவும் அழிந்துவிட்டன என்பதும், அந்நூல்களிலே தொல்காப்பியமே எஞ்சியுளதென்பதும் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளத்தக்க முடிவுகளேயாகும்.

தொல்காப்பியத்தையும் கடைச்சங்க நூல்களையும் பற்றிப் பிற நாட்டினர் இன்னும் நன்கு அறிந்து கொள்ளவில்லை. சமக்கிருத நூல்கள் பல ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டமையால் சமக்கிருதத்தை மேனாட்டு அறிஞர்கள் நன்கு கற்பதற்கு வாய்ப்பு உண்டாயிற்று. இதனால் இந்திய ஆரியருடைய பண்பாடு நாகரிகம் முதலியன பற்றிப் பல நுல்கள் எழுதப்பட்டன. இந்தியாவின் பழமையையும் பெருமையையும் பற்றிப் பேசும் பிற நாட்டறிஞர்கள் ஆரிய நாகரிகத்தையும் சமக்கிருத மொழியையும் பற்றியே பேசத் தொடங்கினர். பேராசிரியர் சூல்சு புளொக்குக் கூறுவதைப் போல் தனியியல்புடைய பழம்பெரும் பண்பாட்டையும், உலகிலேயே பழமைமிக்க நாகரிகத்தையும், இந்தியாவில் மிகப் பழைய மொழியினையும் உரிய தமிழரைப் பற்றிப் பிற நாட்டார் நன்கு அறிதற்குப் போதிய வாய்ப்புகள் உண்டாகவில்லை. அவர்களுடைய நூல்கள் ஐரோப்பிய மொழிகளிலே மொழிபெயர்க்கப்படவில்லை. இப்பொழுது தமிழரையும் தமிழையும் பற்றிப் பிற நாட்டினர் சிறிது அறியத் தொடங்கியதற்கு ஐரோப்பிய அறிஞர்கள் சிலருடைய அருந்தொண்டே காரணமாகும். இந்த அறிஞர்களுக்கும் கடைச்சங்க நூல்கள் முழுவதும் முன்னர்க் கிடைக்கவில்லை.

சங்க இலக்கியங்கள் தமிழரின் உயர்ந்த பண்பையும் சிறந்த நாகரிகத்'தையும் நன்கு புலப்படுத்துகின்றன. சேர சோழ பாண்டிய அரசர்களுடைய தலைநகரங்களைப் பற்றி அவை வருணிக்கின்றன. இந்நகரங்களிலே பல நாட்டு மக்கள் சேர்ந்து உறைந்தனர். நகராட்சி நன்முறையில் நடைபெற்றது. பெருவீதிகளும் சிறு வீதிகளும் செம்மையாக அமைக்கப்பட்டன. வீதிகள் வெளிச்சமிடப்பட்டிருந்தன. பல ஏழுநிலை மாடங்கள் நகர்களை அலங்கரித்தன. நகர மக்களிற் பலர் பெருஞ் செல்வர்களாயிருந்தனர். இலக்கியம், இசை, நாடகம், ஓவியம் முதலிய கவின்கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. மகளிர் விலையுயர்ந்த அணிகளையும் ஆடைகளையும் அணிந்தனர்; நறுமணம் மிக்க பூமாலைகளாலும் சாந்துகளாலும் தம்மை அழகுபடுத்தினர்.

ஊராட்சி மன்றங்கள் செம்மையாகத் தொழிலாற்றின; நாட்டுமக்கள் சமூகவாழ்வுக்கு வேண்டிய பல தொழில்களையும் செய்து நாட்டில் செல்வத்தைப் பெருக்கினர்.

அரசர்கள் நீதி தவறாது கோலோச்சினர். அவர்களுக்கு அறிவுரை கூறும் பல அவைகள் இருந்தன. ஐம்பெருங்குழு, எண்பேராயம் முதலியனவும் அரசவமைப்பில் அடங்கியிருந்தன.

சமயம், தத்துவம் முதலிய துறைகளிலும் தமிழர் முன்னேற்றமடைந்திருந்தனர். தமிழ் நூல்களிற் பெரும்பாலான அறநெறிகளைப் பற்றிக் கூறுகின்றன. இவை ஒவ்வொரு மனிதனுடைய கடமைகளையும் அவன் சமுதாயத்துக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் வலியுறுத்தி ஒரு சிறந்த சமுதாய அமைப்புக்கு வழிகோலின. "யாரும் ஊரே யாவரும் கேளிர்" எனும் பேருண்மையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் உணர்ந்து கடைப்பிடிக்க முயன்றனர். நாகரிக முதிர்ச்சியிற் றோன்றும் இக்கருத்துத் தமிழ் மக்களின் பரந்த நோக்கத்தையும், உயர்ந்த குறிக்கோளையும், ஓருலகக்கொள்கையையும், சமரச சன்மார்க்கத்தையும் நன்கு புலப்படுத்துகிறது. பல்லாயிர ஆண்டுகளாக வாழ்ந்து படிப்படியாக ஒப்பற்ற உயர்நிலையடைந்த தமிழ் மக்களின் வரலாற்றையும் நாகரிகச் சிறப்பையும் விரித்து விளக்குவதற்கு எனக்குக் கொடுக்கப்பட்ட நேரம் போதாது. எனவே, உங்கள் கருத்தைக் கவரத்தக்க சிலவற்றைத் தொட்டுக் காட்டியுளேன். இனி, இவற்றை விரிவாக அறிய முயலுதல் உங்கள் கடமையாகும். என் உரையை முடிப்பதற்குமுன் தமிழ் இலக்கியத்தின் தனிச் சிறப்பை உங்களுக்கெடுத்துக் காட்ட விரும்பினேன். விரித்துரைக்க வாய்ப்பில்லை. அன்பை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்துளது தமிழிலக்கியத்தின் பெரும் பகுதி. 'அகப்பொருள்' பற்றிய தமிழ் இலக்கியச் செல்வத்துக்கு இணையான இலக்கியத்தை இவ்வுலகில் வேறெம் மொழியிலுங் காணல் முடியாது. தமிழ்ப் பண்பாடு அன்பிலேயே தோய்ந்துளது என்பதை இவ்விலக்கிய நூல்கள் நன்கு காட்டுகின்றன.

தமிழிலக்கிய நூல்களிலே தமிழ்ப்பண்பாட்டின் களஞ்சியமாக விளங்குவது திருக்குறளேயாகும். தன்னோடு தொடர்பு கொண்டோர் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் பேராற்றல் படைத்தது இந்நூல். இதன் பெருமை உலகெங்கும் பரந்துளது; பல மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுளது. இந்நூலைப் பற்றி அல்பேட்டுச்சுவைச்சர் எனும் பேரறிஞர், "உலக இலக்கியத்திலே இந்நூலைப் போலச் சிறந்துயர்ந்த ஞானத்தைக் கொண்ட நூல் வேறில்லை" (The Development of Indian Thought - Dr.Albert Sobweitzer) என்று கூறியுளர். இத்தகைய ஒப்புயர்வில்லா உலகப் பெருநூல் என்றும் உங்கள் தாய்மொழிகளில் மொழி பெயர்க்கப்படாவிடின் இதனை உடனே மொழிபெயர்க்க ஆவன செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தொல் தமிழர் முதன்மைச் செல்வம்

அமிழ்தினுமினிய தமிழ்மொழியினைத் தம் தாய்மொழியாகக் கொண்டு வாழும் தமிழ்ப்பெருமக்கள் தம்முயிரினுஞ் சிறப்பாக நாடு, மொழி, நன்னெறி மூன்றினையும் ஒருங்கு கைக்கொண்டொழுகும் ஒண்மையர். இம் மூன்றனுள்ளும் மொழியினை விழியெனக் கொண்டோம்பி வருகின்றனர். அம்மொழியினுக்கு அழகும் அரணுமாயிருப்பது தொல்காப்பியம். அத்தொல்காப்பியத்தில் வாழ்க்கையை வனப்புறுத்துவது பொருளதிகாரம். அதில் 'முதல், கரு, உரி' என மூன்று பாகுபாடுகள் உள்ளன. இம் மூன்றும் முறையே வாழ்க்கைக்கு இடமும் துணையும் இன்பமுமாகும். இவற்றில் நடுவாயமைந்த துணையில் தெய்வத்துணையே முதன்மைபெற்றுத் திகழ்கின்றது. அதனால் தமிழர் முதன்மைச் செல்வம் தனிப்பெருந் தெய்வம். 'செல்வன் கழலேத்துஞ் செல்வம் செல்வமே' என்னும் தமிழ்மாமறையுங் காண்க..



| Books | Culture | Education | Industry | Literature |
Organisations | Movies | Politics | History |
| Technology |
| Home |


டூCopyright INTAMM. 1997.
All rights reserved. No part of this web site should be copied, printed in any mean without prior permission. Please go through the terms and conditions before using this service.
Reply
#4
சுரதா, பயனுள்ள தகவல்கள். நன்றி
Reply
#5
மகிழ்ச்சி சுரதா(யாழ்) அண்ணா...

நான் கேட்டதற்கு மேல் விளக்கம் தரக்கூடிய கட்டுரையை இங்கு இணைத்ததில் மகிழ்ச்சி.

நீங்கள் தந்த கட்டுரையிலிருந்து:
சங்கங்கள் என்பன தமிழ் (கலை,பண்பாடு, மொழி, அறிவியல், அரசியல், தத்துவம்) வளர்க்கப் பயன்பட்டன, அதற்காகவே உருவாக்கப்பட்டன.

இருந்தாலும் எனக்கு இன்னமும் மேலதிக தகவல்கள் தேவை. அதாவது சங்கங்கள் என்பது உருவாக்கப்படதன் நோக்கம் தெளிவாக இருப்பினும், அவற்றின் அமைப்பு முறை எவ்வாறாக இருந்தது, அவற்றின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பன பற்றி அறிய ஆவலாயுள்ளேன். அதுதவிர கடைச்சங்கத்திற்குப் (மூன்றாந் தமிழ்ச்சங்கம்) பின்னர் நான்காம் தமிழ்ச்சங்கம் என்று ஒன்றைப்பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அதுபற்றிய விபரங்களும் தேவை.

(முக்கியமாக சங்கங்கள் பற்றி நான் அறிய முயல்வதற்கு ஒரு காரணம் உண்டு <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> )


Reply
#6
இளைஞன் தேடி அகப்பும்போது உருவி உருமாற்றி தருகிறேன்..உங்கள் தேடல் தேசியத்திற்கு பலமாக இருக்குமு; என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

கொசுறு.நேற ரிரிஎன்னில் ஒளிபரப்பான வானமே எல்லை என்ற விசாலி கண்ணதாசனின் அரட்டை அரங்கத்தில் அதில் கலநதுகொண்ட ஒரு பேச்சாளர் விசாலி கண்ணதாசனை நான்காம் தமிழ்ச்சங்கமே; என அழைத்தார்...
எங்கே போய் முட்ட...
Reply
#7
ஆம் கட்டாயமாக எனது முயற்சி நம் தேசத்தையும் தேசியத்தையும் பலப்படுத்துவதற்காகவே அமையும்.

நான்காம் தமிழ்ச் சங்கம் என்பது இதுவரை இல்லையென்றால் அந்தப் பெயரை நான் பயன்படுத்திக் கொள் விரும்புகிறேன். இல்லையென்றால் ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்பதைத்தான் பயன்படுத்த வேண்டியேற்படும். அதனால்தான் கேட்டேன்.


Reply
#8
நம் தமிழிற்காய் நாம் ஏதாவது செய்வோம்.
வாழ்க இளைஞர் சமுதாயம்.
Reply
#9
நம் தமிழை நாசமாக்க நாம் ஏதாவது செய்வோம் எண்ற நிலைதான் உங்கள் நிலை பாருங்கோ?
Reply
#10
--------------------------------------------------------------------------------
சேது அருளியது
"நம் தமிழை நாசமாக்க நாம் ஏதாவது செய்வோம் எண்ற நிலைதான் "
இப்படி எழுதினால்
பரந்த மனத்தோடு ஒப்புக் கொண்டது போலிருக்கும்.;

-
Reply
#11
<!--QuoteBegin-Manithaasan+-->QUOTE(Manithaasan)<!--QuoteEBegin-->--------------------------------------------------------------------------------
சேது அருளியது
\"நம் தமிழை நாசமாக்க நாம் ஏதாவது செய்வோம் எண்ற நிலைதான் \"
இப்படி எழுதினால்
பரந்த மனத்தோடு ஒப்புக் கொண்டது போலிருக்கும்.;<!--QuoteEnd--><!--QuoteEEnd-->என்ன மணிதாசன்.. அப்ப முயற்சி திருவினையாக ஏதாவது.. சொல்லுவோமா?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#12
இற்த இடத்தில் எளுதிய கருத்து அளிஞ்சுபோச்சு ஏன தெரியாது.
Reply
#13
நல்ல பயனுள்ள தகவல்கள்... நன்றி... சுரதா அவர்களுக்கு... 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் கொடைவள்ளல் பாண்டித்துரைத்தேவரால் ஆரம்பிக்கப்பட்டது.. அத்தமிழ்ச் சங்கத்தின் மூலம் ஏராளமான புத்தகங்கள் அச்சிடப்பட்டது மட்டுமன்றி.. பல அரிய பணிகளும் செய்யப்பட்டது என்று படித்திருக்கிறேன்...
Reply
#14
பாண்டி.. துரை.. தேவர்.. நல்ல.. பெயர்..

பெரிய சாதியாக்கும்..
:?: :?: :?:
Truth 'll prevail
Reply
#15
Mathivathanan Wrote:பாண்டி.. துரை.. தேவர்.. நல்ல.. பெயர்..

பெரிய சாதியாக்கும்..
:?: :?: :?:
படிச்சவர்.. பெரியவராயிருக்கும்..
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
#16
தாத்தா சும்மா இருக்க மாட்டியளே?
இப்ப ஈழத்தில சாதிமுறைகள் ஒழிந்துபோவதுபோல் தமிழகத்திலும் விரைவில் அழிந்துபோகும்
முத்து! தாத்தா இப்பிடித்தான் Please do not mind it. தொடர்ந்து எழுதுங்கோ..
Reply
#17
Kanani Wrote:தாத்தா சும்மா இருக்க மாட்டியளே?
இப்ப ஈழத்தில சாதிமுறைகள் ஒழிந்துபோவதுபோல் தமிழகத்திலும் விரைவில் அழிந்துபோகும்
முத்து! தாத்தா இப்பிடித்தான் Please do not mind it. தொடர்ந்து எழுதுங்கோ..
அவனவன்.. சாதியைக்காட்டி.. மதத்தைக்..காட்டி.. கலவரத்தை.. உண்டுபண்ணி.. அதிலை.. குளிர்காயிறான்.. இருக்காத.. சாதியை.. இருக்குதெண்டு.. சொல்லுறான்.. அதுதான்.. நானும்.. விட்டுப்..பார்க்கிறன்.. நான்.. எப்பவோ.. சொன்னதைத்தான்.. நீங்களும்.. சொல்லுறியள்.. சாதி.. மூடநம்பிக்கைனள்.. காலக்கிரமத்தில்.. சீர்செய்யப்படும்.. அதைவிட்டு.. திணிக்கப்போனால்.. என்ன.. நடக்குமென்பதை.. நமது.. கடந்த.. 30 வருடகால.. வரலாறு.. சுட்டிக்காட்டுகின்றது.. திணிப்புக்கு.. துணைநிறிபவர்கள்.. சிந்திப்பதற்கு.. உதாரணம்.. ஒன்றரைஇலட்சம்.. மக்கள.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#18
தாத்தாச் சாத்தான் வேதம் ஓதுது....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
சாதி ழூட நம்பிக்கையில்லை என்பது எனது கருத்து
அப்படி எண்றால் அனைத்து இனத்தவனிலும் ழூட நம்பிக்கை இருக்கா?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)