Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திரு.மயில்வாகனன் சர்வானந்தா-இலங்கை தமிழ் வானொலி
#1
இலங்கை தமிழ் வானொலி பிரசித்தி பெற்ற அறிவிப்பாளர் திரு.மயில்வாகனன் சர்வானந்தா பற்றி யாராவது கூறமுடியுமா?
Reply
#2
இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவையை பிரபலமடையச் செய்தவர். மதிப்பிங்குரிய மயில்வாகனம் அவர்கள் என்று அறிந்திருக்கின்றேன். இந்தியாவிலும் முகம் தெரியாமலேயே நிறைய இரசிகர்களை அவர் பெற்றிருந்தாராம். அதற்கு ஒரு உதாரணம் போல் முன்பு ஒரு பத்திரகையில் படித்ததை இங்கே நினைவு கூறுகின்றேன். சென்னையில் பொது நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் பொண்டிருந்த போது திரு.மயில்வாகனம் அவர்களும் அங்கு சென்றிருந்தாராம். நிகழ்ச்சி அமைப்பாளர்களில் ஒருவர் திரு.மயில்வாகனம் அவர்களை மேடைக்கு அழைத்துச் சென்று மேடை முன் திரண்டிருந்த மக்களைப் பார்த்து இவர் உங்கள் எல்லோருக்கும் தெரிந்தவர்தான் யார் என்று கூறுங்கள் பார்க்கலாம் என்றாராம். மக்களோ மௌனம். பின் அமைப்பாளர் திரு.மயில்வாகனம் அவர்களிடம் ஒலிவாங்கியைக் கொடுத்து இருவரி பேசச் சொன்னாராம். அவரும் ஒருவரி பேசி முடிக்கவில்லை கூடியிருந்தோரெல்லாம் ஒத்த குரலில் மயில்வாகனம் மயில்வாகனம் என்று கூவினார்களாம். மயில்வாகனம் அவர்கள் அமரர் ஆகிவிட்டார். திருமதி மயில்வாகனம் ஐரோப்பிய நாடொன்றில்தான் வசிக்கின்றாரென்று நினைக்கின்றேன்.

என்னடா இவன் மயில்வாகனம் சர்வானாந்தா பற்றிக் கேட்டால் மயில்வாகனம் பற்றி எழுதுகின்றானே என்று எண்ணிவிடவேண்டாம். மகனும் இலங்கை வானொலியில் ஒரு சிறப்பான அறிவிப்பாளராக கடமையாற்றியவர்தான். ஆனாலும் ஏனோ அவரால் அவரின் தந்தைபோல் புகழ்பெற முடியவில்லை.. என்னைவிட இன்னும் விபரம் தெரிந்தவர்கள் இன்னும் விபரம் தருவார்கள் தானே.
Reply
#3
தகவலுக்கு நன்றி.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)