Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்று வாணிவிழா!
#1
இன்று வாணிவிழா! கல்வித்தெய்வமாம் சரஸ்வதிக்கு விழா எடுத்து பூஜிக்கும் நாளிது!

..... வடக்கு/கிழக்கில் .... சமய வேறுபாடுகளை மறந்து எம்பகுதிகள் எங்கும் விழாக்கோலம் பூண்டிருக்கும். கோவில்களை விடவும் பாடசாலைகள் மற்றும் கல்விநிலையங்கள் எங்கும் மாவிலை, தோரணங்களால் அலகரிக்கப்பட்டு சிறுவர்கள் முதல் முதியோர் வரை கோலாகலாகக் கொண்டாடுவோம்!.... பல வருடங்களுக்கு முன்னுள்ள என்னூருக்கு செல்கின்றேன்..... ஊரிலுள்ள பள்ளிக்கூடம் விழாக்கோலம் பூண்டிருக்கும். அதை மிச்சும் அளவிற்கு ஊரின் நடுவேயுள்ள அந்த தனியார் கல்வி நிலையத்தின் பக்கத்தினுள்ள பாரிய காணியினுள் மேடையிட்டு, அப்பகுதியென்ன ஊரே மாவிலை, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, தெருவெல்லாம் வண்ணமயமான மின்விளக்குகள் பிரகாசிக்க, மின்சாரக்கம்பங்களில் பாரிய ஒலிக்குழாய்கள் கட்டப்பட்டு அருகிலுள்ள ஊர்கள் எல்லாமெ அவ்விழாவைக் கேட்கக்கூடியதாக ஊரே விழக்கோலம் பூண்டிருக்கும். காலையில் சிறுவர்களின் நடனங்கள், நாடகங்கள், பாட்டுக்கச்சேரிகள் முடிபடைய, மாலையானதும் "அண்ணேரைற்" பாலச்சந்திரனும், சக்கடத்தாரும் வந்து மேடையேறி விடுவார்கள்!! பின்பு விழாவிற்கே சிகரம் வைத்ததுபோல் பட்டிமண்றம், முன்னைநாள் உடுப்பிட்டி பாராளுமன்ற உறுப்பினர் திரு இராஜலிங்கம் தலைமையில் பண்டிதர் பொன் கணேசன் ஒரு அணியிலும், சுகுணா கணவதிப்பிள்ளை மறு அணியாகவும் தமிழால் போதுவார்கள். பார்வையாளர்களும் இரு அணிகளாகப் பிரிந்து, இரு அணிகளையும் கரகோஸங்களால் உற்சாகப்படுத்துவார்கள். இவ்விழா நடுநிசியைத்தான்டி முடிபடையும். .......

ஆனால் இங்கோ...... இன்று காலையில் ரி.ரி.என் வேலைக்கு போகும்முன் பார்த்தபோது எதோ ஓரிரு பக்திப் பாடல்கள் கேட்கக்கூடியதாகவிருந்தது. வேலை முடிந்து இன்று வீடுவர இரவு எட்டு மணியாகிவிட்டது. அவ்வளவுதான் இங்கு என்னுடைய வாணிவிழா!!!

........ எல்லாவற்றையும் தொலைத்து விட்டோம்>>>>>>>>>
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)