Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருவள்ளுவர் தமிழ் எழுதி
#1
புதிய தமிழ் எழுதி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்ட எந்த எழுத்துருவை பயன்படுத்தினாலும் எந்த வேறுபாடும் இன்றி தட்டெழுத முடியும். திருவள்ளுவர் தமிழ் எழுதி எனப்படும் இந்த எழுத்தோலையை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய தமிழ் எழுத்துரு ஒன்றும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இன்று எல்லோரும் ஆங்கில் எழுத்துருவுக்கு வடிவமைக்கபட்ட கீபோட்டை பயன்படுத்துகிறோம். ஆனால் தமிழ்எழுத்துருவுக்கு மாற்றுவதற்கான எழுத்துருக்களை அனைத்து இடங்களிலும் ( எல்லா கீகளிலும்) பயன்படுத்துவதால் எமக்கு தேவையான அத்தியாவசிய குறியீடுகளை இடுவதற்கு மீண்டும் ஆங்கில எழுத்துருவுக்கு மாற்றியே அதனை செய்கிறோம்.


ஆனால் வேறு எந்த குறியீடுகளையும் பயன்படுத்தாமல் ஆங்கில எழுத்துருக்கள் உள்ள 26 கீகளை மட்டும் பயன்படுத்தி (அதிலும் மீதமாக 08 இடங்கள் உள்ளன.) இப்புதிய எழுத்துரு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் தனியாக புதிய எழுத்துருவை நீங்கள் தரவிறக்கதேவையில்லை. உங்கள் கணனியில் இருக்கின்ற லதா எழுத்துருவை பயன்படுத்தியே இதனை தட்டெழுதமுடியும்.

திருவள்ளுவர் தமிழ் எழுதி பற்றியும் தமிழம் எழுத்துரு பற்றியும் உங்கள் கருத்துக்களை அறியதாருங்கள். தற்போது இவ் எழுதியை யாரும் பயன்படுத்தவேண்டாம். அனைவரின் கருத்துக்களை அறிந்து சரிபிழைகளை மிகவிரைவில் திருத்தம் செய்து அனைவரும் பயன்படுத்தக்கூடிய எளிய செயல் நிரலை விரைவில் தருகிறேன்.

திருவள்ளுவர் தமிழ் எழுதிக்கு செல்ல
Reply
#2
நன்றி அண்ணா ஈழம் செயலியை மாற்றி அமைத்த மாதிரி இருக்கு
[b][size=18]
Reply
#3
இப்புதிய திருவள்ளுவர் எழுதி பற்றிய சில குறிப்புகள். இங்கு சுரதாவினால் பயன்படுத்தப்பட்ட மீயுரை அமைப்பே கையாளப்பட்டுள்ளபோதும் செய்யப்பட்ட மேம்படுத்தல்கள் வருமாறு.
1. ஆங்கில எழுத்து முதலில் தோன்றி தமிழ் எழுத்து பதிவாகாது.
2. எழுத்துக்களை அழித்து தட்டெழுதமுடியும்.
3. தமிழம் என்ற புதிய எழுத்துரு அறிமுகப்படுத்தப்படுகிறது.
4. புளொக்ஸ்பொட்டில் கருத்துக்களை எழுதும்போது எழுத்துக்களை தடிப்பாக்கி சாய்வாக்கி லிங் கொடுக்க முடியும்.

இன்னும் இருக்கும் என நம்புகிறேன். இறுதி பதிப்பை வெளியிடுவதற்கான உங்கள் கருத்துக்கள் எதிர்பார்க்கிறேன்.


.
Reply
#4
புதிய தமிழம் எழுத்துருவுக்கு மாறுவதன் மூலம் எதிர்பார்க்கக்கூடிய நன்மைகள்.
1. பாமினி எழுத்துருவை பயன்படுத்துபவர்கள் சூ கூ டூ ஜ ஸ ஷ பூ என்ற எழுத்துக்களை கீபோட் முழுவதும் தேடித்திரிய வேண்டியதில்லை.

2. பாமினியோ ரிஸ்கியோ பாவிப்பவர்கள் கணித குறியீடுகளை தட்டெழுதவோ வேறு (கீபோட்டில் உள்ள) அத்தியாவசிய குறியீடுகளையோ பயன்படுத்தவோ வேறு ஒரு எழுத்துருவுக்கு மாற வேண்டியதில்லை.

3. புதியவர்கள் தமிழ் தட்டெழுத பழக இலகுவானது.

4. ரிஸ்கி முறையை பயன்படுத்தி தட்டெழுதுவதன் மூலம் தமிழின் சரியான உச்சரிப்பு முறை எதிர்காலத்தில் பூரணமாக மாறிவிடும்.


அன்புடன்
தமிழ்வாணன்.
Reply
#5
நன்றி தமிழவன் உங்கள் விளக்கத்துக்கு .. அந்த செயலியை நாம் எமக்கு விரும்பிய படி மாற்றலாம் தானே..இறு பதிப்பை வெளியிடுங்கள் நான் அதனை இணைக்க <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#6
திருவள்ளுவர் தமிழ் எழுதிக்கான இறுதி வேலைகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன. முழுநிறைவான தமிழ் உள்ளீட்டு செயலியை சாதாரண இணையப்பாவனைக்கு ஏற்றவகையிலே வடிவமைப்பதே நோக்கமாக இருந்தது.

வெளிவரும் இவ்வெழுதியில் நீங்கள் விரும்பியவாறு விரும்பிய இடங்களில் கிளிக்செய்து தட்டெழுதமுடியும்.

இதுவரை காலமும் இரண்டு கருத்துபெட்டிகள் பாவித்ததில் இருந்து தனிப்பெட்டிக்கு மாறுவதுடன். தட்டெழுதும்போதே ஆங்கில எழுத்துருக்கள் தோன்றாது தட்டெழுத முடியும்.

நான் எற்கனவே புதிய எழுத்துரு சம்பந்தமாக குறிப்பிட்டிருந்தேன். 26 கீகளை மட்டும்தான் பயன்படுத்தி ஆங்கில ரோமன் ஸ்கிரிப்ரில் தட்டெழுதுபவர்கள் புதிய எழுத்துரு தேவையற்றது என கருதுவதால் தற்போது பாமினி எழுத்துரு பயன்படுத்துபவர்கள் இலகுவாக மாறிக்கொள்ளகூடிய விதத்தில் புதிய எழுத்துரு எடிவமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

அது தொடர்பான கருத்துகளை ஆர்வமுள்ளவர்கள் முன்வைக்கலாம்.

இறுதிப்பதிப்புக்கான சோதனை முயற்சி நானை பெரும்பாலும் தரவேற்றப்படும்.

கருத்து சொல்ல வாங்க.
அன்புடன் தமிழ்வாணன்.


.
Reply
#7
இறுதிப்பதிப்பை எனது தளத்தில் பார்வையிடலாம்.
Reply
#8
நன்றி தமிழ்வாணன் அண்ணா
. .
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)