Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
þÉõ «øÄÐ «¨¼Â¡Çõ ¸¡Ï¾ø
#1
இனம் அல்லது அடையாளம் காணுதல்

இவையிரண்டும் வெவ்வேறு அர்த்தம்கொண்ட இரு வேறு சொற்கள்.

இனம்: என்பதன் அர்த்தம் :- வகை, தொகுதி, சாதி, வர்க்கம், குலம், திரள், பசுக்கூட்டம், சுற்றம், ஆசாமி என்பதாகும்.

அடையாளம்: என்பது:- அங்கம், இலக்கணம், இலாஞ்சணம், அறிகுறி, குறிப்பு, இலட்சினை, முத்திரை, அங்கமச்சம், சின்னம் என்பதாகும்.

1) கள்வன் யார் என இனம் காணப்படவில்லை என்பது தவறாகும்
2) நோயை ஏற்படுத்திய கிருமி எது என இனம் காணப்படவில்லை என்பதும் சரியே.
காரணம் கிருமி பக்ரீரியாவா? வைரஸா? எத்தொகுதியை சேர்ந்தது என்பது பற்றியதாகும்.
3) நீதிமன்றில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது எனகூறப்படுவதே தவிர இன அணிவகுப்பு
நடைபெற்றது என கூறப்படுவதில்லை.
4) கைவிரலில் மைபூசி அடையாளப்படுத்தப்படுகிறது (சரி)
5) மக்கள் மத்தியில் உள்ள துரோகிகளை நாம் இனம் காணவேண்டும் (தவறு)
அடையாளம் காணவேண்டும் என்பதே சரியாகும்.
6) இந்த ஆடு எந்த இனத்தை சேர்ந்தது? (சரி). ஜமுனாபாரியா அல்லது வேறு ஏதாவதா?
7) சூத்திரதாரிகள் யார் என இனம் காணப்படவில்லை என்பது தவறு. அடையாளம் காணப்படவில்லை என்பதே சரியாகும்.

அத்தோடு நிலைபரம் என்பதுதான் சரியான சொல், நிலவரம் அல்ல என்பதையும் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.

எனவே இந்த விடயத்தை கவனித்து மொழி திரிபுபடுவதை தடுத்து நிறுத்த உதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
Reply
#2
ஆளமான சிந்தனைகள் நாம் இதுபற்றி ஆராயத்தான் வேண்டும் விளங்காதவர்களுக்காக <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)