Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆங்கிலம் தெரியாதவங்க தான் தனி தமிழ் பத்தி பேசுராங்க???
#81
இதனைத்தான் நாம் அன்று தொட்டு வலியுறுத்தி வருகிறோம் B.B.C பல்லின பலமொழி பேசும் மக்கள் வாழும் இலங்கையில் ஒரு பொது மொழி ஒன்று அவசியமாகிறது.இப்போதைக்கு உலகில் ஆங்கிலத்தின் இராச்சியமாக இருப்பதால் அதனை ஏற்றுக்கொள்வோம் நாளைக்கே சீன மொழி பொதுமொழியாகலாம் அன்று அதனையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இவ்வாறான் நிலை வரும் போது எமது மொழி அழிந்துவிடுவதற்கு சாத்தியக்கூறு அதிகம் அதனால் தான் சொல்கிறோம் எமது மொழியை இன்னும் அதிகளவு ஆர்வத்துடன் கற்க வேண்டும் தாய்மொழிக்கல்வியை கட்டாயமாக்கினால் கூட நன்று,எமது இளையவர்களிடம் தாய்மொழி மீதான பற்று இன்னும் அதிகமாக வேண்டும் அதனை செய்யும் பொறுப்பு எம்மிடம் தான் உள்ளது
புலத்தில் இருந்து கொண்டு எம்மால் என்ன செய்துவிட முடியும் என்று கேட்கலாம் இன்று ஈழத்து இலக்கியங்களிலே முக்கிய இடம் வகிப்பவை புலம் பெயர்ந்தோர் இலக்கியம் இப்படி அழகு தமிழில் புத்தகம் வெளியிடுபவர்களையும் எழுத்தாளர்களையும்,கவிதாசிரியர்களையும் ஊக்குவிக்கவேண்டும் வெறுமனே காசுக்காக கதையெழுதும் இந்திய எழுத்து வியாபாரிகளை விடுத்து எமது தேசத்தின் உணர்வை எழுத்தில் பொறிக்கும் எம்மவர்களை ஊக்குவிக்க வேண்டும் இப்படி செய்தால் உலகமட்டத்தில் எம்மொழி சிறப்புறும்

இதே கருத்துக்களத்தில் அண்ணன் ஒருவர் புலத்திலிருந்து குறும்படங்களை தயாரித்து வெளியிடுபவர் தனது படங்களுக்கு வெளிநாட்டு கலை கலாச்சார ஊடகங்களில் கிடைத்த மதிப்பு எம்மவர் மத்தியில் கிடைக்கவில்லயே என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் அதனை எத்தனை பேர் செவிமடுத்தோம்
Reply
#82
இதனைத்தான் நாம் அன்று தொட்டு வலியுறுத்தி வருகிறோம் B.B.C பல்லின பலமொழி பேசும் மக்கள் வாழும் இலங்கையில் ஒரு பொது மொழி ஒன்று அவசியமாகிறது.இப்போதைக்கு உலகில் ஆங்கிலத்தின் இராச்சியமாக இருப்பதால் அதனை ஏற்றுக்கொள்வோம் நாளைக்கே சீன மொழி பொதுமொழியாகலாம் அன்று அதனையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இவ்வாறான் நிலை வரும் போது எமது மொழி அழிந்துவிடுவதற்கு சாத்தியக்கூறு அதிகம் அதனால் தான் சொல்கிறோம் எமது மொழியை இன்னும் அதிகளவு ஆர்வத்துடன் கற்க வேண்டும் தாய்மொழிக்கல்வியை கட்டாயமாக்கினால் கூட நன்று,எமது இளையவர்களிடம் தாய்மொழி மீதான பற்று இன்னும் அதிகமாக வேண்டும் அதனை செய்யும் பொறுப்பு எம்மிடம் தான் உள்ளது
புலத்தில் இருந்து கொண்டு எம்மால் என்ன செய்துவிட முடியும் என்று கேட்கலாம் இன்று ஈழத்து இலக்கியங்களிலே முக்கிய இடம் வகிப்பவை புலம் பெயர்ந்தோர் இலக்கியம் இப்படி அழகு தமிழில் புத்தகம் வெளியிடுபவர்களையும் எழுத்தாளர்களையும்,கவிதாசிரியர்களையும் ஊக்குவிக்கவேண்டும் வெறுமனே காசுக்காக கதையெழுதும் இந்திய எழுத்து வியாபாரிகளை விடுத்து எமது தேசத்தின் உணர்வை எழுத்தில் பொறிக்கும் எம்மவர்களை ஊக்குவிக்க வேண்டும் இப்படி செய்தால் உலகமட்டத்தில் எம்மொழி சிறப்புறும்

இதே கருத்துக்களத்தில் அண்ணன் ஒருவர் புலத்திலிருந்து குறும்படங்களை தயாரித்து வெளியிடுபவர் தனது படங்களுக்கு வெளிநாட்டு கலை கலாச்சார ஊடகங்களில் கிடைத்த மதிப்பு எம்மவர் மத்தியில் கிடைக்கவில்லயே என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் அதனை எத்தனை பேர் செவிமடுத்தோம்
Reply
#83
நாம் தமிழர்கள்.....தமிழ் எமது தாய் மொழியாதலால்....! தமிழர்கள் அல்லாதோரும் இங்கு கருத்தாடலாம்....தமிழ் தெரிந்தால்....!

ஆங்கிலத்தில் கருத்தாட விருப்பமா....அதற்காக பல களங்கள் உண்டு....! இந்தக் கலப்புகள் வேண்டாம் அது தமிழுக்கும் அநாகரிகம் ஆங்கிலத்திற்கும் அநாகரிகம்.....!

நாம் எம் தாயை வாழ வைக்க விரும்புகிறோம்....அவளை அநாதையாக்க நாம் ஒரு போதும் அனுமதியோம்....நாம் ஆறுமுகநாவலர் சுவாமி விவேகானந்தர் மகாத்மா காந்தி தமிழுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் உயிர் தந்த போராளிகள் என பல தெளிவான சிந்தனை வாதிகளிடம் பாடம் படித்து முன்னேற விளைகின்றோம்.....கிறிஸ்தவத்தைப் பின்பற்றினால் அமோக வசதி சலுகை என்று வாழ்ந்த காலத்தில் சைவம் வளர்த்தவன் ஆறுமுக நாவலன்...அதுவும் ஆங்கிலத்தில் கல்வி கற்று தன் தாய் மொழி வளர்க்க எளிய தமிழ் இலக்கண வடிவம் தந்தவன் அந்த நல்லூரான்....கருணாநிதி என்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதி ஒரு போதும் தமிழ் மொழியின் காவலனல்ல....! அவர் இங்கு உதாரணம் ஆவதும் கேவலம்.....!

தமிழ் மொழியின் காவலர்களை சரியாகக் கூட இனங்கானத்தெரியாத உங்கள் சிந்தனை எமக்கு வேதனை அளிக்கிறது. எதற்கும் இன்னும் ஆழமாய் எதையும் தேடவும் சிந்திக்கவும் செய்யுங்கள் தெளிவு மேலும் பிறக்கும். மேலோட்டம் என்பது தெளிவற்ற கருத்துகளையே பிரசவிக்கும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#84
[quote=கெளஷிகன்]ஒரு மொழியறிவைப் பெறுவது ஒரு ஆன்மாவைப் பெறுவதற்குச் சமம் என்று கூறினார் மகாத்மா காந்தி...................வேற்று மொழிகளை புறக்கனிப்பவர்கள் இதனை முதலில் ஆழமாக உண்ர்ந்துகொள்ள வேண்டும்

ரொம்ப சரி
Reply
#85
வேற்று மொழியை பற்றிக் கவலைப்படும் நீ முதலில் உன் தாய் மொழியால் பெறப்படும் அதி உச்ச பயனைப்பெற்றாயா உணர்ந்துபார்....! உள்ள ஆன்மாவைக் காப்பாற்றிக் கொள்....அதையும் மலினப்படுத்தாதே.....!

மகாத்மாவின் காந்தியம் தோற்றதால்தான் இன்று அணுகுண்டுடன் பாரதம் அலைகிறதோ....?!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#86
[quote=Eelavan]இதனைத்தான் நாம் அன்று தொட்டு வலியுறுத்தி வருகிறோம் B.B.C பல்லின பலமொழி பேசும் மக்கள் வாழும் இலங்கையில் ஒரு பொது மொழி ஒன்று அவசியமாகிறது.இப்போதைக்கு உலகில் ஆங்கிலத்தின் இராச்சியமாக இருப்பதால் அதனை ஏற்றுக்கொள்வோம் நாளைக்கே சீன மொழி பொதுமொழியாகலாம் அன்று அதனையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இவ்வாறான் நிலை வரும் போது எமது மொழி அழிந்துவிடுவதற்கு சாத்தியக்கூறு அதிகம் அதனால் தான் சொல்கிறோம் எமது மொழியை இன்னும் அதிகளவு ஆர்வத்துடன் கற்க வேண்டும் தாய்மொழிக்கல்வியை கட்டாயமாக்கினால் கூட நன்று,எமது இளையவர்களிடம் தாய்மொழி மீதான பற்று இன்னும் அதிகமாக வேண்டும் அதனை செய்யும் பொறுப்பு எம்மிடம் தான் உள்ளது
புலத்தில் இருந்து கொண்டு எம்மால் என்ன செய்துவிட முடியும் என்று கேட்கலாம் இன்று ஈழத்து இலக்கியங்களிலே முக்கிய இடம் வகிப்பவை புலம் பெயர்ந்தோர் இலக்கியம் இப்படி அழகு தமிழில் புத்தகம் வெளியிடுபவர்களையும் எழுத்தாளர்களையும்,கவிதாசிரியர்களையும் ஊக்குவிக்கவேண்டும் வெறுமனே காசுக்காக கதையெழுதும் இந்திய எழுத்து வியாபாரிகளை விடுத்து எமது தேசத்தின் உணர்வை எழுத்தில் பொறிக்கும் எம்மவர்களை ஊக்குவிக்க வேண்டும் இப்படி செய்தால் உலகமட்டத்தில் எம்மொழி சிறப்புறும்

இதே கருத்துக்களத்தில் அண்ணன் ஒருவர் புலத்திலிருந்து குறும்படங்களை தயாரித்து வெளியிடுபவர் தனது படங்களுக்கு வெளிநாட்டு கலை கலாச்சார ஊடகங்களில் கிடைத்த மதிப்பு எம்மவர் மத்தியில் கிடைக்கவில்லயே என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் அதனை எத்தனை பேர் செவிமடுத்தோம்[/quote]

[b]நா உங்க கருத்த ஏத்துக்கிறன். இதுதான் எனக்கு வேணும் பொஸ்.


[quote=Karavai Paranee]இந்திய தமிழர்களிற்கு எமது தமிழை விளங்கிக்கொள்வார்கள். நாம் ஆறுதலாக கதைப்போமானால். நாம்தானே எல்லாவற்றிலும் அவசரப்படுபவர்கள். அதனால் நாம் கதைப்பது அவர்களிற்கு புரிவதில்லை. நான் எத்தனையோ இந்திய தமிழர்களுடன் கதைத்திருக்கின்றேன். வேலை செய்துகொண்டிருக்கின்றேன். அவர்கள், நாம் ஒரு நிமிடத்தில் கதைத்து முடிப்பதை ஜந்து நிமிடம் எடுத்து கதைப்பார்கள். அதனால் நாம் கதைப்பது அவர்களிற்பு புரிந்துகொள்வது குறைவாக இருக்கின்றதேயொழிய எமது தமிழிற்கும் அவர்களது தமிழிற்கும் வித்தியாசம் குறைவுதான்

முக்கியமானது ஆங்கில கலப்பு
நாம் ஆங்கிலம் கலந்து கதைப்பது குறைவு. [b]தெரிந்தால்தானே கலப்பதற்கு

[b]நா இந்த விவாத தலைபை சுட்டது மேல பாக்குற பரணியோட கருத்தில இருந்து தான். தமிழ் தெரியாதவங்க தான் தனி தமிழ் பத்தி பேசுராங்கன்னு தீர்மானிச்சுட்டு நா இந்த கருத்து களத்துக்கு வரல. அப்பிடி தீர்மானிச்சுட்டா கருத்து குடுக்க ஆரம்பிச்சா அதுக்கு பேர் கருத்து களம் கிடையாது அது கருத்து திணிப்பு. என்னோட ஆசையெல்லாம் இதுமாதி ஒரு சூடான தலைப்பை வைச்சு நிறைய கருத்துக்களை மத்தவங்க கிட்ட இருந்து எடுக்கணும். இங்க நிறைய நல்ல கருத்து வந்திருக்கா இல்லையா? நீங்களே சொல்லுங்க பொஸ்? எத்தின பேர் கருத்து சொல்லியிருக்காங்க இல்லைனா படிச்சுருக்காங்க இது நல்ல விசயம். இது தான் கருத்து களத்துக்கு வேணும். எப்பவும் ஒரு கருத்த தீர்மானிச்சுட்டு கருத்து களத்துக்கு வர கூடாது. அது மாதி மாற்று கருத்து இருக்க கூடாதுன்னும் நினைக்க கூடாது.

அதனால நாம் எல்லாரும் அவங்களோட சொந்த கருதுக்களை சூடா வையுங்க. கலந்து பேசி முடிவு பண்ணுவம். சரியா பொஸ்?
Reply
#87
kuruvikal Wrote:வேற்று மொழியை பற்றிக் கவலைப்படும் நீ முதலில் உன் தாய் மொழியால் பெறப்படும் அதி உச்ச பயனைப்பெற்றாயா உணர்ந்துபார்....! உள்ள ஆன்மாவைக் காப்பாற்றிக் கொள்....அதையும் மலினப்படுத்தாதே.....!

மகாத்மாவின் காந்தியம் தோற்றதால்தான் இன்று அணுகுண்டுடன் பாரதம் அலைகிறதோ....?!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

யார் இப்ப தாய் மொழி வேணான்னு சொன்னாங்க?
Reply
#88
kuruvikal Wrote:வேற்று மொழியை பற்றிக் கவலைப்படும் நீ முதலில் உன் தாய் மொழியால் பெறப்படும் அதி உச்ச பயனைப்பெற்றாயா உணர்ந்துபார்....! உள்ள ஆன்மாவைக் காப்பாற்றிக் கொள்....அதையும் மலினப்படுத்தாதே.....!
குருவி வெட்டிக்கொண்டுவந்து ஒட்டுறதெல்லாம் எந்த மொழியாம்..?

நான் பார்த்த அளவிலை குருவி தாய்மொழியிலை வெட்டி ஒட்டினதெல்லாம் துரோகி.. போர்.. மாவீரர்.. பற்றியதுதானே. தாய் மொழியால் பெறப்படும் அதி உச்ச பயனை பெற்றுவிட்டோம் பலனை அடைந்துவிட்டோம் ஆன்மாவைக் காப்பாற்றிக்கொண்டோம் குருவிகாள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#89
குருவி மிஸ்சிங்?
Reply
#90
ஆங்கிலத்தில் அணையாக் காதல்கொண்டு அலைந்து திரிபவர் எங்கள் ஆசிய நாட்டவர்போல் அதிலும் குறிப்பாக தென்ஆசிய நாட்டவர்போல் உலகில் எவரும் இருக்க மாட்டார். ஆங்கிலத்தை ஒரு மொழியாக கருதி அதில் ஈடுபாடு காட்டுவது என்பதற்கு மேலாக அதன்மீது போலியாக ஏற்படுத்தப்பட்ட சமூகக் கௌரவம், செயற்கை அந்தஃச்து கருதி அதனைக் கற்க முயல்வரே எம்மவரில் அதிகம். இது பெரும்பாலும் 50 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்ததாக கருதப்படும் ஆங்கிலக் காலனித்துவத்தின் எச்சசொச்சங்களின் பாதிப்பாக இருக்கலாம். இந்த ஆங்கில அடிபணிதலுக்கு நாம் சொல்லும் பல கற்பிதங்களில் பிராதானமானவை அது அனைத்துலக மொழி, அதிலேயே எல்லா அறிவியலும் கருக்கொள்கின்றன, அதையறிந்தவன் உலகறிந்தவன் என இப்படிப்பல.

ஆனால் அதற்கான முழுக்காரணம் சோம்பேறித்தனம், சுயசிந்தனையின்மை, தாழ்வுமனப்பாண்மை, ஆளுமைக்குறைவு போன்றவையே. உலகில் சுயகௌரவமும் ஆளுமையுமுள்ள எந்த ஒரு மக்கள் கூட்டமும் அன்னியமொழிகளை தங்கள் தலைகளில் வைத்து கூத்தாடி கும்மியடிப்பதில்லை. சீனா,யப்பான்,ரசியா,பிரான்சு,யேர்மனி இப்படி பலநாடுகள் பலசவால்களுக்கு மத்தியில் தங்கள் தனித்தன்மையை பேணமுயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளன. இசுரேல் நாட்டினர் முற்று முழுதாக அழிந்து போய்க்கொண்டிருந்த தமது எபிரேய (HEBREW) மொழியினை பல்வேறு மொழிப்பாவனையின் பின்னனியில் இசுரேலில் குடிபெயர்ந்த யுூத இனத்திற்கு கற்பித்து தம்மை செழுமைப்படுத்தினர். அதனால் இன்று அவர்களுக்கென்று ஒரு ஓர்மம், பலம் இருக்கின்றது. இவையெல்லாம் அந்த இனங்களின் கடும் முயற்சியின் அறுவடைகள். சுலபம் கருதி அவர்கள் ஏலவே நடைமுறையில் ஆதிக்கத்திலுள்ள மொழிகளை ஏற்று அதன்கீழ் அவர்கள் தங்களை இலகுவாக வளர்த்தெடுத்திருக்கலாம். அப்படி அவர்கள் செய்திருப்பார்களாயின் இன்றைய அவர்களின் தேசிய தனித்துவபலத்தை ஒருபோதும் அடைந்திருக்கமாட்டார்கள்.; தங்கள் மொழியில் தங்களை வளர்த்தெடுப்பதற்காகவே இவர்கள் ஆங்கிலம் கற்றார்கள். ஆங்கிலத்தில் அவர்கள் நாடுகளில் அறிந்தவற்றை தங்களது மக்களின் வளர்ச்சிகேற்ப மாற்றியமைக்கும் வல்லமையும் ஆளுமையும் அவர்களிடம் இருந்தது. அன்றைய யப்பானும் இன்றைய சீனாவும் அதற்கு நல்ல உதாரணங்கள்.

புல்மோட்டையிலுள்ள இல்மனைட்டை குறைந்தவிலைக்கு வெள்ளையன் கொள்ளையடித்துக் கொண்டு போக உதவுவதற்கும் பிரித்தானியாவிலுள்ள நிறுவனங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புக்களை மிகமலிந்த கூலிக்கு பதிலளிப்பதற்கும் மட்டுமே நாங்கள் ஆங்கிலம் கற்கின்றோம். அதாவது எங்கள் ஆங்கிலக் கற்றல் என்பது எப்படி ஆங்கிலேயனுக்கு அடிமைச் சேவகம் செய்து அவனை வளப்படுத்துவது என்பது பற்றியதாகும். நாங்கள் கற்கும் ஆங்கிலம் இப்படியான நோக்குடையதாக இருப்பின் அது எங்கே எங்களை வளப்படுத்த உதவப்போகின்றது. எங்களை நாங்களாக பார்த்து அதன்வழியாக எங்களை வளர்த்தெடுக்கும் வல்லமை எங்களிடம் ஒருபோதும் இருந்ததில்லை. ஏன் எங்களிடம் தேசியம் என்ற உணர்வு எப்போது வந்தது. சிங்களவன் எங்களை அழிக்கமுற்பட்டு அதனிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகவே நாங்கள் ஒன்றுதிரண்டோம். அதாவது எங்களது தேசிய உணர்வு என்பது தற்காப்புத் தேசியம். அப்படியான ஒரு சூழல் எழவில்லையெனில் நாம் எப்போதோ எமது தனித்துவத்தை இழந்திருப்போம். இந்த வகையில் நாம் சிங்களவருக்கு நன்றியுடையவர்களாகின்றோம்.

நாங்கள் எங்கள் மொழியில் ஆங்கிலத்தை கலந்து எழுதுவதற்கு எத்தனையோ நியாயப்படுத்தல் வாதங்களை முன்வைக்கின்றோம். இந்த வாதத்தை அப்படியே மாற்றிப்போட்டு ஆங்கிலத்தினுள் தமிழைக் கலந்து எழுதுவதற்கு எவனுக்காவது துணிவு வருமா??? இந்த கலப்படம் செய்பவனுக்கெல்லாம் உள்ள துணிவு,தெளிவு என்னவெனில் அவன் எப்படி மட்டமாக எழுதினாலும் எந்த தமிழ் மொழிக் கொலையைச் செய்து எழுதினாலும் அதனை ஏற்று அவனுக்கு அதே மாதிரி பதில் எழுத ஏராளமான இழிச்ச வாயன்கள் எம்மிடையே உள்ளார்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அதனால் அவர்கள் தொடர்ந்து அப்படி எழுத பேசச் செய்கின்றார்கள். நாங்களும் அவர்கள் எங்களை ஒட்டுமொத்தமாக படுகேவலப்படுத்துவதை கண்டு கொள்ளாது அவர்வழி பின்பற்றுவதுபற்றி சிந்திக்கின்றோம்.

பலத்த ஆய்வுகள் முயற்சிகளின் பின் காலந்தோறும் உலகில் உருவாக்கப்படும் புதியனவற்றிற்கு சரியான தமிழ்ச்சொல்லை உருவாக்க கூட எமக்கு வல்லமையில்லை என்று சொல்வது எவ்வளவு வேதனைக்குரிய விடயம். சரி அப்படியாக உருவாக்கப்பட்டவற்றிற்கான தமிழ்ச்சொற் பாவனையை ஏற்றுக் கொள்வதற்குகூட நாம் எந்தளவு தயக்கம் காட்டுகின்றோம். அதனைவிட ஏற்கனவே இருப்பனவற்றிற்கு மேலாக இன்னும் ஏராளமானவற்றை வலிந்து செயற்கையாக புகுத்துவதற்கு நாம் கற்பிக்கும் நியாயங்கள் ஏராளம். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணம் கொண்டு செயற்படுபவர்கள் உங்கள் ஆளுமையை விருத்தி செய்யக்கூடிய வகையில் ஏதாவது புதுமைகளைப் புகுத்துங்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பயனுடையதாகி எம் எல்லோரையும் பலப்படுத்துவதாயமையட்டும்.
Reply
#91
[quote=manimaran]பலத்த ஆய்வுகள் முயற்சிகளின் பின் காலந்தோறும் உலகில் உருவாக்கப்படும் புதியனவற்றிற்கு சரியான தமிழ்ச்சொல்லை உருவாக்க கூட எமக்கு வல்லமையில்லை என்று சொல்வது எவ்வளவு வேதனைக்குரிய விடயம். சரி அப்படியாக உருவாக்கப்பட்டவற்றிற்கான தமிழ்ச்சொற் பாவனையை ஏற்றுக் கொள்வதற்குகூட நாம் எந்தளவு தயக்கம் காட்டுகின்றோம். அதனைவிட ஏற்கனவே இருப்பனவற்றிற்கு மேலாக இன்னும் ஏராளமானவற்றை வலிந்து செயற்கையாக புகுத்துவதற்கு நாம் கற்பிக்கும் நியாயங்கள் ஏராளம்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#92
நல்லாச் சொன்னியள் மணிமாறன்.....விளங்கிறதுகள் தெளியுங்கள் விளங்காததுகள் இன்னும் கலங்குங்கள்....கலங்கிறதுகள் தொடர்ந்து கலங்குங்கள்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#93
BBC Wrote:
Eelavan Wrote:முதலில் நாம் எந்த வேலையிலும் தமிழ் தான் எமது தாய் மொழி அதனால் தமிழ் மட்டும் தான் பேச வேண்டும் ஆங்கிலத்தை திரும்பியும் பார்க்கக்கூடாது என்று சொல்வதில்லை நீங்கள் தமிழ் வெறியன் என்று சொன்னாலும் சரி தமிழ்க் கிருக்கன் என்று சொன்னாலும் சரி எங்களுக்கு தேவை எமது தாய் மொழி இத்தனை காலமும் எமது முன்னோர் கட்டிக்காத்து எமக்கு பரிசளித்த முதுசம் அழிந்து போய்விடக்கூடாது
அதுதான் எமது குரலே ஒழிய ஆங்கிலத்திற்கு நாம் என்றும் எதிரானவர்கள் அல்ல ஏன் நான் எனது உயர்கல்வியை ஆங்கிலத்தில் தான் கற்கிறேன் ஆனாலும் எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று மற்றவர்களுகு காட்டிகொண்டு இருப்பதை விட நான் தமிழன் எனது தாய் மொழி தமிழ் என்று கூறுவதில் பெருமையடைகிறேன் நான் பெருமை அடைவதுடன் நின்றுவிடாது எனது சந்ததிக்கும் இது சேரும் வகை தமிழை கட்டிக்காக்க வேண்டும் என நினைக்கிறேன் அதற்காக தான் பேசும் போதும் எழுதும் போதும் தமிழுடன் ஆங்கிலத்தையோ வேறு மொழிகளையோ கலக்க வேண்டாம் என்று சொல்கிறோம் ஆங்கிலத்தையோ வேறு மொழிகளையோ கற்க வேண்டாம் என்று சொல்லவில்லை உங்களுக்கு பல்வேறு மொழிகளில் இருக்கும் புலமையை எமது தாய் மொழியை வளர்ப்பதர்கு பயன் படுத்துங்கள் அதனை அழிப்பதற்கு பயன்படுத்தாதீர்கள்

இலங்கையில் ஆங்கிலக்கல்வி கட்டாயமாக்கப்படல் வேண்டும் இது எனது கருத்தும் கூட ஆனால் குடியுரிமை பத்திரத்தில் தமிழன் என்று கூறப்பட்டிருக்கும் ஒவ்வொருத்தனும் தமிழை நன்கு அறிந்திருத்தல் வேண்டும் இதுவும் கட்டாயமாக்கப்ப்ட வேண்டும்

இதை ஏன் வலியுறுத்துகின்றேன் என்றால் எனது நண்பன் யாழ்ப்பனத்தில் பிறந்து கைக்குழந்தையாக இருக்கும் போது பெற்றோருடன் கொழும்பு வந்து அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டவன் பெற்றோர் பிள்ளையின் கல்வி முக்கியம் கருதி கொழும்பில் உள்ள பெயர் பெற்ற பாடசாலையில் சேர்த்து விட்டனர்.அவன் கல்வி கற்றது முழுவதும் ஆங்கிலத்தில் நண்பர்களுடன் பேசுவது ஆங்கிலத்தில் பெற்றொரின் காரணமாக நன்கு தமிழும் பேசுவான் ஆனால் எழுதத்தெரியாது........
இவன் ஒரு இலங்கை தமிழன் இது இவனது பிழை கூட இல்லை அவன் வளர்ந்த சூழல் அப்படி அவனுக்கு தமிழ் படிக்க வேண்டிய தேவையே இருக்கவில்லை இப்படி எத்தனையோ தமிழ் குழந்தைகள் தமிழ் தெரியாத தமிழர்களாக அலைகின்றன
தமிழ் மொழியை படிப்பதும் படிக்காமல் விடுவதும் அவனது உரிமை ஆனால் அவனுக்கு தமிழ் கற்பித்திருக்க வேண்டியது அவனது பெற்றோரது கடமை அவனது பெற்றோர் அதிலிருந்து தவறும் போது அது சமூகத்தின் கடமையாகின்றது அது தான் அரசாங்கத்தின் வேலை இலங்கையில் தமிழும் அரச கரும மொழியாக இருக்கும் போது தாய்மொழிக்கல்வியை கட்டாயமாக்க வேண்டும்

சிஙபூரில் சட்டம் என்ன தெரியுமா ஓவ்வொரு சிங்கப்பூர் குடிமகனும் தாய்மொழியை கட்டாயமாக கற்க வேண்டும் அவன் வேலை தேடுவதாக இருந்தாலும் சரி மேற்படிப்பு படிப்பதாக இருந்தாலும் சரி அடிப்படை தகமை தாய் மொழியில் சித்தி

இங்கு தமிழரின் எண்ணிக்கை ஓரளவுதான் உண்டு ஆயினும் தமிழ் இங்கு அரசகரும மொழி எமது மொழிக்கு தமிழ் நாட்டிலோ இலங்கையிலோ கொடுக்காத சிறப்பை இங்கு கொடுக்கிறார்கள்
இதையே எமது அரசாங்கம் செய்யுமா என்றால் இல்லை அதற்கு தமிழ் மொழி அழிவதில் சந்தோசமன்றி வேறில்லை எனவே அந்தக் கடமையை நாம் தான் செய்யவேண்டும் உலகப்பொதுமொழி ஆங்கிலம் கற்போம் நாம் கற்பதுடன் நின்று விடாது எமது தாய் நாட்டுக்குழந்தைகளும் கற்க வகை செய்வோம் ஆங்கிலம் மட்டும் என்றில்லை நீங்கள் வாழும் நாடுகளில் உள்ள அத்தனை மொழியையும் படியுங்கள் அந்தந்த மொழியில் உள்ள பிரயோசனமானவற்றை தாய் மொழிக்கு கொண்டு வாருங்கள்
அதை விடுத்து ஆங்கிலம் தெரியாதவர்கள் தான் தனித்தமிழ் என்கிறார்கள் என்பது வெறும் பசப்பு

நீங்க நா சொன்ன அதே கருத்த தான் யாழ்ப்பாண தமிழ்ல சொல்லியிருக்கிறீங்க.

உங்க சிங்கப்பூர் இருக்கமாதி இலங்கையிலயும் ஆங்கிலம் நிர்வாக மொழியா வரணும். அது கூட தாய்மொழியும் கட்டாயம் துணை மொழியா இருக்கணும். பல இனமக்கள் வாழ்ற நாட்டுக்கு அதுதான் சரி.

vasisutha Wrote:சிறீலங்காவின் அரசியல் தலைவர்கள் பற்றி சிங்கப்புூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யுூ
தனது நூல் மூலம் கூறியவை.



[size=15]1956 ஆம் ஆண்டு லண்டனுக்குப் போகும் வழியில் எனது பிரயாணத்தை இடைநிறுத்தி சிறீலங்காவுக்கு (அப்போது சிலோன் என்று பெயர்) முதன் முறையாகச் சென்றேன். அதே வருடம் சிறீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் சொலமன் வெஸ்ற்றிஜ்வே பண்டாரநாயக்கா பொதுத்தேர்தலில் வெற்றியடைந்து தனது நாட்டின் பிரதமரானார். சிங்களத்தை தேசிய மொழியாகவும், புத்த மதத்தை தேசிய மதமாக வும் உயர்த்துவேனென்று அவர் தேர்தல் வாக் குறுதி அளித்திருந்தார்.

பண்டாரநாயக்கா ஒரு அசல் பழுப்பு நிற வெள்ளைக்காரன், ஆங்கிலக்கல்வி பெற்றவர். கிறீஸ்தவராகப் பிறந்தவர். பின்பு சுதேசியாக மாறி புத்த மதத்தைத் தழுவியவர். சிங்கள மொழிவெறியராகவும் அவர் மாறிவிட்டார். சிலோனின் சீரழிவு இப்படித்தான் ஆரம்பித் தது. டாம்பீகமாக ஆங்கில உடையணிந்த, உயரத்தில் குறைந்தவரான இந்த மனிதர் நன்றாகப் பேசுவார். சிலோனை ஒரு சிங்கள மக்களுக்குரிய நாடாக மாற்றுவேன் என்ற வாக்குறுதியுடன் அவர் தேர்தலில் வெற்றியைப் பெற்றார்.
பிரிட்டிசாரின் வாழ்க்கைமுறை, அவர்களைப் போன்ற நடையுடை போன்ற அடையாளங் களுடன் உலாவிய மேட்டுக் குடியினருக்கு எதிரான புரட்சியாக அவருடைய குரல் ஒலித் தது. பண்டாரநாயக்காவினால் தோல்வி யுறச் செய்யப்பட்ட பிரதமர் சேர் ஜோன் கொத்லா வலை ஒவ வொரு காலையும் குதிரை ஏற்றம் செய்வார். யாழ்ப்பாணத் தமிழர்களும் பிற சிறுபான்மையினரும் பின் நிலைக்குத் தள்ளப் படுவார்கள் என்பது பற்றி தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவந்த பண்டாரநாயக்கா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
புத்தமதம் தேசிய மதமாக்கப்படுவதால் இந்து மதத் தமிழர்கள், இஸ்லாம்மத முஸ்லீம்கள், கிறீஸ்தவ மத பறங்கியர்கள் கலவரம் அடைவாh கள் என்பது பற்றியும் அவர் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஒக்ஸ்போட் பல் கலைக்கழகத்தின் ஒக்ஸ்போட் யுூனியன் மா ணவர் சங்கத்திற்கு அவர் தலைவராக பதவி வகித்தவர். இந்தச் சங்கத்தில் நடக்கும் விவா தங்களில் பங்கெடுத்துப் பேசுவதுபோல அவர் பின்பு வாதிடுவது வழமை.

பிரித்தானியா தலைமையில் இயங்கிய பொது நலவாய நாடுகள் கூட்டமைப்பில் சிலோன் ஒரு உன்னத ஸ்தானத்தை வகித்தது. சுதந்தி ரத்தை நோக்கிய பாதையில் சிலோன் மிகவும் கவனமாக வளர்க்கப்பட்டது. இரண்டாம் உல கப்போர் முடிந்த காலத்தில் 10 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நடுத்தர நாடாக சிலோன் விளங்கியது. திருப்தி கரமான உயர்தரக் கல்வி வழங்கும் இரு பல்கலைக்கழகங்களும் அங்கு காணப்பட்டன. பொதுவாக சிலோன் மக்கள் நல்ல கல்வியறிவு உள்ளவர்களாக இருந்தனர்.
உள்நாட்டு மக்களைக்கொண்ட நிர்வாக சேவை ஆட்சியாளர்களுக்கு உதவியது. பிரதி நிதித்துவ அரசுமுறை அனுபவம், சுதந்திரம் அடைவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே சிலோன் மக்களுக்குக் கிடைத்துள்ளது. தேசிய மட்டத்திலும் பிராந்திய மட்டத்திலும் அவர்கள் தேர்தல்களைச் சந்தித்துள்ளனர். 1930களில் மாநகராட்சி, நகராட்சித் தேர்தல்கள் அங்கு ஆரம்பித்தன. படிமுறை வளர்ச்சிப்பாதையில் காலடி பதித்து 1948இல் சுதந்திரம் பெற்ற போது பிறநாடுகள் சிலோனை உதாரண மாகப் பின்பற்றும் அளவிற்கு அதனுடைய முன்னேற்றம் காணப்பட்டது.

[b]அரசகரும மொழியாக ஆங்கிலத்தின் இடத்தில் சிங்களம் இருத்தப்பட்டபின் தமிழர்கள் கடும் பின்னடைவைச் சந்தித்தனர். தேசிய மதமாக புத்தமதம் கொண்டுவரப்பட்டதால் இந்துத் தமிழர்கள் கசப்படைந்தனர். ஒக்ரோபர் 1966இல் லண்டனில் நடந்த பிரதம மந்திரிகள் மாநாட்டில் பங்குபற்றிவிட்டு சிங்கப்புூர் திரும்பும் வழியில் கொழும்பு வந்தேன். அப்போது சிலோன் பிரதமராக டட்லி சேனநாயக்கா பதவி வகித்தார். அவர் வயது வந்த மனிதராகவும் வீணில் பழிபோடும் இயல்பு உடையவராகவும் காணப்பட்டார்.
எனக்குத் தரப்பட்ட இரவு விருந்துபசாரத்தில் சிலோனுக்கு நடந்ததைத் தவிர்க்கமுடியாது என்று ஒரு மூத்த சிங்கள விருந்தினர் எனக்கு விளக்கிக்கூறினார். தேர்தலின் பெறுபேறுகள்தான் இத்த னை குழப்பத்திற்கும் காரணம் என்று அவர் சொன்னார். ஆட்சி செய்யும் இனமாக சிங்களவர்கள் இருக்க விரும்புகிறார்கள். பிரிட்டிசாரின் வாரிசுகளாக மேலாதிக்க நிலையில் இருக்க ஆவலாக உள்ளனர். மூத்த நிர்வாக அதிகாரிகளாக பிரிட்டிசாரின் கீழ் இருந்த தமிழர்களைத் தள்ளிவிட்டு தாமே நிர்வாகஞ்செய்ய ஆர்வமாக உள்ளனர்.
சிங்களத்தை அரசகரும மொழியாக்கி அவர்கள் படும் துன்பத்தை என்னால் உணரமுடிகின்றது.இதற்கு அவர்கள் கொடுக்கும் விலை மிகப்பெரியது. பாடநூல்கள், நிர்வாக விதிமுறைகள், கோப் புக்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில் இருந்து சிங்களம், தமிழ் ஆகியவற்றிற்கு மொழிமாற்றம் செய்கிறார்கள். இதற்கு அவர்கள் செலவிடும் நேரமும், பணமும் வீண்விரயமாக்கப்படுகின்றது. பல்கலைக்கழகங்களில் மூன்று மொழிகளிலும் பாடம் நடத்துகின்றார்கள்.
சிங்களவர்களுக்குச் சிங்களம், தமிழர்களுக்குத் தமிழ், பறங்கியவர்களுக்கு ஆங்கிலம். பெரதேனியா பல்கலைக்கழக உபவேந்தரை நான் இப்படிக்கேட்டேன்; மும்மொழியில் பயிற்றப்பட்ட பெருந்தெருப் பொறியியலாளர்கள் இணைந்து எப்படி ஒரு மேம்பாலத்தைக் கட்டி முடிப்பார்கள்? அந்த உபவேந்தர் ஒரு பறங்கி இனத்தவர். தான் கேம்பிறிஜ் பல்கலைக்கழகம் சென்று கலாநிதிப்பட்டம் பெற்றதற்கு அத்தாட்சியாகக் கழுத்துப்பட்டி அணிந்திருந்தார்.
'ஐயா, நீங்கள் கேட்டது ஒரு அரசியல் கேள்வி, அதற்கு அமைச்சர்கள்தான் பதில் கூற வேண்டும்' என்று அவர் எனக்குப் பதிலளித்தார். நான் பாடப்புத்தகங்கள் பற்றியும் கேட்டேன். ஆங்கிலப் பாடநூல்கள் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் பிரசுரமாகும்போது காலதாமத மாகிவிடும். இதனால் தமிழ், சிங்களப் பாடநூல்களில் பல குறைபாடுகள் தோன்றும். ஆங்கில நூல்கள் புதிதாகத் தோன்றும் வேகத்திற்கு ஈடாக மொழிமாற்ற நூல்கள் தோன்றும் வாய்ப் புக்கள் இல்லை. இதனால் கல்வி திருப்திகரமாக அமையாது. இவ வாறு கூறிய என்னை அவர் மறுத்துரைக்கவில்லை. [/color]

....erimalai...
Reply
#94
ஆங்கிலம் படிக்க விட்டிடாதேங்கோ.. விட்டியளோ பிரச்சனை வந்திடும்..

சனம் உங்கடை தளங்களை விட்டிட்டு மற்றத் தளங்களைப் படிக்கத் தொடங்கீடும்.. அதுகளுக்கு பொது அறிவு.. நாட்டு நடப்புக்கள் உண்மையள் தெரியவந்திடும்..
Idea Idea Idea

பிறகு எல்லாம் பிழைச்சுப்போகும்.. அமத்துங்கோ.. அமத்துங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#95
தனித்தமிழ்

கிரந்த எழுத்துகள் பயன்படுத்துவதை நான் ஏற்கிறேன். புஷ்பம் என்பதைப் புட்பம் என்றும் கஷ்டம் என்பதைக் கட்டம் என்றும் எழுதுவதைக் காட்டிலும் புஷ்பம் என்றும் கஷ்டம் என்றும் எழுதுவது நல்லது என்பது என் அபிப்பிராயம். மிகப்பழங்காலம் முதல் தமிழுக்கும் சமிஸ்கிரதத்திற்குமான இருந்துவரும் தொடர்பினால் கிரந்த எழுத்துகள் மக்களின் வழக்கோடும் எழுத்தோடும் ஒன்றாகக் கலந்துவிட்டன. இதை நீக்கவேண்டும் என்று சொல்லி ஒரு மொழியை மக்களிடமிருந்து அன்னியப்படுத்தக்கூடாது. அதே சமயம் தன் கொள்கை அளவில் தனித்தமிழில்தான் எழுதுவேன் என்பவர்கள் கிண்டலுக்கோ நக்கலுக்கோ உரியவர்கள் அல்லர். அவர்கள் செய்யும் பணியின் மூலம் சில நல்ல, இலகுவான, தமிழ்ச்சொற்கள் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. இணையம், கணினி, ஏப்புநோய் போன்றவை தனித்தமிழ் ஆர்வலர்களிடமிருந்து தமிழுக்குக் கிடைத்த அழகான வார்த்தைகள் என்பதை மறுப்பதற்கில்லை. என்னளவில் தனித்தமிழைப் பயன்படுத்த முடியாவிட்டாலும் அதைச் செய்பவர்களை மிகுந்த ஆச்சரியத்தோடும் மரியாதையோடும் பார்க்கிறேன். அதனால் *தனித் தமிழ் போலி* எனச் சொல்ல முடியாது.

பஸ்ஸ?க்குப் பேருந்து என்பது நல்ல மாற்று. கிராமத்தில் இருப்பவர்கள் பஸ் என்றுதான் பயன்படுத்துகிறார்கள்; ஏன் மாற்றவேண்டும் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. அவர்களுக்குப் பேருந்து என்று சொன்னாலும் புரியும் என்றுதான் நினைக்கிறேன். இதுமாதிரி, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, புரிந்துகொள்ளக் கூடிய தமிழ் வார்த்தைகளைத் தொடர்ந்து பயன்படுத்துதல் நலம். மொழியில் மேலும் சில பிறமொழிச்சொற்கள் கலப்பதைத் தவிர்க்கலாம். ஏற்கனவே கலந்துவிட்ட சில சொற்களை எளிதான வார்த்தைகள் கொண்டு பெயர்க்கலாம். இந்த வேலையே தேவையற்றது என்கிற கருத்து ஏற்பதற்கில்லை.

காப்பி, சன் டிவி போன்ற பெயர்கள் அவையாகவே இருக்கட்டும். கொட்டைவடிநீரோ, சூரியத் தொலைக்காட்சியோ பயமுறுத்த உதவுமே ஒழிய, தமிழை வளப்படுத்துவதற்கு உதவாது. இவைக்குத் தனித்தமிழ் வார்த்தைகள் தேவையுமில்லை.

இலகுவான, சிறிய புதிய சொற்கள் கிடைக்குமானால், புழக்கத்தில் இருக்கும் வேற்று மொழிச் சொற்களை மாற்றலாம். அப்படிக் கிடைக்காத சூழலில், புழக்கத்திலிருக்கும் வேற்றுமொழிச்சொற்களே இருக்கட்டும். இங்கே வேற்று மொழி என்பது ஆங்கிலத்தை குறிக்கிறது. பன்னெடுங்காலமாக நம்முடன் நிலவி வரும் ஒரு சொல், சம்ஸ்கிரதம் என்பதால் அதை நீக்கவேண்டுமா என்றால் வேண்டியதில்லை. நம் கண்முன்னே கலக்கும் சொற்களை, நல்ல தமிழ்வார்த்தைகள் கிடைக்கும் பட்சத்தில் தவிர்க்கவேண்டும். இந்த உணர்வு வராத பட்சத்தில் பேசும் தமிழில் பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகள் கலக்கும் அபாயமிருக்கிறது.

இன்றைய ஊடகங்கள் மனதுவைத்தால் அதிகமான தமிழ்வார்த்தைகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கலாம். மீடியா என்பதற்கு மிக அழகான தமிழ்ச்சொல் ஊடகம். இது மாதிரியான வார்த்தைகளைத் தேடிக்கண்டுபிடித்து பயன்படுத்துதல் தமிழுக்கு நாம் செய்யும் சேவை. செய்யவேண்டிய கடமை.

இப்போதைய நமது தேவை தமிழில் நல்ல புதிய மாற்றுவார்த்தைகளைக் கண்டுபிடித்தல். ப்ளாக் அறிமுகப்படுத்தப்பட்டபோது வலைப்பூ, வலைப்பதிவு, வலைக்குறிப்பு, உலாக்குகள் போன்ற பல பெயர்கள் யோசிக்கப்பட்டன. கடைசியில் வலைப்பதிவு ஏற்றுக்கொள்ளப் பட்டிருப்பதைப் போல் தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாள்கள் போனால் வலைப்பதிவு புழக்கத்திற்கு வந்துவிடும். ஏதேனும் ஒரு வெகுஜனப்பத்திரிகை ப்ளாக்குகளை அறிமுகம் செய்யும்போது ப்ளாக்குகள் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாது வலைப்பதிவு என்று மட்டும் குறிப்பிட்டால் அந்த வார்த்தைக்கு வெகுஜன அந்தஸ்தும் கிடைத்துவிடும். இப்படி ஒரு வார்த்தையை வெகுஜன அந்தஸ்து பெறச்செய்துவிட்டால் அது தமிழுக்கு நாம் செய்யும் பெரிய தொண்டு.

லக்குவன் என்பதை இலக்குவன் என எழுதுவது, தமிழின் முதல் எழுத்து லகரத்தில் தொடங்கக்கூடாது என்பதற்காக. அதே மாதிரி மொழிக்கு முதலில் மெய்யெழுத்துகள் வராது என்பது. க்ருபா என்று எழுதுவது தவறு; கிருபா என்று எழுதுவதுதான் சரி. லக்குவன்/இலக்குவன்; க்ருபா/கிருபா போன்றவை தொடர்பாக ஒரு முடிவான கருத்து என்னிடம் இல்லை. இது சரி, இது தவறு என வரையறுக்க முடியவில்லை. விவாதம் தனித்தமிழ் விவாதத்திற்குள் வருமா எனத் தெரியவில்லை. அனாலும் இயன்ற வரையில் நான் இராமு என்றும் இரஷ்யா என்றும் இராமகிருஷ்ணன் என்றும்தான் பயன்படுத்துகிறேன். (க்ருபா தன்பெயரைக் க்ருபா என்று எழுதுவதால் நானும் அப்படியே எழுதுகிறேன். இல்லையென்றால் கிருபா என்றுதான் பயன்படுத்தியிருப்பேன்)

தனித்தமிழ் பேசுவது பற்றி. என்னைப் பொறுத்தவரை நான் பேசும்போது பயன்படுத்தப் போகும் மொழியின் தமிழ்ச்சதவீதம் என்னுடன் பேசும் எதிராளியைப் பொறுத்தது. ஆசி?ப் போன்றவர்கள் பேசும்போது தமிழ்ச்சதவீதம் கூடுதலாக இருக்கும். முன்பின் தெரியாத தமிழ்நண்பர்களுடன் பேசும்போதும் முதலில் தமிழ்ச்சதவீதத்தைக் கூடுதலாகத்தான் பயன்படுத்துவேன். அவர்களால் அந்தத் தமிழை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் மெல்ல மெல்ல அவர்களுக்கு ஏற்றவாறு மாறுவேன்.

தனித்தமிழ் ஆர்வலர்கள் யாரும் வட்டார வழக்கு மொழிக்கு எதிராக எழுதி/பேசியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. "அந்த வண்டி ஏன்ட்டி அங்க நிக்கி?" என்பதை "அந்த வண்டி ஏன் அங்கே நிற்கிறது?" என்றுதான் கேட்கவேண்டும் என்று சொல்பவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் தமிழின் அழிவின்மைக்கு எதிரானவர்கள். பிறமொழிக்கலப்பு இயன்ற அளவு தவிர்க்கப்பட்ட, வட்டார வழக்கை ஏற்காத ஒரு மொழி மெல்லச் சாகவேண்டியதுதான்.

நன்றி - பிரசன்னா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#96
மொழித்தூய்மை/தனித்தமிழ்

மொழித்தூய்மை, தனித்தமிழ் ஆகியவை பற்றி பாரதியார்

பாரதியார் 'தென்ஆப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை' என்ற செய்தியை 'காமன்வீல்' என்னும் ஆங்கில இதழிலிருந்து மொழியாக்கம் செய்து கட்டுரையாக்கும் போது இப்படி எழுதியுள்ளார்.

"நடுவிலே ஒரு ரசமான வார்த்தை. "மெம்பர்" என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் எனக்கு அகப்படவில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். "அவயவி" சரியான வார்த்தையில்லை. "அங்கத்தான்" சரிகட்டி வராது. "சபிகன்" சரியான பதந்தான். ஆனால் பொதுஜனங்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தேன். உறுப்பாளி! ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனத்திற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன்! கடைசியாக "மெம்பர்" என்று எழுதி விட்டேன். இன்னும் ஆரஅமர யோசித்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொரு முறை சொல்லுகிறேன்."

இதழாளர் பாரதி, பா.இறையரசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1995, விலை ரூ. 60. பக் 94-95

இந்தப் புத்தகத்திலேயே, இன்னும் பல அறிவுரைகள் பாரதியாரிடமிருந்து வருகின்றன.

"கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது."

"நீ எழுதப்படுகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு. அவனுக்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறதா என்று பார்த்துக் கொண்டு பிறகு எழுது. அப்போதுதான் நீ எழுதுகிற எழுத்து தமிழ்நாட்டிற்குப் பயன்படும்."

கலைச்சொல்லாக்கம் பற்றி எழுதும் போது இப்படிச் சொல்கிறார்:

"இயன்ற இடத்திலெல்லாம் பதார்த்தங்களுக்குத் தமிழ்ப் பெயர்களையே உபயோகப்படுத்த வேண்டும். திருஷ்டாந்தமாக "ஆக்ஸிஜன்; ஹைட்ரஜன்" முதலிய பதார்த்தங்களுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பிராணவாயு, ஜலவாயு என்ற நாமங்களையே வழங்க வேண்டும். தமிழ்ச் சொற்கள் அகப்படாவிட்டால் சமஸ்கிருத பதங்களை வழங்கலாம். பதார்த்தங்களுக்கு மட்டுமேயன்றிக் கிரியைகளுக்கும் அவஸ்தைகளுக்கும் (நிலைமைகளுக்கும்) தமிழ் சமஸ்கிருத மொழிகளையே வழங்குதல் பொருந்தும். இந்த இரண்டு பாஷைகளிலும் பெயர்கள் அகப்படாத இடத்தில் இங்கிலீஷ் பதங்களையே உபயோகப்படுத்தலாம். ஆனால் குணங்கள், செயல்கள், நிலைமைகள் - இவற்றுக்கு இங்கிலீஷ் பதங்களை ஒருபோதும் வழங்கக் கூடாது."


இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது எனக்குத் தோன்றுவது இவைதான்:

1. பாரதிக்கு தமிழில் ஆங்கில மொழிக்கலப்பு பிடிக்கவில்லை. ஆனாலும் அவசரமாக மொழிமாற்றித் தன் இதழில் பதிப்பிக்க நேரமில்லாமல் போனதனால் ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துகிறார். அதைப் பற்றி மருகி, மருகி ஒரு பத்தி எழுதவும் செய்கிறார். கிட்டத்தட்ட இன்று புழங்கும் ஒரு சொல்லுக்கு வெகு அருகிலே வந்திருக்கிறார். மெம்பர் = உறுப்பினர்

2. ஆனால் தன் உரைநடையில் "எளிதான" வடமொழிச் சொற்களைச் செருகுவதில் சிறிதும் கவலைப்பட்டாரில்லை. ஒருவேளை அவர் புழங்கிய வடமொழிச் சொற்கள் படிக்கக் கூடிய அனைவருக்கும் தெரிந்திருக்கலாம் என்று நினைத்திருப்பாரோ என்னவோ?

3. வடமொழிச் சொற்களைப் புழங்கும் போது கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துகிறார். அது தமிழ் மொழி இலக்கணத்துக்கு மாறாக இருக்கும் போதும் கூட. சொல்லின் முதலெழுத்து ஒற்றெழுத்தாகப் பலவிடங்களில் வருகிறது. (ப்ரிய, ஸ்வராஜ்யம்)

4. ஆங்கிலச் சொற்களை மொழிமாற்றுகையில் பலவிடங்களில் அவருக்கு முதலில் கைக்கு வருவது வடமொழிச் சொல்தான். நகரசபை, ஜனசபை, மசோதா (இந்தச்சொல் இன்றும் கூடப் புழக்கத்தில் உள்ளது), பிராணவாயு, ஜலவாயு!

வடமொழியைப் பலவிடங்களில் அள்ளித் தூவுவதற்கு அன்றைக்கு இணையான தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் இல்லாமையும், 'மக்களுக்குப் புரிய வேண்டும், போய்ச்சேர வேண்டும்' என்ற முக்கியக் குறிக்கோளும் சேர்ந்த சமரசமே என்று தோன்றுகிறது. இன்னும் சிலவருடங்கள் உயிருடன் இருந்திருந்தால் தமிழ் உரைநடையில் வடமொழிச் சொற்களைத் தவிர்த்து, அதே நேரத்தில் கொச்சையையும் தவிர்த்து, எளிதில் புரியக்கூடிய வெகுமக்கள் மொழியாக, ஒரு நடையை உருவாக்கியிருப்பார்.

அதுதான் நமது குறிக்கோளாகவும் இருக்க வேண்டும்.

கொடுந்தமிழ், தனித்தமிழ் என்று பண்டிதத்தமிழாக இருக்கக் கூடாது. ஆங்கிலக் கலப்பு கூடாது. வடமொழிக் கலப்பையோ, பிறமொழிக் கலப்பையோ முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் எளிமையாகவும், படிப்பவர்களைப் போய்ச் சேரும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும்.

நன்றி - பத்ரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#97
நாளையத் தமிழ் எப்படி இருக்கும்?

சமீபத்தில் பத்திரிகை நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நான் எழுதிய கட்டுரை ஒன்றை அவர் செப்பம் செய்து கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். அந்தக் கட்டுரையில் இரண்டு மூன்று ஆங்கிலச் சொற்கள் இருந்தன. அவற்றைத் தமிழ்ப்படுத்த வேண்டும் என்பது நண்பரின் அவா. எனக்கும் அதில் உடன்பாடுதான். முழுக்க நல்ல தமிழில் எழுதுவது என்பது எவ்வளவு அற்புதமான அநுபவம் என்பதை பல சமயங்களில் புரிந்து கொண்டிருக்கிறேன்.

"ஆனால், நெட்ல எழுதறவங்களுக்கெல்லாம் தமிழே தெரியல சார்.."

நான் ஒரு நிமிடம் அதிர்ந்துபோனேன். அவருக்கு நான்தான் இணையக் குழுக்களையும் வலைப்பதிவுகளையும் வலைஇதழ்களையும் அறிமுகப்படுத்தி வைத்தவன்.

"எப்படி சொல்றீங்க?"

"ஒருத்தனாவது திருத்தமா எழுதறானா பாருங்க.."

அவர் பெயர்களை அடுக்கிக்கொண்டே போனார். நான் பேச்சற்றுப் போனேன்.

மற்றொரு கூட்டம். தி இந்து ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர் பேசிக்கொண்டிருந்தார். பல ஆண்டுகள் நாளிதழ் இதழியலில் கொட்டை போட்ட சர்வீஸ்காரர். ஓரியன்ட் லாங்மனில் பணியாற்றியபோது, அவர் எழுதிய ஒரு புத்தக வெளியீட்டில் நான் பங்குபெற்றதால், தொடர்புண்டு.

"இந்த டாட்காம் எல்லாம் வந்தபோது, திடீர்னு கன்டெண்ட் மானேஜர்னு ஒரு போஸ்ட் உருவாக்கி, கண்டவனையெல்லாம் உட்கார வெச்சுட்டாங்க. அவங்களுக்கு ஜர்னலிசமும் தெரியாது, நல்ல எடிட்டிங்கும் தெரியாது. கமிட்மெண்ட்டும் கிடையாது. அப்பறம் எப்படி டாட்காம் உருப்படும்? தப்பித்தவறி அதுக்குள்ள போன பல நல்ல ஜர்னலிஸ்டுகளால தாக்குப்பிடிக்க முடியல. ஓடிவந்துட்டாங்க."

அது இதழியல் படிக்கும் மாணவர்களின் அரங்கு. கூட்டத்தில் இருந்த மூன்று நான்கு நண்பர்கள் சண்டைக்குப் போய்விட்டார்கள். அவர் கடைசி வரை தன் கருத்தை மாற்றிக்கொள்ளத் தயாரில்லை.

இந்த இரண்டு சம்பவமும் எனக்கு நாளையத் தமிழ் பற்றிய சிந்தனையைக் கிளறிவிட்டது.

இணையம் என்பது மிகச் சமீபத்திய நிகழ்வு. அதுவும் இணையத்தில் தமிழ் பழக்கம் என்பது 5 ஆண்டுகால அநுபவமே. ஆனால், இதில் நடந்திருக்கும் முக்கிய மாற்றங்கள் பல.

பொதுவாக, இணையம் என்பது படிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தவில்லை. ஆனால், எழுதும் ஆர்வத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. அதுநாள் உடல் பொருந்தி கடிதமே எழுதியிராதவர்கள் கூட, மின்னஞ்சல் வந்தவுடன், எக்கச்சக்க மின்னஞ்சல் அனுப்பத் தொடங்கிவிட்டார்கள். பத்திரிகை வாசிப்போ, புத்தக வாசிப்போ அதிகம் இல்லையென்றாலும், இணையக் குழுக்களில் பங்குபெற்று, தமக்குத் தெரிந்ததைச் சொல்லும் ஆர்வம் மிகுந்திருக்கிறது.

வலையிதழ்களில் எழுதும் பலர் புதுமுகங்கள். வாரஇதழ் மாதஇதழ் பக்கம் போகாமலே, இணையத்தின் வாயிலாகத் தோன்றி இங்கேயே புகழ்பெற்றிருக்கிறார்கள். இணைய எழுத்தாளர்கள் என்றே ஒரு வகையினர் உருவாகும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழில் வலைப்பதிவுகள் வந்தவுடன், மற்றொரு பாய்ச்சல்.

ஒருவகையில் இது 'ரிவர்ஸ் சைக்கிள்'. தொழில்நுட்பம் இங்கே இலக்கிய ஆர்வத்தைத் தூண்டிக்கொண்டிருக்கிறது. ஆசிரியர் தொகுத்துத் தருவதைப் படிக்க வேண்டிய காலம் போய், தமது எழுத்து ஆர்வத்தை நேரடியாக பகிர்ந்துகொள்ளும் வசதி தோன்றிவிட்டது. இதைத்தான் பர்சனல் வெப் என்று சொல்கிறோம். இணையச் சமூகம் என்பது இங்கேதான் பல்கிப் பெருகுகிறது.

ஆக, இங்கே நமது பழைய சட்டங்கள் செல்லுபடியாகாது. எழுத வருகிறவன்/ள், இந்த இந்த புத்தகங்களைப் படித்திருக்க வேண்டும், இந்த இந்த ஆசிரியர்களை நன்கு உணர்ந்திருக்கவேண்டும், எழுத்து முறைகளை தெரிந்துகொண்டிருக்கவேண்டும், இலக்கணப் பிழை இல்லாமல் எழுத வேண்டும் என்பதெல்லாம், இங்கே பொருந்தாது.

இங்கே எழுதும் செய்தி முக்கியம். எழுதும் ஆர்வம் அதைவிட முக்கியம்.

வலைஇதழ் ஆசிரியர்களுக்கும் இங்கே வேலை வேறு வடிவத்தினாலானது. வழக்கமான செப்பம் செய்யும் வாத்தியார் உத்தியோகம் இனி இங்கே இல்லை. ஆர்வமுள்ளவர்களுக்கு இடமளிப்பதும், அவர் தம்மை மேம்படுத்திக்கொள்வதற்குமான வசதியைச் செய்துதருவதுமே இவர் பணி.

அப்படியென்றால், எதிர்காலத் தமிழ் தப்பும் தவறுமாக இருக்குமா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழாமலில்லை. நிச்சயம் அப்படி இருக்கப்போவதில்லை. எழுதத் தொடங்கும் ஒவ்வொருவரும், ஏதோ ஒரு அளவில் ஒரு ஒழுங்கில் எழுதத் தொடங்கி, மேன்மேலும் பயிலத் தொடங்குகின்றனர். இந்தப் பயிற்சி அவர்கள் மொழியை வளப்படுத்தும். மேம்படுத்தும்.

இணையத்தைப் பொறுத்தவரை, நாளைய தமிழ், புலம்பெயர்ந்தோர், முதல் தலைமுறை தமிழ் வாசிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களின் கைகளில்தான் புழங்கப்போகிறது. அவர்களின் மொழியறிவைவிட, தொழில்நுட்ப அறிவுதான் அங்கே கோலோச்சப் போகின்றது. மொழி, தொழில்நுட்பத்தைப் பின்தொடரும்.

என்னைப் பொறுத்தவரை, தொழில்நுட்பம் முக்கியம் என்பதால், அது முன்னே போவதில் தவறில்லை. அதுவரை, வழக்கமான பத்திரிகையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் கொண்டாட்டம்தான். மேடைதோறும் திட்டித் தீர்க்கபோகிறார்கள்! நாமும் செவிகுளிரக் கேட்டுக்கொண்டிருப்போம்!

நன்றி - ஆர்.வெங்கடேஷ்


உங்கள் சிந்தனைக்கும் கருத்துக்களுக்குமாக இந்த கட்டுரை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#98
மெல்லத் தமிழினிச் சாகும் என்ற பாரதி வாக்கு பொய்த்துப் போகும்

நானும் வலைப்பதிவுகள் பலவற்றை வாசித்தேன் ஒவ்வொருத்தரும் தமக்குத் தெரிந்த விடயங்களை ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகின்றனர் இங்கு மொழி ஒரு ஊடகம் எனினும் தொழினுட்பம் தான் அடிப்படை

எனினும் இக்கட்டுரையை எழுதிய எழுத்தாளரின் எழுத்துக்கோலங்களில் ஏற்படும் மாறுபாடுகளைப் பாருங்கள்
நாளிதழ் இதழியலில் கொட்டை போட்ட
சர்வீஸ்காரர்

நாளிதழ் இதழியல் என்ற அழகு தமிழ்ப்பதங்களைத் தெரிந்தெடுத்து உபயோகிக்கும் இவர் அனுபவமுள்ளவர் என்ற தமிழ்ப்பதத்தை ஏன் உபயோகிக்கக் கூடாது

இதன் மூலம் நான் இவ் எழுத்தாளரைக் குறை சொல்லவில்லை இது அவர்களின் வழக்கில் கலந்துவிட்ட ஒன்று அதற்கு நிகரான தமிழ் சொல் இருந்தும் பிறமொழிச்சொல்லை பயன்படுத்துவதை இணையத்தமிழ் என்று தொழினுட்ப வளர்ச்சியுடன் சார்புபடுத்தி இவர் நியாயப்படுத்தினாலும் வலைப்பதிவுகளில் வரும் கட்டுரைகள் பலவற்றைப் பார்த்தால் நிச்சயம் வியப்பு வரும்

நாம் சிலவேளைகளில் தமிழாக்கத் தடுமாறிய தொழினுட்பச் சொற்களுக்கு எவ்வளவு இலகு தமிழ் வழங்கியிருப்பார்கள்

அப்படியிருக்க எம்மையறியாமலே எம்மிடம் கலந்துவிட்ட ஆங்கில அல்லது பிறமொழிச்சொற்களை இனங்கண்டு தவிர்ப்பதன் மூலம் இணையத்தின் விரைவுக்கேற்ப வளரும் தமிழை குறைபாடில்லாத குழந்தையாக வளர்க்கலாம்

அப்படியென்றால், எதிர்காலத் தமிழ் தப்பும் தவறுமாக இருக்குமா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழாமலில்லை. நிச்சயம் அப்படி இருக்கப்போவதில்லை. எழுதத் தொடங்கும் ஒவ்வொருவரும், ஏதோ ஒரு அளவில் ஒரு ஒழுங்கில் எழுதத் தொடங்கி, மேன்மேலும் பயிலத் தொடங்குகின்றனர். இந்தப் பயிற்சி அவர்கள் மொழியை வளப்படுத்தும். மேம்படுத்தும்.

இது யதார்த்தமான உண்மை தமிழை ஒழுங்காக எழுதும் பலர் உள்ள இடத்தில் தப்பும் தவறுமாக எழுதும் சிலர் வந்தால் காலப்போக்கில் திருத்திக் கொள்வார்கள் ஆயினும் தப்பும் தவறுமாக எழுதுபவர் மத்தியில் புதிதாக எழுதுபவர்கள் அகப்பட்டால்?
\" \"
Reply
#99
மெல்லத்தமிழ் இனி சாகும் என்பதை
இணையத்தழிர்கள் (குறிப்பாக இலங்கைத்தமிழர்கள் ) காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையை குடில்கள் காட்டி நிற்கின்றன. இணையத்தமிழர்கள் எனும்போது இளைய தலைமுறைதான் முன்னுக்கு நிற்கின்றது. புலம்பெயர்ந்தாலும் தமிழ் வாசம் மறக்காமல் நிற்கும் இவர்கள் இருக்கும்வரை தமிழ் என்றுமே சாகாது
[b] ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)