Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
yarl.com is not displaying on Linux Red Hat 9
#1
லினிக்ஸ் யாழ் தெரியுதில்லை . .
எல்லாம் தாயக்கட்டை மாதிரி வருது.

பாவிப்பது
ரெட்கட் 9
மொசில்லா புரொசர்

மிகவும் பயனுள்ளது
நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்

இப்ப தான் தொடங்கி இருக்கிறன்.
Reply
#2
வணக்கம்...

உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். லினுக்சில் யாழ் இணையத்தின் எழுத்துக்கள் "பெட்டி பெட்டியாகத்" தெரிகிறதா? அல்லது "குழம்பிப் போய்த்" தெரிகிறதா?


Reply
#3
மீண்டும் வணக்கங்கள்,

Redhat பற்றி எனக்கு வடிவாகத் தெரியவில்லை. நான் கிட்டத்தட்ட ஒரு வருடமாக Mandrake Linux 9 பயன்படுத்துகிறேன். அதற்காக எனக்கு அதில் பெரிய அனுபவம் இருக்கென்று எண்ணாதீர்கள். LAMP Server (இணையவழங்கி) செய்ய நேர்ந்ததால் அதனைப் பயன்படுத்தினேன்.

உதாரணமாக யூனிக்கோட் தமிழ் பக்கங்களை எனது உலாவியில் (Linux இன்) திறந்தால் தமிழ் எழுத்துக்கள் தெரிகின்றன. ஆனால் குழம்பியே வருகின்றன. உதாரணமாக: <b>இணையம்</b> என்பது <b>இணயைம</b>
என்றே காண்பிக்கப்படுகிறது.

நானும் வேறு சில முயற்சிகளைச் செய்து பார்த்தேன். இதுவரை சரியாகவில்லை. இணையத்தில் இதுபற்றித் தேடியபொழுது தமிழ்ப் பக்கம் ஒன்றில் இது பற்றிய சிறிய தகவல் கிடைத்தது. அதனை இங்கிடுகிறேன்:

http://tamilcomputing.blogspot.com
-------------------------------

<b>நெருப்புப்பறவையில் தமிழ்! </b>
மோசில்லா நெருப்புப்பறவையின் சமீப பதிப்பு (செப் 7, இரவுக் கட்டு) தமிழை யுனிகோடில் சரியாக காட்டுகிறது.
இதற்கு XFT & GTK2 சேர்ந்த பதிப்பை பயன்படுத்த வேண்டும். தற்போதைக்கு இரவுப் பதிப்புகளில் மட்டுமே கிடைக்கிறது. கோப்பின் பெயர் MozillaFirebird-i686-linux-gtk2+xft.tar.gz

இச்செய்தியை எழுத மோசில்லா நெருப்புக் கோழியுடன் gedit-ஐ பயன்படுத்துகிறேன். நேரடியாக மோசில்லாவிலேயே தட்டும் நாள் எந்நாளோ?

<b>Experiments with Mozilla </b>
Mozilla Firebird 0.61 is not rendering Tamil Unicode in Windows and Linux. In Windows, I have only made IE render Tamil properly. Tried Mozilla 1.4, 1.5a as well as Thamizha. None of them are working.... hmm... may be it is just me...

But Mozilla 1.5a RPM is rendering Unicode Tamil properly. You can get these RPMs from http://people.ecsc.co.uk/~matt/downloads/r...illa/1.5a/RPMS/.

I do have a problem in connecting to any secure site with these RPMs though. Using Firebird to check Hotmail, but unfortunately it is not working for Unicode Tamil.

இதனைக் கூட செய்து பார்த்தேன். எனக்கு சரிவரவில்லை. நீங்கள் முயற்சியுங்கள். நானும் வேறு வழிகளில் முயற்சிக்கிறேன். பயன்பெற்றால் அறியத்தாருங்கள்.

நன்றி


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)