10-01-2003, 07:50 PM
மூர்
இன்று ஊடகத்துறையின் வளர்ச்சி எல்லைகள் கடந்து உலகளாவிய செல்வாக்குப் பெற்ற சாதனமாக விளங்குகின்றது. அதிலும் குறிப்பாக இலத்திரனியல் சாதனங்களின் வருகை ஊடகத்துறையில் இதுவரை இல்லாத புதுமைகளை வேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கணிணி இணையத்தின் பயன்பாடு ஊடகத்துறையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் வளர்ச்சிகள் அதிகம்.
இணையத்தைப் பயன்படுத்தும் முனைப்பில் பல்வேறு நாடுகளும் அதிகமாகவே நாட்டம் கொண்டுள்ளார்கள். இன்று இணையங்களை தனது அனைத்து வகையான தேவைகளுக்கும் பயன்படுத்தும் நாடுகளில் முன்னணியில் இருப்பது அமெரிக்கா.
அமெரிக்காவிற்கு இணையப் பயன்பாடு பல வழிகளிலும் சாதகமான விடயங்களாகவே உள்ளன. ஆனாலும் சாதகமான தன்மைகளைவிட, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாகவே இன்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இணைய அரட்டை சிறுவர்களை தவறாக வழிநடத்துகிறது. சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் பெருகிவருவதற்கும் காரணமாக உள்ளது. அமெரிக்காவில் இந்நிகழ்வுகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளன.
குற்றங்கள் பெருகும் இருட்டறை என இதை பலரும் வர்ணிப்பதுண்டு. மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவு குறித்து சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு, மற்றும் பாதுகாப்பின் தேசிய அமைப்பைச் சேர்ந்த கிளிஸ் அட்கிசைன் கருத்து தெரிவிக்கையில்
''மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இந்த முடிவு உண்மையில் வரவேற்கப்படும் ஒரு விஷயம். இதன் மூலம் உலகில் அன்றாடம் எங்கோ ஒரு மூலையில் நமக்குத் தெரியாமல் இந்த இணைய அரட்டை மூலம் நடக்கும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் தடுக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம். நாங்கள் நீண்ட காலமாகவே இந்த இணைய அரட்டை விஷயத்தில் எதிர்ப்பு காட்டி வந்துள்ளோம்'' எனக் குறிப்பிட்டார். இதுபோல் பல்வேறு மனித உரிமைவாதிகளும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார்கள்.
இணைய அரட்டையானது பூகோளமயமாக்கப்பட்டிருந்தாலும் அதனால் எந்தவித நன்மையும் இல்லை. இதுவரை நன்மையான பக்கங்களைவிட தீமையான பக்கங்களே இதன் மூலம் அரங்கேறி உள்ளது. இணைய அரட்டையில் பயன்பாடு எதை நோக்கி? எதற்காக என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இணைய அரட்டையின் பயன்பாடு மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தி உள்ளது என்பது பொதுவான உண்மையாகும்.
இலவசசேவை அல்லது பணம் செலுத்துவதன் மூலம் இணைய அரட்டை சேவையை வழங்கிவரும் நிறுவனங்களும் தமது சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் குறித்த உண்மை நிலையை ஏற்றுக் கொண்டுள்ன.
''இணையமானது எந்தளவிற்கு இன்று முன்னேறியுள்ளதோ அதே அளவிற்கு சிறுவர்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் அது அக்கறை செலுத்தத் தவறிவிட்டது. அவ்விஷயத்தில் அது செய்ய வேண்டிய பாதை நீண்டது'' என சிறுவர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ஓர் அதிகாரி கருத்து தெரிவித்தார். ஆக எந்தவொரு அறிவியல் தொழில்நுட்பமும் அதன்பாடும் மனித சிந்தனைக்கும் மானிட மேம்பாட்டுக்கும் உதவும் வகையில் அமைய வேண்டும். இணையம் போன்றவற்றின் பயன்பாடு மேலும் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டிய காலம் நம்முன் வந்துள்ளது.
இதனொரு கட்டமாகவே இணைய அரட்டை சேவையை இடைநிறுத்தும் முடிவு.
நன்றி: ஆறாம் திணை.கொம்