Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலில் விழாமல் தப்பியது எப்படி?
#1
காதல் எப்படி எங்கே ஏன் வருதுன்னு யாராலயும் சொல்ல முடியாது. வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வரும்னு சொல்ல முடியாது. கண்டதும் காதல் வரலாம். கண்டதைப் பார்த்தும் காதல் வரலாம். கண்ணடிச்சா காதல் வரலாம். கன்னத்துல அடிச்சா காதல் வரலாம். இப்படி தொறந்த வீட்டுல..ஸôரி, தொறந்த நெஞ்சுக்குள்ள காதல் படார்னு நுழைஞ்சு டூ மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி வேகமாக வெந்து நிக்கும்.

பசிக்கும். ஆனா சாப்பிட்டா ஏப்பம் வராது. தூக்கம் வரும். ஆனா கொட்டாவி வராது. நாய் கடிச்சாக் கூட கொசு கடிக்கிற மாதிரிதான் இருக்கும். ஆனா கொசு கடிச்சா நாய் கடிச்ச மாதிரி வலிக்கும். அழுக்கைப் பார்த்தாலும் அழகாத் தெரியும். எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும். கூட்டத்துல இருக்கறப்ப மனசு தனியா இருக்குற மாதிரி மாஞ்சா தடவி பட்டம் விட்டுக்கிட்டிருக்கும். தனியா இருக்கிறப்ப சட்டசபையில இருக்கற மாதிரி மனசு கத்தும்.

காய்ஞ்சு கருவாடாப் போன ரோசாப்பூ, எப்பவோ எச்சில் பண்ணுன எட்டணா மிட்டாயைச் சுத்தியிருந்த பேப்பர், கிழிஞ்சு போன பஸ் டிக்கெட், லேசா செம்பட்டையான ஒரு முடி, குறைப் பிரசவத்தில் பிறந்த நிலா மாதிரி இருக்கிற நகத்துண்டுகள், காது போன குட்டிக் கரடி பொம்மை, ரெண்டு சென்டிமீட்டர் துண்டு பேப்பர்ல எழுதுன மூணு வரிக் கவிதை - இப்படித் தேடித் தேடிச் சேர்த்து வைச்சிருக்கிற பொக்கிஷங்களைப் பல்லை இளிச்சுப் பார்த்துட்டே இருந்தா பரலோகத்துல இருக்குற பீலிங் கிடைக்கும்.

இப்படி மருந்தே கண்டுபிடிக்க முடியாத உயிர்க்கொல்லி நோயான காதல்ல "ஸ்ஸரக்'குன்னு வழுக்கி விழுற இடங்கள் எதுன்னு ஒரு ஜொள்ளு+லொள்ளு ஆராய்ச்சிதான் இது.

* 23சி பஸ்ஸýக்காக 24 நிமிஷங்களாகக் காத்திருப்போம். 25 வயசுள்ள ஒரு பொண்ணு பஸ் வரலையேன்னு 26 வது தடவையா நகத்தைக் கடிப்பா. 27 வது நிமிஷம் பஸ் வர, 28 பேர் முந்தி அடிச்சு ஏறுவோம். நீங்க முன்வாசல். அவ பின்வாசல். நீங்க கொடுக்குற ரெண்டு ரூபா, 29 பேரைக் கடந்து முப்பதாவது ஆளா அவ கைக்குப் போகும். அப்புறம் அவ டிக்கெட் எடுத்துக் கொடுக்குறது தினமும் நடக்கும். அதுக்கு தாங்க்ஸ் சொல்லி ஒரு பார்வையால நன்றி சொல்லுவீங்க. அந்த டொக்கு விழுந்த லுக்கே அவளுக்கு ரொமாண்டிக் லுக்கா தெரியலாம். டிக்கெட்ல "டிக்' ஆகி காதல் விக்கெட் விழலாம். பி கேர் ஃபுல்!

*தொலைச்ச எதையோ தேடிக்கிட்டு வர்ற மாதிரியே ரெண்டு பேரும் எதிர் எதிர்த்தாப்ல வருவீங்க. ஒரு முட்டல், மோதல் நடக்கும். அடுத்த செகண்ட்ல நாலு உதடுகளும் துடிதுடிச்சு "ஸôரி'ன்னு சொல்லும். விலகி நடக்கறப்போ உசிரை எடுத்து வெளியே போட்டுட்டு நடக்குற மாதிரி தோணும். போறப்பவே ரெண்டு பேரும் ஒரே நேரத்துல திரும்பிப் பார்ப்பீங்க. வெட்கமெல்லாம் வேற வர்ற மாதிரி சிரிப்பு ஒண்ணு சிரிப்பீங்க. அடுத்த நாள், "இந்தாங்க, இது உங்க முடி. நேத்து என் சட்டைப் பொத்தான்ல சிக்கிடுச்சு'ன்னு அவன் கொடுக்க, "பரவாயில்ல, அதை நீங்களே வைச்சுக்கோங்க'ன்னு ஏதோ சொத்து எழுதிக் கொடுக்குற மாதிரி அவ சொல்லிட்டுப் போக, அதுக்கு மேல என்ன நடக்குமுன்னு நான் வேற சொல்லணுமாக்கும்.

*நீங்க கோயிலுக்குப் போறப்ப எல்லாம் பட்டை அடிச்சிட்டு, பக்தி மாம்பழமா ஒரு ஜந்து உங்க பின்னாலேயே வரும். சந்நிதி முன்னால நின்னுட்டு , கண்களை மூடி வேகவேகமாக ஏதோ சொல்லும். ஸ்லோகம்னு நினைக்கக் கூடாது. காதைக் கூர்மையா வைச்சுக் கேட்டாத்தான் தெரியும். அது ஸ்லோகமில்ல, ஏதோ சினிமாப் பாட்டுன்னு! திடீர்னு ஒரு நாள் யாரோ உடைச்ச தேங்காயைப் பொறுக்கிக்கிட்டு வந்து,"உன்னோட பூனைக் குட்டிக்கு இன்னிக்கு நட்சத்திரப்படி பிறந்தநாள். அதான் அர்ச்சனை பண்ணுனேன். ஆமா உன் பேரு என்ன?ன்னு கேக்கும் அந்த ஜந்து. இப்படி ஒரு வாசகமா ஆரம்பிக்கிறது திருவாசகமாப் பெருகி காதல் வெள்ளத்துல அடிச்சுட்டுப் போக அம்புட்டு சான்ஸ் இருக்கு. ஜாக்கிரதை.

*"எனக்கு கணக்குப் பாடத்துல ஒரு டெüட். அசோகர் எத்தனை மரங்களை நட்டாரு?' அப்படின்னு சின்னப்புள்ளத்தனமா ஆரம்பிப்பாங்க. "எனக்கு நேத்து சுண்டுவிரல் சுளுக்கிட்டதால கிளாஸ்ல நோட்úஸ எழுத முடியலடா. உன் நோட்ஸ் தாடா. ப்ளீஸ்டா'ன்னு உரிமை ஊஞ்சலாட கேப்பாங்க. நோட்ஸ் திரும்ப வர்றப்போ, ஏகப்பட்ட பின்குறிப்புகளோட லவ்வையும் அட்டாச்மெண்ட்டா அனுப்புவாங்க. கால்குலேட்டரைக் கடனாக் கேப்பாங்க. திருப்பித் தர்றப்போ"143' ன்னு அதுல நம்பர் சிரிக்கும். அடிஸ்கேலை அன்பா வாங்கிட்டுப் போவாங்க. திருப்பித் தர்றப்போ, ஸ்கேலோட அடிப்பாகத்துல ஹார்ட்ல அம்பு விட்டுத் தருவாங்க. ஸ்கூலுக்கு ஸ்கூல் மன்மதன்ஸ், ரதிஸ் காதல் மார்க்கோட அலைஞ்சுக்கிட்டே இருக்காங்க. எச்சரிக்கை.!

*"ஹலோ சுசீலா இருக்காங்களா? இல்லையா...ராங் நம்பரா..நீங்க யாரு? ஓ.. நீங்க சுப்புலட்சுமியா! பரவாயில்லை நீங்களே பேசுங்க. நீங்களும் நல்லாத்தான் பேசுறீங்க! ஸ்வீட் வாய்ஸ்!'ன்னு சில ராங் நம்பர்ஸ் கடலையைப் போட ஆரம்பிக்கும்."ஆக்சுவலி, யு.எஸ்.போறதுதான் என் கனவு'ன்னு எஸ்.எம்.எஸ்.ல கடலை காவடி தூக்கும். போகப் போக காதல் கரகாட்டம் ஆடும். மெúஸஜ் அனுப்பி அனுப்பியே கட்டை விரல் கரைஞ்சு போயிடும். முகம் பார்க்காம பண்ணுற இந்த லவ்வுல , என்னன்ன டேஞ்சர் இருக்குன்னு வெலாவாரியா சொல்லாமலே தெரியுமே உங்களுக்கு!

*"மூணு சுழி "ண' க்கு எத்தனை சுழி வரும்.' "ம்' - முக்கு புள்ளி வைக்கணுமா' இந்த ரேஞ்சுல தமிழ் தெரிஞ்ச பசங்க ,லவ்வை ஜிவ்வுன்னு சொல்லுறாப்ல. நாலு வார்த்தைகளைக் கவ்வி, கிரீட்டிங் கார்டுல தெளிச்சு ,"உன்னப் பத்தி ஒரு கவித எழுதுனேன். பாரு'ன்னு நீட்டுவாங்க .

"பூக்கலுக்கு பல்கள் உண்டா?

உன் - ஐப் பாத்ததும்

டெüட்டானது காட்று!'

- இந்த ரேஞ்சுல கவிதப் போக்குவரத்து டிராபிக் ஜாம் - ஆகி கிடக்கும். "நாம என்ன அவ்வளவு அழகாவா இருக்கோம்'னு வார்த்தைகளில் வழுக்கி விழுந்தோட்டோம்னா அவ்ளோதான். எழுந்திரிக்கவே முடியாது.

*"டேய் மச்சான் இன்னிக்கு என் ஆளு கூட மூவி போறேன்னு' பந்தாவா ஒருத்தன் முள்ளைத் தூவிட்டுப் போவான். "இந்த சுடி அவன் வாங்கித் தந்தான்டி. அவனுக்கு பஞ்சு முட்டாய்க் கலர்தான் பிடிக்கும். எப்படி இருக்குடி?'ன்னு தோழி ஒருத்தி தோரணம் கட்டி தூபம் போட்டுட்டுப் போவா. "அரியர்ஸ் பார்ட்டியே லவ் பண்ணுறான். நமக்கென்ன குறைச்சல்'ன்னு தோணும். "அவளை விட பேரழகி நான். லவ் பண்ணுனா என்ன'ன்னு கொஸ்டின் வந்து மூளையைக் குடையும். இந்தக் கேள்விக்குறிகளை ஆச்சரியக்குறிகள் ஆக்கணும்னு கங்கணம் கட்டிட்டு காதலிக்க ஆரம்பிக்கலாமேன்னு சபலம் வரலாம். ஜாக்கிரதை.

*அடுத்த டேஞ்சரான நாள் பிப்ரவரி மாசம் வந்து பல்லைக் காட்டும். காதலர்களுக்கிடையில கீரிட்டிங் கார்ட்ஸ் கிரிக்கெட் ஆடும். காந்தி ஜெயந்தி என்னிக்குன்னு தெரியாதவங்ககூட காதலர் தினத்தை கடமையுணர்வோட கொண்டாடுவாங்க. "அட, எல்லாரும் கையில ஹார்ட்டைத் தூக்கிட்டு அலையறாங்களே, ஏன் நமக்குன்னு ஒரு லவ் இல்ல'ன்னு ஏக்கம் சுனாமியா வந்து நம்மள மூழ்கடிக்கும். வேணாம் ராசா வேணாம். டப்பாசு வெடிச்சாத்தான் தீவாளி, கேக்குத் தின்னாத்தான் கிறித்துமஸ், பிரியாணி சாப்பிட்டாத்தான் ரம்ஜான், அதே மாதிரி காதலிச்சாத்தான் காதலர் தினம் கொண்டாட முடியும்னு தப்புத் தப்பா தத்துவம் பேசி எக்குத் தப்பா லவ்வுல சிக்கிச் சீரழிஞ்சிறாதீங்க!

(பின் குறிப்பு: இந்தக் கட்டுரை 100 %ஜாலி கற்பனையே. சிவசேனா கட்சியினர் எந்த விதத்திலும் என்னைத் தூண்டவில்லை. ஹிஹி..)

கற்பனை: முகில்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
Quote:அதே மாதிரி காதலிச்சாத்தான் காதலர் தினம் கொண்டாட முடியும்னு தப்புத் தப்பா தத்துவம் பேசி எக்குத் தப்பா லவ்வுல சிக்கிச் சீரழிஞ்சிறாதீங்க!
இது கரெக்ட்..லவ் பண்ணினால் தான் காதலர் தினம் கொண்டாடலாமா? இல்லண்ணாலும் கொண்டாடலாம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆகா..என்னமா விவரிக்கிறங்க..ம்ம்..எல்லாம் சுண்டலோட சீ முகிலோட அனுபவம் போல.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நன்றி சுண்டல்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#3
கதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதில் வரும் ஆங்கிலச்சொற்களை அப்படியே ஆங்கிலத்தில் எழுதியிருந்தால், அல்லது அவற்றிற்குரிய தமிழ்ச்சொற்களை எழுதியிருந்தால் இன்னும் நன்றாகச் சுவைக்கும் என்று எண்ணுகிறேன். ஆங்கிலச்சொற்களை தமிழில் எழுதினால் பலருக்குத் தலைவலியைத்தான் ஏற்படுத்தும்.

ஆங்கிலம் தெரியாதவர்கள் இதனை வாசித்தால் அரைவாசிகூட விளங்காமல் போகுமல்லவா?

Reply
#4
Quote:எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும்

இவ்ளோ கேவலமா ஆக்குமா..இந்த காதல்?????? :evil:
..
....
..!
Reply
#5
ப்ரியசகி Wrote:
Quote:எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும்

இவ்ளோ கேவலமா ஆக்குமா..இந்த காதல்?????? :evil:
எப்பிடி ஒண்ணுமே தெரியாத மாதிரி கேள்வி கேக்க உங்களால் முடியுது.............எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்கோவன்.
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
காதலில் விழாமல் தப்பியது எப்படி என்று தலையங்கத்தை போட்டு விட்டு காதலில் எப்படி விழுவது என்று யோசனை கொடுப்பது போல் எல்லோ இருக்கு.
இணைப்புக்கு நன்றி சுண்டல்.

Reply
#7
இணைப்பை பாத்தா சுண்டல் சுட்டு போட்ட மாதிரி தெரியேல்லை சொந்த அனுபவத்தை எழுதின மாதிரியல்லோ இருக்கு அப்படியா சுண்டல் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#8
காதல்.... காதல்...... காதல்..... இல்லையேல்....
சாதல்.... சாதல்...... சாதல்.....
,
......
Reply
#9
Niththila Wrote:இணைப்பை பாத்தா சுண்டல் சுட்டு போட்ட மாதிரி தெரியேல்லை சொந்த அனுபவத்தை எழுதின மாதிரியல்லோ இருக்கு அப்படியா சுண்டல் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->



ஆமா..ஆமா....இங்க இப்பிட்pலாம் பன்னா செருப்பால தான் விழும்ப்பா...நீங்க வேற..... :evil: :twisted: :twisted:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#10
SUNDHAL Wrote:
Niththila Wrote:இணைப்பை பாத்தா சுண்டல் சுட்டு போட்ட மாதிரி தெரியேல்லை சொந்த அனுபவத்தை எழுதின மாதிரியல்லோ இருக்கு அப்படியா சுண்டல் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆமா..ஆமா....இங்க இப்பிட்pலாம் பன்னா செருப்பால தான் விழும்ப்பா...நீங்க வேற..... :evil: :twisted: :twisted:
<b>
எனன்னெண்டா சுண்டல்டை அனுபவம் மாதிரித்தான் இருக்கு. இணைப்புக்கு நன்றி சுண்டல்</b>
<b> .. .. !!</b>
Reply
#11
(பின் குறிப்பு: இந்தக் கட்டுரை 100 %ஜாலி கற்பனையே. சிவசேனா கட்சியினர் எந்த விதத்திலும் என்னைத் தூண்டவில்லை. ஹிஹி..)

இது செம கடி.
.
Reply
#12
MUGATHTHAR Wrote:
ப்ரியசகி Wrote:
Quote:எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும்

இவ்ளோ கேவலமா ஆக்குமா..இந்த காதல்?????? :evil:
எப்பிடி ஒண்ணுமே தெரியாத மாதிரி கேள்வி கேக்க உங்களால் முடியுது.............எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்கோவன்.

எல்லாம் ஆன்டி சொல்லி தந்தவா.. அப்போ நீங்களும்..ஆன்டிகிட்டயே போய் கேளுங்கோ...நிறைய அடி சீ ஐடியா தருவாங்க.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
..
....
..!
Reply
#13
References:


Online slots BPay deposit online pokies bpay
Reply
#14
References:


Payid mobile pokies australia online pokies mobile australia
Reply
#15
References:


5 minimum deposit pokies payid writeablog.net
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)