Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் வழிக் கல்வி, அவமானமா ?
#1
தமிழ் வழிக் கல்வி, அவமானமா ?

பூங்குழலி

அண்மையில் புதுவையில் பிசியோதெரபி கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மாணவி தற்கொலை செய்வதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதத்தில், இனி யாரும் தமிழ் வழிக் கல்வியில் படிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது மிகுந்த அதிர்ச்சியை உருவாக்கியது.


அந்த மாணவி தமிழ் வழிக் கல்வியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவர். மேற்படிப்பிற்காகப் பிசியோதெரபி கல்லூரியில் சேர்ந்தது முதல், அவரையும், அவரைப் போல் தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவர்களையும் துறைத் தலைவர் பலவாறு அவமானப்படுத்தியுள்ளார்.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை மட்டம் தட்டுவதும், அவமானப்படுத்துவதும் தொடர்ந்துள்ளது. பல சமயங்களில் அதைப் பொறுக்க முடியாமல் இம் மாணவி வினா எழுப்பியுள்ளார். மருத்துவமனைத் தலைவரிடம் முறையிட்டுள்ளார். அதனால் தனிப்பட்ட முறையிலும் இம்மாணவி மீது துறைத் தலைவருக்குக் கோபம் எழுந்துள்ளது.

அவர்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஏதேனும் ஒரு நோய் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்த குறிப்பிட்ட மாணவிக்கு மிக அரிய நோய் ஒன்றைக் கொடுத்து ஆய்வு செய்ய துறைத் தலைவர் பணித்துள்ளார். 4 மாதங்கள் சிரமப்பட்டுப், பல ஆயிரங்கள் செலவு செய்து அந்த ஆய்வை படித்து அறிக்கையை ஒப்படைக்க இருந்த நேரத்தில், துறைத் தலைவர், அந்த அறிக்கையை ஒதுக்கிவிட்டு, புதிதாக ஒரு ஆய்வு மேற்கொள்ளுமாறு சொல்லியிருக்கிறார்.

ஒரு ஆய்வு செய்வதற்குக் கிட்டத்தட்ட 4 முதல் 5 ஆயிரங்கள் வரை செலவாகும் நிலையில், மீண்டும் புதிய ஆய்வை மேற்கொள்ளும் பொருளாதார நிலையில் அம் மாணவி இல்லை. எனினும், உடன்பயிலும் மாணவிகளின் உதவியோடு அதையும் சிரமப்பட்டு படித்து ஆய்வறிக்கையை ஒப்படைத்த நேரத்தில், துறைத் தலைவர் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். அவரது ஆய்வு ஒப்புதல் தரப்படாத நிலையில், அந்த ஆண்டு அவர் தேறுவது என்பது இயலாத ஒன்று.

இதனால் மனமொடிந்த அந்த மாணவி தனது விடுதி அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தப் பின்னணியை முழுவதும் அறிந்த மாணவிகள் வெகுண்டு எழுந்து போராட்டத்தில் குதித்தனர். அதன் விளைவாகத் துறைத் தலைவரும், மருத்துவமனைத் தலைவரும் மாற்றப்பட்டனர். இந்த பிரச்சினை இத்துடன் முடிந்ததா என்றால் நிச்சயமாக இல்லை.

இங்கு ஒரு மாணவி தனது உயிரைக் கொடுத்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளார். ஆனால் தமிழகமெங்கும் பல கல்லூகளின் நிலை இதுதான்.

தமிழ் வழிக் கல்வியில் பயின்று பின்னர்க் கல்லூரியில் ஆங்கில வழிக் கல்வி மூலம் தொழில் கல்வி பயில வரும் மாணவர்களின் நிலை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இழிவாகவே இருக்கிறது.

உடன் பயிலும் மாணவர்களின் ஒதுக்குதல் ஒரு புறம், ஆசியர்களின் அவமானங்கள் மறுபுறம்.. இதற்கிடையே எத்தனை தொல்லைப்பட்டுப் படித்தாலும், புரியாத பாடங்களைக் கேட்டுத் தெளிவு பெற, உதவ யாரும் முன் வராத நிலையில், பாதியில் படிப்பை விட்டுச் செல்லும் மாணவர்கள் இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

தமிழ் வழிக் கல்வி குறித்து மிகுந்த ஆர்வத்துடன் பேசும் நாம் இதற்கு என்ன செய்யப் போகிறோம்.?

புரிந்தாலும் புரியாவிட்டாலும் ஆங்கில வழியில் படிப்பதே கௌரவம் என்ற மனப்பாங்கில் இருந்து வரும் தலைமுறைகளை மீட்டாக வேண்டிய பெரும் பணி நம் முன் இருக்கிறது.

மிக நீண்ட காலமாகத் தமிழறிஞர்களும், தமிழ் அமைப்புகளும் வைக்கும் கோரிக்கைகள் இரண்டு..

1. தொழில் கல்விகளும் தமிழ் வழியில் வரவேண்டும்.
2. தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை தரப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் ஒழிய, இது போன்று இளைஞர்களின் வாழ்வு வீணாவதைத் தடுக்க இயலாது.

பூங்குழலி

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
தற் இஸ் ரமில் நாடு யா.......... :evil:
; ;
Reply
#3
உதுகளை திருத்த முடியாது பாருங்கோ...!
<b> </b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)