Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாவு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது
#1
<img src='http://img135.exs.cx/img135/5531/c1876pyall0lq.jpg' border='0' alt='user posted image'>

நாகை, டிச.28- நாகை-வேளாங்கண்ணியில் எங்கு பார்த்தாலும் பிணக்குவியலாக காட்சியளிப்பதால் கடல் கொந்தளிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீனவர் குடியிருப்புகள் அடியோடு அழிந்துவிட்டன. மீட்பு பணிகள் மந்தமாக நடப்பதால் மக்கள் கொந்தளிப்புடன் காணப்படுகிறhர்கள்.

இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட திடீர் பூகம்பத்தின் பாதிப்பினால் தமிழகத்தில் வங்கக் கடலில் நேற்று முன்தினம் காலை கொந்தளிப்பு ஏற்பட்டதல்லவா. இந்த கொந்தளிப்பினால் தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து குமாp வரை கடலோர கிராமங்கள் கடும் பாதிப்புக்குள்ளாயின. கடல் அலை ஒரு பனை மரம் உயரத்திற்கு மேல் எழும்பி ஊருக்குள் புகுந்ததால் ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்ததாக செய்திகள் வந்த வன்னம் இருக்கின்றன.

இந்த பூகம்பம்-கடல் கொந்தளிப்பினால் அதிகம் பாதிப்புக்குள்ளானது நாகை மாவட்டம் தான் நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணியிலிருந்து 9 மணி வரை கடல் கொந்தளித்து ஊருக்குள் புகுந்தது. இதனால் நாகை கடற்கரையோர மீனவர் குடியிருப்புகள் அடியோடு அழிந்து விட்டன என்றே கூறலாம்.

பொதுவாக கொள்ளிடம் கரையிலிருந்து வேதாரண்யம் கரை வரை மீனவர் குடியிருப்புகள் கடலில் இருந்து சுமார் 1 கி.மீட்டர் தூரத்திலேயே அமைந்து இருந்தன. மீனவர்கள் அந்த குடிசை வீடுகளில் தங்கி இருந்து மீன் பிடிக்க செல்வது வழக்கம். நாகை மாவட்டத்தை பொறுத்தவரை கீச்சாங்குப்பம், அந்தனப்பேட்டை அக்கரைப்பேட்டை, கல்லார், செருதூர் உள்பட 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார் 10 ஆயிரம் மீனவர் குடும்பங்கள் வசித்து வந்தனர். இதை தவிர தற்போது மீன் பிடி சீசன் என்பதால் வெளிமாவட்டங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக தங்கி இருந்து மீன் பிடி தொழில் செய்தவர்களும் இதில் அடங்குவர்.

பிணக்குவியல்கள்

நேற்று முன் தினம் கடல் கொந்தளித்த போது இந்த குடியிருப்புகளுக்குள் கடல் நீர் குபீர் என புகுந்ததால் பெண்கள், குழந்தைகள் உயிர் தப்பிப்பதற்காக அங்கும், இங்குமாக ஓடினர். ஆனால் 10 அடி உயரத்திற்கும் அதிகமாக தண்ணீர் சூழ்ந்ததால் அவர்களால் எங்கும் தப்பி செல்ல முடியவில்லை. குழந்தைகள் மூச்சி தினறி செத்தனர். குடிசைகள் அப்படியே விழுந்து அமுக்கியதாலும் வெளியே வரமுடியாமல் பலர் உயிர் இழந்தனர்.

இதனால் நாகை கடலோர பகுதி மீனவர் குடியிருப்புகள் சின்னாபின்னமாக சிதைந்து போய் எங்கு பார்த்தாலும் பிணக்குவியலாக காட்சியளிக்கிறது.

இடிபாடுகளுக்குள் சிக்கி கிடக்கும் உடல்களை மீட்கும் பணியில் போலீசார், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடல்கள் எல்லாம் நாகை அரசு மருத்துவமனைக்கு லாhpகளிலும், வேன்களிலும் ஏற்றி செல்லப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாகை அரசு மருத்துவமனையே பிணக்கிடங்காக காட்சியளிக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

வேளாங்கண்ணி

கடல் கொந்தளிப்பினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாங்கண்ணியும் ஒன்று. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மாதா ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. இங்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மட்டுமின்றி கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி மாதா தாpசனத்திற்காக வந்திருந்த அவர்கள் நேற்று முன்தினம் காலை வேளாங்கண்ணி கடற்கரையில் மகிழ்ச்சியோடு நீராடி கொண்டு இருந்தனர். பூகம்பம் என்னும் அரக்கன் கடல் கொந்தளிப்பு என்னும் கொடிய கரங்களை நீட்டி தனது அகோர பசிக்கு இரையாக்கி கொள்ள போகிறhன் என்ற ஆபத்தினை சற்றும் உணர்ந்திராத அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

காலை 9 மணி அளவில் வேளாங்கண்ணி கடற்கரையில் சுமார் 5 ஆயிரம் பேர் நீராடி கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் திடீரென ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி ஆர்பாpத்த படி வந்தன. இதை பார்த்த அவர்கள் முதலில் அலைதானே வருகிறது, நமது காலை நனைத்துவிட்டு போய்விடும் என்று நினைத்தனர். ஆனால் அது காலை வாhpவிட்டு தங்களை உள்ளே இழுத்து செல்லும் என்று அவர்கள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

அணி, அணியாக வந்த ராட்சத அலைகள் கடற்கரையை தாண்டி கடை வீதியை தாண்டி, மாதாகோவிலை தாண்டி பஸ் நிலையம் வரை சென்று கோரதாண்டவம் ஆடியது. கரையோரத்தில் இருந்த கூரை கடைகள், ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் போடப்பட்டு இருந்த கடைகள் எல்லாம் அப்படியே சாpந்து விழுந்தன. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார்கள், வேன்கள் அலைகளால் அங்கும், இங்குமாக அடித்து செல்லப்பட்டன.

கடலில் நீராடி கொண்டு இருந்த 5 ஆயிரம் போpன் கதி என்ன என்று தொpயவில்லை. அவர்கள் அனைவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு உடல்கள் வேறு எங்காவது ஒதுங்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது தவிர கோவில் வளாகத்தில் நின்று கொண்டு இருந்தவர்கள், கடை வீதியில் நின்று கொண்டு இருந்தவர்கள் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களும் கடல் நீர் புகுந்ததில் மூச்சு தினறி பலியானார்கள்.

வேளாங்கண்ணி கடற்கரையில் மட்டும் சுமார் 700 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அந்த உடல்கள் அனைத்தும் மாதா கோவில் பிராத்தனை மண்டபத்தில் வாpசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. உடல்களை அடையாளம் கண்டுபிடித்து வரும் உறவினர்களிடம் அந்த உடல்களை போலீசார் ஒப்படைத்து வருகிறhர்கள். அடையாளம் தொpயாத பிணங்கள் அப்படியே கிடக்கின்றன. இதனால் பிரார்த்தனை மண்டபமே பிண மண்டபமாக காட்சியளிக்கிறது.

மொத்தத்தில் நாகை, வேளாங்கண்ணி உள்பட நாகை மாவட்டம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியிருக்கும் என அப்பகுதி மக்கள் கூறுகிறhர்கள். கடல் நீர் புகுந்த பகுதிகளில் தண்ணீர் வடிந்துவிட்டாலும் அப்பகுதி மக்கள் இன்னும் பீதியில் இருந்து மீளாமல் இருப்பது காண முடிந்தது.

குழந்தைகளை இழந்த பெற்றேhர் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு தலைவிhp கோலமாக அழுவதையும், பிணங்களின் அருகிலேயே அமர்ந்து செய்வதறியாது திகைப்பதையும் பார்க்கும்போது கல் நெஞ்சும் உருகும் வகையில் உள்ளது.

இந்த நிலையில் இந்த பகுதிகளில் நேற்று காலையில் இருந்து மழைவிட்டு விட்டு பெய்து கொண்டு இருப்பதால் மீட்பு பணியும் நடைபெறவில்லை. உணவு கிடைக்காமல் மக்கள் அங்கும், இங்கும் அலைந்து கொண்டு இருக்கிறhர்கள். கடைகள் மூடப்பட்டுள்ளன. அரசு உயர் அதிகாhpகள், அமைச்சர்கள் யாரும் தங்களுக்கு ஆறுதல் கூறுவதற்குகூட வரவில்லையே என்று மக்கள் மனம் குமுறிய நிலையில் உள்ளனர். இந்த நிலை நீடித்தால் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் கூறுகின்றனர்.

நாகை, வேளாங்கண்ணி பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் காலரா போன்ற கொடிய தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநில அரசும், மத்திய அரசும் மீட்பு நடவடிக்கைகளை துhpதமாக செய்ய வேண்டும் என்பதே இப்போது உள்ள ஒரே கோhpக்கை.

சுனாமி பூகம்பம் ஏற்படுவது எப்படி?

இந்திய கண்டம் இதுவரை கண்டிராத வகையில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலி கொள்ளப்பட்டது. கோடிக் கணக்கான சொத்து இழப்பு ஏற்பட்டது. இந்தியாவில் பொpய அளவில் பூகம்பம் ஏற்படாது. குறிப்பாக தமிழகத்தில் பூகம்பம் ஏற்படாது என்று தான் ஆய்வு மையங்களும் ஆய்வாளர்களும் கூறினார்கள். ஆனால் வரலாறு காணாத வகையில் பூகம்பம் ஏற்பட்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் கடலில் பூகம்பம் ஏற்பட்டது இதுவே முதல் முறை ஆகும். தற்போது கொந்தளித்த கடல் அலைக்கு சுனாமி என்று ஜப்பானிய மொழியில் அழைக்கப்படுகிறது.

இந்த பூகம்பம் குறித்து பல்வேறு கல்லு}hp புவியியல்துறை வல்லுனர்கள் கூறியதாவது„-

பூகம்பம் 4 வகைப்படும். முதல் வகை பூகம்பத்தை நாம் உணர முடியாது. கருவிகள் மூலம் கண்டுபிடிக்க முடியும். சில பறவைகளுக்கு தொpயும். இரண்டாவது வகை நாம் உணர முடியும் சேதம் இருக்காது. அதாவது hpக்டர் அளவு 2-க்குள் இருக்கும். 3-வது வகை பூகம்பம் லேசான சேதம் ஏற் படுத்தும்.இது hpக்டர் அளவு 5-க்குள் இருக்கும். 4-வது வகை மண்டலம் hpக்டர் அளவு 6-க்கு மேல் ஏற்பட்டு பொpய இழப்பை ஏற்படுத்தும். தமிழகம் 2-வது வகை மண்டலமாக இருந்தது. தற்போது 3-வது வகை பூகம்ப மண்டலமாக மாறிவிட்டது.

ஆனால் தற்போது கடலில் ஏற்பட்ட இந்த பூகம்பம் . இந்த பகுதியில் முதல் முறையாக வந்து உள்ளது. பூமியில் 70 சதவீதம் கடலுக்கு அடியில் இருக்கிறது. பூமியின் கீழ் உள்ள எhpமலைகள் தினமும் எhpயும்;. அப்போது எhpமலை குழம்புகள் பீhpட்டு அடிக்கும். அதனால் ஏற்படும் அதிர்வால் கடலில் கொந்தளிப்பு ஏற்படும். ஆனால் இந்த வகை பூகம்பம் ஜப்பான், அமொpக்கா, இந்தோனோசியா போன்ற நாடுகளில்தான் அடிக்கடி வரும். எனவே அந்த நாடுகளில் இதுபோன்ற பூகம்பம் வருவதை முன்கூட்டியே தொpந்து கொள்ள ஏற்பாடு செய்து வைத்து இருக்கி றhர்கள். அதனால் தான் இது போன்ற பூகம்பம் வரும்போது எந்த சேதமும் இல்லாமல் காப் பாற்றி கொள்கிறhர்கள்.

இந்த பூகம்பம் ஏற்படுவதை முன்கூட்டியே கருவி மூலம் கண்டுபிடிக்க முடியாது. இந்த பூகம்பம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த கணக்கை வைத்துகடலில் சுனாமி கொந்தளிப்பை ஏற்படுத்தும் பூகம்பம் வரும் என்று கருதி மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றுவிடுவார்கள். இதனால் பாதிப்பு இருக்காது. ஆனால் இந்தியாவில் முதல் முறையாக வந்ததால் பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க முடியவில்லை.

இந்த பூகம்பம் கடல் பகுதியில் 10 ஆயிரம் அடி ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டு அதன் மூலம் கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தும். அங்கு இருந்து சீறிவரும் அலை கடல் 500 கிலோ மீட்டர் வேகத்தில் வரும். இது கடல் உள்பகுதியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எந்த இடத்தில் போய் முடிகிறதோ அந்த இடத்தில் தான்தனதுசீற்றத்தை காட்டுமாம். கரையில் சீறி பாய்ந்து பின் கடலுக்கு திரும்பும் போது கறையில் இருக்கும் அனைத்தையும் இழுத்து சென்றுவிடும்.

இவ்வாறு ஏற்படும் பூகம்பம் ஒரு நாளில் முடிந்துவிடாது. ஒருவாரம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. அவ்வப்போது லேசான கொந்தளிப்பு ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு கூறினர்.

கடல் கொந்தளிப்பினால் தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்ட படகுகள்

கடல் கொந்தளிப்பினால் நாகை அக்கரைப்பேட்டை படகு துறையில் இருந்த படகுகள் ரெயில் தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்டன.

நாகை துறைமுகத்தின் முன் பகுதியில் உள்ள படகு துறையில் ஏராளமான மீன் பிடி விசைப்படகுகள் நிறுத்தப்பட்டு இருக்கும். நேற்று முன் தினம் நாகை கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு சூறhவளி காற்றுடன் ராட்சத அலைகள் எழுந்தபோது அந்த அலைகளின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாத படகுகள் தள்ளாடின.

அந்த படகு துறையின் பின்பகுதியில் சுமார் 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்த பழமையான மதில் சுவர்களை உடைத்துக் கொண்டு படகுகள் தண்டவாளத்தை நோக்கி வீசப்பட்டன. சில படகுகள் சாலையிலும், சில படகுகள் வீட்டிற்குள்ளும் புகுந்து நிற்பதை காணமுடிகிறது.

கடல் அலையில் பயணிக்க வேண்டிய படகுகள் சாலையிலும், தண்டவாளத்திலும் தூக்கி வீசப்பட்டு இருப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. நாகை- நாகூர் ரெயில் பாதை முற்றிலுமாக சேதம் அடைந்து ரெயில் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாகையில் 2-வது நாளாக கடையடைப்பு

கடல் கொந்தளிப்பினால் ஏற்பட்ட பீதி, சோகம் நாகை நகர மக்களிடம் இருந்து இன்னும் விலகவில்லை. எங்கு பார்த்தாலும் கண்ணீரும், கம்பலையுமாக மக்கள் நடமாடுகின்றனர். பெரும்பாலான கடைகள் நேற்று 2வது நாளாக அடைக்கப்பட்டு இருந்தது.

மீட்பு பணியில் இளைஞர் இயக்கம்

கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட வேளாங்கண்ணி கடற்கரை மற்றும் கோவில் வளாகத்தில் தஞ்சையை சேர்ந்த இளைஞர் இயக்கம் என்ற தொண்டு நிறுவனம் மீட்பு பணிகளை செய்வதில் தீவிரமாக இறங்கி உள்ளது. பச்சை நிற டி-சர்ட் அணிந்த அந்த இயக்கத்தை சேர்ந்த சுமார் 80 பேர் நேற்று முன்தினம் இரவில் இருந்து மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பாதிhpயார் கபிhpயேல் என்பவர் தலைமையில் வந்துள்ள அந்த குழுவினர் இதுவரை 1000 உடல்களை மீட்டதாக தினகரன் நிருபாpடம் தொpவித்தனர்.

உணவு பொட்டலங்கள் வழங்கும் வர்த்தக சங்கம்

நாகை மற்றும் வேளாங் கண்ணியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் ஆயிரக்கணக் கானவர்கள் வீடு வாசல்களை இழந்து சொந்த ஊhpலேயே அகதிகளாக நிற்கும் பாpதாப நிலையை காண முடிகிறது. பலர் தங்களது குழந்தை குட்டிகளுடன் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வது என தொpயாமல் தவித்து வருகி றhர்கள். இப்படி தவிப்பவர்களுக்கு சில இடங்களில் உணவு தயாhpக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் உணவு பொட்டலங்களை வேன், லாhpகள் மூலம் வழங்கி வருகிறhர்கள். திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கம் சார்பில் நேற்று 2-வது நாளாக பாதிக்கப்பட்ட உணவு பொட்டலங்கள் மற்றும் உடைகளை வழங்கினர்.

ஊரை காலி செய்த மக்கள்

நாகை மாவட்டத்தில் கடற்கரையில் இருந்து சுமார் 4 கி.மீட்டர் வரையுள்ள மீனவர் கிராமங்கள் தான் கடல் கொந்தளிப்பினால் முற்றிலுமாக அழிந்து போய் உள்ளது. இன்னும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் இந்த 4 கி.மீட்டரை தாண்டி இருக்கும் பல்வேறு கிராம மக்களும் கையில் கொண்டு செல்ல முடிந்த அளவுக்கு தட்டு முட்டு சாமான்களை எடுத்துக்கொண்டு திருவாரூர் மற்றும் தஞ்சையை நோக்கி பஸ்களிலும், வேன்களிலும், லாhpகளிலும் ஏறிச் செல்வதை வழி நெடுக காண முடிகிறது. இதனால் கடற்கரைக்கு அப்பால் உள்ள பல கிராமங்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் காலியாக காட்சி அளிக்கின்றன.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)