Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர்களின் பொது விழாக்களில் தமிழை புறக்கணிப்பது சரியா?
#1
:?: :?: :?:
தமிழர்களின் பொது விழாக்களில் தமிழை புறக்கணிப்பது சரியா? அதுவும்எம் எல்லோராலும் போற்றப்படுகின்ற ஒரு மதகுருவால் :?: :?: :?:



நான் ஒரு இரண்டுவாரத்துக்கு முன்னை ஒரு திருமணவீட்டுக்குப் போனன். அங்கை எல்லாம் தமிழ் தான். நானும் இதுதான் முதல் முறை கனடாவுக்கு வந்து ஒரு விசேசத்துக்கு போறது. எல்லாரும் சொல்லிச்சினம் கோட், சூட்டோடை தான் எல்லாரும் வருவாங்கள் எண்டு.பின்னை நானும் வீட்டிலை கிடந்ததொன்றைக் கொழுவிக் கொண்டுபோனன். அங்கை என்னடா எண்டா கன பொடியள் எல்லாம் வேட்டியோடை நிக்கிறாங்கள்.எனக்கும் கொஞ்சம் வெக்கமாய்ப் போச்சு நான் ஒரு மூலையிலை போய் இருந்திட்டன்.


கொஞ்ச நேரத்தாலை ஆங்கிலத்திலை யாரோ மணமக்களை வாழ்தி உரையாற்றிக் கேட்டுது.ஆரெண்டு பார்த்தா அது குருக்கள். அங்கு தமிழ் விளங்காத ஆட்கள் யாருமே இல்லையென்று சொல்லலாம். குருக்களும் தமிழர்தான். <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
என் மனம் சொன்னது அப்போ "தமிழுக்கு வந்த கெதியைப் பார்த்திய எண்டு" :?: :?: :?: :?: :?:

எம் எல்லோராலும் போற்றப்படுகின்ற ஒரு மதகுருவே தமிழை இரண்டாம் பட்சமாக்கி ஆங்கிலத்தில் உரையாற்றியதைத் தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

[size=18]நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> கவிதன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#2
tamilini Wrote:சரியாக சொன்னீர்கள் குருவி. நான் கூட கடந்த வாரம் ஓரு விசேசத்திற்கு சென்றிருந்தேன். விசேசம் என்னவோ தமிழ் முறைப்படி தான் நடந்தது. அனால் அங்கு வந்திருந்த சிலரோ வெள்ளைக்காரர்கள் போல நடந்தார்கள். பிள்ளை தமிழில் செல்ல பேச்சு பேச வேண்டிய சிறு பிள்ளைகள் ஆங்கிலம் தான் பேசினார்கள். பலரது நிலையையும் அறிந்து கொள்ளும் ஆசையில் சுற்றி பார்த்தேன் ஓரிருவர் மட்டும் தான் உறவினரை கண்டவுடன் ஊர் புதினம் பேசியதை கண்டேன். அதுவும் அவர்கள் வயது போனவர்கள் தான் இளைஞர்கள் பக்கம் பார்த்தேன். சுவாரசியமாக விஜயின் பட்டு பார்த்து கொண்டார்கள். இந்த நிலையில் செல்கிறது இருந்தாலும் தாய் நாட்டின் மேல் பாசமுள்ளவர்களும் இருக்கிறார்கள். அதை எண்ணி மகிழவேண்டியது தான். தானியாக வாழுகின்ற சிலர் பெற்றோரை. தாய் நாட்டை எண்ணி வருந்துபவர்களும் இருக்கிறார்கள். அடியோடு மறந்தவர்களாக பாசாங்கு செய்பவர்களும் இருக்கிறார்கள். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
8) 8) :roll:
Reply
#3
புதுத் தம்பதிகளை சந்ததி சந்ததியா வாழ்க என்றுதான் வாழ்த்துவார்கள். (வரும்) சந்ததிகளுக்கு தமிழ் தெரியாவிட்டாலும்.. ஒரு தீர்க்க தரிசனம்தான்!
குருக்கள் என்று ஏன் பிரித்துப் பார்க்கிறீர்கள்?!
.
Reply
#4
அமெரிகாவிலிருந்து மதுரை சென்Tர ஒருவர் மது குடிக்க கடைக்குப் (bar) போனா. அங்கு இந்திப் பாடல். தமிழ் பாட்டு போடுங்கள் என்றார். கடைக்காரர் இந்தி பிடிக்காவிட்டால் வேறென்காவது போங்கள். இது படித்தவர்கள் வரும் இடம் .இங்கு இந்தியும் ஆங்கிலமும் தான என்றார்
Reply
#5
ம்.... இப்படி போகுது...... Cry :oops:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
சென்ற வருடம் நத்தார் விடுமுறையில் சென்னை சென்றிருந்தேன்.
அங்கு நான் அறிந்தது அங்குள்ள மக்களிம் தமிழுடன் ஆங்கிலத்தை கல்நது கதைக்காவிட்டால் படிக்காதவன் என்று யாரும் மதிக்க மாட்டார்களாம்.

என்ன உலகம இது..இ
Reply
#7
யாழான யாழ்பாணத்துச் செந்தமிழ் பிரதேச செந்தமிழ்பாடசாலையொன்றில் போன கிழமை அபிவிருத்திக் கூட்டமொன்று நடந்ததாம்.
அதுக்கு எங்கட ஈழமான ஈழத்துக்கு வேந்தனெண்டு பேர் வைத்துக்கொண்டு பிரிவினைக்கெதிராய் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் உரையாறறப் போனாராம்.

ஆற்றின உரை முழுக்க ஆங்கிலத்துலதானாம்.

முக்கால் மணிநேரம் முழுசாட்டத்தோட கேட்டுக் கொண்டிருந்த மாணவர்களுக்கு பொறுக்க முடியவில்லையாம்.

ஆத்தாக் கொடுமையால ஒரு ஆசிரியை எழும்பி
"நிறுத்துங்கோ ஐயா உங்கட அரசியலையும் ஆங்கிலத்தையும்,
விட்டுட்டு பாடசாலைக்கு என்ன செய்யப் போறீங்க" எண்டு கேக்க ஆள் அந்தப்படியே அசந்துபோய் இருந்திட்டாராம் ..................................................

கூடப் போனவர்கள் இப்படி அறளை பெயர்ந்தவர்களை எங்கட தலையில கட்டிவிட்டுக் கெடக்குதெண்டு நொந்திச்சினமாம்.

நன்றி: தினமுரசு - 13-19/june.2004

:?: :?: :?: Confusedhock:
Reply
#8
அவர்கள் இன்றைய தலைமுறையாயிருக்கும் .அவர்களுக்கு ஈழவேந்தன் வரலாறு தெரியாமலிருக்கலாம்.ஆங்கிலக்கலப்பு சில சமயம் பழக்கதோசமாகவிருக்கலாம் .அது போக போக சரியாகும்.

பா.உ வாக மிகச் சரியான தேர்வு ஈழவேந்தன்.
Reply
#9
Quote:புதுத் தம்பதிகளை சந்ததி சந்ததியா வாழ்க என்றுதான் வாழ்த்துவார்கள். (வரும்) சந்ததிகளுக்கு தமிழ் தெரியாவிட்டாலும்.. ஒரு தீர்க்க தரிசனம்தான்!
குருக்கள் என்று ஏன் பிரித்துப் பார்க்கிறீர்கள்?!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)