Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணையங்கள் போகும் போக்கைப் பாரு...
#1
சிலின்கோ நிறுவன தலைவர் மீதான இணையத்தளத் தாக்குதலை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

சிலின்கோ கூட்டு நிறுவனத்தின் தலைவர் லலித் கொத்தலாவல மீது இணையத்தளம் ஒன்றில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் முதலாம் திகதி சிங்கள நெட் எனப்படும் இணையத்தளத்தில்.செலின்கோ தலைவரின் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட செய்தி வெளியாகியிருந்தது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சிஹல உறுமயவின் பிரதான பௌத்த பிக்குகளை கொலை செய்ய கொத்தலாவல முயற்சிக்கிறார் என்ற செய்தியே அதுவாகும்.

பாணந்துறையில் நடைபெற்ற சிஹல உறுமயவின் பொதுக்கூட்டம் ஒன்றை ஒலி ஒளி பதிவு செய்தமை இதன் அடிப்படையிலேயே இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்த கொழும்பு மேல் நீதிமன்றம் குறிப்பிட்ட செய்தியை எதிர்வரும் 14 நாட்களுக்குள் இணையத்தளத்தில் இருந்து நீக்கிவிட வேண்டும் அல்லது நட்ட ஈட்டை செலுத்த வேண்டியேற்படும் எனவும் மேல் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.


ஆதாரம் புதினம் டொட் கொம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)