Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
... .... தமிழ் சிங்கள கைதிகளின் தாழ்மையான விண்ணப்பக் கடிதம்.
#1
மாலத்தீவு சிறையில் வாடும் தமிழ் சிங்கள கைதிகளின் தாழ்மையான விண்ணப்பக் கடிதம்.
செவ்வாய்கிழமை 31 மே 2005 டி.சிவராம்
வாழ்க தமிழ் - வெல்க தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்
அனுப்புனர்: மாப+சி தீவு தமிழ் முஸ்லீம் சிங்கள கைதிகள்
மாலத்தீவு
பெறுநர்: மதிப்பிற்குரிய தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத்தலைவர்
திரு. பிரபாகரன் அவர்கள்
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் தலைமை அலுவலகம்
கிளிநொச்சி
தமிழீழம்
மதிப்பிற்குரிய திரு. பிரபாகரன் அவர்களுக்கு..
மாலத்தீவு சிறையில் வாடும் தமிழ் சிங்கள கைதிகளின் தாழ்மையான விண்ணப்பக் கடிதம். இலங்கையில் நலிந்த பொருளாதாரத்தின் காரணமாக தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் பெருமளவில் மாலத்தீவில் வேலை செய்துவருகின்றோம். எங்களை அழைத்துவரும் ஏஜென்சிக்கள் எங்களை முறையான கம்பெனிகளில் விடாமல் தங்கள் விருப்பத்திற்கேற்ப இடத்தில் வேலைக்கு விடுகின்றனர். வேலை செய்யும் இடத்தில்கூட எங்களுக்கு முறையான தங்கும் வசதியும் சரியான சம்பளமும் கிடைப்பதில்லை. பல மாதங்கள் சம்பளம் இல்லாமல் வேலைசெய்யவேண்டியுள்ளது. அதையும் மீறி சம்பளத்தைக் கேட்டால் போலிசுக்கு தகவல் கொடுத்து பொய்யாக புகார் கொடுத்து (போதை பொருள் வைத்திருந்ததாகவும் போதைப்பொருள் விற்றதாகவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் பெண்களை பலாத்காரம் செய்ததாகவும்) சிறையில் தள்ளுகிறார்கள். பிறகு எங்களை அடித்து துன்புறுத்தி நாங்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக எழுதி எங்களிடம் கையெழுத்து வாங்கி விடுகின்றனர். (உண்மையில் போதைப் பொருள் விற்ற ஒரு சிலரிடமிருந்து போதைவஸ்துக்களை வாங்கி எங்களிடம் கொடுத்து போதைப்பொருளுடன் எங்களை புகைப்படம் எடுத்து இலங்கைத் தூதரகத்திடம் ஒப்படைத்து விடுகிறார்கள்.


இதுபோன்ற புகைப்படங்களையும் நாங்கள் கையெழுத்து போட்டு கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தையும் பார்க்கும் இலங்கைத் தூதரகம் அதை உண்மை என நம்பிவிடுகிறது. இதுபோன்ற பொய் புகார்களின் பெயரில் மொத்தம் 40 இலங்கைக்காரர்கள் (தமிழர் முஸ்லீம் சிங்களவர்) சிறைவைக்கப்பட்டுள்ளோம். எங்களை சிறைவைப்பதற்கு முன் துனிதா என்னும் ஒரு தீவிற்கு இழுத்து செல்கின்றனர். அங்குவைத்துத்தான் எங்களை அடித்து துன்புறுத்தி ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கி விடுகின்றனர். எங்களால் அடி தாங்கமுடியாததால் அவர்கள் கொடுக்கும் பேப்பர்களில் கையெழுத்து போடவேண்டிய சூழ்நிலை உள்ளது. (கையெழுத்து போட மறுத்த இரண்டு இந்திய தமிழர்கள் போலீஸாரால் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். அதை தற்கொலை என்று இந்திய தூதரிடம் தெரிவித்து விட்டனர். எங்கள் கண்முன் நிகழ்ந்த இந்த இரண்டு கொலைகளைக் கண்டு உயிருக்குப் பயந்துதான் அவர்கள் காட்டிய இடங்களில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளோம். நாங்கள் போடும் கையெழுத்து எங்கள் தலையெழுத்தை மாற்றப்போகின்றது என்பதை அப்பொழுது நாங்கள் உணரவில்லை. நாங்கள் ஒப்பமிட்டுக்கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்து எங்களுக்கு ஆயுள்தண்டனை வாங்கி கொடுத்துவிடுகின்றனர். பெயருக்குத்தான் அவை நீதி மன்றங்கள் போலீசார் எழுதிக்கொடுக்கும் தீர்ப்பைத்தான் நீதிபதி படித்துச்சொல்ல வேண்டும். எங்களுக்கு ஆதரவாக வாதாட ஒருவரும் இல்லை. அப்படியே நாங்கள் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறினாலும் நீதிபதி அதை செவி கொடுத்து கேட்பதில்லை. இதுவரை 32 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள இந்த 32 பேர்களும் (இலங்கை) உண்மையில் நிரபராதிகள். அதே சமயம் கையில் போதை வஸ்துக்களுடன் பிடிபட்ட ஆஸ்திரேலிய நாட்டுக்காரருக்கு ஆயுள் தண்டனைகொடுத்து அவரை இரண்டு வருடத்தில் விடுதலை செய்துவிட்டனர். ஆஸ்திரேலிய நாட்டு தூதரகத்தின் முயற்சியால் அவர் இரண்டு வருடத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் இலங்கைத் தூதரகம் (மாலத்தீவு) இங்குள்ள இலங்கை மக்களுக்காக எந்த ஒரு முயற்சியும் எடுப்பதில்லை.

நாங்கள் அனைவரும் மாபுசி என்னும் தீவில் அடைக்கப்பட்டுள்ளோம். இத்தீவ மாலத்தீவின் தலைநகர் மாலேயிலிருந்து கிழக்காக 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எங்களை இத்தீவிற்கு கூட்டிவரும் பொழுது கைவிலங்கிட்டுத்தான் படகில் கூட்டிவருகின்றனர். வெளிநாட்டவர்களுக்கு மட்டும்தான் கைவிலங்கு போடப்படுகின்றது. இக் கடல்ப்பகுதி மிகவும் ஆபத்தானது. உயிர்கொல்லி சுறாமீன்கள் நிறைந்த கடல் பகுதி. படகு கவிழ்ந்தால் நாங்கள் அனைவரும் கைவிலங்குகளுடன் சுறா மீன்களின் பசிக்கு இரையாக வேண்டியதுதான். மிகுந்த ஆபத்தான பயணத்திற்குப் பிறகுதான் அந்தத் தீவை அடைய முடியும். இரும்புத் தகரத்தால் நாற்புறமும் மூடப்பட்ட சிறைச்சாலை இது. ஒரு அறையில் 102 பேர் சூரிய வெளிச்சமே உள்ளே புகமுடியாத இருட்டான சிறை அறைகள். அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லாத சிறை அறைகளில் நாங்கள் அவதியுறுகிறோம். குடிப்பதற்கும் குளிப்பதற்கும் 5லீட்டர் தண்ணி தருகிறார்கள். 102 கைதிகளுக்கும் மூன்று கழிப்பறைகள்தான். மாலத்தீவுக்காரர்களையும் எங்களுடன் அடைத்து வைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் உண்மைக் குற்றவாளிகள் (கொலை கொள்ளை கற்பழிப்பு) போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள். சிறைக்குள் இருக்கும் மாலத்தீவுக்காரர்கள் எங்களை அடித்து துன்புறுத்தினாலும் சிறைக் காவலர்கள் அவர்களை கண்டுகொள்வதில்லை. அதே சமயம் நாங்கள் சிறு தவறு செய்து விட்டாலும் போலிசார் எங்களை வெளியே அழைத்து அனைவர் கையிலும் மனிதச்சங்கில் போல் விலங்கிட்டு பகல் நேரத்தில் வெயிலில் நிறுத்துகிறார்கள். இரவு நேரத்தில் கடல் நீரில் எங்களை அமிழ்த்துகிறார்கள். இந்த தண்டனை சமயத்தில் குடிப்பதற்கு ஒருசொட்டு தண்ணீர்கூட தருவதில்லை. இதுபோன்ற தண்டனைகள் சில சமயங்களில் தொடர்ச்சியாக ஒருவாரம் வரை இருக்கும். எங்களுக்கு கொடுக்கப்படும் உணவில் போலிஸார் வேண்டும் என்றே புழுக்களையும் வண்டுகளையும் சில சமயங்களில் சீறுநீர் கழித்தும் எங்களுக்கு உண்ணக் கொடுக்கின்றனர். சில சமயங்களில் எங்களுக்கு கொடுக்கப்படும் உணவை மாலத்தீவுக்காரர்கள் எடுத்துக்கொண்டு எங்களை பட்டினி போட்டு விடுவார்கள்.

பலசமயங்களில் நாங்கள் பட்டினியுடன்தான் நாட்களைக் கழிக்க வேண்டியுள்ளது. இவை அனைத்து போலிஸாருக்கும் தெரியும். தெரிந்தாலும் ஒன்றும் சொல்லவதில்லை. இந்த அவல நிலை குறிப்பாக இலங்கை இந்தியாவை சேர்ந்தவர்களுக்குத்தான். சிறைக் காவலர்கள் ஏதாவது காரணத்தைக் கண்டுபிடித்து எங்களுக்கு தண்டனை கொடுத்து வருகிறார்கள். எங்களில் நான்கு பேருக்கு கைவிலங்கிட்டு தென்னை மரத்தை சுற்றிலும் நிற்கவைத்து விடுவார்கள். நாங்கள் கீழேயும் உட்காரக்கூடாது. தென்னை மரத்திலும் சாயக்கூடாது. இவ்வாறு இரவு பகலாக நிற்கவைத்து விடுவார்கள். ஒருவேளை நாங்கள் தூங்கிவிட்டால் கடல்நீரை நம்மீது ஊற்றி நம்மை தூங்காமல் செய்துவிடுவார்கள். நரக வேதனை என்பதை இங்கு (சிறைக்கு) வந்த பிறகுதான் அனுபவித்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் விடியும்போதும் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை உள்ளது. இந்த சிறைகளில் உள்ள வெளிநாட்டவர் (இலங்கை இந்தியா பங்களாதேஸ்) பலர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு எந்தவிதமான மருத்துவ சிகிச்சையும் அளிப்பதில்லை. சூரியவெளிச்சமும் காற்றோட்ட வசதியும் இல்லாததால் அனேக வெளிநாட்டவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் ஒரு மாலத்தீவுக்காரருக்கு உடம்பு சரியில்லை என்றால் அவரை மாலேக்கு அனுப்பி அவருக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். எங்களை மிருகத்தைவிட மிகக் கேவலமாக நடத்துகிறார்கள். நாங்கள் மீண்டும் எங்கள் தாய்நாட்டிற்கு (இலங்கை) உயிருடன் திரும்பமுடியுமா என்று எங்களுக்கு மிகவும் பயமாக உள்ளது. இந்த சிறையில் வெளிநாட்டவர்களுக்கு நடக்கும் கொடுமைகள் வெளிஉலகிற்கு தெரியாமல் நடந்துவருகிறது. இந்த சிறைச்சாலையே ”மறுவாழ்வு நிலையம்” என்ற பெயரில்தான் நடந்து வருகிறது. உண்மையில் இங்கு நடக்கும் விசயங்கள் வெளி உலகிற்கு தெரிவதில்லை. வெளிநாட்டவர்களை (இலங்கை இந்தியா பங்களாதேஸ்) அவரவரது நாடுகளின் பெயரை சொல்லி மிகவும் இழிவாகப் பேசி எங்கள் நாட்டிற்கு ஏன் வேலைக்கு வருகிறீர்கள் என்று சொல்லி எங்களை அடித்து துன்புறுத்துகிறார்கள். நாங்கள் எங்களை எங்கள் நாடுகளுக்கு அனுப்பிவிடுங்கள். இனி உங்கள் நாட்டிற்கு நாங்கள் வரமாட்டோம் என்று கெஞ்சி கேட்டாலும் அவர்கள் சொல்கிறார்கள் எங்கள் நாட்டின் வலிமையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அத்தோடு உங்களுக்கு கொடுக்கும் தண்டனை இனி மாலத்தீவுக்கு வர நினைப்பவர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். உலகில் எங்களை மிகவும் சிறிய நாடு என்று கேவலமாக நினைக்கிறார்கள். உங்களை துன்புறுத்துவதன் மூலம் எங்கள் வல்லமையை வெளிநாடுகளுக்கு உணர்த்த முடியும் என்று கொக்கரிக்கிறார்கள்.

தாங்கள் தயவுகூர்ந்து இந்த விசயங்களை வெளி உலகிற்கு கொண்டு செல்லுங்கள். காரணம் உலக மக்கள் அனைவரும் மாலத்தீவு அமைதியான நாடு பாதுகாப்பான நாடு மனித உரிமைகள் நிறைந்த நாடு என்ற தவறான எண்ணத்தில் உள்ளனர். மாலத்தீவின் உண்மையான சுயருபத்தை வெளி உலகிற்கு உணர்த்தவேண்டும். காரணம் எங்களுக்கு நிகழ்ந்த இந்த இன்னல்கள் வேறு எந்த ஒரு நாட்டினருக்கும் நிகழக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இதனை எழுதுகிறோம். மதிப்பிற்குரிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தன்மானத் தலைவர் திரு பிரபாகரன் அவர்கள் அறிவது:

இக் கடிதத்தை எழுதுவது பெரியபுள்ளுமலையை பிறப்பிடமாகவும் நுவரெலியாவை வசிப்பிடமாகவும் கொண்டுள்ள ஜெயராம் எழுதிக்கொள்வது இச்சிறையில் வாடும் பெரும்பான்மையான சிங்களக் கைதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இக் கடிதத்தை எழுதுகிறேன். இவர்கள் அனைவரும் இலங்கையின் பல பகுதிகளைச் சோந்தவர்கள். இவர்கள் அனைவரும் உங்கள் மீது ப+ரண நம்பிக்கைகொண்டு தான் என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அந்த வேண்டுகோளுக்கு இணங்கவே இக் கடிதத்தை எழுதுகிறேன். இதற்குமுன் மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அவர்களுக்கும் மாண்புமிகு அதிபர் திருமதி சந்திரிகா குமாரதுங்க அவர்களுக்கும் வௌ;வேறு கடிதங்கள்மூலம் நாங்கள் இருக்கும் நிலையை தெரியப்படுத்தியுள்ளோம். ஆனால் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கை எடுத்தார்கள் என்பது இங்குள்ள எங்களுக்கு தெரியாது. அமைதிப்பேச்சு வார்த்தை வெற்றிகரமாக நடந்து முடிந்துவரும் இந்த சூழ்நிலையில் எங்கள் பிரச்சனை உங்கள் மூலம் அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டால் நாங்கள் உயிர் பிழைத்து நம் நாடு வந்து சேரமுடியும். இச் சிறையில்வாடும் அனைவரும் 25 வயதிற்கு மேற்பட்ட திருமணமானவர்கள். இது நாள் வரையில் எங்களுக்கு மறுவாழ்வு இருக்கிறது எனறோ மீண்டும் நாட்டிற்கு செல்வோம் என்றோ நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. உங்களுக்கு கடிதம் எழுத ஆரம்பித்த பிறகுதான் எங்களுக்கு எங்கள் வாழ்வு திரும்பக் கிடைக்கும் நாங்களும் எங்கள் தாய்நாடு செல்லமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள இலங்கையர்கள் அனைவரும் உங்கள்மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளோம். குறிப்பாக சிங்களவர்கள் உங்கள்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதுவே நம் இயக்கத்தின் மாபெரும் வெற்றி. உங்களால் மட்டுமே அவர்களை காப்பாற்ற முடியும் என்று அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளனர். எங்கள் சகோதரர்கள் இருவரும் 1986 முதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் தமிழ் மக்களுக்காக போராடி வருகின்றனர். 1. சத்தியசீலன் (பெரியபுள்ளுமலை) 2. ஆறுமுகம் (பெரியபுள்ளுமலை). தாங்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு கண்டால் நிச்சயம் நாங்கள் காப்பாற்றப்பட்டு நாங்கள் நாடு திரும்புவோம். எங்களது எதிர்காலம் இப்பொழுது உங்கள் கைகளில் தான் உள்ளது. தாங்கள் தயவுகூர்ந்து இந்தப் பிரச்சனையில் தலையிட்டு எங்களுக்கு வாழ்வளிக்க வேண்டுகின்றோம்.
நன்றி!
ஆயுள் தண்டனை கைதிகள் (25 வருடங்கள்)
ஜெயராம் (நுவரெலியா) நசார் சாமுல் கமீது (கொழும்பு மருதானை) சமந்தா (மருதானை) சூரிய பண்டார (அனுராதபுரம்) விமல் பண்டார (குருநாகல்) லக்ஸ்மன் (ஜாஎல) இந்திக (பண்வில) மொகமது அனீஸ் (நீர்கொழும்பு) சம்பத் (வாதுவ) துசித (வத்தல) மகிந்த (அம்பலாங்கொட) அஜித் (தெகிவள) ஞானரத்ன ஏபா (வைகேன) சுஜித் குமார் (வைகேன) ரலபனாவ (பிலஸ்) பியாள் ஜெயதிஸ்ஸே (கள்கிஸ்ஸே) சம்லி சுஜித்குமார் (நாத்தண்டியே) நிவந்த மாதவ (குருநாகல்) அபுசாலிசகி (சமாந்துரே) மொகமத் நஸ்லீம் (யாழ்ப்பாணம்) வசந்தகுமார் (புத்தளம்) செல்டன் பெர்னாண்டோ (வத்தல) சதானந்தன் (நுவரெலியா) மொகமத் கில்மி (குருநாகல்) திலக் (சீனிகம) சரத் (காலி) பிரியந்த (கொழும்பு) ஆனந்த (கொழும்பு) பிரேமரத்ன (சிக்கவரட்டிய) உபாளி (சிலாபம்) வாரன்டோச் ஜோசப் (பத்தரமுல்ல)
நிதர்சன்

நிதர்சனம்.கொம்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
அன்புடையீர்,
இத்தகவல் இரண்டுமுறை பதிவாகிவிட்டது....ஒன்றை தயவுசெய்து நீக்கிவிடவும்...
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
அஹா.. தம்பிமார்களே நீங்கள் கொடுத்த விண்ணப்பங்கள் புலிகளால் பரிசிலனை செய்யப்படும் என்று நம்புகிறேன்.. ஏனெனில் அவர்கள் எங்களைப்போல் (றோ, இல.கு.ம.புலுனாவு குழு, ஈ.பி.டி.பி) மாதிரி இரத்த காட்டேறிகள் இல்லை.. எனெனில் அவங்கள் தமிழர்களின் விடுதலைக்காககத்தான் (மக்களின்) போராடுறாங்கள்.. சரி அப்படி நீங்கள் அவர்களின் முயற்சியில் விடுபட்டு தாயகம் வரும்போதும் திரும்புபோது, ஒரு 10 பேருக்கு அந்த ஜெயிலில் நிரந்தரமாக தங்குவதற்கு இடம் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டுவரவும்..

நான் சொன்ன 10 பேர்கள் நான் ஒன்று, ஆ.சங்கரி, ஜெயா, இ.ப.ராம். கறுனா, ரிபிசி ராமராஜன்,மச்சான் நரி அதுதான் கதிர்காமன், சந்திரிக்கா, விமல் வீரவன்சா, சேம்போறி சீ சோம வன்ச... அத்தோட உவன் நம்மட அமத்துறு மண்டையன் ரத்தின முத்தின தேரர் அவனுக்கும் இருந்தால் 11வதாக பார்த்துக்கொண்டுவாருங்கள்.. Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)