Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்ப் பணி எது ?
#1
தமிழ்ப்பணி என்பது பதனீரால் பனைவெல்லம் காய்ச்சுவது போன்றதா? என்று சுடுவினா எழுப்பினார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
யாரைப் பார்த்து என்றால், தமிழறிஞர்கள். தமிழரசியலார், கவிஞர்கள், இதழாளர்கள் போன்ற அனைவரையும் பார்த்து. தமிழறிஞர்கள் கூடி கம்பனையும், இளங்கோவையும் வள்ளுவரையும் போற்றிவிட்டால் அது தமிழ்ப்பணியா?
அரசியலார், தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! என்று கூட்டத்தில் முழங்கிவிட்டால் அது தமிழ்ப்பணியா ?
கவிஞர்கள் பெண்ணையும், பெணிணின் கண்ணையும்பாடி, கொஞ்சம் மரம் செடி கொடிகளைப் பாடி, பின்னர் ஏழையின் வயிற்றையும் பாடிவிட்டால் அது தமிழ்ப்பணியா?
பல மொழிகளைக் கலந்து, பெண்களின் ஆடைகளை நழுவவிட்ட, உதறிவிட்ட படங்களைப் போட்டு கோடி கோடியாகத் தினமும் இதழ்களை விற்றவிட்டால் அது தமிழ்ப்பணியா?
மடற்குழு ஒன்றைத் தொடங்கி அதில் தமிழிலும் எழுதிவிட்டால் அது தமிழ்ப்பணியா?
இணைய இதழ் ஒன்று தொடங்கி அதில் உல்லாசத்தையும், ஊருக்கொருவா¢ன் படைப்புகளைப் போட்டு, இலக்கியம், இலக்கணம், அரசியல், நகைச்சுவை, உளறல், பிதற்றல் என்று பலவற்றைப் போட்டு, தனிமனிதர்களின் சிறப்புகளை அரங்கேற்றவது தமிழ்ப்பணியா?
தமிழை நன்கு கற்று, பின்னர் மண்டைக் கிறுக்கெடுத்து, பகையை நக்கி, பல்லிளித்து பதவியின் உச்சியில் அமர்ந்து தமிழுக்கும் தமிழர்க்கும் செய்கிறேன் என்ற போர்வையில் மானங்கெட்டலைவது தமிழ்ப்பணியா? ஏழைத் தமிழர் சிலரைக் கூட்டி அவர்க்கு சொக்காய் வாங்கிக் கொடுத்து சோறு போட்டு அனுப்புதல் தமிழ்ப்பணியா?
இவையாவும் தமிழ்ப்பணிதான், இருந்தபோதும் இவையே போதுமா என்று ஒவ்வொருவரும் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
இவையாவும் தமிழ்ப்பணிதான் ஆயினும் பெரும்பாலும் தன்னொழுக்கம் இல்லாததால் செய்யப்படும் தமிழ்ப்பணி. இவையாவும் தமிழ்ப்பணிதான் தமிழாண்மையும் நேர்மையும் குறைந்தோரால் பெரும்பாலும் செய்யப்படும் தமிழ்ப்பணி.
தமிழும் நிலமும் பாழ்பட்டுக் கிடக்கின்றன. இந்நாள் அல்ல அந்நாள் முதற்கொண்டு காலகாலமாய்த் திட்டமிடப்பட்டுத் தமிழ்க கொலை நிகழ்கின்றது.

மொழி தமிழாய் இல்லை. இறை தமிழாய் இல்லை. கல்வி தமிழாய் இல்லை. பண்பும் தமிழாய் இல்லை பேச்சும் எழுத்தும் தமிழாய் இல்லை. ஆக்கமும் தமிழில் இல்லை. அழிவே உள்ளது.
அரசும் தமிழில் இல்லை. அரசர்களும் தமிழுக்கில்லை, செடியொன்று இருந்தால் களை ஆங்கு பத்தாம். பகையைப் போற்றி பகையடி வருடும் தமிழர் ஆயிரமாயிரம். குச்சி மிட்டாய்க்கும் குலத்தைக் காட்டிக் கொடுக்கும் தமிழர் ஆயிரமாயிரம்.
மூவாயிரமாண்டின் தமிழ் பேசுவான்! மூன்று சங்கங்களையும் மூச்சுவிடாமல் பேசுவான்! ஆனால் பகையின் செருப்பைத் தலையில் சுமப்பான்! அது தமிழ்தான் என்பான்.
இப்படியே இந்தச் சமுதாயம் தன்னை மறந்து தன் தேவையை மறந்து எத்தனை நாள் போகும்? போக முடியும்?
மறைமலையடிகளார், பாரதிதாசனார், பாவாணர், பொ¢யார், பெருஞ்சித்திரனார் போன்றோர் எத்தனை முறை தோன்றுவார்கள். இவர்கள் இத்தமிழகத்திற்கு தந்து போனவற்றை எத்தனை பேர் நடைமுறைப் படுத்துகிறார்கள்?
இவர்கள் யாவரையும் நாமறிவோம்! தமிழ்கூறும் நல்லுலகம் அறியும். ஆயினும் அன்னார் சொன்னவற்றை நாம் பயின்றும் பழக்கத்தில் கொண்டு வருவதில்தான் நாம் சோம்பிக் கிடக்கிறோம். அல்ல, அல்ல இன்னும் மாயைக்குள் கிடக்கிறோம்.
தமிழிலே களைகள். தமிழர்களிடையே பகைவரோடு களைகளும். தமிழர்களுக்கு இடையே களைகள். இறைவனுக்கும் தமிழனுக்கும் இடையே களைகள்.
தமிழுக்கு இருக்கும் இன்றைய சிக்கல்களை மேலோட்டமாக எதிர்ப்பதுவும் அலசுவதும், நுனிக்கிளையில் அமர்ந்து அடியை வெட்டுவது போன்றதாகும்.
இதோ நான் தமிழன்! தமிழெங்கள் உயிருக்கு நேர் என்று பேசுவதெல்லாம் போதாது. ஈராக்கிலே அமொ¢க்கா குண்டைப் போட்டால் அமொ¢க்கப் பொருள்களைப் புறக்கணிப்போம் என்று குரல்கள் உலகெங்கும் ஒலிக்கின்றன.
பி¡¢த்தானியப் பொருள்களை வாங்காதே, பயனபடுத்தாதே என்று காந்தியார் சொன்னபோதுதான் பி¡¢த்தானுக்கு மிகவும் உரைத்தது.
எங்கே அடிக்க வேண்டுமோ அங்கே அடித்தால்தான் அகலவேண்டியது அகலும். அதுபோல, தமிழுக்கும் தமிழருக்கும் வேதனை தருவது யாது ? யாவர் ?
மொழியிலே, எழுத்திலும் பேச்சிலும் புரளும் மொழிக்கலப்பு ஒரு வேதனை! இறைவனுக்கு இடையே திரைபோடும் அயனமொழி ஒரு வேதனை !

நாமும் தமிழிலேயே இறைப் பாடல்கள் பாடவேண்டும் என்று கதறுகிறோம் ! கேட்பா¡¢ல்லை ! பகைவர் கேட்கமாட்டார் !
ஏன் கேட்கமாட்டார் என்றால், நம்மிடம் தன்னொழுக்கம் இல்லை. நமது எழுத்துகளில் பகைமையைப் புழங்கவிட்டு விட்டு, இறைவனடியில் மட்டும் அதைச் சேர்க்காதே என்றால் பகைவர் விடுவாரா ?
எப்படி காந்தியார் பி¡¢த்தானியப் பொருள்களை வாங்காதீர் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லி வெற்றி கண்டாரோ, அதே பாங்கில்தான் மறைமலையாரும், பாரதிதாசனும், பெருஞ்சித்திரனாரும் - இன்னும் இவரைப் போன்று பலரும் எடுத்துச் சொன்னார்கள்.
தமிழ் எழுத்துகளில் பிறமொழி கலந்து எழுதுவது "மொழி ஊழல்" ஆகும்.
அந்த ஊழலை தமிழர் தவிர்த்து தமிழின் மானத்தையும் தன்மானத்தையும் காக்க §வ்ணடிய பொறுப்பு அனைவர்க்கும் உண்டு. அதுதான் தமிழ்ப்பணியும் கூட !
இந்த அடிப்படையை மறந்து செய்யும் எந்தத் தமிழ்ப் பணியும் தன்னொழுக்கம் இல்லாத தமிழ்ப் பணிதான் என்பதில் அய்யமில்லை.

நாக. இளங்கோவன் - சென்னை
நன்றி : அமீரகத் தமிழிணைய நண்பர்கள் ஆண்டுமலர் 2003

நேசமுடன நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)