Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மலேசிய தமிழ் இலக்கிய கருத்தரங்கு
#1
மலேசிய தமிழ் இலக்கிய கருத்தரங்கு
சென்னையில் நடைபெறுகிறது


சென்னை, டிச.9-

சென்னையில் மலேசிய தமிழ் இலக்கிய கருத்தரங்கு நடைபெறுகிறது.

மலேசிய தமிழ் இலக்கியம்

"மலேசிய தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் சென்னை `பென்ஸ் பார்க்' ஓட்டலில் கருத்தரங்கு நடக்கிறது. வருகிற சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த கருத்தரங்கு நடைபெறும்.

கவிஞர் வைரமுத்து, கருத் தரங்கை முன்னின்று நடத்துகிறார். "மலேசியத் தமிழ்ச் சமுதாய பின்புலமும் அதுபற்றிய எழுத்துக்களும்", "மலேசிய தமிழக்கவிதை இலக்கியம்", "மலேசியாவில் தமிழ் உரை நடை இலக்கியம்", "மலேசியாவில் கலைப்படைப்புகள்" ஆகிய தலைப்புகளில் மலேசிய படைப்பாளிகள் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்கிறார்கள்.

33 மலேசிய படைப்பாளிகள்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆலோசகர் ஆதி குமணன், மலேசியத் தமிழ் எழுத் தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன், முரசுநெடுமாறன், ரெ.கார்த்திகேசு உள்ளிட்ட 33 மலேசியப் படைப்பாளிகள் கலந்து கொள்கிறார்கள்.

முன்னாள் துணை வேந்தர் க.ப.அறவாணன் _ எழுத்தாளர் சிவசங்கரி _ நல்லி குப்புசாமி _ கவிஞர் அப்துல்ரகுமான் _ இந்திரா பார்த்தசாரதி _ நடிகர் பார்த்திபன் சென்னைத் தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர் ஏ.நடராசன் _ யு.எம். கண்ணன் _ காவ்யா சண்முக சுந்தரம் ஆகியோர் கருத்தரங்கில் பங்கு கொள்கிறார்கள்.

மாலை 6 மணிக்கு நிறைவு விழாவில் காவல்துறை முன்னாள் உயர் அதிகாரி ஸ்ரீபால் தலைமையில் "மலேசியத் தமிழ் இலக்கியம் _ ஓர்அறிமுகம்" என்ற ஆய்வு நூலை இயக்குனர் பாரதிராஜா வெளியிடுகிறார். கவிஞர் வைரமுத்து முதல் பிரதியை பெற்றுக் கொண்டு நிறைவுரை ஆற்றுகிறார்.

விருந்து

தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அன்று மாலை 4 மணிக்கு மலேசியத் தமிழ் எழுத் தாளர்களுக்கு அண்ணா அறிவா லயத்தில் தேநீர் விருந்து அளிக் கிறார். அன்றிரவு 8மணிக்கு தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் விருந்தளிக்கிறார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட வெற்றித் தமிழர் பேரவையைச் சார்ந்த ராஜசேகர், காதர் மைதீன், செல்லத்துரை, ராயபுரம் குண சேகரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Reply
#2
¾¸Åலுìகு நன்றி
Reply
#3
¾¸Åலுìகு நன்றிகள்.......
<b> </b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)