Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
இன்று இன்ரர்நெற் உலகில் எதற்கு எல்லோரும் பயப்படுகிறார்கள்? நிச்சயமாக வைரஸிற்குத்தான். வைரஸை அடுத்து எல்லோரும் பயப்படுவது Hackers மற்றும் Crackers ஆகியோர்களைப் பார்த்துதான்.
யார் இவர்கள்? அடுத்த வெப் தளங்களில் நுழைந்து அவற்றை நாசமாக்குபவர்களை Hackersகள் எனக் பத்திரிகைகளும், இன்ரர்நெற் உலகத்தினரும் அழைக்கிறார்கள். ஆனால் இப்படி அழைப்பது தவறு. Hackersகள் என அழைப்பதற்குப் பதில் அவர்களை Crackers என அழைக்க வேண்டும்.
Hackersகளுக்கும், Crackersகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் எல்லோரையும் Hackers என அழைப்பது வழக்கம். ஆனால் உண்மையில் இவர்களுக்கிடையே வேறுபாடுகள் உண்டு.
Hackers புத்திசாலிகளாகும். தங்கள் புத்திசாலித்தனத்தை நல்ல காரியங்களுக்காக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். உங்கள் கொம்ப்யூட்டரில் உள்ள ஒபரேடிங் சிஸ்டம், அப்ளிகேஷன்கள், ஹார்ட்வேர் உறுப்புகள் போன்றவை எப்படி செயல்படுகின்றன என்பதை Hackersகள் பரிசோதிப்பார்கள்.
ஏதாவது ஓட்டைகள் இருந்தால் அவற்றை பட்டியலிடுவார்கள். வைத்தியர் ஒருவர் உங்களது உடம்பை பரிசோதிப்பது போலத்தான் Hackersகளும் கொம்ப்யூட்டரைச் சோதிக்கிறார்கள்.
""எனது செர்வரில் யாரும் நுழைய முடியாது; அந்த அளவிற்கு பாதுகாப்பு அரணை அமைத்துள்ளேன்'' என நீங்கள் இறுமாப்பு கொண்டால், உடனே Hackersகள் அந்த அரணை உடைக்க முயல்வார்கள். அதில் அவர்கள் வெற்றி கண்டவுடன், உங்கள் அரண் எவ்வளவு பாதுகாப்பற்றது என்பதை உங்களுக்கு உணர்த்துவார்கள். Hackersகள் நுழைந்து விட்டார்களே, எங்கு தகராறு உள்ளது, ஓட்டை இருக்கிறது என்பதை நீங்கள் கண்டு பிடித்து அவற்றை சரி செய்ய ஆரம்பிப்பீர்கள்.
""வீட்டைச் சுற்றி 24 மணி நேரமும் காவல் நாய்கள் சுற்றுகின்றன, போதாக் குறைக்கு காவலாளிகளும் உள்ளனர்'' என ஒருவர் தலைக்கனத்துடன் கூறுகிறார் என வைத்துக் கொள்ளுவோம். அப்படிப்பட்ட வீட்டில் ஒருவன், காவலாளிகள் மற்றும் நாய்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு நுழைகிறான்.
ஆனால் வீட்டில் உள்ள எந்தப் பொருளையும் தூக்கிச் செல்லாமல், வீட்டு ஹாலில் ""நான் நுழைந்து விட்டேன்'' என்று காகிதத்தை ஒட்டிச் செல்லுகிறான் என வைத்துக் கொள்ளுங்கள். அவன்தான் Hackers. அவனுடைய நோக்கம் உங்கள் பொருளைக் களவாடுவது அல்ல; உங்கள் பலவீனத்தை உங்களுக்கு உணர்த்துவதே.
மேற்படி வீட்டில் மற்றொருவன் ரகசியமாக நுழைகிறான். வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களைத் திருடி விட்டு, வந்ததற்கான அடையாளம் எதுவுமே தெரியாமல் மறைந்து விடுகிறான் என வைத்துக் கொள்ளுங்கள். இவனுடைய நோக்கம் திருடுவதே. இவன்தான் Crackers.
வெப் தளங்களில் அத்துமீறி நுழைவது, பாஸ்வேர்டை திருடுவது, கிரெடிட் காட் எண்கள் போன்ற முக்கிய விவரங்களைத் திருடுவது, பக்கங்களை மாற்றுவது, வெப் பக்கங்களுள் சேற்றை வாரி வீசுவது போன்ற ரவுடிகளின் வேலைகளை Crackersகள் செய்கின்றனர்.
Hackers, Crackers ஆகியவற்றுக் கிடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து பத்திரிகைகளும், மற்றவர்களும் செயல்படுவது நல்லது. பல நிறுவனங்கள், தங்களுடைய கொம்ப்யூட்டர்களின் பாதுகாப்பு அரண்கள் எவ்வளவு உறுதியாக உள்ளன என்பதைப் பரிசோதிக்க Hackersகளை வேலைக்கு வைத்துள்ளார்கள் என்பதில் இருந்தே Hackersகளின் அருமை, பெருமைகளை நீங்கள் உணரலாம்.
computer world
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>