Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எம்மை நாமே தொலைக்கிறோமா? 1
#1
ஈழத்தமிழர்களின் வரலாற்று ஆதாரங்கள் பலவிதங்களால் இல்லது போயின
1. தமிழ் பௌத்தர்கள இருந்ததற்கான வரலாறு சிங்களவர் தமது என உரிமை கோரி அபகரித்துகொண்டனர்
2. இந்து/சைவ சமயம் சார் ஆதாரங்களான புராதன ஆலயங்கள் போர்த்துகேயர், ஒல்லாந்தரால அழிக்கப்பட்டு அம்மூலப்பொருட்கள் கோட்டைகள் கட்ட பயன் பட்டன.
அதற்கு இன்றும் உள்ள ஆதாரமாக திருகோணமலை கோட்டைசுவரில் உள்ள
முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை எனும் கற்வெட்டு.
3. போர் சூழலால் அழிக்கப்பட்டவை.
4. நாமெ அழித்தவை, அழித்துகொண்டிருப்பவை

இதில

நாமே அழித்தவை /அழித்துகொண்டிருப்பவை தான் வருத்ததிற்குரியதும் எமது இழி நிலையுமாகும்.


எம்மிடம் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டடங்கள் தற்போது இல்லதுவிட்டாலும் சில நூற்வருடங்களுக்கு முற்பட்ட கட்டடங்கள் வீடுகள் ஆங்காங்கே காணப்படுகிறன. அவற்றையும் நாம் புதுவீடு கட்டுகிறோம் என்று இடித்து அழித்துகொண்டிருக்கிறொம். அவைதான் எமது கடந்த வரலற்றை பேசப்போகிறன என்பதை மறந்து இன்று எமது வெளி நாட்டு பணமும், புதிதாக்கல் எனும் அவாவும் எமது தொன்மையை நாமே குழிதோண்டி புதைப்பதாக அமைகிறது. ஏற்கனவே பல நூறு வீடுகள் அழிக்கப்பட்டு விட்டது. எஞ்சிய சிலவும் விரைவில் அழிக்கப்பட்டு நவீன வீடுகள் கட்டப்பட்டு விடலாம்.
இன்று மேற்கு நாடுகளில் குறிப்பக நான் இருக்கும் நாட்டில் அவர்கள் தமது தொன்மையான கட்டிடங்களை பேண மேற்கொள்ளும் நடவடிக்கைகள் , அவர்களிடம் உள்ள விழிப்புணர்வு எமது மக்களிடமோ அல்லது அது சார் துறையினரிடமோ இல்லாதது வருத்ததிற்குரியது. இங்கு பழைய வீட்டை புதிதாக்க போகிறார்கள் என்றால் அதன் முகப்பை அப்படியே பேணுவதற்குரிய முன் ஏற்பாடுகள் செய்துவிட்டு எஞ்சிய பகுதியை இடித்து புதிதாக்குவார்கள்.

இது நான் இருக்கும் நாட்டில் உள்ளா 1600 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்ட கோட்டை?
இதை தற்போது புதுப்பிக்க முயற்சிகள் நடக்கிறன.

<img src='http://img347.imageshack.us/img347/479/bru57po1gw.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img347.imageshack.us/img347/5787/bru79zl3fd.jpg' border='0' alt='user posted image'>

நாமோ அடியோடு கிளறி எறிந்துவிடுகிறோம்.


<img src='http://img347.imageshack.us/img347/2315/jaf10048us.jpg' border='0' alt='user posted image'>



மேலே படத்தில் காட்டப்பட்ட வீடு பருத்திதுறையில் கைவிடப்பட்டு இடிந்துள்ள வீடு.
இதே போல் கொக்குவில் பொற்பதிவீதியிலும் இரண்டுவீடுகள் இடிந்துகொண்டிருக்கிறன.
நல்ல நிலையில் இன்றும் உள்ள வீடுகள் சிலவற்றை சுழிபுரப்பகுதியிலும், காரைநகர்வீதி சங்கானையிலும் கண்டிருக்கிறேன். வட்டுகோட்டைபகுதியிலும் சிலவீடுகள் உள்ளன. அவற்றையாவது பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு ஆவது பாதுகாத்து எதிர்காலச்சந்ததிக்கு கொடுத்திமானால் அதுவே பெரிய காரியம்.
இதில் முக்கிய பங்காற்றவேண்டியது புலம்பெயர் மக்களே. ஏன் எனில் இன்கிருந்து போகும் கட்டளைகளுக்கு அமையவே அங்கு இடிப்பதுவும் கட்டுவதும் பெரும்பாலும் நடைபெறுகிறது.

சாவகசேரி இந்துகல்லுரியிலும் பாடசாலை ஆரம்பித்தகால சுண்ணம்பு கட்டடம் ஒன்று இருந்து.அதை அவர்கள் புத்தாக்கம் செய்து பேணிவைத்திருப்பது மிகவும் நல்லவிடயம். அதே போல ஏனைய பாடசாலைகளும், தனியாரும் செய்தால் சிலநூறு வருடத்து வரலாற்றையாவது காப்பாற்றலாம்.

போரால் சிதைந்த பழையவீடு

<img src='http://img347.imageshack.us/img347/935/45a3me5bz.jpg' border='0' alt='user posted image'>

நாம் செய்வோமா?

யாழ்ப்பாண வீடுகளை பற்றி தெளிவாக விபரிக்கும் இணையபக்கம் இதோ
http://us.geocities.com/rmayooranathan/
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
நல்ல சிந்தனை குளம். யாராவது (பழைய வீட்டுச் சொந்தக்காரர்) இதைப் பார்த்துச் சிந்திக்கட்டும்.

!
Reply
#3
எங்கை உதுகளை எங்கடையாக்கள் சிந்திக்க போகினம் வீடுகள் மட்டுமல்ல பழையகால பாவனை பொருட்களாவதுஇப்ப இருக்குமா என்பது சந்தேகமே எனக்கு தெரிஞ்சு அவற்றை பாது காக்கும் ஒரு ஒழுங்கான அருங்காட்சியம் எண்டு கூட ஒண்டுமில்லை (இப்ப இருக்கோ தெரியாது)இப்ப ஊரிலை ஒரு பித்தளை முக்கு போணி எண்டா என்ணெண்டு தெரியுமோ தெரியாது
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#4
அந்த பருத்தித்துறையில் இடிந்துள்ள வீடு எவடத்தில் இருக்குது? எதற்கு கிட்டவாக இருக்குது? :roll: :?:
----------
Reply
#5
எங்களுக்கு ஏன் இவை...நாங்கள் தான் புதுமை விரும்பிகள் ஆச்சே... பழையன கழிந்து மாற்றான் புதுமை புகுத்தனுமில்லா...அதுக்கு உதுகள் தடை எல்லோ...! எங்களுக்குத்தான் சொந்தமா என்று எதுவும் இல்லையே... எப்படியோ மாறிட்டீப் போறம்.. நாகரிகம் என்று...உடையை விட்டிட்டம்...நாட்டை விட்டிட்டம்...உணவ விட்டிட்டம்..வெட்டியா செய்யுறதுகளுக்கு நியாயம் சொல்லுறமில்ல...அப்புறம் வெறும் கட்டடம் எதுக்கு..??! அது ஏன் எங்க எதிர்கால சந்ததிக்கு...அதுகளுக்கு ஏன் பாழடைஞ்ச வீடு...???! அதுகள் நாகரிக உச்சில்ல...சந்திரல கல்லெடுத்து வீடு என்ன ஒரு கிரகமே கட்டி வாழுங்கள் தெரியுமோ...இப்ப நாசா கூட ஒரு ரகசிய ஒப்பந்தம் எழுதி இருக்கிறம்...அங்கையும் அசைலம் கொடுக்கிறதெண்டா..எங்களட்ட முதலில சொல்லிடுங்கோ என்று...றூட் பாத்து வைக்கத்தான்...! அங்கையும் புதுமை பேசனுமில்ல... எங்களுக்க யார் யார் வித்தியாசம் என்று காட்டனுமில்ல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
<b>எம்மை நாமே தொலைக்கிறோமா? 2</b>

முதற்பதிவில் எமது பழமையான வீடுகள் இழக்கப்பட்டு கொண்டிருப்பதைப்பற்றி ஒரு சிறு பதிவு செய்திருந்தேன். இது எமது வளம் இழக்கப்படுவது பற்றிய ஒரு பதிவு.

மிகவும் தரமான கண்ணாடி மணல் படிவுகள் யாழ்குடா நாட்டின் வடமராட்சியின் வல்லிபுரக்கோவில் முதல் சுண்டிக்குளம்? வரை விரவிக்கிடக்கிறது. அதே போல சாவகச்சேரி முதல் பளைக்கு அப்பால் வரையான கடற்கரைபிரதேசம். {அவற்றைவிட முதல் ஒரு பதிவில் படம் காட்டிய பூநகரியின் மன்னித்தலை, கௌதாரிமுனைப்பிரதேசங்களிலும் விரவிக்கிடக்கிறது.}

1995 இல் இராணுவம் வசம் யாழ்குடா நாடு வந்தபின் யாழில் தொடங்கிய மீள் கட்டுமான வேலைகளும், போர் நிறுத்ததின் பின் மக்களால் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டுமான பணிகளும் இம் மணலின் அகழ்வை தீவிரப்படுத்தியது. 1995 காலப்பகுதியில் சாவகச்சேரி முதல் ஆனையிறவு வரையான கரையோரம் முழுமையும் இராணுவ வசம் இருந்த போது இராணுவத்தினருக்கு ஒரு தொகையை கொடுத்து எந்தவித திட்டமும் இன்றி மணல் அகழப்பட்டது. {அக்காலப்பகுதியில் சாதாரணமாக ஒரு உழவு இயந்திரத்தால 4 முறை மண் ஏற்றி இறக்க முடியும் என ஒரு பொது மதிப்பீடு மணல் மூலத்துக்கும் அது கொண்டு செல்லப்படும் தூரத்தையும் கொண்டு மட்டுமே,கட்டுபாடு அல்ல. அதை மீறி பணத்தின் மீதான ஆசையால் ஒரு நாளுக்கு 6 மூறை ஏற்ற முற்பட்டு உழவு இயந்திரங்கள் தெரு நீளம் உடைந்து நின்றதையும் காண முடிந்தது}.

மணல் அகழ்வோர் எந்தவித திட்டமும் இன்றி கடல் மட்டத்திற்கு கீழும் மணல் அகழ்ந்தால் மழை காலத்தில் கடல் பெருகும் போது நீர் இப்பகுதிக்குள் உள் நுளைந்தால் நிலம் உவராவதுடன் இப்பகுதி கடற்பகுதிக்குள் போய் விடும் என்றும் சொல்லப்பட்டது. இதற்கு ஆதாரமாக கச்சாய் துறைக்கு அணித்தக தெரியும் சிறு தீவு ஆரம்பத்தில் நிலத்துடன் சேர்ந்தே இருந்ததாகவும், மணல் அகழ்வால் அது தனித்தீவகிவிட்டதாகவும் பத்திரிகையில் வசித்திருக்கிறேன்.

<b>இவை முகமாலையிலோ அல்லது வேறெங்குமோ காத்திருக்கும் பார ஊர்திகள் (லொறி) அல்ல வல்லிபுரக்கோவில் பகுதியில் மணல் அகழ்வுக்காக காத்திருகின்றன.</b>


<img src='http://img361.imageshack.us/img361/5415/jaf10014vf.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img352.imageshack.us/img352/9236/jaf10029aa.jpg' border='0' alt='user posted image'>


அதே காலப்பகுதியில் வல்லிபுரக்கோவில் பகுதியிலும் மணல் அகழ்வு எந்தவித திட்டமும் அற்ற முறையில்மேற்கொள்ளப்பட்டது.

போர் நிறுத்த சூழலின் பின் இவை அனைத்தும் ஒரு ஒழுங்கமைப்பிற்கு கீழ் கொண்டு வரப்பட்டு மணல் அகழ்வு நடைபெற்றலும் கண்ணாடி தயாரிப்பின் மூலப்பொருள இல்லது போகும் சூழல்.
அதற்கு மேலதிகமாக சூழலியல் பாதிப்புகள்.

நான் யாழில் நின்ற போது ஒரு சம்பவம் நடைபெற்றது ஒரு லொறி ஒன்று மணல் இல்லது மணல் ஏற்றும் இடத்தில் இருந்து வந்த போது பொலிசார் மணல் லோறி என சந்தேகபட்டு மறித்தபோது பொலிசுக்கு விளையாட்டு காட்ட வேகமாக லொறியை ஓட்டி சென்றுள்ளனர். அந்த ஒழுங்கைகள் மிக சிறியவை. இதன் போது எதிரில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவருடன் மோதியதில் ஒருவர் அந்த இடத்திலேயே பலியானார். மற்றவர் மிக கடுமையான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.



உடனடியாக ஒரு கேள்வி எழுவது தவிர்க்கமுடியாதது
அதாவது அப்போ கட்டிட தெவைக்குரிய மணலை எங்கு பெறுவது என்பதே அது

1. திட்டமிடல் இல்லது கடல் மட்டத்துக்கு கீழ் மணல் அகழ்வதை நிறுத்தினாலே சூழலியல் பாதிப்புக்களில் இருந்து தப்பமுடியும்
2. ஆற்று மணல் அல்லது வேறு மனல் மூலங்களில் இருந்து யாழ் குடாவிற்கு மணல் கொண்டு வந்து கட்டுமான பணிகள் மேற்கொள்வதை ஊக்குவித்தல்.

இது சாத்தியமற்றது என சொல்லமுடியாது. எமது மரவளத்தை காக்க்க பிற இடங்களில் இருந்து மரம் கொண்டுவருவது ஊக்குவிக்கப்பட்டது போல் இதையும் செய்யமுடியும்.

அதே போலவே கடற்கரையோரம் உள்ள சுண்ணகற்பாறைகள் கட்டிட தேவைக்கக வகை தொகையின்றி அழிக்கப்படுவதும்
இதுவும் பின்னர் கடல் உட்புகலுக்கும் நிலத்தடி நீர்வளம் உப்பாகவும் காலக அமையலாம்.

நாம் கவனத்தில் எடுப்போமா?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#7
vennila Wrote:அந்த பருத்தித்துறையில் இடிந்துள்ள வீடு எவடத்தில் இருக்குது? எதற்கு கிட்டவாக இருக்குது? :roll: :?:

பருத்தி துறை நகருக்கு அண்மையில் தான், வீதி ஞாபகம் இல்லை.

மற்றும் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#8
நீங்க சொல்வது சரிதான் அண்ணா. அதோட காங்கேசந்துறைப் பக்கம் சுண்ணப்பாறைகளை வெட்டி எடுத்து சீமெந்து செய்தார்கள்... தொழிற்ச்சாலை வேலை செய்யவில்லை ஆதலால் நிறுத்தப் பட்டிருந்தாலும்.. திரும்பவும் ஆரம்பிப்பதற்கான சாத்தியங்கள் உண்டு..

அதோட திருமலை புல்மோட்டைப் பகுதில கடற்கரையை கிண்டி இரும்புமண் (இல்மனைற்) சீன நிறுவனம் ராணுவப் பாதுகாப்போட அள்ளிக்கொண்டு போகின்றது.. அதனால் மேலதிக பாதிப்புக்களும் உண்டு... மிகவும் வேதனையான விடயம்தான்..
::
Reply
#9
சிந்திக்கவேண்டிய கட்டுரை
,
,
Reply
#10
சிந்தித்தாலும் வெளிநாட்டுபணம் தொகையாக போகும் போது எல்லாவற்றையுமே இடித்து தள்ளி புதிதாக கட்டித்தள்ள நினைக்கிறார்கள்.
அந்த சிதைந்த வீடுகளின் உரிமையாளர்கள் தனிப்பட்டவர்கள் என்பதால் யாரும் தடுக்கமுடியாதுள்ளது.
Reply
#11
எரியிர வீட்டில எதையும் எடுக்கலாம் என்று சிந்திக்கும் மக்கள் பலர் எம்மில் இருக்கிறார்கள். அவையளுக்கு கடல்தண்ணி வந்தால் என்ன, மணல் போனால் என்ன, தான் சுகமாய் இருந்தால் சரி என்ற மனப்பான்மையோடு தான் வாழ்கிறார்கள். உண்மையில் இது வேதனையான விடயம்.
! ?
'' .. ?
! ?.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)