Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி?
#1
<b>இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி? </b>

இலங்கையரை எவ்வாறு இனங்காண்பது என்ற தலைப்புடன் இலங்கையர் அல்லாதவருக்கு முன் செலுத்த வேண்டாம் என்ற வேண்டுகோளோட எனக்கு வந்த முன்செலுத்தப்பட்ட மடல் (இந்தத் சொல்லுக்காக சிகிரிக்கு நன்றி) ஒன்றிலிருந்து...
இலங்கையர்கள்:

1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் காலி பண்ணிடுவார்கள்.
2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர், அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள்.
3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம் வர எடுப்பார்கள்.
4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள்.
5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள்.
6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்து வைப்பார்கள்.
7)குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிளாஸ்ரிக் பாத்திரம் ஒன்று இருக்கும்.
8)தன் பிள்ளைகளுக்கு ஒரே உச்சரிப்போட(rhythm) கூடின மாதிரியான பெயர்களை வைப்பார்கள். (உதாரணத்துக்கு சுரேஸ், ரமேஷ், தினேஸ்)
9)பிள்ளைகளினது உண்மையான பெயர்களுக்கு சம்பந்தமில்லாமல் செல்லப் பெயர் ஒன்று வைத்துக் கூப்பிடுவார்கள்.
10) "இங்கு உணவு, நீர் அனுமதிக்கப்படாது" என்று பெயர்ப்பலகை மாட்டப்பட்ட இடங்களுக்கும் நொறுக்குத் தீனிகளை எடுத்துச் செல்வார்கள்.
11)வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போது வாசலில் வைத்து மணித்தியாலக் கணக்காக கதைத்துக் கொண்டிருப்பார்கள்.
12)காரில் எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றி செல்வார்.
13)புதிதாக வாங்கிய பொருட்களை (remote control, VCR, carpet or new couch.) பிளாஸ்ரிக் கவரால மூடி கவனமாக வைத்திருப்பார்கள்.
14)தன் பிள்ளைகளிடம் நண்பர்கள் சொல்வதைக் கவனத்திற் கொள்ள வேண்டாமென்று சொல்லும் பெற்றோர்கள்; மற்ற "Uncles And Aunties" என்ன நினைப்பார்களோ என்பதற்காக பிள்ளைகளைச் சில விஷயங்களைச் செய்ய விட மாட்டார்கள். ;
15) Rice cooker வைத்திருப்பது முக்கியமானது.
16)நாப்பது வயதானால் கூட தங்கள் பெற்றோருடனேயே வசிப்பார்கள். பெற்றோரும் அதையே விரும்புவார்கள்.
17)தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது என்பதைத் தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத் தம் கடமையாக நினைப்பார்கள்.
18)தொலைதூர அழைப்புகளை இரவு 9 மணிக்கப் பிறகே (Off-peak hours)
எடுப்பார்கள்.
19)பெற்றோருடன் வீட்டில் இல்லாமல் வேறு இடத்தில் வசித்தால், பெற்றோர் தொலைபேசியில் கதைக்கும் போது அது நடுச்சாமமாக இருந்தாலும் சாப்பிட்டாயிற்றா எனக் கேட்க மறக்க மாட்டார்கள்.
20)இலங்கையர் ஒருத்தரை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால் எந்த ஒரு வகையிலோ அவர்கள் தம் உறவினர் என கண்டுபிடித்து விடுவார்கள்.
21)வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொலைபேசியில் பேசும் பெற்றோர்கள் அவர்களுக்கு கேட்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்திக் கதைப்பார்கள்.
22)சோபாவில் அழுக்குப்படாமல் இருப்பதற்கு பெட்சீற்ஸ் போட்டு வைத்திருப்பார்கள்.. அதே நேரம் அவர்களது பெட்ல இருக்கிற சீட்ல (sheet) தண்ணீர் பட்டு மாதக்கணக்காக இருக்கும்.
23)திருமண வைபவத்தில் 600 பேருக்குக் குறைவாக வந்திருந்தால் சங்கடமாக உணர்வார்கள்.
24)திருமணப் பேச்சின் போது தங்கள் பெண் உண்மையாக எப்படி இருந்தாலும் மெல்லிய அழகான பெண் என்றே சொல்லுவார்கள்
25)எப்பொழுதுமே மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைப்பதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கே போகிறார்கள் என்பதை அறிவதற்கு விருப்பம் காட்டுவார்கள்.
இதை வாசிக்கும் உங்களுக்கு இதில் பல பொருந்துகிறதா? அப்படியானால் நீங்கள் ஒரு இலங்கையர் ( + தமிழரென்று சொல்லலாமெனவே நான் நினைக்கிறேன்) என்பதில் சந்தேகமே இல்லை.

http://paavaioruthi.blogspot.com/2005/10/b...og-post_30.html
Reply
#2
அடடடா அசதிடீங்க போங்க
ஏன் இது எல்லாம் உங்க வீட்டுச்
சமாச்சாரமா??
என் ஆவலைப் பார்த்தீர்களா??
நானும் தமிழிச்சி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

...!
Reply
#3
Quote:நானும் தமிழிச்சி
இதைப்பத்தி ஒன்றும் கேக்காட்டா நான் தமிழச்சி இல்லாமல் போயிடுவனா?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
இணைப்பிற்கு நன்றி சண்முகி. அதுசரி உங்களுக்கு இதில் எத்தனை பொருந்தியது என்று சொல்லவேயில்லையே??
Reply
#5
சீ சீ தமிழினி நீங்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் மகா தமிழிச்சி தானுங்க!!! அதில் சந்தேகமே வேண்டாம்.
Reply
#6
அப்ப பாவையின் கருத்துப்படி நீங்களும் தமிழன் என்றியளா வசம்பண்ணா. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
இது இலங்கைத்தமிழருக்கு மட்டும் இல்லை. எல்லாத்தமிழருக்குமே பொருந்தும்.
Reply
#8
பிறப்பால் நாங்கள் எல்லோரும் தமிழர் தானே. அதாவது பாவையின் கருத்து வருவதற்கு முன்னமே நாங்கள் தமிழர் தானே. பாவையின் கருத்தோடு ஒத்துப் போகாதவர்கள் எப்படி தமிழர்கள் இல்லாமல் போய்விட முடியும்.
Reply
#9
பாவம் பாவை
கொழும்புக்கு வந்து உலகமே இதுதான் என்று நினைச்சிருக்கு.........
வெளியுலகில மற்ற இனத்தவரோட சேர்ந்து பார்த்தா திருந்த வாய்ப்புண்டு......

கிணத்து ..............
என்று யாரோ சொல்றது கேக்குது.

சத்தமாச் சொல்லுங்கப்பா............கேக்கல்ல
Reply
#10
சண்முகி உந்த லொல்லுத் தானே வேணாங்கிறது. தலையங்கம் என்ன எழுதியிருக்குறீங்க. :roll: :oops:
Reply
#11
அட இங்கை பாரட SHANMUHI
அக்காட LOLA
Reply
#12
பாவை நகைச்சுவையாக எழுதியிருக்காங்க போல அனேக தமிழர்களுக்க இத்தனை குணம் இருக்கா இல்லையா?? இதில ஒன்றாவது இல்லாமல் விடாது. இது பொதுவான குணங்கள் தானே. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
உண்மையான குணங்கள் தான். நகைச்சுவை என்றாலும் நறுக்காக இருக்கின்றது... பல தகவல்கள் வாசி;க்கும் போது ஆமா அப்படித் தானே என்று ஒரு ஒம்; போட வைக்குது.. எங்கு வாழ்ந்தாலும் இது தமிழரின் பண்பாட்டுக் குணங்கள்

Reply
#14
அதற்காக இலங்கை தமிழர் என்று குறிப்பது சரியா? பொதுவாக தமிழர் என்று சொல்லி இருக்கலாமே, அதற்காக மற்ற நாட்டவரிடம் இந்த பண்பு இல்லையா? இதை விட அதிகமாகவே இருக்கு, தமிழனை பிரிச்சு போடவேண்டுமென்றே கனசனம் திரியுது, அது போடப்பட்ட தளம் தமிழ்மணம், அங்கு இந்திய தமிழர் ஏராளம், பொதுவாபோட்டிருந்தா பின்னிபெடல் எடுத்திருப்பாங்க, ஏமந்தவன் இலங்கைத்தமிழன்தானே.
.

.
Reply
#15
ஆமா பிருந்தன்... இது இலங்கைத்தமிழருக்காக மட்டும் இல்லை. எல்லா மனிதர்களி;டமும் இந்த குணங்கள் இருக்கின்றது... நீங்கள் சொன்னமாதிரி ஏமாந்தவன் இலங்கைத் தமிழன் தான்

Reply
#16
இலங்கைத்தழிழர் என்று உரிமையோட சொல்லியிருக்காங்க போல. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#17
அண்மையில் ஒரு இடத்தில் ஆசிய இனத்தவர்கள் கூடி இருக்கும் போது தங்களுக்குள் பகிர்ந்து கொண்டது காதில் விழுந்தது... இலங்கையர்கள்...மீசை வைத்திருப்பார்களாம்..அதுவும் தும்புக்கட்டை மீசை...! சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்..நாங்களும் சேர்ந்து சிரித்ததுதான்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
kuruvikal Wrote:அண்மையில் ஒரு இடத்தில் ஆசிய இனத்தவர்கள் கூடி இருக்கும் போது தங்களுக்குள் பகிர்ந்து கொண்டது காதில் விழுந்தது... இலங்கையர்கள்...மீசை வைத்திருப்பார்களாம்..அதுவும் தும்புக்கட்டை மீசை...! சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்..நாங்களும் சேர்ந்து சிரித்ததுதான்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன மீசை இல்லாத ஆக்கள் எரிச்சல்ல நக்கல் பண்ணியிருக்கிறமாதிரிக்கிடக்கு. இதில சிரிப்பு வேறையா.:wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#19
tamilini Wrote:
kuruvikal Wrote:அண்மையில் ஒரு இடத்தில் ஆசிய இனத்தவர்கள் கூடி இருக்கும் போது தங்களுக்குள் பகிர்ந்து கொண்டது காதில் விழுந்தது... இலங்கையர்கள்...மீசை வைத்திருப்பார்களாம்..அதுவும் தும்புக்கட்டை மீசை...! சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்..நாங்களும் சேர்ந்து சிரித்ததுதான்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன மீசை இல்லாத ஆக்கள் எரிச்சல்ல நக்கல் பண்ணியிருக்கிறமாதிரிக்கிடக்கு. இதில சிரிப்பு வேறையா.:wink:

ஆமா..அது பெரிய பொக்கிசம்...அவங்களுக்கு எரிச்சல்..! நக்கல் அடிக்கிறாங்கள்..நிஜமாவே..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
என்ன இப்படிச்சொன்னா எப்படி கறுப்புத்தமிழனுக்கு மீசை தானே பொக்கிசம்
:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)