Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா?
#1
[size=14]<b>பரதநாட்டியத்தை வடமொழியில் பரதமுனிவர் இயற்றினாரா? அல்லது அது தமிழரின் நாட்டியக்கலையா?</b>

தமிழ்நாட்டைப் போலல்லாது ஈழத்தில் பரதநாட்டியம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரிதும், மேட்டுக் குடியினரதும் சொத்தல்ல. ஈழத்தமிழர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்குப் பரதநாட்டியம் கற்பித்துப் பெரும் பணச்செலவில் அரங்கேற்றம் செய்விக்கிறார்கள். அதே வேளையில் பரதநாட்டிய அரங்கேற்றத்தன்று வெளியிடும் அரங்கேற்ற மலர்களில் பரதநாட்டியம் பரதமுனிவரால் வடமொழியில் எழுதப்பட்டதாகவும், பரத என்ற சொல்லுக்குப் பவம், நயம், தாளம் என்று வியாக்கியான்ம் கொடுப்பது மட்டுமல்லாமல், அரங்கேற்றத்தைக் காணவும், தொடக்கி வைக்கவும் வரும் வேற்று இன மக்களுக்கும் பிரமுகர்களுக்கும் அதையே கூறுகிறார்கள். அவர்களும் சமஸ்கிருத மொழியில் பரதமுனிவரால் இயற்றப்பட்ட நாட்டிய சாத்திரத்தைத் தான் தமிழர்கள் இரவல் வாங்கினார்கள் என்று நினைத்துக் கொண்டு, தமிழரின் தமிழ் நாட்டிய விழாவுக்கு வந்து சமஸ்கிருதத்தின் புகழை எண்ணிக் கொண்டும் போகிறார்கள்.

<b>பரதநாட்டியத்தின் (சதிராட்டம்) உயிரும், வேர்களும் தமிழரின் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் ஆழப் பதிந்திருக்க நாமே பரதநாட்டியத்தை நாங்கள்,தமிழர்கள் இரவல் வாங்கியதாகக் கூறுவதன் அறியாமையை என்னவென்பது.</b> சிலப்பதிகாரத்திலேயே தமிழரின் நாட்டியக்கலையைப் பற்றி விளக்கமாக உள்ளது. மாதவியின் அரங்கேற்றத்தை விவரிக்கும் இளங்கோவடிகள், ஆட்ட வகைகள், உடையலங்காரம், ஒவ்வொரு வகையான ஆட்டத்திற்கும், தேவையான் மேடையின் அளவு அலங்காரத்தைக் கூட விவரிக்கிறார். தமிழரின் பண்டைக்கால நாட்டிய நன்னூல் தமிழெதிரிகளால் அழிக்கப் பட்டு விட்டது.

<b>உண்மையில் பரதநாட்டியம் என்பது 20ம் நூற்றாண்டில் தமிழரின் கலைவடிவமாகிய சதிருக்குப் புத்துயிரும், புதுவடிவமும் கொடுக்கப்பட்ட பின் இணைக்கப் பட்ட புதிய பெயர்.</b> தமிழரின் நாட்டியக் கலையான சதிர் அல்லது பரதநாட்டியத்துக்கும் பரதமுனிவருக்கும், சமஸ்கிருதத்துக்கும் எள்ளளவும் தொடர்பும் கிடையாது. என்று தான் நாங்கள் தமிழர்கள் எங்கள் தலையில் நாங்களே மண்வாரிப் போடுவதை நிறுத்துவோம் என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
#2
<b>திருத்தம்;</b> மன்னிக்கவும், என்னால் இப்பொழுது திருத்தம்(edit) செய்யமுடியாது.

தமிழ்நாட்டைப் <b>போன்று</b> ஈழத்தில் பரதநாட்டியம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரிதும், மேட்டுக் குடியினரதும் சொத்தல்ல
#3
அவ்வாறே கர்நாடக இசை என்பதும் கல்+நாடு இசை என்பது தான் இணைந்து அவ்வாறு மாறியதாகக் கூறுவார்கள். மற்றவர்கள் எல்லோரும் பிறருக்கு உரித்தானதைக் கூட உரிமை கோருவார்கள். ஆனால் தன்னுடையதைக் கூட தமிழன் கண்டு கொள்ளமாட்டான் என்பது வேதனை!
[size=14] ' '
#4
அரூரன் சொன்ன கருத்தினையே சிகரம் தொலைக்காட்சியில் புத்தம் புதுகாலை என்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் தேவி பத்திரிகையின் ஆசிரியர்,அழகாக விளங்கப்படுத்திச் சொன்னார்
,
,
#5
பாரதநாட்டியம் கற்கும் போது எல்லா சொற்களுக்கும் தமிழில் அர்த்தம் எழுதி தான் படித்திருக்கின்றோம். அது தமிழர்களின் பராம்பாரிய கலை என்றால் நிச்சயம் எல்லா சொற்களும் பாடல்களும் தமிழில் அல்லவா இருந்திருக்க வேணும்?...

#6
[size=14]ரமா, நீங்கள் சொல்வது சரி, தமிழரின் பரதநாட்டியம் அல்லது சதிராட்டம் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகச் சமஸ்கிருதமயமாக்கப் பட்டு விட்டது.

சோழர் காலத்தில் தேவ அடியார்கள் அல்லது தேவதாசிகள் எனப்படும் பெண்கள் சைவசமயத்துக்குத் தொணடு செய்வதற்குத் தங்களை அர்ப்பணித்தவர்களாக இருந்தார்கள். இவர்கள் சைவ சமய நெறிகளிலும்,ஆடல், பாடல், ஓவியங்கள் வரைவதிலும் வல்லவர்களாகத் திகழ்ந்ததோடு மக்களின் நன் மதிப்பைப் பெற்றவர்களாக இருந்தார்கள். இவர்கள் இன்றைய கிறிஸ்தவ சகோதரிகள் போலவும், புத்தபிக்குணிகள் போலவும், தமிழ்நாட்டுக் கோயில்களில் தொண்டாற்றினார்கள்.

சோழரின் வீழ்ச்சிக்குப் பின்பு பிறமதத்தவர்களின் படையெடுப்பினால் ஆலயங்கள் சூறையாடப்பட்டு அழிக்கப் பட்டன. அவர்களும் துன்புறுத்தப்பட்டும், ஆதரவற்றும் அந்த தேவ அடியார்கள், 'தேவடியாள்'களாக்கப் பட்டார்கள். அவர்களால் சைவாலயங்களில் ஆடப் பெற்ற சதிராட்டமும் கீழ்த்தரமானதாகக் கருதப்பட்டது. ஒரு பழந்தமிழ்க்கலை வீழ்ச்சியுற்றது. 19ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சதிர் என்றாலே விபச்சாரிகளின் ஆட்டம் என்ற நிலையில் கருதப்பட்டது.

இந்த நிலையில் தான் 19 நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சாவூர் சகோதரர்கள் பொன்னையா, சின்னையா, வடிவேலு ஆகியோரும் அவர்களைத் தொடர்ந்து கிருஸ்ணையர், ருக்குமணிதேவி அருண்டேல், மீனாட்சி சுந்தரம்பிள்ளை, பாலசரஸ்வதி போன்ற பலர் தமிழரின் சதிராட்டத்துக்குப் புது வடிவமும், புத்துயிரும் கொடுத்தார்கள். <b>சதிராட்டத்துக்கு திரு.கிருஸ்ணையர் அவர்கள் 1930 இல் பரதநாட்டியம் என்று பெயர் கொடுத்தார்.</b> பரதநாட்டியத்தின் வளர்ச்சியில் திருமணி. ருக்மணிதேவி அருண்டேலினதும், கலாசேத்திரத்தினதும் பங்களிப்பு அளப்பிட முடியாதது. அதே வேளையில் பரதநாட்டியத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் மேலோங்கத் தொடங்கியது. அதனால் அவர்கள் பரதநாட்டியத்தைச் சமஸ்கிருதப்படுத்தினார்கள். அதனால் பரத நாட்டியத்தின் தமிழ் வேர்கள் மறைக்கப் பட்டன, நாங்களும் இழிச்ச வாய்த் தமிழர் அதை ஏற்றுக் கொண்டோம்.

பரத( சதிர்) நாட்டியத்தில் அவர்களால் ஏற்படுத்தப் பட்ட மாற்றங்களெல்லாம் நடை உடையலங்காரம், பல்வேறு விதமான பாடல்களில் மட்டும் தான். அடிப்படை நாட்டிய நுட்பத்தில் எந்த விதமாற்றமும் ஏற்படுத்தவில்லை.இதே பரதநாட்டியத்துக்கு சதிராட்டம் அல்லது தேவராட்டம் என்ற பெயரும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

<b>பரதநாட்டியம் அல்லது சதிரின் வேர்கள் ஆழமாக தமிழரின் பண்பாட்டிலும், வரலாற்றிலும் பின்னிப் பிணைந்திருக்கும் போது, எப்படி இதன் தமிழ்த் தொடர்பு மறைக்கப் பட்டது?</b> முதலில் இந்தப் பழந்தமிழரின் நாட்டியக் கலைக்கு ஒரு புதுப் பெயர் கொடுக்கப்பட்டது (பரதநாட்டியம்),அதைத் தொடர்ந்து இந்தப் புதுப் பெயருக்கு ஒரு நவீன விளக்கம் (பவ, ராக, தாளம்) அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தப் புதிய பெயருக்கு ஒத்த பெயருள்ளவராகவிருந்த ஒரு பரதமுனி என்ற ஒருவரை, இந்த தமிழரின் நாட்டியதுக்குத் தொடர்பு படுத்தினார்கள், எல்லாவற்றையும் கலந்து ஒரு அழகான் இதிகாசக் கதையைக் கட்டி விட்டார்கள்.இதைத் தொடர்ந்து, மீண்டும், மீண்டும் எல்லா இடத்திலும் கூறினார்கள், அது உண்மையாக எங்களில் பலரால் ஒப்புக் கொள்ளப் ப்ட்டு விட்டது.

இந்தக் கட்டுகதையை, நம்பி அதை நாங்களே திருப்பிச் சொல்லு முன்பு நாம் தமிழர் இந்தக் கதையைப் பற்றி சிந்திக்க வேண்டும், என்ன நோக்கத்தில் தமிழரின் நாட்டியக் கலைக்கு இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் இது தமிழருக்கே தமிழரின் பரத(சதிர்) நாட்டியத்தின் தமிழ்த் தொடர்பில் சந்தேகப்பட வைக்கிறது, பரத நாட்டியத்தின் வேர்கள் தமிழரின் கலாச்சாரத்திலும், வரலாற்றிலுமுள்ளதென்பதை மறுத்து, தமிழர்கள் பரதநாட்டியத்தை இரவல் வாங்கியதாகக் காட்டுகிறது. இனிமேலாவது, நாங்கள் இலங்கைத் தமிழர்கள் பரதநாட்டியத்தை மீண்டும், முழுவதும் தமிழாக்க முயற்சிக்க வேண்டும்.
#7
தகவலுக்கு நன்றி அரூரன்
எனக்கும் ரமாவின் சந்தேகமே.
<b> .. .. !!</b>
#8
தகவலுக்கு நன்றி ஆரூரன்,
பரத நாட்டியம் இன்று யாழ் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்திலேயே ஒரு பாடமாக இருக்கிறது,தமிழ் நாட்டிலேயும் அப்படித் தான். நீங்கள் சொல்வதைப் போல் இதன் அடி தமிழரினது ஆனால் ஏன் இதைப் பற்றி ஒரு ஆய்வும் மேற்கொள்ளப் படவில்லை? ஒரு ஆய்வின் மூலம் ஆதரங்களைக் கண்டெடுத்து ஏன் சரித்திரப் பிழைகள் சீர் செய்யப் படவில்லை.அல்லது அவ்வாறான ஆய்வுகள் எதாவது நடந்துள்ளனவா?
#9
பரதநாட்டியம் பற்றி 1998 ஒரு தகவல் கோவை( லெக்சிக்கோன்) யில் படித்தேன். அதில் பரதநாட்டியம் தமிழ்நாட்டில்த்தான் இருப்பதாகவும். தமிழர்களே பெரும்பாலும் பயிலுகின்றார்களென்றும் அதில் இருந்தது.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
#10
ஆருணன் "கிருஷ்ணதாசி" என்றொரு தொடர் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறையபேரின் மனதை ஆக்கிரமித்திருந்தது.அதிலும் கிருஷ்ணாவை(நடனத்தில் சிறந்து விளங்கிய பெண்) அவான்ர அம்மாவே தாசியாக இருக்கச் சொல்லுவா.

றமாக்கா ரசிகை யின் சந்தேகம்தான் எனக்கும் இருந்தது.
மறக்கமுடியுமா<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பாடமாக்க போனால் முழங்காலுக்கு கொட்டன் பறந்து வரும்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
#11
Snegethy Wrote:ஆருணன் "கிருஷ்ணதாசி" என்றொரு தொடர் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறையபேரின் மனதை ஆக்கிரமித்திருந்தது.அதிலும் கிருஷ்ணாவை(நடனத்தில் சிறந்து விளங்கிய பெண்) அவான்ர அம்மாவே தாசியாக இருக்கச் சொல்லுவா.

றமாக்கா ரசிகை யின் சந்தேகம்தான் எனக்கும் இருந்தது.
மறக்கமுடியுமா<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பாடமாக்க போனால் முழங்காலுக்கு கொட்டன் பறந்து வரும்.

அங்கிகம் புவனம் யாஸ்டா என்று எல்லாம் படித்த ஞாபகம். ஆமாம் நடனத்தின் நாயகனே சிவபெருமான் என்று தான் படித்த ஞாபகம்.. அப்போ நாட்டியக்கலையும் பழமை வாய்ந்தது தானே. :roll:

#12
ஆமா றமாக்கா "ஆங்கிகம் புவனம்.."<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

என்ர எல்லாம் நோட்ஸ்லயும் வடிவா படங்களோட உருப்படியா இருந்தது என்ர டான்ஸ் நோட்ஸ்தான் இப்ப அதை மிஸ் பண்றன்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஆனந்த நடமாடுவர்....மற்றது கண்ணனே உனை எண்ணியே இந்த கீர்த்தனைகள் எல்லாம் தமிழ்ல தானே இருந்தது :roll:
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
#13
Snegethy Wrote:ஆமா றமாக்கா "ஆங்கிகம் புவனம்.."<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

என்ர எல்லாம் நோட்ஸ்லயும் வடிவா படங்களோட உருப்படியா இருந்தது என்ர டான்ஸ் நோட்ஸ்தான் இப்ப அதை மிஸ் பண்றன்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஆனந்த நடமாடுவர்....மற்றது கண்ணனே உனை எண்ணியே இந்த கீர்த்தனைகள் எல்லாம் தமிழ்ல தானே இருந்தது :roll:

ம்ம கீர்த்தனைகள் ஒரளவுக்கு பாரவாய் இல்லை ஆனால் ஆலரிப்பு யாதிஸ்வரம் தில்லானா என்ன சொல்கிறார்கள் என்றே விளங்குவதில்லை? ஏதோ ரீச்சார் சொல்லித்தர அதை அப்படியே செய்தது தான்.

#14
அப்ப கவுத்துவம் விளங்கினதோ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பதஞ்சலி முனிவர் மற்றவர் யார்? வியாக்கிரபாத முனிவர்????????
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
#15
Snegethy Wrote:அப்ப கவுத்துவம் விளங்கினதோ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பதஞ்சலி முனிவர் மற்றவர் யார்? வியாக்கிரபாத முனிவர்????????

சிநேகிதி இவர்கள் எல்லோரும் யாதிஸ்வரத்தில் எல்லோ வருகினம்... கவுத்தம் என்றால் எப்படித் தொடங்கும் என்று அந்த பாடல் வரிகளை சொல்லுங்கள்... ஞாபகம் வருகுதில்லை...

#16
அவையேன் யதீஸ்வரத்தில வந்தவை :roll:

தீம் தீம்...தாண்டவ முனியன சகல சுராசுர....
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
#17
Snegethy Wrote:அவையேன் யதீஸ்வரத்தில வந்தவை :roll:

தீம் தீம்...தாண்டவ முனியன சகல சுராசுர....

சட வென முனியென சகல சுரசுதா
சண்முக பாத கிங்கிணி யாம் யாம்

சரி சரி விளங்கிட்டுது...

#18
சட வென முனியென சகல சுரசுதா
சண்முக பாத கிங்கிணி யாம் யாம்

ஜன ஜன ஜன ஜன நூபுர லயகதி
கண கண கண கண விதிஹரி சேவித<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
#19
Snegethy Wrote:சட வென முனியென சகல சுரசுதா
சண்முக பாத கிங்கிணி யாம் யாம்

ஜன ஜன ஜன ஜன நூபுர லயகதி
கண கண கண கண விதிஹரி சேவித<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

தக்க தோம் தரிக்கிட தோம்
தாண்டவ யாம் யாம்

ஆமா இங்கு எழுதியதிற்கு ஒரு விளக்கம் தாங்களேன். என்ன சொல்லி ஆட வருகினம் இங்கை?

#20
அதெல்லாம் தெரிஞ்சு வைச்சிருந்தா டான்ஸ் கிளாஸ் போர்ட் போட்டுடுவன் வீட்டு வாசல்ல.
ஆருணனுக்குத் தெரிஞ்சிருக்கலாம்...அவரட்ட கேப்பம்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>


Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)