06-20-2004, 08:55 PM
" விதியே விதியே தமிழ்ச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? "
மேற்சொன்ன பாரதி பாடல் அடிகளுடன் கவிஞர் அம்பி எழுதிய ' உலகளாவிய தமிழர் என்ற சிந்தனைக்குரிய நூல் ஆரம்பிக்கிறது. ஈழத் தமிழர் வரலாற்றையும் கடந்த இரு தசாப்த காலங்களாக அவர்கள் உலகளாவிய ஈழத் தமிழர்களாகப் புதுக்கோலம் கொண்டதற்கான காரணங்களையும் கவிஞர் முதலில் ஆராய்கிறார். தொடர்ந்து அவர்களின் புலப் பெயர்வு,மாற்றம், புதிய சூழல், புதிய சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவற்றை அவர்கள் சமாளிக்கும் எத்தனிப்புகள் , புதிய வாழ்வு ,மாறிவரும் புறக்கோலங்கள் முதலிய விடயங்களைச் சமூகவியற் கண்ணோட்டங்களுடனும் உளவியற் பாங்குடனும் அணுகுகிறார்; ஆராய்கிறார்.
உலகளாவிய ரீதியில் தமிழர் மேற்கொள்ளும் சமய, கலாச்சார முயற்சிகள் சிலவற்றை கோடிட்டுக் காட்டும் கவிஞர் அம்பி,தமிழர் பேணிக்காக்கவேண்டிய தனித்துவ அடயாளங்களை வலியுறுத்தவும்,அன்னிய சூழலில் தமிழ் கற்பித்தலுக்கு ஏதுவான அனுபவ ரீதியிலான அறிவுரைகளை வழங்கவும் தவறவில்லை. கடைசியில் இந்து சமுத்திரத்து மொறிசியஸ் தீவில் வாழும் தமிழர் வாழ்வையும், தமிழ்மொழியின் நிலையையும் சுட்டிக்காட்டி புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு அபாய அறிவிப்பையும் தருகிறார்.
இது சிந்தனைக்குரியது !
மொறிசியஸ் தீவில் உள்ள பதினொரு இலட்சம் குடிமக்களில் 75.000 பேர் தமிழ் மக்கள். 52 சதவீதம் இந்து மதத்தவர்கள் உள்ள அந்த நாட்டில் முஸ்லிம்கள் சீன-மொறிசியர்கள் நாட்டின் பூர்வீக குடிகள் என எல்லோரும் இன- மத- மொழி வேறுபாட்டால் பிளவுபடாமல் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.
1730களில் இத்தீவை ஆண்ட பிரெஞ்சுக்காரர்,இந்தியாவில் தமது ஆதிக்கத்தின் கீழிருந்த புதுச்சேரியிலிருந்து தமிழர்களை கட்டடக் கைத்தொழில் - நுண்கலைத் தொழிலாளராக அழைத்து வந்தனர். 1810 இல் சென்னையிலிருந்து அழைத்து வரப்பட்ட பெருந்தொகையான தமிழ்ப் போராளிகளின் உதவியுடன் பிரித்தானியர் இத்தீவை பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து கைப்பற்றினர். மொறிசியசில் இன்று ஏறத்தாள 100 சைவ ஆலயங்கள் உள்ளன. அங்கே சைவப் பண்டிகைகளும் கோவில் அனுட்டானங்களும் செவ்வனே நடைபெற்று வருகின்றன. அங்கே சைவம் தழைத்து நிற்கிறது.
தமிழ் மொழியின் நிலை என்ன?
195 ஆரம்ப பாடசாலைகளிலும் 12 உயர்தரப் பாடசாலைகளிலும் தமிழ் ஆசிரியர்களால் தமிழ் மொழிக் கல்வி போதிக்கப்படுகிறது. எல்லாமாக 215 தமிழ் ஆசிரியர்கள் மொரிசியசில் உள்ளனர். ஆனால் அங்கே கட்டாய தமிழ் மொழிக்கல்வி கிடையாது. தமிழ்ப் பாடத்தில் அடையும் சித்திகள் உயர்கல்விக்கோ அல்லது தொழில் வாய்ப்பிற்கோ உதவுவதில்லை. பெரும்பாலான தமிழ்ப் பிள்ளைகள் வீட்டிலே தமிழ் பேசுவதில்லை. கிறியோல் மொழிதான் பேசுகிறார்கள். மேலும் அரசமொழிகளான ஆங்கிலத்தையும் பிரெஞ்சு மொழியையும் அனைவரும் நன்கு பேசுகின்றனர். மொரிசியஸ் தமிழர்களுக்கு சுமாராக தமிழ் வாசிக்கத் முடியும். எழுதவும் வரும். ஆனால் தமிழ் பேசவராது.
தமிழிலிருந்து உக்கிரத் திரிபு அடைந்த பெயர்களை இங்குள்ளவர்கள் வைத்துள்ளனர். பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதற்கு பிறந்த நட்சத்திரம் பார்த்து, தமிழ்ப் பெயர் அடி எடுத்துக் கொடுப்பது கோவில் குருக்கள். மொரிசியசில் சைவ சமயமே வாழ்க்கையின் அடிப்படைக் கலாச்சாரத்தைப் பேணுகின்றது. சமய,விரத நாட்களை மக்கள் அறியும் வண்ணம் ஆண்டு தோறும் பஞ்சாங்கம் ஒன்று பிரெஞ்சு மொழியில் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. தமிழர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள். அழுவதா சிரிப்பதா என தெரியாத இன்னொரு விடயமும் உண்டு. பிறப்புச்சாட்சிப் பத்திரம் திருமணப்பதிவுப்பத்திரம், குடிசனமதிப்புப் பத்திரம் போன்ற அரச ரீதியான பதிவேடுகளிலெல்லாம் மொரிசியசின் தமிழ் மக்கள் தமது மதத்தை - தமிழ் என்று பதிந்து வருவது வழக்கம்! இங்கே சைவமும் தமிழும் ஒரு பொருட் கிழவிகள் போல் பாவனையில் இருந்து வருகின்றன. ' மெல்லத் தமிழ் இனிச்சாகும் " என்று பாரதியார் எச்சரித்தது இதைத்தானோ? மொரிசியசைப் போலவே தென்னாபிரிக்காவிலும் தமிழர் சென்று குடியேறினர். இங்கே தமிழரின் இன்றைய நிலை என்ன?
தென்னாபிரிக்காவில் தமிழ் படும்பாடு, இரண்டு தலைமுறைகளாக தமிழ் நாட்டுடன் தொடர்பு அறுந்து விட்டது. தமிழில் கடிதப் போக்குவரத்து இல்லை. பத்திரிகைகள்,சஞ்சிகைகள் வெளிவருவது இல்லை. தமிழ் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. தென்னாபிரிக்கர்களுடன் தமிழ்சமூகத்தின் சங்கமம் அங்கே பெரும் பாலும் பூர்த்தியாகி விட்டதாகவே தெரிகிறது. ' மெல்லத் தமிழ் இனிச்சாகும் " என்ற நோய்,அங்கெல்லாம் முற்றிய நிலையில் இருப்பதாக தெரிகிறது. மொரிசியசில்,தென்னாபிரிக்காவில் தமிழினத்தின் கலாச்சார ரீதியிலான இனத்தற்கொலையின் சோகக்கதை இது. தமிழ் மக்களின் கலாச்சார ரீதியிலான இனத்தற்கொலைக்கு அடுத்த களம் எங்கே? ஐரோப்பா,கனடா,அவுஸ்திரேலியா. புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் ஏழு இலட்சம் பேர் இந்த நாடுகளில் கலாச்சார ரீதியிலான இனத் தற்கொலைக்கு தயாராக நிற்பதாக தெரிகிறது. இந்த நாடுகளில் பாடசாலைகளில் தமிழ்ப் பிள்ளைகள் அந்தந்த நாடுகளின் மொழிகளிலேயே கல்வி கற்கின்றனர். சில வீடுகளில் பெற்றோர்கள் வீடுகளில் தமிழ் பேசுவதால் பிள்ளைகளும் தமிழ் பேசுகிறார்கள். பல வீடுகளிலே பெற்றோர்கள் தமிழ் பேசுவதில்லை. ஆங்கிலமே பேசுகிறார்கள். பிள்ளைகளையும் ஆங்கிலம் பேச வைக்கிறார்கள். வீட்டிலே தமிழில் பேசினால் பிள்ளைகள் சரிவர ஆங்கிலம் கற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற தவறான நம்பிக்கையின் காரணமாகவே இந்த கொடிய தவறு இழைக்;கப்படுகிறது. இனத் தற்கொலைக்கு அத்திவாரம் இடப்படுகிறது. தமிழ்ப் பிள்ளைகள் தமிழில் சிந்திப்பது அவசியம். தமிழில் பேசுவது அவசியம் . தமிழில் சந்தித்து,தமிழில் பேசினால் தமிழ் முதல் மொழியாக வாழ்கிறது. ஆங்கிலத்தில் சந்தித்து,தமிழில் பேசினால் தமிழ் இரண்டாம் தரமொழி என்ற நிலைக்கு வந்துவிடும்.
இங்கிலாந்து,கனடா,அவுஸ்திரேலியா,மற்றும் ஐரோப்பிய புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் அந்நாடுகளில் தமிழ்பாடசாலைகள் நிறுவி,தமது பிள்ளைகளுக்குத் தமிழும் தமிழ்க் கலாச்சாரமும் பயிற்றுவிக்க எடுத்து வரும் முயற்சிகள் வரவேற்புக்குரியன. ஆனால்,இந்தப் பாடசாலைகளில் கற்பித்தல் அறிவும் தரமும் அனுபவமும் உள்ள தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்பதும் மறக்க முடியாத ஓர் உண்மை. 26 எழுத்துக்கள் உள்ள ஆங்கிலத்தை முதலில் படித்து விட்ட பிள்ளைகள் 244 எழுத்துக்கள் தமிழில் உள்ளன என்பதை கேள்விப்படும் போதே, தமிழைக் கற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள். இத்தகைய சூழ்நிலைகளில் தமிழ் கற்பிக்க புதிய அணுகுமுறைகள் தேவை. புதிய பாடத்திட்டங்கள் தேவை. புதிய நூல்கள் தேவை. இல்லா விட்டால் - ' மெல்லத் தமிழ் இனிச்சாவதைத் " தவிர வேறு வழியில்லை.
மொரிசியஸ்,தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட்ட நிலை இனி உலகின் எந்தப்பகுதியிலும் ஏற்பட அனுமதிக்கமாட்டோம் என புலம் பெயர்ந்த ஒவ்வொரு தமிழனும் சபதமெடுக்க வேண்டும். புலம்பெயர்த நாடுகளில் சிறார்களின் தமிழ்க்கல்வி தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில்,அதிலும் குறிப்பாக மேற்கு நாடுகளில்,தமிழ்ச் சிறார்களின் தமிழ் மொழிக்கல்வி கவலை ஊட்டுவதாகவே உள்ளது. உலகளாவிய ரீதியில்,எமது இரண்டாம் தலைமுறையினர்,ஐரோப்பிய மொழிகளுடன் விதேசிய கலாச்சாரங்களுடன் கலப்படமாகி சங்கமமாகப் போகின்ற அபாய மணி ஒலிக்கிறது. ஆயுத ரீதியிலான இன ஒழிப்பு,எம் கண் முன்னால் நடைபெறுகிறது. ஆனால்,புலம் பெயர்ந்த ஒவ்வொரு தமிழ் இல்லத்திலும் இன,மொழி,கலாச்சார ரீதியிலான இன ஒழிப்பு நாம் அறியாமலே ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது. இந்த இன ஒழிப்பை எவரும் எம்மீது திட்டமிட்டு திணிக்கவில்லை. இதற்கு காரணம் புலம் பெயர்ந்த எமது பெற்றோர்கள் தான்.
விதேசியச் சூழ்நிலைகளின் பொருளாதாரப் பலவந்தம் காரணமாகவோ ,புலம்பெயர்ந்த நாடுகளின் பொருளாதார,கலாச்சார மோகம் காரணமாகவோ,நாம் தமிழை மறந்தால்,எமது தாயகத்தை மறந்தால்,எமது சிறார்களின் தமிழ்க் கல்வியை மறந்தால்,எமது சிறார்களும் விதேசியக் கலாச்சாரத்தின் அடிப்படையில்,தமக்கு வயது வந்ததும்,தமது பெற்றோர்களை மறந்து விடுவார்கள் என்பது நிச்சயம். இத்தகைய பெற்றோர் தமது இறுதிக் காலங்களை மேற்கு நாடுகளின் அன்பும்,பாசமும் அற்ற முதியோர் இல்லங்களில் தான் அழுந்தி,வருந்தி வாழப் போகிறார்கள் என்பதும் நிச்சயம். கேடு வரமுன் காப்பது தான் புத்திசாலித்தனம். எனவே,தமிழ்ப் பெற்றோர்களே ! உங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்கல்வி ஊட்டப்படும் போது, அதனோடு சேர்ந்து பாரம்பரிய தமிழ்ப் பண்புகளும்,கலாச்சார மரபுகளும் ஊட்டப்படுகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள். இந்தப் பணியில் நீங்கள் தவறினால்,பாழாகப் போவது உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் மட்டுமல்ல,உங்களின் எதிர்காலமும் கூடத்தான்.
தாய் மொழிக் கல்வியின் அவசியம் !
'எனக்கு ஒரு சர்வாதிகாரியின் அதிகாரம் இருக்குமானால்,நான் இன்றே நம் மாணவர்கள் அன்னிய மொழி மூலம் கல்வி கற்பதை நிறுத்தி விடுவேன். எல்லா ஆசிரியர்களையும்,விரிவுரையாளர்தளையும் உடனே,தாய் மொழி மூலம் கற்பிக்கும் படி கட்டளையிடுவேன். எதிர்ப்பவர்களை வேலையிலிருந்து விலக்கி விடுவேன். " இவ்வாறு கூறியவர் ஒரு இனவாதி அல்ல, ஒரு கம்யூனிஸ்ட் அல்ல, சர்வாதிகாரத்தில் நாட்டம் உடையவரும் அல்ல மறாக - அகிம்சை,அமைதி,பொறுமை,சகிப்புத்தன்மை,ஜனநாயக பண்புகள் என்பவற்றிற்கு உலகத்திற்கே உதாரணமாக 20- ம் நூற்றாண்டில் திகழ்ந்தவர். அவர் - மகாத்மா காந்தி. 'தாய்மொழிக் கல்விதான் இயற்கையானது ,எளிமையானது,குழந்தைகளுக்குப் " பிடித்தமானது என்பதை உலகம் முழுவதும், உள்ள கல்வியாளர்கள்,குழந்தை மனோதத்துவவியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். அறிவியல் பூர்வமாகவும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியமாக | தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மூலம் ஒரு காலத்தில் திகழ்ந்த பெரிய பிரித்தானியா | அவர்களது மொழியாகிய ஆங்கிலத்தை அரிய உலகத் தொடர்பு மொழி, அறிவியல் மொழி | என்ற நிலைக்கு தூக்கி வைத்தது. இந்த மாயையினை லெனினின் அக்டோபர் சோசலிசப் புரட்சி 1917 - இல் தகர்த்தெறிந்தது. அறிவின் மொழியாக உருவாக்கப்பட்ட ஆங்கிலத்தின் அரிச்சுவடியே அறியாத சோவியத் விஞ்ஞானிகள்,மிகக் குறுகிய காலத்தில் அறிவியலின் உச்சங்களைத் தொட்டனர். பிரமிப்பு ஊட்டும் சாதனைகள் பலவற்றை,மனித இனத்திற்கு தந்தனர். ஆங்கில விஞ்ஞானிகளை மூத்கில் விரல் வைத்து மலைத்து நிற்கச் செய்தனர்.
'சுயமொழிப்பாட போதனைகள்,ஒரு மனிதனின் அறிவை அதி விரைவில் விருத்தி செய்கின்றன . மொழியியலாளர்கள் பிற மொழிகளைக் கற்று அவற்றில் உள்ள நல்லவற்றை,நமக்குத் தேவையானவற்றை மொழிபெயர்க்க வேண்டும். 'அழிவென்பது ஆக்கத்திற்கே " என்பதை தாரக மந்திரமாகக் கொண்டுள்ள ஜப்பான்,தனது சுயமொழிப் போதனைகளால் உருவாக்கிய விஞ்ஞானிகள் மூலமாக இன்று உலகிலேயே இலக்ரோனிக்ஸ் விஞ்ஞானத்தில் உச்ச நிலையை வகிக்கிறது. ராக்கட் விஞ்ஞானத்தை உலகிற்கு தந்தது சுயமொழி வழிக்கல்வி கற்ற சோவியத் ஒன்றியமும் ஜேர்மனியுமாகும். இரண்டாவது உலகமகா யுத்தத்தின் பின்னர் ஜேர்மன்,விஞ்ஞானிகளை தனது நாட்டிற்கு அழைத்துச் சென்று,அவர்கள் மூலமே இந்த விஞ்ஞான தொழில் நுட்பத்தை அமெரிக்கா கற்றுக் கொண்டது.
இற்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர்,வெள்ளையரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த யாழ்ப்பாணத்தில் படித்துப் பணம் சம்பாதித்து சுகவாழ்வு பெற்ற தமிழர்கள் எல்லாம்,ஆங்கில நிழலில் நின்மதியாக உறங்கினார்கள். ஆங்கிலத்தில் சிந்தித்து,ஆங்கிலத்தில் பேசி,அதுவே அறிவுக்கு அறிகுறியெனவும் வாழ்ந்தார்கள். அத்தகைய சமுதாயத்திலே கூட,தாய் மொழிமூலம் கல்வி ஊட்டுவதே சிறந்தது என்று துணிந்து செயலாற்றினார்,அமெரிக்க மிசன் டாக்டரான சாமுவேல் பி. கிறீன் என்பவர். ஆரம்பக்கல்வியை அல்ல,மேனாட்டு மருத்துவக் கல்வியையே தமிழ் மூலம் புகட்டி,தகுதிவாய்ந்த மருத்துவர்களை உருவாக்குவதில் வெற்றியும் கண்டார். 1848 - 1875கால கட்டத்தில் டாக்டர் கிறீன் 85 யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு மேனாட்டு மருத்துவக் கல்வியைத் தமிழல் புகட்டி,அவர்களைத் திறமை மிக்க டாக்டர்களாக உருவாக்கினார்.
சிறந்த மருத்துவ விஞ்ஞான நூல்களையெல்லாம்,டாக்டர் கிறீன் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். கலைச்சொற்;களைத் தொகுத்தும்,அமைத்தும்,நூல்கள் எழுதினார். அவரிடம் கற்று,மருத்தவர்களான அவரது மாணவர்களும்,பல மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதினர். எனவே தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது எமது முயற்சியிலேயே தங்கியுள்ளது என்பதை நாம் அனைவரும் உணர்வது அவசியம். இயல்- இசை - நாடகம் என்றிருந்த முத்தமிழ் புத்தாயிரத்தில் இயல்- இசை - நாடகம் -அறிவியல் என்ற நாலு தமிழாக தரணியெங்கும் புகழ்பரப்பிட வேண்டும்.
நன்றி மேகம் சஞ்சிகை
சுவிஸ் தமிழ் மாணவர் அமைப்பு
Swiss Tamil Students Organization
கணினித் எழுத்தாக்கம்: சுரேஸ்
நன்றி
www.stso.ch

<b>
?
?</b>-
?
?</b>-