Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கையில் பிறந்தது அதிஷ்டமா துரதிஷ்டமா?
#1
நான் அதிர்ஷ்டசாலியா?துரதிர்ஷ்டசாலியா?

மணிரத்தனம் அவர்கள் இயக்கி கமலகாசன் நடித்த 'நாயகன்" படத்தில் ஒரு காட்சி வரும்,ஆரம்பத்தில் தந்தையைக் கொன்றவனை ஆத்திரத்தில் கொலை செய்த கமலகாசன் (நாயக்கர்) பின்னர் அதனையே நல்லவர்களைக் காக்கவும் தீயதை அழிக்கவும் ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்,"நாலு பேருக்கு நல்லது நடக்குமென்றா ஒருத்தன் அழிவதில் தப்பில்லை" என்பது அவர் கொள்கை.அப்படிப்பட்ட வாழ்க்கை நடத்தி வரும் 'நாயக்கரை'ப் பார்த்து அவரது பேர்த்தி கேட்பதாக ஒரு காட்சி வரும்.

"தாத்தா நீங்கள் நல்லவரா கெட்டவரா' என்று பேர்த்தி கேட்க கமல் சிறிது நேரம் யோசித்துவிட்டு "தெரியலைம்மா' என்று பதில் சொல்வார்

அந்தத் திரைப்படத்தில் என்னை மிகவும் பாதித்த காட்சி அது,இன்னும் நிறையப் பேர் அந்த ஒரு கேள்வியில் கலங்கிப் போயிருக்கிறார்கள்.இன்னும் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தீர்களானால் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை,ஈழத்தில் நடக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் அந்தத் திரைப்படத்தின் கதைக்கருவுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பது தோன்றும்.


இங்கு நான் சொல்ல வந்தது அதுவல்ல,நீங்கள் நல்லவரா கெட்டவரா என்றே திடுக்கிடும் கேள்வி மாதிரி ஒரு கேள்வி வீரம் செறிந்த மண்ணில் பிறந்த நீங்கள் அதிர்ஷட்க்காரரா, துரதிருஷ்டக்காரரா? என்று மிகவும் கஷ்டமான ஒரு கேள்வியை சுந்தர்வடிவேல் அண்ணா எனது ஓடுகிற வண்டியோட தொடரின் பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்காவிட்டால் வேதாளத்துக்குப் பதில் சொல்லாத விக்கிரமாதித்தன் கணக்கில் எனது தலை சுக்கு நூறாகிவிடும் என்றெல்லாம் அவர் மிரட்டவில்லை.ஆனாலும் அவர் மிரட்டவில்லை என்பதற்காக அதனை என்னால் கூறாமல் இருக்க முடியவில்லை.

இப்போது மீண்டும் கதைக்கு வருவோம்,நாயக்கர் ஒரு கொள்கையுடன் போராடுகிறார் அதற்காகக் கொலை கூடச் செய்கிறார்,இது நாயக்கர் கொள்கை அவரது பிரச்சனை ஆனால் அடியுங்கடா என்று சொன்னவுடன் அடித்துவிட்டு வரும்,கொண்டுவா என்றவுடன் வெட்டிக் கொண்டுவரும் கூட்டமொன்று அவருடன் இருக்கிறது.

அது கூலிக்கு மாரடிக்கும் கூட்டமென்று இலகுவில் கூறிவிடலாம் ஏன் கூலிக்கு இந்தத் தொழிலைச் செய்யவேண்டும் வேறு தொழில்கள் இல்லையா? என்று கேட்டால் கூலியை விட தாமும் நாயக்கர் செய்யும் நல்ல காரியங்களில் பங்கெடுக்கிறோம் என்றொரு மனச்சாந்திதான் அவர்களை வழிநடத்துகின்றது.

இப்படி இந்தக் கதை சொன்னவுடன் ஈழத்தில் நடக்கும் போராட்டத்தை தாதா சாம்ராஜ்ஜியமாகவும் பிரபகரனை நாயக்கர் மாதிரியும் கற்பனை பண்ணிவிடவேண்டாம் ஒரு யதார்த்தமான உவமை அவ்வளவே.

என்னிடம் நிறையப் பேர் இதைவிட வித்தியாசமான கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள்,வெறும் மண்னுக்கு,மொழிக்கு இவ்வளவு உயிரிழப்புக்கள் தேவையா என்று அப்போது எனக்குத் தோன்றியது இதே கேள்விதான் வெறுமனே ஒரு சீலைத்துணி அதற்கு தேசியக் கொடியென்று பேர் சூட்டி அது ஏற்றப்படும் போது காலிழந்தவன் கூட ஒருகணம் எழுந்திருக்க முயற்சிக்கிறானே அது ஏன் வெறும் துணிக்கு ஏன் இத்தனை மரியாதை?

சிங்களம் மட்டும் தனிச்சட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டபோது அதனை எதிர்த்து அரசாங்கத்தில் தாம் வகித்து வந்த பெரிய பெரிய பணமும் புகழும் நிரம்பிய பதவிகளை உதறித்தள்ளிவிட்டு விவசாயம் செய்தார்களே எமக்கு முந்திய தலைமுறை.அவர்களுக்கு தமது தமிழ் மொழியின் மீது ஏன் இத்தனை வெறி?

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை போனார்களே தமிழகத்துப் பெருமக்கள் வெறுமனே ஒரு மொழிக்காக ஏன் இத்தனை வெறி?

சுதந்திரம் என்ற ஒரு சொல்லுக்காக செய்து கொண்டிருந்த வேலைகளைத் தூக்கிப் போட்டுவிட்டு சுபாஷ் சந்திரபோஸ் பின்னால் திரண்டார்களே ஒரு கூட்டம் அவர்களுக்கு ஏன் மண்மீது இத்தனை வெறி.அதே சுதந்திரத்துக்காக உயிரைக் கொடுத்த பகத்சிங்,வாஞ்சிநாதன் போன்றொருக்கு ஏன் வன்முறையில் இவ்வளவு ஆசை?

அதேபோல இங்கே கணணியின் முன்னால் உட்கார்ந்து நான் கவிதையும் கதையும் எழுதிக் கொண்டிருக்க என் நாட்டைக் காப்பாற்ற தன் உயிரைத் தியாகம் செய்யக் காத்திருக்கும் என்னுடன் கூடப்படித்தவர்கள்,இவர்களுக்கு என்ன தேவை போராடவேண்டும் அதற்காக உயிரைக் கொடுக்க வேண்டுமென்று?

வெறுமனே கங்கை கொண்ட கடாரம் வென்ற தமிழர் என்ற பெருமையை நிலைநாட்டவா இத்தனை ஆண்கள் போராடப் போகின்றார்கள்?.ஆனையடக்கிய அரியாத்தையின் வம்சம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கவா இத்தனை பெண்கள் போராடப் போகிறார்கள்?எல்லாவற்றையும் கால் மேல் கால் போட்டுக் கொண்டிருந்து செய்யும் சினிமா விமர்சனம் மாதிரி ஒரு வரியில் சொல்லிவிடலாம்
தமிழீழப் போராட்டம்...அபத்தம்.
கரும்புலிகள் உயிர்த்தியாகத்தால் கிளாலி கடந்த எத்தனை பேர் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் போய் இருந்து கொண்டு இப்படிச் சொன்னார்கள்?

நாங்கள் கவிதை எழுதுவோம் கட்டுரை எழுதுவோம்,தேவையான போதெல்லாம் விமர்சனம் கூடச் செய்வோம்.எல்லாம் இன்னொருவன் குருதியிலும் எலும்பிலும் நாங்கள் கட்டிய வீடுகளில்...விடுதலைப் போராட்டத்தை விமர்சிப்பதாகச் சொல்லிக் கொண்டு செத்தவர்கள் மீது சேறள்ளிப் போடுகிறோம் அவர்களின் ஆவி திரும்ப வந்து என்னால் தானே நீ உயிரோடிருக்கிறாய் என்று கேட்கமாட்டாது என்ற துணிவு எங்களுக்கு.

என் மண்ணில் பிறந்ததற்காய் நான் அதிர்ஷ்டசாலியா துரதிர்ஷ்டசாலியா என்று என்னால் சொல்ல முடியவில்லை.இன்னொருவன் உயிர்த்தியாகத்தில் உயிர் தப்பி வாழ்வது எனது 'அதிர்ஷ்டம்' என்று சொல்லமுடியவில்லை.அதே போல நான் நேசிக்கும் மண்ணை விட்டு வர நேரிட்டதற்கு நான் 'துரதிர்ஷ்டசாலி' என்பதை சொல்லாமலும் இருக்க முடியவில்லை

நன்றி - ஈழநாதன் http://kavithai.yarl.net/archives/000985.html#more
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
[align=center:1b17d56100]
[Image: peace.jpg]
ஈழநாதனின் குழப்பத்துக்கு,
<b>மதன் கேள்வி பதில்</b>
பகுதியில் வாசித்த ஒரு பகுதி பொருத்தமாக இருக்குமென நம்புகிறேன்.
இதோ அப் பகுதி:-[/align:1b17d56100]

[size=18] கே: இந்த மாநிலத்தில் பிறந்திருக்கலாமே என்று பிற மாநிலம் எதையாவது பார்த்து ஏங்கியதுண்டா தாங்கள்?

பதில்: நம் அம்மாவை விட நூறு மடங்கு அழகாக இருந்தாலும், அடடா அந்தப் பெண்மணிக்கு நாம் மகனாக பிறந்திருக்கக் கூடாதா? என்று நமக்கு நினைக்கத் தோன்றுமா?
அது மாதிரிதான் நாம் பிறந்த மண்ணும்!


"வெற்றியாளர்கள் பிரச்சனைகளை வாய்ப்புகளாகப் பார்ப்பவர்கள்.
தோல்வியின் தோளில் குடியிருப்பவர்களோ வாய்ப்புகளைக் கூட பிரச்சனைகளாகத்தான் பார்க்கிறார்கள்."

[Image: rainbow_pot_of_gold_hr.jpg]
AJeevan
Reply
#3
இங்கு சுடலைகளிலை எரிக்கப்பட்ட புதைக்கப்பட்வர்களைத்தான் கேட்கவேண்டும்.. அதிஸ்டசாலியா.. துர்அதிஸ்டசாலியா என..
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
#4
ஏன் உங்களைப் போல தப்பியோடியவரக்ளைக் கேட்கலாமே சரியகச் சொல்வீர்கள்
\" \"
Reply
#5
இலங்கை என்ன பூமியில் மானிடராய் அவதரிப்பது அதிஷ்டம்....அரிது அரிது மானிடராய் அவதரிப்பது அரிது...என்று ஒளவையார் சொன்னது போல....ஆனால் இலங்கைப் பிரஜையாகி அங்கு தமிழன் ஆனதுதான் துரதிஷ்டம்...அதிலும் தாத்தா போன்றதுகளோடு கூடி வாழ நேரிட்டது அதிலும் துரதிஷ்டம்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
இலங்கையில் தமிழனாய்ப் பிறந்தது துரதிர்ஷ்டம் என்கிறீர்களா? அப்போது இங்கிலாந்தில் வசிக்கக் கிடைத்தது அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா?
\" \"
Reply
#7
இலங்கை என்ன இங்கிலாந்தென்ன அமெரிக்காவென்ன...எல்லாம் பூமியில்தானே இருக்கு....எங்கிருப்பினும் மனிதன் என்ற அடிப்படையில் அதிஷ்டம்....ஆனால் சொன்னதை வடிவாக் கவனியுங்கோ....இலங்கைப் பிரஜையாகித் தமிழன் ஆனதுதான் துரதிஷ்டம்.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
அப்போ இலங்கையில் சிங்களவனாகப் பிறந்திருந்தால் அதிர்ஷ்டமா?
\" \"
Reply
#9
கேள்வி கேட்கப்பட்டது இக்களத்தில் உள்ளவர்களிடம் அல்லது இதைப் பார்ப்பவர்களிடம்....அந்த வகையில் எங்கள் பதிலை நாங்கள் சொன்னோம்....அதேபோல் சிங்களவர் தான் தங்கள் கருத்தைச் சொல்ல வேண்டும்...அவர்கள் சார்ப்பில் நாம் எப்படிக் கருத்துச் சொல்ல முடியும்....இதற்கான விடைகள் அவரவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சிந்தனை என்று தனித்துவமான விடயங்களில் தங்கியிருக்கும் போது.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
களத்தில் கருத்தாடுபவர் என்ர ரீதியில் உங்களை நோக்கியும் கேட்டிருக்கலாம் அல்லவா?
தமிழனாய் பிறந்தது துரதிர்ஷ்டம் என்கிறீர்கள் அப்படியானால் உங்கள் தனிப்பட்ட என்ணம் விருப்பு வெறுப்பு இவற்றின் மூலம் இப்படிப் பிறந்திருக்கலாமே என்றொரு ஆசை இருந்திருக்கலாமல்லவா அதனைத் தான் கேட்டேன்

மாதராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமென்று இன்னொரு பெண்தான் சொல்ல வேண்டுமென்றில்லை.பாரதி சொன்னானில்லையா?
\" \"
Reply
#11
எமது விடையில் தெளிவான பதில் உண்டு....இப்பூமியில் மானிடனாய் ஆனது அதிஷ்டம்....ஆனால் இலங்கைப் பிரஜையாகித் தமிழன் ஆனது துரதிஷ்டம்....!

ஒரு சிங்களவருக்குச் சிலவேளை இரண்டுமே அதிஷ்டமாக இருக்கலாம்...இல்லாமலும் இருக்கலாம்...! அங்கு தீர்க்கமான முடிவை எம்மிடம் எப்படி எதிர்பார்ப்பீர்கள்....ஏன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கூட எமக்குத் தெரியாத போது...பலதும் கடந்து சிங்களவரின் உள்ளக்கிடக்கையை கிண்டச் சொல்வது என நியாயம்....! :wink:

மாதர் தம்பெருமையை பாரதி சொன்னதற்கு பாரதி மாதர்களை வைத்து பரிசோதனை செய்திருக்க முடியாது...அல்லது தானே மாதராய் மாறி இருந்து பார்த்திருக்கவும் முடியாது....சாதாரணமாக சமுகத்தில் அவர்களின் பங்களிப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் புறக்கண், அகக்கண் கொண்டு பார்த்துச் சொல்லியிருப்பார்...அதைச் சொல்வதற்கு நல்ல அவதானம் போதும்...மாதராய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
இஞ்சையும் பொறுக்கி அங்கையும் பொறுக்கி எழுதுறியள்.. போடுறது சிங்களப்படம்.. எழுதிறது அவங்கள் அதிஸ்டசாலியளெண்டு.. ஏதோ நடக்கட்டும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#13
அது என்ன சிங்களபடம் தாத்ஸ்? எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கோ,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#14
சரி முதலில் நான் என்ன நினைக்கிறேன் என்று சொல்லிவிடுகின்றேன்

இலங்கையில் தமிழனாகப் பிறந்ததற்கு நான் அதிர்ஷ்டசாலி என நினைக்கிறேன் இதையே 3 வருடங்களுக்கு முன் கடுஞ்சண்டையொன்றின் இடையில் அகப்பட்டபோதும் நினைத்தேன் இப்போது பிற நாடொன்றில் வசதி வாய்ப்புகள் இருந்தும் தாய் நாட்டு வாழ்வுக்காண ஏக்கத்தோடு சொந்த நாட்டில் வாழ்முடியா துரதிர்ஷ்டத்தை எண்ணி வருந்துகின்றேன்

சரி எனது நிலைப்பாட்டுக்கு இது போதும் உங்கள் நிலைப்பாட்டையும் தெளிவு படுத்தி விட்டீர்கள்

ஆனால் சிங்களவனாய்ப் பிறந்து தான் சிங்களவர் அதிர்ஷ்டசாலிகள் எனச் சொல்ல வேண்டுமென்றில்லை உதாரண்மாக மல்வானைப் பெண்கள் வடிவு என்று இன்னோர் பகுதியில் நீங்கள் சொல்லவில்லையா அதனை எப்படிச் சொன்னீர்களோ அப்படிச் சொல்லலாமே?

நான் சிங்களவர் மட்டுமல்ல தமது தாய் நாட்டில் சுதந்திரமாக வாழக்கிடைத்த எவருமே பெரும் அதிர்ஷ்டசாலிகள் என நினைக்கிறேன்
\" \"
Reply
#15
பேச்சுச் சுதந்திரமே இல்லாத தாய்நாட்டில் வாழ்வதைவிட பேச்சுச் சுதந்திரமுள்ள அந்நியநாட்டில் வாழக்கிடைத்தது அதிஸ்டமா.. தூரதிஸ்டமா.. அதைப்பற்றி எழுதுங்கள்..; அதிஸ்டசாலியா.. தூரதிஸ்டசாலியா என நிண்ணயிப்பதற்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#16
பேச்சுச் சுதந்திரம் என்றால் அந்நிய நாட்டைவிட தேசத் துரோகிகள் நடத்திய மக்கள் குரலில் இருந்து வானம்பாடி ஈறாக அனைத்தியும் சந்தியில் நின்றும் கேட்கவும் பேசவும் அனுமதித்த புலிகளின் ஆட்சிக்காகத்தில் வாழ்ந்ததே அதிஷ்டம்.....சிங்கள தேசத்தில் வெரித்தாஸ் வானொலியென்ன பிரபாகரனின் படத்தை கண்ணியில் வோல் பேப்பராகக் கூட வைத்திருக்க முடியாத அளவுக்கு இருந்தது பேச்சுச் சுதந்திரம்...பிரட்டனில் புலிக்கொடி பறக்கத் தடை வந்து கழற்றினார்கள்...ஆனால் வன்னியில் பிரிட்டிஷ் கொடியை யாரும் தூக்கிப் பிடிக்கலாம்.....! இப்போ வன்னி மண்ணில் எங்கள் சொந்தத்தில் வாழக் கிடைத்தால் அதுதான் அதிஷ்டம்.....!

மல்வானை சிங்களப் பெண் அழகென்பது எங்கள் கண்ணிற்கு...எங்கள் எண்ணத்திற்கு...ஆனால் அது அப்பெண்ணின் கருத்தல்லவே....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
Mathivathanan Wrote:பேச்சுச் சுதந்திரமே இல்லாத தாய்நாட்டில் வாழ்வதைவிட பேச்சுச் சுதந்திரமுள்ள அந்நியநாட்டில் வாழக்கிடைத்தது அதிஸ்டமா.. தூரதிஸ்டமா.. அதைப்பற்றி எழுதுங்கள்..; அதிஸ்டசாலியா.. தூரதிஸ்டசாலியா என நிண்ணயிப்பதற்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

அதனைத் தான் சொல்லி விட்டேனே சுதந்திரமாகத் தன் தாய் நாட்டில் வாழ்வது தான் சுதந்திரம் என்று.சிங்கப்பூரில் வாழ்வது எனது அதிர்ஷ்டம் என்று சொல்வதற்கில்லை காலத்தின் கோலம் என்று தான் சொல்வேன்.அது போன்று சிங்கப்பூரில் பேச்சு சுதந்திரம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை
\" \"
Reply
#18
Quote:மல்வானை சிங்களப் பெண் அழகென்பது எங்கள் கண்ணிற்கு...எங்கள் எண்ணத்திற்கு...ஆனால் அது அப்பெண்ணின் கருத்தல்லவே....!

அதனைத் தான் நானும் கேட்டேன் இலங்கையில் சிங்களவனாகப் பிறந்திருந்தால் அது அதிர்ஷ்டமா இல்லையா என்பது பற்றிய உங்கள் கருத்து நான் வேறு யாரும் சிங்களவரைக் கேட்கவில்லையே
\" \"
Reply
#19
ஒரு பெண்னை அல்லது ஆணை அல்லது ஏதாவது ஒரு பொருளை வடிவென்று எம்மளவில் தீர்மானிப்பது எம்மனம்....! ஆனால் உங்கள் கேள்வி.... சிறிலங்காப் பிரஜையாகிய சிறிலங்கன் தமிழனிடம் சிறிலங்காச் சிங்களவரின் மனவோட்டத்தைச் சொல் எனக் கேட்பது என்னவோ அபந்தமாகத்தான் தெரிகிறது காரணம்.....அவர்களின் மனமறியாது அறிந்தது போல எங்கள் மனவோட்டத்தால் அவர்களின் மனம் அளந்து சொல்ல எமக்கு விருப்பமில்லை....! அவர்களின் சுயத்தில் நாம் தலையிடவும் விரும்பவில்லை.....! அதற்கான தகுதியும் எமக்கில்லை....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
மனிதராகப் பிறப்பது அதிர்ஷ்டம் என்பது கூட உங்கள் மனஓட்டமெ அன்றி ஒட்டுமொத்த மனிதரின் கருத்து என்றில்லையே
அதே போன்று மற்றவர்கள் சுயத்தில் தலையிடவேண்டாம் சிறிலங்கனாக சிங்களவனாக பிறப்பது அதிர்ஷ்டமா இல்லையா?உங்கள் கருத்து என்ன
வேண்டுமானால் இப்படிக் கேட்போம் சிறிலங்கனாக,சிங்களவனாகப் பிறந்திருந்தால் அது அதிர்ஷ்டம் என நினைப்பீர்களா?உங்கள் மன ஓட்டத்தைச் சொல்லுங்கள்
\" \"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)