Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலர் தினம் தமிழருக்குத் தேவையா...?!
#1
தாம் தமிழர்கள் என்று...நவராத்திரி...தீபத்திருநாள் தீபாவளி....பொங்கல் திருநாள் தைப்பொங்கள்...வருடப் பிறப்பு இவை எதுவுமே தமிழர்கள் திருநாள் அல்ல என்று சாதிக்க நின்றவர்கள் மேற்குலக வியாபாரத் திருநாளான காதலர் தினம் பற்றி மூச்சும் விடாமல் அதைக் அமர்க்களமாய்க் கொண்டாடுகின்றனர்...! Idea

காதலர் தினம் தமிழர்கள் தினமா... கல்வி செல்வம் வீரம் விழுமியம் காதல் என்று தன் வாழ்வை வளப்படுத்திய தமிழன் அவற்றை மதிக்கவும் வளர்க்கவும் கற்றுக்கொடுக்க மறுக்கவில்லை..மறக்கவில்லை...! ஆனால் நாம் எப்போதுமே காதல் என்ற ஒன்றுக்காக விழா எடுத்து காலத்தை வீணடிக்கவில்லை...செலவை ஊக்கிவிக்கவில்லை...காதல் பண்டமல்ல பரிமாறி மகிழ என்று உணர்த்தவும் இல்லை..அதைக் கேளிக்கையாக்கி காட்டவும் இல்லை...மனிதனுக்குள் உருவாகும் ஒரு உன்னத உணர்வாகவே காட்டிவந்தோம் தொன்றுதொட்டு...! இதற்கு தமிழ் இலக்கியங்கள் சாட்சி...நாம் இப்போ அந்த வழியிலா நிற்கிறோம்...??!

காதல் அது ஒருவன் ஒருத்திக்குள் உருவாகும் உணர்வுநிலைப் பரிமாற்றத்தின் விளைவு...அதை அவளும் அவனும் தான் சரிவர உணர முடியும்...! அதை ஏன் மற்றவர்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும்...அதற்கு ஏன் ஒரு விழா...திருநாள்...இதைக் கொண்டாடாமல் விட்டால் காதல் என்ன மனிதனுக்குள் உயிரிக்குள் உதயமாகாமலா விட்டிடும்...???!

மேற்குலக வர்த்தக விளம்பர நோக்கத்துக்காக உருவாகியதை பார்பர்ணிய சித்தாந்தங்களை உணராது உள்வாங்கிக் கொண்டது போல உள்வாங்குவோரே...ஒரு கணம் சிந்தியுங்கள்...<b>காதலர் தினம் தமிழர் திருநாளா என்று</b>....!!!!!!!!!!!!!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
நல்ல விடயம் ..பொறுத்து கருத்து தருகிறேன்.........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
வணக்கம் குருவிகளே,

காதலர் தினம் யாருக்கும் சொந்தமான ஒரு தினம் அல்ல. அது ஒரு புனிதத்தை வெளிப்படுத்த உகந்த நல்ல தினம். பலபேருக்குள் புதைந்து கிடக்கக் கூடிய உணர்வுகளை ஒருவர் இன்னொருவரிடம் எந்தவித தயக்கங்களும் இன்றி சொல்ல ஊக்கம் கொடுக்கின்றது. உலகிலே காதலொன்றே வேற்றுமைகள் பார்ப்பது இல்லை. எனவே இந்த இனிய பொன்னான நாளை அனைவரும் மகிழ்ட்சியுடன் கொண்டாடுவோம். காதலர் இல்லாதாரும் இந்த புதிய நாளில் சபதம் எடுத்துக்கொள்ளுங்கள். சமூகத்துள் இருக்கும் வேற்றுமைகளை களைந்து ஒருவருக்கொருவர் அன்பு பகிர்வதற்காய்.

நான் யாரையும் காதலிக்கவில்லை, ஆனாலும் காதலர் தினத்தை காதலிக்கின்றேன்.

காதலர்தினம் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#4
காதல் புனிதம் ஆவதும் அசிங்கமாவதும் காதலர் தினம் கொண்டாடுவதால் அல்ல...தினம் தினம் உங்கள் உங்கள் மனம் எடுக்கும் நிலை சார்ந்ததே அது...!

பூக்கள் கொடுப்பதும் பரிசு கொடுப்பதும் பொது இடத்தில் முத்தம் கொடுப்பதும் கட்டிப்பிடிப்பதும் காதலைப் புனிதமாக்காது...அது காதலும் அல்ல..! காதல் அகத்தோடு இப்பது உடல் கூட அதை வெளிக்காட்டாத போது நீங்க ஏன் அதை கேளிக்கையாக்குகிறீர்கள்...! இன்று பலரும் காதலர் தினம் கொண்டாட என்று ஒரு சோடி தேடும் நிலைக்கு வந்துள்ளனர்... இதுதான் காதலோ...???! மேற்குலக வியாபாரிகளுக்கு ஜீவிய கால விளம்பரம் ஒட்ட கிடைத்த ஒன்றுதான் காதல்... தவறாமல் பிடித்துக்கொண்டுள்ளார்கள்...உலகம் பூராவும் நல்ல காதல் வியாபாரம் நடக்கிறது...! காதல் இன்று வியாபாரமாகி இருப்பது இத்தினத்தால் மேலும் விளம்பரப்படுத்தப்படுகிறது...! இது காதலைப் புனிதப்படுத்தவில்லை களங்கப்படுத்துகிறது...!

காதலின் புனிதம் புறத்தில் அல்ல அகத்தில் இருக்க வேண்டியது...! இல்லையோ...அது புனிதம் அல்ல...! மற்றவரிடத்தில் உள்ள அதை நீங்களோ நாங்களோ காணமுடியாது...ஆனால் அதை நீங்கள் எப்படியோ புனிதம் என்று அளவிட்டுவிட்டீர்கள்..! அது உங்களுக்கே வெளிச்சம்....! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
அவங்க கொண்டாடுறாங்க.. நாங்க காவியங்களிலேயும் காப்பியங்களிலேயும் பக்கம் பக்கமா எழுதி... இப்ப சினிமா பாடல்கள் என்று நேரக்கட்டுப்பாடின்றி இரசித்து... வாழ்க்கையையே வீணடித்துக் கொண்டிருக்கிறமே.. இதுக்கும் பார்க்க ஒரே ஒருநாள் கொண்டாடிட்டு.. பார்க்க வேண்டிய அலுவல்களை பார்ப்பது மிக மிக சிறந்ததுதானே.. ப்ளீசு.. கொண்டாட விடுங்கப்பா... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#6
காப்பியங்கள் கெளரவமாகச் சொன்னதையே கேவலமாக்கிய நீங்க....இப்ப சினிமாவைக் கேவலப்படுத்துற ஆக்கள்...காதலர் தினம் என்று ஒருநாளை வைச்சு காதலை கேவலத்திலும் கேவலம் ஆக்குறீங்க...!பாவம் வலன் அந்தாள் தான் பட்டதை உணர்வு பூர்வமா நினைவு கூறச் சொன்னா...நீங்க அந்த உணர்வையே சீரழிக்கிறீங்க...! காதல் சொக்கிலேட்டுக்குள்ளும் ரோசாச் செண்டுக்குள்ளும் வைன் புட்டிக்குள்ளும்...கருத்தடைச் சாதனக்களுக்குள்ளும்....தள்ளாடுது...இது தேவையா..???!

எதைக் கொண்டாடுறீங்க...அதுதான் கேள்வியே... காதல் வெளியில எந்த வடிவத்திலும் தெரியாதது...வாறவன் போறவள் எல்லாம் காதல் என்று உச்சரிச்சுக் கொண்டு பூச்செண்டோட திரிஞ்சா கண்ட கண்ட பரிசோட திரிஞ்சா எங்க காதல் எதில காதல் என்ற ஒரு தோற்றத்தையே காணமுடியல்ல...! அடுத்த நாள் கேட்டா...அது சும்மா வலண்டைன்ஸ் டேக்குப் போனம்...குடிச்சம்...கூத்தடிச்சம்...கூடினம்...பிரிஞ்சிட்டம்...முடிஞ்சுது காதல்...!

இதுதான் காதலர் தினம் வெளிப்படுத்தும் காதலா...இதை நீங்க எதிர்பார்த்தால்..நிச்சயம் எங்கள் ஆதரவு அதற்குக் கிடைக்காது...! பிறக்கும் போது மனிதனாகப் பிறந்த நீ வாழும் வரை மகானாக வேண்டாம் மனிதனாகவே வாழப்பார்....கேளிக்கைகளுக்காக மனித உணர்வுகளைக் கேவலப்படுத்தாதீர்கள்...!

இப்ப ஒரு பிறந்த நாள் பாட்டியை வையுங்க கூடுங்க கூத்தடியுங்க...யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள்..அது உங்க உங்க சுதந்திரம்...ஆனால் காதல் என்பது மனித மற்றும் உயிரினங்களுக்கான உணர்வு அதை எவரும் தாங்க தாங்க நினைச்ச மாதிரி கொச்சைப்படுத்த அனுமதிக்க முடியாது...அது மனித வாழ்வியல் கோலத்தை சமூகக் கட்டமைப்பைப் பாதிக்கப்பண்ணும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
காதல் என்பது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடு. அது பல வடிவங்களில் இருக்கலாம். தாய் தந்தயிடம் மகனோ அல்ல மகளோ அன்பு செலுத்துவதும் காதலே. ஆனால் இன்றய இப் பொன்நாள் ஒரு காதலன் தன் காதலியிடமோ அல்ல காதலி தன் காதலனிடமோ தன் உணர்வை வெளிப்படுத்த உகந்த நன் நாள். அகத்தோடு மட்டும் நிற்பவை அல்ல காதல் உணர்வின் விளிப்பாடுகள். அகத்தில் தோன்றுகின்ற அன்பின் வெளிப்பாடு புறத்திலிம் எதிரொலிப்பதனை நாம் பல சந்தர்ப்பங்களில் காண்கின்றோம். சோகம் கூட ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடே அதன் எதிரொலியினை அழுகையின் வடிவில் நாம் புறத்தில் காண்கின்றோம்.
எனவே உணர்வுகள் அகத்தில் அடக்கி வைக்கப் படுபவை அல்ல அவை புறத்திலும் உணரப்படுபவை. சமத்துவத்தை வெளிப்படுட்த்தும் காதலர் தினம் புனிதமானதே. இப் புனித நாளை தமிழர்கள் கொண்டாடுவதில் தவறேதும் இல்லை.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#8
kuruvikal Wrote:...ஒரு கணம் சிந்தியுங்கள்...<b>காதலர் தினம் தமிழர் திருநாளா என்று</b>....!!!!!!!!!!!!!

ஒரு கணம் ஏன் சிந்திக்க வேண்டும்..நிச்சயமாக இது ஒரு வியாபாரந்தான். எக்கட சனத்துக்கு இப்ப வெள்ளக்காரன் என்ன செய்தாலும் அது ஒரு பெரிய விசயந்தான். இதை முட்டாள்தனமென்பதா அல்லது வேறு ஏதாவது சொல்வதா????
காதலர் தினத்தை உருவாக்கியவர்களுக்கே ஒழுங்கான காதலுக்கு விளக்கம் இன்னும் தெரியவில்லை அதற்குள் (உங்களுக்கெல்லாருக்கும் தெரியுந்தானே அவங்கட காதலப்பற்றி)இதையறியாமல் எங்கடவையளுக்கும் ஒரு காதலர் தினமாம்.
இதில் இந்தியத்தமிழரின் லொல்லுத்தான்ப்பா சகிக்க முடியல..
Reply
#9
Mathuran Wrote:காதல் என்பது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடு. அது பல வடிவங்களில் இருக்கலாம். தாய் தந்தயிடம் மகனோ அல்ல மகளோ அன்பு செலுத்துவதும் காதலே. ஆனால் இன்றய இப் பொன்நாள் ஒரு காதலன் தன் காதலியிடமோ அல்ல காதலி தன் காதலனிடமோ தன் உணர்வை வெளிப்படுத்த உகந்த நன் நாள். அகத்தோடு மட்டும் நிற்பவை அல்ல காதல் உணர்வின் விளிப்பாடுகள். அகத்தில் தோன்றுகின்ற அன்பின் வெளிப்பாடு புறத்திலிம் எதிரொலிப்பதனை நாம் பல சந்தர்ப்பங்களில் காண்கின்றோம். சோகம் கூட ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடே அதன் எதிரொலியினை அழுகையின் வடிவில் நாம் புறத்தில் காண்கின்றோம்.
எனவே உணர்வுகள் அகத்தில் அடக்கி வைக்கப் படுபவை அல்ல அவை புறத்திலும் உணரப்படுபவை. சமத்துவத்தை வெளிப்படுட்த்தும் காதலர் தினம் புனிதமானதே. இப் புனித நாளை தமிழர்கள் கொண்டாடுவதில் தவறேதும் இல்லை.

ஆண் - பெண் காதலுக்கும் பாசம் கலந்த அப்பா அம்மா சகோதரங்கள் மீதான காதலுக்கும் இடையே உணர்வு ரீதியான தெளிவான வேறுபாடுண்டு...! காதலை வெளிப்படுத்த காதல் கொண்டவங்களுக்கு நாள் நட்சத்திரம் அவசியமில்லை...! காதல் ஒரு நாளுக்குரியதுமல்ல...அது வாழ்வின் எல்லை வரை தொடர வேண்டியது...! ஏன் புறத்தே வேசங்களால் வெளிக்காட்டாமலே காதலை அன்பால் காட்டிக் கொண்டே இருக்கலாம் அதுதான்...யதார்த்தமானது...உண்மையானது...! Idea

மிச்சமெல்லாம் வேசம்...வேசத்துக்கு களம் அமைப்பதற்குத்தான் காதலர் தினம்...அது காதலைக் கொச்சைப்படுத்தும் தினமே அன்றி..நன்னாளாக வெளிப்படுத்தப்படும் முறை கொண்டு தெரியவில்லை...! Idea

உண்மையான காதலன் காதலிக்கு இது அவசியமும் இல்லை...அவர்களுக்கு உள்ளுணர்வே சொல்லும் அவர்களின் காதலின் அன்பின் பாசத்தின் அளவை...அதை அவர்கள் தினந்தோறும் பரிமாறி மகிழ்ந்தே கொள்வர்...! இது வெளிவேசக்காரர்களை... காதல் முக்காட்டிட்டு களமிறக்கும் திருநாள்...<b>காதல் கோமாளிகள் திருநாள்</b>...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
kuruvikal Wrote:இன்று பலரும் காதலர் தினம் கொண்டாட என்று ஒரு சோடி தேடும் நிலைக்கு வந்துள்ளனர்... இதுதான் காதலோ...???!

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#11
காதலர் தினமானது காதலை அன்றுடன் முடித்துவிடுவது அண்று. அன்றய தினத்தில் அவர்களின் அன்பை பரிமாறும் பொளுது, அன்புன் ஊற்றும், உணர்வும் மேலோங்குகின்றது. கல்யாண சடங்குகளிலும் இனியது காதலர் தினம். வெள்ளைகாறனால் கொண்டுவரப்பட்டது என்பது வீண்விவாதம். அப்படி பார்த்தால் நாம் அறிவிலிகளாகவெ இருந்திருக்க வேண்டும். மனித சமூகம் தழைப்பதற்கு எது எது உகந்ததுவோ அவற்றை நாம் வரவேற்பதே சிறந்த பண்பாடாகும்.

காதலர் தினம் யாருக்கும் எதிரானதன்று. அதை சிலர் தங்களின் சுயனலத்திற்காக பயன் படுதினால். அது காதலர் தினத்தின் தவறாகாது. மருத்துவம் புனிதமானது அதனையும் தான் தவறாக பயன்படுத்துகின்றார்கள். காதல்ர் தினம் சமத்துவத்தின் நாள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#12
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சாதி மதம் மொழி இனம் நிறம். எல்லாவற்றைகும் தாண்டியது காதல் என்கிறாங்க.. இவங்க என்ன.. காதலை தமிழ்காதல் சிங்களக்காதல் என்கிறாங்க..??? :roll: :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
Quote:அவங்க கொண்டாடுறாங்க.. நாங்க காவியங்களிலேயும் காப்பியங்களிலேயும் பக்கம் பக்கமா எழுதி... இப்ப சினிமா பாடல்கள் என்று நேரக்கட்டுப்பாடின்றி இரசித்து... வாழ்க்கையையே வீணடித்துக் கொண்டிருக்கிறமே.. இதுக்கும் பார்க்க ஒரே ஒருநாள் கொண்டாடிட்டு.. பார்க்க வேண்டிய அலுவல்களை பார்ப்பது மிக மிக சிறந்ததுதானே.. ப்ளீசு.. கொண்டாட விடுங்கப்பா...
_________________

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நீங்களும் கொண்டாடுறியளா..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#14
paandiyan Wrote:
kuruvikal Wrote:...ஒரு கணம் சிந்தியுங்கள்...<b>காதலர் தினம் தமிழர் திருநாளா என்று</b>....!!!!!!!!!!!!!

ஒரு கணம் ஏன் சிந்திக்க வேண்டும்..நிச்சயமாக இது ஒரு வியாபாரந்தான். எக்கட சனத்துக்கு இப்ப வெள்ளக்காரன் என்ன செய்தாலும் அது ஒரு பெரிய விசயந்தான். இதை முட்டாள்தனமென்பதா அல்லது வேறு ஏதாவது சொல்வதா????
காதலர் தினத்தை உருவாக்கியவர்களுக்கே ஒழுங்கான காதலுக்கு விளக்கம் இன்னும் தெரியவில்லை அதற்குள் (உங்களுக்கெல்லாருக்கும் தெரியுந்தானே அவங்கட காதலப்பற்றி)இதையறியாமல் எங்கடவையளுக்கும் ஒரு காதலர் தினமாம்.
இதில் இந்தியத்தமிழரின் லொல்லுத்தான்ப்பா சகிக்க முடியல..

kuruvikal Wrote:.......இன்று பலரும் காதலர் தினம் கொண்டாட என்று ஒரு சோடி தேடும் நிலைக்கு வந்துள்ளனர்... இதுதான் காதலோ...???! மேற்குலக வியாபாரிகளுக்கு ஜீவிய கால விளம்பரம் ஒட்ட கிடைத்த ஒன்றுதான் காதல்... தவறாமல் பிடித்துக்கொண்டுள்ளார்கள்...உலகம் பூராவும் நல்ல காதல் வியாபாரம் நடக்கிறது...!
உண்மைகள். :|


ஓ தமிழா... உங்கள் வளர்சி நாகரீகத்தில் மட்டும் தானா... உங்கள் மண்ணில்தான்... உங்களது இனத்தனித்துவத்தின் அடையாளம் பதிந்து கிடக்கிறது :|
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b> Idea
Reply
#15
tamilini Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சாதி மதம் மொழி இனம் நிறம். எல்லாவற்றைகும் தாண்டியது காதல் என்கிறாங்க.. இவங்க என்ன.. காதலை தமிழ்காதல் சிங்களக்காதல் என்கிறாங்க..??? :roll: :wink:

தமிழினி...காதலுக்குத்தான் பேதமில்ல..அது உணர்வால் பிறப்பது...காதலர் தினத்துக்கு தெளிவா இடத்துக்கிடம் பேதம் இருக்கு...அது ஆக்கள் தங்கள் தங்கள் விருப்பத்துக்கு வியாபாரத்துக்குப் ஏற்ப பிறப்பிப்பது...! Idea

காதலுக்கு... அன்பைப் பொழிய ஏன் வைன் குடிக்கவேணும்...இல்ல பியர் அடிக்க வேணும்...இல்ல...இப்படிப் பலதும் பண்ண வேணும்... காதல் மகிழ்ச்சி என்பது அன்பைப் பரிமாறுவதால் உளத்தால் எழுவது...அதற்கேன் வெளிவேசம்....தேவையில்லாத வேடங்கள்...! Idea

சிலர் இதே தினத்தை ஏதோ காதலுக்கு சுதந்திரம் தரும் தினமாகக் கருதி...பச்சை நிற ஆடைகள் அணிந்து கட்டாயக் காதல் வரவழைக்கினமாம்...இன்னும் சிலர் செய்ய வேண்டிய சேட்டைகளை செய்து போட்டு இது லவேர்ஸ் டே எதுக்காடி இருக்கு என்றாங்க...இதுதான் காதலர் தினம் தரும் விளைவுகளோ...இதுதான் புனித நாளின் பணிகளோ...!

இப்போ தியாகிகள் நாளை கூத்தும் கும்மாளமுமா அடிக்கச் சொன்னா அதை அங்கீகரிப்பீங்களோ... அதேபோற்தான் காதலுக்காய் தியாகம் பண்ணினவன் காதலுக்கு மரியாசை செய்யச் சொன்ன நாள் தான் இது...ஆனா...அதுவா நடக்குது...இதுதான் மரியாதை செய்யும் நடைமுறைகளோ...??!

இவர்களுக்கு முன்னரே தமிழர்கள் காதலுக்கு மரியாதை செய்யச் சொல்லி எத்தனையோ உதாரணங்களைக் காட்டியும் கடைப்பிடிக்க மறுப்பவர்கள்...வலண்டைன் டேக்கு முன்னுரிமை அளிப்பதாய் வேசம் போடுவது ஏன்...???! எல்லாம் நாசகாரியத்துக்குத்தான்...! காதலுக்காய் அல்ல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
சத்தியமாய் நாங்க இது எல்லாம் செய்யல.. வாழ்த்தினதோட சரி.. செய்யுறவங்க சொல்லுங்க.. நமக்குத்தெரியாது.. :wink: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#17
<span style='font-size:21pt;line-height:100%'>காதலர் தினம் மட்டுமல்ல தைப்பொங்கள், புதுவருடம், எழுச்சி தினங்கள் இன்னும் பிற தினங்கள் தேவையா என்று கேள்வி எழுப்பலாம். பண்டிகைகள் தினங்கள் மக்களை மகிழ்சியாக வைத்திருக்கவேண்டும் அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை. அவை எந்த இனத்திற்கோ கலாச்சாரத்திற்கோ சொந்தமாக இருந்தாலும் அவற்றை உங்களால் ஏற்றுக்கொள்ளகூடியதாக இருந்தால் கொண்டாடுகள் ஆனந்த்மாக இருங்கள், இல்லையேல் அவற்றை விட்டுவிடுங்கள். தமிழராக இருந்தால் காதல்தினம் கொண்டாடலாமா என்று கேட்பது போல் கிறிஸ்மஸ் கொண்டாடலாமா என்றும் கேட்கலாம். அது தமிழர்கள் மதமல்லவே பின்பு புகுந்ததுதானே என்று வரலாறும் பேசலாம். என்னை பொறுத்தவரை பொங்கல், புது வருடம், கிறிஸ்மஸ், ஹஜ் தினம், காதலர் தினம், அன்னையர் தினம் எதுவும் கொண்டாடுவதில் தப்பில்லை. பண்டிகைகளின் இன, மத, மொழி வேறுபாடு பார்க்காதீர்கள்.

மற்றும் ஒரு விடயம் நாம் வாழ்நாள் முழுவதும் காதலிக்கிறோமே அதனை பெப் 14 ஒரு நாள் மட்டும் வெளியில் சொல்லி காட்டதேவையில்லை என்றும் சிலர் சொல்ல்லலாம். அன்பை மனதில் அடைத்து வைத்திருந்து பயனில்லை, அதனை வெளிப்படுத்துங்கள். நமக்கெல்லாம் வெளிச்சம் உட்பட இன்ன பல பயன் தரும் சூரியனை ஒரு நாள் மட்டும் தைப்பொங்கள் என்ற பெயரில் நன்றி சொல்லி கொண்டாடுகின்றோமே அது ஏன்? நமக்காக உயிர் துறந்தவர்களை குறிப்பிட்ட தினங்களில் நினைவு கூர்கின்றோமே அது ஏன்? அப்படி செய்வதால் நாம் இவற்றை எல்லாம் மற்றய தினங்களில் மறந்துவிட்டோம் என்று அர்த்தமாகுமா என்ன?</span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#18
மதன் உங்கள் கருத்தின் படி பார்த்தால்...மனித உணர்ச்சிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நாள் குறித்து விசேடமாக வெளிப்படுத்துவதைத்தான் விரும்புவீர்களோ...அப்ப எனி அழுகை நாள் என்று ஒரு நாள் வைத்து எல்லோரும் அழுங்கள்...சிரிக்கும் நாள் என்று வைத்து சிரிக்காதவர்களும் அன்று சிரித்து மகிழுங்கள்...குளிக்கும் நாள் என்று ஒன்று வைத்து அன்று விசேடமாகக் குளித்து மகிழுங்கள்...இப்படியே வருசம் 365 நாளையும் ஏதாவது ஒரு நாளாக்கிட்டியள் என்றா பிரச்சனை முடிஞ்சுது...ஒரே கொண்டாட்டம் தான்...தினமும் செய்ய வேண்டியதை மறக்கிற ஆக்களுக்கு உதுகள் உதவும்...பிசி ஆக்களல்லோ நீங்கள் எல்லோரும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

காதலுக்கு சூரியனுக்கும் வேற்பாடு புரியாம....காதல் உணர்ச்சி..உங்களோட கூட இருப்பது உங்கள் மனம் சார்ந்தது...இன்றைய தினம் மனம் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தால் காதல் உணர்வை வெளிப்படுத்தாமல் போகலாம்...அதற்காக காதல் இல்லை என்பதாகிடுமா...ஏனைய்யா...அறிவிருந்தும் சிந்திக்க மறுக்கிறீர்கள்...!

பொங்கல் இட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது சூரியனின் சேவையை தேவையை சொல்ல...காதல் அப்படி நினைவு கூர்ந்து அறியப்படுவதில்லை...அது உங்களோடு உங்களுக்குள் பிறக்கும் உணர்வு...! பறவைகளும் மிருகங்களும் என்ன லவ்வேர்ஸ் டே கொண்டாடியா காதலை வெளிப்படுத்துதுகள்...! பருவம் வர அதுதானா வெளிப்படும்..நீங்க வைன் போத்திலோட நின்று வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்ல...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
8) ஆனால் :? செய்யுறீர்கள் மதன்... :| :wink:
Reply
#20
kuruvikal Wrote:மதன் உங்கள் கருத்தின் படி பார்த்தால்...மனித உணர்ச்சிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நாள் குறித்து விசேடமாக வெளிப்படுத்துவதைத்தான் விரும்புவீர்களோ...அப்ப எனி அழுகை நாள் என்று ஒரு நாள் வைத்து எல்லோரும் அழுங்கள்...சிரிக்கும் நாள் என்று வைத்து சிரிக்காதவர்களும் அன்று சிரித்து மகிழுங்கள்...குளிக்கும் நாள் என்று ஒன்று வைத்து அன்று விசேடமாகக் குளித்து மகிழுங்கள்...இப்படியே வருசம் 365 நாளையும் ஏதாவது ஒரு நாளாக்கிட்டியள் என்றா பிரச்சனை முடிஞ்சுது...ஒரே கொண்டாட்டம் தான்...தினமும் செய்ய வேண்டியதை மறக்கிற ஆக்களுக்கு உதுகள் உதவும்...பிசி ஆக்களல்லோ நீங்கள் எல்லோரும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


..

உங்கள் கேள்வி மற்றய அனைத்து பண்டிகைள் மற்றும் நினைவு தினங்களுக்கும் பொருந்துமா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 9 Guest(s)