05-24-2005, 05:35 AM
பெயர்ப்பலகை அழிக்கும் போராட்டம்: ராமதாஸ், திருமாவளவன் கைது
மே 23, 2005
சென்னை:
சென்னையில் பிறமொழிப் பெயர்ப்பலகைகளை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ராமதாஸ், திருமாவளவன், பழ.நெடுமாறன் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
வணிக நிறுவனங்களில் தமிழ் அல்லாத பிற மொழிப் பெயர்களை அழிக்கும் போராட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் தலைமையிலான தமிழ் பாதுகாப்பு இயக்கம் அறிவித்திருந்தது.
இதன் படி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு முழுவதும் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பெயர்ப் பலகைகளை அழிக்கும் போராட்டம் நடைபெற்றது.
அதன்படி இன்று சென்னையில், அரசுத் தலைமை பொது மருத்துவமனை எதிரே உள்ள மேயோ ஹால் பகுதியில், ராமதாஸ், திருமாவளவன், பழ.நெடுமாறன் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த இடத்தில்இருந்த கடைகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த வாசகங்களையும், ஆங்கில விளம்பரப் பலகைகளிலும் கரி பூசி அழித்தனர். இதையடுத்து பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகவும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி ராமதாஸ், நெடுமாறன், திருமாவளவன் உள்ளிட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல மதுரையில் கட்டபொம்மன் சிலை அருகே இப்போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரும், கடலூரில் 500க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர். வேலூர்,கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
thatstamil