Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேரன் பேர்த்தி ..!
#1
<b>பேரன் பேர்த்தி ..!</b>

<img src='http://img67.imageshack.us/img67/2149/peranperthi18rp.jpg' border='0' alt='user posted image'>

<b>கதை பற்றி ::</b>

பிரான்சில் குடியேறிய புகலிடத் தமிழர் குடும்பம், தனது வாழ்வுச் சூழலுக்கு அமைவாக தனது பிள்ளைகளுக்கு தாய் மொழியைக் கற்றுக் கொடுக்காமல் வாழ்கிறது. ஊரிலிருந்து இவ்விடத்திற்கு வரும் தாத்தா தன் பேரர்களுடன் உறவாடுவதும், அவர் தன் வயோதிபக் காலத்தை இவர்களுடன் கழிப்பதுமாக இக்கதை செல்கிறது. மொழி உறவாடல் சீரற்றிருக்கும் பேரருக்கான குடும்பத்தின் கையறுநிலை இக் குறும்படத்தில் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது..

<b>மேலதிக விபரம்::</b>

புகலிடக் குறும்பட முயற்சியில் திருப்புமுனையாக அமைந்த குறும்படம்.. திரைக்கதை, பாத்திரத் தேர்வு, இசை, ஒளிப்பதிவு, நடிப்பு எனப் பல துறைகளிலும் அதிக சிரத்தை எடுத்து பல்துறைக் கலைஞர் பரா இயக்குநர் பராவாக அங்கீகாரம் பெறவைத்ததென்பது இதன் சிறப்பு. இங்கு வளரும் இளந்தலைமுறையினர் தம் தாய்மொழி உறவாடலைத் தொடரவேண்டிய அவசியத்தை உணர்வுபூர்வமாகச் சொல்லப்படுகிறது. இங்கு வளரும் சிறுவர்கள் பாத்திரமாக நடித்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்தது. இந்தச் சிறார்களுடன் ஈழத்திரையுலகின் மூத்த கலைஞர் ரகுநாதனும் இணைந்திருப்பது இப்படத்தின் தனிச்சிறப்பு. உண்மைச் சம்பவத்தை அடியொற்றி சிறந்த கலந்துரையாடல்களுக்கூடாக சீரான திரைக்கதையாக்கிப் படமாக்கியதாக் குறிப்பிட்டார் இயக்குநர் பரா. 2005 ம் ஆண்டிலும், 2006 ம் ஆண்டிலும் சலனம் பல்வேறு இடங்களில் (ஐரோப்பா, இந்தியா, இலங்கை) நடாத்திய குறும்பட நிகழ்வுகளில் திரையிடப்பட்டு பலரது வரவேற்பைப் பெற்றது இக்குறும்படம்.

<b>கலைஞர்கள்::</b>

ஆக்கியவர்: பரா
தயாரிப்பு: Global Tamil Movies, நேயாலயம்
நடிகர்கள்: இரகுநாதன், செல்வி சிந்தி பாபு, செல்வி வாகினி அமுதராஜா, செல்வன் யோகன் பாபு,
கதை: பாபு
ஒளிப்பதிவு: கலிஸ்ரஸ் ஜோன், விஜயபாலா
இசை: மு. பஷீர்
பாடகர்கள்: செல்வி மீரா பாலகணேசன், இரகுநாதன்
ஒலிப்பதிவு, வரைகலை, படத்தொகுப்பு: ரவீந்திரா

<b>இந்த குறும்படம் தறவிறக்கம் செய்து பார்க்க கூடியவாறு Arrow சலனம் தளத்தில் உள்ளது.

நன்றி :- சலனம்</b>
www.salanam.com
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)