Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழை மறக்காமல் இருக்க.
#11
வணக்கம் அஜீவன் ! சினிமா பார்ப்பது பொழுது போக்கிற்குத்தான். ஆனால் இங்கு தமிழைக்காக்க , எமது குழந்தைகள் தமிழை மறக்காமல் இருக்கச் சினிமா உதவுகிறதெனப் பலரது நினைப்பு. உங்களைப்போன்ற சிலர் மட்டுமே சினிமாவைப் பொழுதுபோக்குச் சாதனமாகப் பார்க்கிறார்கள். ஏனெனில் நீங்கள் அந்தத்துறைக்குள் இருக்கிறீர்கள்.
சரி நீங்கள் சொல்வது போல் அது பொழுது போக்குச்சாதனம் என எத்தனைபேரால் ஏற்றுக்கொள்ள முடிகிறது....? தொலைக்காட்சியென்ற ஊடகம் இன்றைய உலகின் தலைவிதியையே மாற்றும் வல்லமையைப் பெற்றுள்ளது. இங்கெல்லாம் பொழுது போக்கு மட்டுமா முக்கியம் பெறுகிறது ?

அவரவர் நாடுகளில் அவரவர் படைப்புக்களை அவரவருக்காகத்தான் படைக்கிறார்கள். ஆனால் தமிழ்ச்சினிமா தமிழகத்துக்காகவோ , இந்தியாவுக்காகவோ படைக்கப்படுவதில்லையே. அதை நம்மடியில் து}க்கிவைத்து நமக்கானது அதுதான் எனத்திணிப்போர் யார் ? இங்கு குடைவது , குத்துவது , வலிப்பது எல்லாவற்றிற்கும் பொறுப்பானவர்கள் யார் ?

கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு சம்பவம்.
அந்தப்14 வயதுப்பெண்பிள்ளை தனது தமிழ் ஆசிரியரிடம் கேட்டாள் ஏன் நாம் தமிழ் கற்க வேண்டும் என.
ஆசிரியர் தத்துவம் பேசித்தமிழ் எம்முயிர் , மூச்சு என்றெல்லாம் முழக்கவில்லை. தமிழ்மொழி அவளுக்குத் தேவையேன் என்பதற்குச் சுருக்கமாகப் பதில் கொடுத்தார். ஆனால் அவளோ எனக்குத்தமிழ்ப்படமே போதும் நான் தமிழைப்பேச என்றாள். எத்தனை காலம்தான் படத்தையே பார்ப்பாய் அதுவும் ஒரு கட்டத்தில் உனக்குச் சலித்துவிடும் என்ற ஆசிரியருக்கு அவள் சொன்னாளே ஒரு தத்துவம் விஜஜ் உயிருடன் உள்ளவரை நான் சினிமா பார்ப்பேன். தமிழை மறவேன் என்றாள். விஜஜ் போல் பலபுதியவர்கள் வருவார்கள் அவர்கள் வரும்போது நீங்கள் நேசிக்கும் விஜஜ்கூட மறைந்து விடுவார் என்றதற்கு அவள் அப்பிடியொரு நிலைவந்தால் நான் தமிழையே மறந்து விடுவேன் என்றாள்.
இச்சம்பவம் தமிழ்ச்சினிமா எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் புரிவீர்கள்.

எம்மால் முடியாததைக்கூட முயன்றால் வெல்லலாம். காலம் சிலவானாலும் கற்றிடலாம். அடுத்தவன் பெயர்பாடினால் சந்தர்ப்பங்கள் வாங்குவது இக்காலத்தில் சுலபம். அதற்காக கண்டதையெல்லாம் விழுங்கி வாந்தியெடுத்தாலும் பறவாயில்லை என வக்காளத்து வேண்டுவது உயர்ந்த செயலா ?
சினிமா என்ற ஊடகத்துக்கு வெளியில் வந்து சற்றுநேரம் புலத்தில் வேரூன்றியுள்ள இளம் தலைமுறையின் நாளையை மனதில் கொண்டும் கருத்துத்தாருங்கள். பயனடையப் பல லட்சம்பேர் இருக்கிறோம். எனது துறை சினிமாவாகலாம் அதற்காக அங்கு தரப்படுவதெல்லாம் அமுதம் என்று வாதிடுவதால் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே பயனடைய முடியும்.
Reply


Messages In This Thread
[No subject] - by Saniyan - 10-21-2003, 11:39 PM
[No subject] - by veera - 10-22-2003, 09:38 AM
[No subject] - by kolumban - 10-22-2003, 11:36 AM
[No subject] - by Mathivathanan - 10-22-2003, 12:26 PM
[No subject] - by nalayiny - 10-22-2003, 02:52 PM
[No subject] - by Paranee - 10-22-2003, 03:20 PM
[No subject] - by AJeevan - 10-22-2003, 05:02 PM
[No subject] - by shanthy - 10-22-2003, 08:36 PM
[No subject] - by shanthy - 10-22-2003, 08:42 PM
[No subject] - by nalayiny - 10-22-2003, 08:49 PM
[No subject] - by Saniyan - 10-23-2003, 12:33 AM
[No subject] - by Kanakkayanaar - 10-23-2003, 07:11 AM
[No subject] - by veera - 10-24-2003, 12:05 PM
[No subject] - by AJeevan - 10-24-2003, 01:06 PM
[No subject] - by shanthy - 10-24-2003, 04:10 PM
[No subject] - by AJeevan - 10-25-2003, 12:26 PM
[No subject] - by kuruvikal - 10-25-2003, 07:56 PM
[No subject] - by AJeevan - 10-26-2003, 07:48 AM
[No subject] - by shanthy - 10-26-2003, 02:19 PM
[No subject] - by AJeevan - 10-26-2003, 07:11 PM
[No subject] - by Saniyan - 10-26-2003, 09:32 PM
[No subject] - by shanthy - 10-26-2003, 09:34 PM
[No subject] - by Saniyan - 10-26-2003, 09:39 PM
[No subject] - by Kanakkayanaar - 10-27-2003, 07:08 AM
[No subject] - by Kanakkayanaar - 10-27-2003, 07:15 AM
[No subject] - by aathipan - 11-02-2003, 08:09 PM
[No subject] - by Mathivathanan - 11-02-2003, 08:18 PM

Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)