09-09-2005, 05:20 AM
Mathana Wrote:வணக்கம்
எனக்கு ஒரு சந்தேகம்
திராவிடர் என்றால் தமிழர் தானே?
ஆரியார் என்றால் சிங்களவர் தானே?
ஆரியர், திராவிடர் என்ற பிரிவுகள் ஆராய்ச்சியாளர்கள் ஆதி மொழி இன குழுக்களை அடையாளம் காண உருவாக்கிய பெயர்கள். சிந்து நதிப்பள்ளத்தாக்கில் உருவாகிய நாகரிகத்தில் தோன்றி இந்தியாவின் வடக்கிலும் ஐரோப்பாவிலும் பரவிய மக்கள் ஆரியர் என அழைக்கப்பட்டனர். இவர்களது மொழிகளின் தாய் மொழி சமஸ்கிருதம். ஜேர்மனியர் தாம் ஆரியர் எனவும் உயர்ந்த குலத்தோர் எனவும் கருதுவர். அவ்வாறே வடக்கு இந்தியரும்.
திராவிட மொழிகள் சிந்து நதிப்பள்ளத்தாக்குக்கு முற்பட்டது. ஹரப்பா, மொகஞ்சதாரோ பள்ளத்தாக்கு நாகரீகத்தை சேர்ந்தது என்பர். தமிழ் இந்த திராவிட மொழிகளுள் முதன்மையான ஒன்று என கூறப்படுகிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், பிரகிருதி ஆகியன மற்ற திராவிட மொழிகள்.
இந்தியாவில் இ. வெ. ராமசாமி நாயுடு என்ற பெரியார் தமிழ்நாட்டில் பிராமண எதிர்ப்பு, கடவுள் மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்து பெரும் வெற்றி கண்டார். அவர் தமிழரல்ல. ஆகவே திராவிடரை, ஆரியரான பிராமணருக்கெதிராக ஒன்று திரட்ட முயற்சித்தார். அதில் அவர் வெற்றி பெறவில்லை. ஆனால்; திராவிட கட்சிகளும், கொள்கைகளும், திராவிடம் என்ற வார்த்தையும் தமிழ்நாட்டில் நிலைபெற்று விட்டன.
இலங்கையில் சிங்களவர்கள் மகாவம்சத்தின் படியும், மற்ற இன அடிப்படையிலும் வடஇந்திய கலப்பு கூடியவர்கள். இவர்களை மறைந்த இனவாதி ஜனாதிபதி ஜே. ஆர். ஜேயவர்த்தன ஆரியர்கள் என அழைத்து தன்தை ஒரு ஹிட்லராக்கி கொண்டார். உண்மையில் தமிழர்கள் சிங்களவர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆண்ட பிரிட்டிஷ் காலம் முடிந்து சில வருடங்களாகி இருந்த நிலை. சிங்களவர்கள் தமிழரிலும் பார்க்க பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று காட்ட ஜெயவர்த்தன செய்த அரசியல் சதி இந்த ஆரியர், திராவிடர் என்ற வார்த்தை பிரயோகங்கள். சிங்கள மொழியில் தமிழனை 'தெமிழ' என்றால் இழிவாக குறிப்பிடுவதாகவும் 'திரவிட' என்றால் மதிப்புடன் குறிப்பிடுவதாகவும் கூறுவார்கள்.