Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாரதியாரின் நினைவு தினம் - புரட்டாதி 11
#3
<b>மதன்,</b>

உங்களுடைய இணைப்புக்கு நன்றி. இதிலிருந்து தெரிகிறது, பாரதியாரின் வரலாற்றைக் கூட யாரோ திரித்து இருட்டடிப்புச் செய்து விட்டார்கள் என்பது. பாரதியைப் போன்று உலகத் தமிழர்களை நேசித்த ஒரு இந்தியனும் கிடையாது. பாரதியார் தான் <b>" விதியே! விதியே! தமிழச் சாதியை என்செயக் கருதி இருக்கின்றாயடா"</b> என்று உலகிலுள்ள பல தீவுகளிலும், கரும்புத் தோட்டங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும் துன்பப்படும் தமிழர்களையெண்ணி விதியை நொந்து கொண்டவர்.

இன்று பலர் ஈழத் தமிழர்களும், தமிழ் நாட்டுத் தமிழர்களும் தமிழர் என்ற முறையில் ஒன்று சேர்வதை விரும்பாதவர்கள், ஆனால் ஈழத்தமிழர்களையும் தன்னுடைய சகோதரர்களாக எண்ணி <b>" சிங்கள்ம், புட்பகம், சாவகமாகிய தீவு பலவினும் அங்கு தங்கள் புலிக்கொடி, மீன்கொடியும் கண்டு சால்புறக் கண்டவர் தாய் நாடு" </b>என்று பாடினார்.

பாரதியார் யானை முட்டி இறந்தார் என்று பலர் சொன்னாலும், பாரதியாரின் பார்ப்பன எதிர்ப்பாலும், சாதிக்கொடுமையை எதிர்த்தாலும், பார்ப்பனர்கள் தமிழர்களுக்குச் செய்யும் கொடுமையைக் கண்டு மனம் தாளாமல், தன்னுடைய பூணூலை அறுத்தெறிந்து நான் ஒரு பார்ப்பானல்ல, நான் ஒரு தமிழன் என்று கூறியது மட்டுமல்லாமல், தன்னுடைய பூணூலை ஒரு தாழ்த்தப்பட்ட சிறுவனுக்கணிவித்து, இவனும் பார்ப்பான் என்று சொன்னதால், ஆத்திரம் கொண்ட திருவல்லிக்கேணிப் பார்ப்பான்கள் அவரை அக்கிரகாரத்திலிருந்து வெளியேற்றி வீடில்லாமல் அலைய விட்டார்கள்.

உண்மையிலேயே பாரதியாரை யானை முட்டவில்லை, அவர் மேல் ஆத்திரம் கொண்ட திருவல்லிக்கேணிப் பார்ப்பான்கள் தான், நலிந்து, மெலிந்து பஞ்சாய் இருந்த பாரதியாரை யானை மேல் தள்ளி விட்டார்கள் என்று கூட படித்த ஞாபகம். யார் செய்தார்களோ தமிழ் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞனை இளமையில் இழந்து விட்டது.

மகாகவி பாரதியின் நினைவு தினத்தில் அவரை நினைவு கூர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
Reply


Messages In This Thread
[No subject] - by preethi - 09-11-2005, 09:52 AM
[No subject] - by Mathuran - 09-11-2005, 10:31 AM
[No subject] - by Thala - 09-11-2005, 10:53 AM
[No subject] - by Birundan - 09-11-2005, 01:33 PM
[No subject] - by இளைஞன் - 09-11-2005, 09:25 PM
[No subject] - by Birundan - 09-11-2005, 09:59 PM
[No subject] - by Birundan - 09-11-2005, 10:35 PM
[No subject] - by RaMa - 09-12-2005, 05:08 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)