Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எம்மை நாமே தொலைக்கிறோமா? 1
#1
ஈழத்தமிழர்களின் வரலாற்று ஆதாரங்கள் பலவிதங்களால் இல்லது போயின
1. தமிழ் பௌத்தர்கள இருந்ததற்கான வரலாறு சிங்களவர் தமது என உரிமை கோரி அபகரித்துகொண்டனர்
2. இந்து/சைவ சமயம் சார் ஆதாரங்களான புராதன ஆலயங்கள் போர்த்துகேயர், ஒல்லாந்தரால அழிக்கப்பட்டு அம்மூலப்பொருட்கள் கோட்டைகள் கட்ட பயன் பட்டன.
அதற்கு இன்றும் உள்ள ஆதாரமாக திருகோணமலை கோட்டைசுவரில் உள்ள
முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை எனும் கற்வெட்டு.
3. போர் சூழலால் அழிக்கப்பட்டவை.
4. நாமெ அழித்தவை, அழித்துகொண்டிருப்பவை

இதில

நாமே அழித்தவை /அழித்துகொண்டிருப்பவை தான் வருத்ததிற்குரியதும் எமது இழி நிலையுமாகும்.


எம்மிடம் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டடங்கள் தற்போது இல்லதுவிட்டாலும் சில நூற்வருடங்களுக்கு முற்பட்ட கட்டடங்கள் வீடுகள் ஆங்காங்கே காணப்படுகிறன. அவற்றையும் நாம் புதுவீடு கட்டுகிறோம் என்று இடித்து அழித்துகொண்டிருக்கிறொம். அவைதான் எமது கடந்த வரலற்றை பேசப்போகிறன என்பதை மறந்து இன்று எமது வெளி நாட்டு பணமும், புதிதாக்கல் எனும் அவாவும் எமது தொன்மையை நாமே குழிதோண்டி புதைப்பதாக அமைகிறது. ஏற்கனவே பல நூறு வீடுகள் அழிக்கப்பட்டு விட்டது. எஞ்சிய சிலவும் விரைவில் அழிக்கப்பட்டு நவீன வீடுகள் கட்டப்பட்டு விடலாம்.
இன்று மேற்கு நாடுகளில் குறிப்பக நான் இருக்கும் நாட்டில் அவர்கள் தமது தொன்மையான கட்டிடங்களை பேண மேற்கொள்ளும் நடவடிக்கைகள் , அவர்களிடம் உள்ள விழிப்புணர்வு எமது மக்களிடமோ அல்லது அது சார் துறையினரிடமோ இல்லாதது வருத்ததிற்குரியது. இங்கு பழைய வீட்டை புதிதாக்க போகிறார்கள் என்றால் அதன் முகப்பை அப்படியே பேணுவதற்குரிய முன் ஏற்பாடுகள் செய்துவிட்டு எஞ்சிய பகுதியை இடித்து புதிதாக்குவார்கள்.

இது நான் இருக்கும் நாட்டில் உள்ளா 1600 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்ட கோட்டை?
இதை தற்போது புதுப்பிக்க முயற்சிகள் நடக்கிறன.

<img src='http://img347.imageshack.us/img347/479/bru57po1gw.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img347.imageshack.us/img347/5787/bru79zl3fd.jpg' border='0' alt='user posted image'>

நாமோ அடியோடு கிளறி எறிந்துவிடுகிறோம்.


<img src='http://img347.imageshack.us/img347/2315/jaf10048us.jpg' border='0' alt='user posted image'>



மேலே படத்தில் காட்டப்பட்ட வீடு பருத்திதுறையில் கைவிடப்பட்டு இடிந்துள்ள வீடு.
இதே போல் கொக்குவில் பொற்பதிவீதியிலும் இரண்டுவீடுகள் இடிந்துகொண்டிருக்கிறன.
நல்ல நிலையில் இன்றும் உள்ள வீடுகள் சிலவற்றை சுழிபுரப்பகுதியிலும், காரைநகர்வீதி சங்கானையிலும் கண்டிருக்கிறேன். வட்டுகோட்டைபகுதியிலும் சிலவீடுகள் உள்ளன. அவற்றையாவது பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு ஆவது பாதுகாத்து எதிர்காலச்சந்ததிக்கு கொடுத்திமானால் அதுவே பெரிய காரியம்.
இதில் முக்கிய பங்காற்றவேண்டியது புலம்பெயர் மக்களே. ஏன் எனில் இன்கிருந்து போகும் கட்டளைகளுக்கு அமையவே அங்கு இடிப்பதுவும் கட்டுவதும் பெரும்பாலும் நடைபெறுகிறது.

சாவகசேரி இந்துகல்லுரியிலும் பாடசாலை ஆரம்பித்தகால சுண்ணம்பு கட்டடம் ஒன்று இருந்து.அதை அவர்கள் புத்தாக்கம் செய்து பேணிவைத்திருப்பது மிகவும் நல்லவிடயம். அதே போல ஏனைய பாடசாலைகளும், தனியாரும் செய்தால் சிலநூறு வருடத்து வரலாற்றையாவது காப்பாற்றலாம்.

போரால் சிதைந்த பழையவீடு

<img src='http://img347.imageshack.us/img347/935/45a3me5bz.jpg' border='0' alt='user posted image'>

நாம் செய்வோமா?

யாழ்ப்பாண வீடுகளை பற்றி தெளிவாக விபரிக்கும் இணையபக்கம் இதோ
http://us.geocities.com/rmayooranathan/
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
எம்மை நாமே தொலைக்கிறோமா? 1 - by KULAKADDAN - 09-22-2005, 10:49 PM
[No subject] - by Eswar - 09-23-2005, 12:42 AM
[No subject] - by sathiri - 09-23-2005, 06:17 AM
[No subject] - by வெண்ணிலா - 09-23-2005, 06:21 AM
[No subject] - by kuruvikal - 09-23-2005, 06:35 AM
[No subject] - by KULAKADDAN - 09-23-2005, 09:48 AM
[No subject] - by KULAKADDAN - 09-23-2005, 09:57 AM
[No subject] - by Thala - 09-23-2005, 10:00 AM
[No subject] - by Aravinthan - 04-19-2006, 06:44 AM
[No subject] - by நேசன் - 04-19-2006, 07:24 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 06:09 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)