Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம்பெயர்ந்தோரை அந்நியப்படுத்துதல்
#8
ஐயோ பாவம்....தங்களின் நிம்மதிக்காய் அவர்களின் நிம்மதியை தீர்மானிப்பது இவர்கள்....அவர்களா சிந்தித்து முடிவெடுக்க அவர்களுக்கு உரிமையுண்டு அதை தீர்மானிப்பது தனிமனித சுதந்திரம்.....அங்க ஊரில முதியோர் இல்லம் இருந்தாலும் மனதில சந்தோசம் இல்ல...கூடிப் பேச ஆக்கள் இல்ல...கோயில் குளத்துக்கு கூட்டிக் கொண்டு போக ஆளில்ல...ஆசைப்படுறதுகளை வாங்கிக் கொடுக்க ஆளில்ல....முதியோர் இல்லத்துக்கு ஒரு தடவை சிரமதானப் பணிக்காக சென்ற போது ஒரு முதியவர் கேட்டார் ராசா உங்கட அம்மா அப்பாவை என்னைப் போல இங்க அனுப்பிப் போடாதேங்கோ என்ன.....அப்படி என்று...அவருக்கு பிள்ளைகள் இருக்கு அதுவும் பலதுறைகளில் பிரகாசித்தபடி...சொந்தக் காணியை விற்று வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிப்பிச்சவர்...ஆனால் அவர் கதி.....?!!!...இப்படி இப்படி ஆயிரமாயிரமாய்....மனம் போல் வாழ்வு...இன்றைய இளையவர் நாளைய முதியவர்...இன்றைய சிறுவர் நாளைய இளையவர்....அவர்கள் எதைச் சமூகத்தில் காண்கிறார்களோ அதைத்தான் நாளை சிறிது மாற்றத்துடன் பிரதிபலிப்பர்....முதியோரும் சமூகத்தின் குடும்பத்தின் உறுப்பினரே அவர்கள் ஒன்றும் தனிப்பட்ட மனித ஜென்மங்கள் அல்ல....பலர் நாயும் பூனையும் வளர்ப்பர் ஆனால் சொந்தத் தாயைப் பார்க்கார்...என்னடா உலகமிது....

முதியோரை தனித்து நோக்காமல் அவர்களையும் உங்கள் குடும்பத்தின் உறுப்பினராக்குங்கள்.....அவர்களின் சிந்தனைக்கும் கருத்துக்கும் மதிப்பளியுங்கள்...அவர்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்குங்கள்.....அவர்களின் சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...அவர்கள் உங்கள் ஆத்மாவின் தோற்றுவாய்கள் என்பதை ஒரு கனம் சிந்தியுங்கள்...நாளை உங்கள் நிலையை அந்த இடத்தில் வைத்துச் சிந்தித்துப் பாருங்கள்...உங்கள் பிள்ளைகளுக்கு முதியோரை கவனிக்கும் முறை பற்றி நீங்கள் உங்கள் செயல் மூலம் கற்றுக் கொடுங்கள்....அதுதான் நாளை உங்களின் நிம்மதியான அந்திம வாழ்விற்கு அத்திவாரமாகும்....உங்கள் நித்திரையின் அரை மணிநேரத்தை அவர்களுக்காக தியாகம் செய்து அவர்களுடன் அன்புடன் கழியுங்கள்....அவர்களுக்கும் உங்களுக்கும் மகிழ்ச்சி பொங்கும்...அதே போல் முதியோரும் சூழலுக்கேற்ப தமது தேவைகளை எதிர்பார்ப்புக்களை கொஞ்சம் மாற்றி அமைத்து மனதால் குறைந்த நிறைவுடன் கூடிய திருப்தி கொள்ள முனைவது சாலச் சிறந்தது....அதுவே குடும்பத்து மற்றைய உறுப்பினர்களுக்கு தொந்தரவு இல்லாத சூழலை ஏற்படுத்தும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by anpagam - 12-31-2003, 04:28 PM
[No subject] - by kuruvikal - 12-31-2003, 05:16 PM
[No subject] - by kuruvikal - 12-31-2003, 05:36 PM
[No subject] - by yarl - 12-31-2003, 05:56 PM
[No subject] - by kuruvikal - 12-31-2003, 06:30 PM
[No subject] - by nalayiny - 12-31-2003, 07:37 PM
[No subject] - by kuruvikal - 01-01-2004, 12:16 PM
[No subject] - by Kanani - 01-01-2004, 06:36 PM
[No subject] - by Mathivathanan - 01-01-2004, 07:10 PM
[No subject] - by Mathan - 02-01-2004, 12:49 PM
[No subject] - by Mathan - 02-01-2004, 01:11 PM
[No subject] - by Mathan - 02-01-2004, 01:48 PM
[No subject] - by kuruvikal - 02-01-2004, 09:10 PM
[No subject] - by Mathan - 02-02-2004, 07:53 AM
[No subject] - by Mathan - 02-02-2004, 07:59 AM
[No subject] - by Mathivathanan - 02-02-2004, 08:38 AM
[No subject] - by Eelavan - 02-03-2004, 10:45 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)