01-18-2006, 05:44 AM
kuruvikal Wrote:தூயவன்.. நீங்கள் ஆரூரனின் வாதத்தை மட்டும் பார்க்கிறீர்கள். தற்போதைய பரதநாட்டிய நூல்களும் ஆசிரியர்களும் கற்றுக்கொடுப்பதைப் பற்றி..அவற்றை நிராகரிக்கக் கூடிய வலுவான ஆதாரங்கள் பற்றி எதுவும் இங்கு கதைக்கப்படவில்லை. பார்ப்பர்ணர்கள் வலுவான நீண்ட வரலாற்றைப் பதிய விட்டிருக்கிறார்கள்..! அதை ஒரு சில கட்டுரைகளால் தகர்க்க முடியும் என்பதிலும் அவர்களின் வாதத்தின் வழி சென்று நிராகரிப்புக்களைக் கொடுத்து வரலாற்றை மாற்றி எழுத வேண்டும். இலங்கையில் மாற்றி எழுதப்பட்ட தமிழர்கள் வரலாற்றையே நாம் இன்னும் திருத்தமுடியாது இருக்கிறோம். பரந்த பாரத தேசம் அடங்கிய சர்ச்சைக்குரிய புனைகதைகள் அடங்கிய ஒரு விடயத்தை ஒரு சிலரின் கட்டுரைகளால் தகர்க்க முடியும் என்பது சாத்தியமானதல்ல. அதைவிடவும் அவர்களின் பாதையில் சென்று அதை நிராகரித்துக்காட்ட வேண்டிய கடப்பாடு உண்டு..! அதை உணரத்தவறியவர்களில் நீங்களும் இருப்பது வருத்தமளிக்கிறது. நாட்டில் எதிர்க்கட்சி இருப்பது சாபக்கேட்டுக்கல்ல.. ஆளும் கட்சியின் தவறுகளை செயற்பாடுகளை செம்மைப்படுத்தவே.! அந்த வகையில் உங்கள் கருத்தை உணர்வுபூர்வமாக மட்டுமன்றி நியாயம் பிறப்பிக்கவல்லதாகவும் வையுங்கள். தவறான கண்ணோட்டங்களால் தனிநபர் வசைபாடல்கள் செய்வதால் இருக்கும் கருத்துக்கள் மாறிவிடாது. கருத்துச் சொல்லப்படும் போதுதான் விளக்கமும் சான்றும் தெளிவும் பிறக்கும்..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வணக்கம் குருவிகள்.
உங்கள் வாதத்தை பார்க்காமல் விடவில்லை.
எனக்குத் தோன்றும் சிறிய கேள்வி!
தொடக்கத்தில் இது தேவதாசிகளின் நாட்டியம் இந்த இழி நடனத்தை தமிழர் ஏற்ற வேண்டுமா என்று கேட்கின்றீர்கள்.
பின் சொல்லுகின்றீர்கள். இதை பாப்பாணர் தான் காப்பாற்றினார்கள். எனவே தமிழருக்கு சொந்தமில்லை என்று.
இவ்விரண்டின் மூலம் நாம் பட்டறிவது என்னவென்றால், தமிழருக்கு இதை சொந்தமாக காட்டவிடக்கூடாது என்ற எண்ணம் தானே உங்களிடம் இருந்து பிரதிபலிக்கின்றது.
(இதற்கு ஆதாரம் காட்டியாக வேண்டும் என்று நினைக்கவில்லை. எழுதிய உங்களுக்குத் தெரியும். அப்படி வேண்டும் என்றால் அதை காட்டத் தயார்)
[size=14] ' '