Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பரதநாட்டியம் தமிழரதா -சில பதில்கள்.
#17
Quote:Ponniyah, Chinniyah, Sivanandanam, and Vadivelu make up this Quartet. They are four brothers that made Bharatanatyam into what it is today

hinniyah- born in 1802, the oldest He took Bharatanatyam to Mysore/Karnataka, other states in India.

<b>ஆரூரன் அண்ணா நாங்கள் பரதநாட்டியம்பற்றித்தான் பேசுகிறோம்.. அதை நினைவில் வைத்திருங்கள்</b>..

<b>சுகுமாரு மாமா!</b>

<span style='color:green'>உமக்குப் புரிய வைப்பதற்காக ஜெயலலிதாவின் பெயர் மாற்றத்தை உதாரணமாக இழுத்து வந்தும் புரியவில்லையா அல்லது புரியாத மாதிரி நடிக்கிறீரா என்பது தெரியவில்லை. <b>நீர் சொல்வதெல்லாம், நாங்கள் ஜெயலலிதா பற்றித் தான் பேசுகிறோம் அம்முவைப் பற்றியல்ல நினைவில் வைத்திருங்கள்</b> என்பது போலிருக்கிறது. சினிமாவுக்கு வருமுன்பு ஜெயலலிதாவின் பெயர் அம்மு என்பது உமக்குத் தெரியும். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை எழுதுபவர்கள் அவ்ருடைய பாடசாலை நாட்களைப் பற்றி இன்று எழுதும்போதும் ஜெயலலிதா என்ற பெயரைத் தான் பாவிப்பார்கள், அம்மு என்ற பெயரையல்ல. ஏனென்றால் அந்தப் பெயரால் தான் அவரைப் பலருக்கும் அறிமுகம் இன்று.

அது போல் தான் சதிருக்குப் பரதநாட்டியம் என்று கிருஸ்ணையர் 1930 இல் பெயர் மாற்றம் செய்த பின்பு சதிரைப் பற்றியும், தஞ்சாவூர்ச் சகோதரர்களைப் பற்றி எழுதும் போதும் பரதநாட்டியம் என்று தான் குறிப்பிடுகிறார்கள். அதனால் தான் நானும் குறிப்பிட்டேன். இதற்கு மேலும் உம்முடைய மரமண்டையில் ஏறவில்லை என்று அடம் பிடித்தால் நான் என்ன செய்ய முடியும்


Quote:[size=13]நீங்கள் இந்தியாவுக்கு கிறிஸ்தவர்கள் எப்போது காலடிஎடுத்து வைத்தார்கள் என்பதற்கும் பதில் கூற கடமைப்பட்டவர்</span>..

<span style='color:green'>இதற்கும் இந்தத் தலைப்பிற்கும் எந்தத் தொடர்புமில்லை, இருந்தாலும் இப்படியொரு சிண்டு முடித்து கிறிஸ்தவதமிழர்களையும், சைவத் தமிழர்களையும் இந்த தளத்தில் பிரித்து விட நப்பாசை கொள்கிறீர். நானும் ஈழத் தமிழ்ச்சைவன் தான் அதற்காக தமிழர்களை மதவாரியாகப் பிரிக்க நினைக்கும் குள்ள நரித்தனத்துக்குத் துணை போக மாட்டேன்.

கிறிஸ்தவர்களின் இந்திய வரவு போத்துக்கேயர்களுடன் தொடங்கவில்லை. இதுவும் ஆரியப் படையெடுப்பு போன்றது தான் பல மாறுபட்ட கருத்துக்களுண்டு.
கிறிஸ்தவத்துக்கும் இந்தியாவுக்கும் பல தொடர்புகளுண்டு. பைபிளில் கூட 11 வயதிற்குப் பின்பு 33 வது வயது வரை யேசுநாதரைப் பற்றி எந்த தகவலுமில்லை, அவர் அக் காலகட்டத்தில் தெற்காசியா வந்து இங்குள்ள முனிவர்களுடனும், ஞானிகளுடனுமிருந்து தியானத்திலும் , ஆன்மீகத்திலும் ஈடுபட்டாரென்பது பல ஆராய்ச்சியாளர்களின் கருத்து, அக் கால கட்டத்தில் இந்திய உப கண்டத்திலிருந்த பல்வேறு நாடுகளும் ஆன்மீக அறிவில் முன்னணியில் விளங்கியது. அதனால அவரின் மறைவுக்குப் பின்பு, அவருடைய எல்லா சீடர்களும் மேற்கு நோக்கிச் செல்ல புனித தோமையார், உலகத்தின் வேறெந்தப் பகுதிக்கும் போகாமல் கிழக்கு நோக்கி வந்தார். அதை விட மகாபாரதத்திலுள்ள பல கதைகள் கொஞ்சம் கூட வித்தியாசமில்லாமல் பைபிளிலுள்ள கதைகள் தான். உதாரணமாக மகாபாரத்திலுள்ள கர்ணனின் கதையும், பைபிளில் உள்ள மோசஸின் கதையும் ஒன்று தான்


Quote:[size=13]நீங்கள்தானே அவர்களையும் பரதநாட்டியத்துள் கொண்டுவந்தீர்கள்.. சிறிது சிறிதாக படிப்படியாக முன்னேறுவோம் தற்போது இவைக்கான மறுமெழி போதும்.. </span>


[size=15]நான் கிறிஸ்தவர்களை எதற்கு உதாரணம் காட்டினேன் என்பதைப் புரியாமல் தும்பை விட்டிட்டு வாலைப் பிடித்தவன் மாதிரி உளறுகிறீர்.
இந்த முறையாவது நிதானமாக விளங்கிக் கொள்ள முயற்சி செய்யும், தமிழ்நாட்டைப் போன்று, ஈழத்தில் பரதநாட்டியம் ஒரு சில சாதியினரோ, மதத்தினரோ அல்லது குறிப்பிட்ட வருமானம் உள்ளவர்களின் முழுச் சொத்தல்ல.

ஈழத்தில் பார்ப்பனர்களும் அவ்வளவாக இல்லை, இருந்தாலும் அவர்களிடம் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரமுமில்லை. அவர்கள் கோயில்களைச் சொந்தமாக வைத்திருப்பதுமில்லை,. எங்களின் கோயில்களில், பார்ப்பான்கள் வெறும் கோயில் ஊழியர்களும், பூசகர்களும் மட்டும் தான் . எல்லாக் கோயில்களிலும் பார்ப்பான்கள் பூசை பண்ணுவதுமில்லை, உதாரணமாக செல்வச் சன்னதி முருகன் கோயிலும் கதிர்காம முருகன் கோயிலுமாகும். <b>அருளை அள்ளி வ்ழங்கும் செல்வச்சன்னதி முருகனும், கதிர்காமக் கந்தனும் தமிழ்நாட்டு முருகன் மாதிரி பார்ப்பான் தான் வேண்டுமென்று அடம் பிடிப்பதில்லை, ஏனோ தெரியாது, அதை வேறு தலைப்பில் ஆராய்வோம்</b>.


<b>அதனால் பரதநாட்டியம் தமிழர்களின் கலையாக மட்டும் தான் ஈழத்தில் கருதப்படுகிறது, சாதி, மத
வேறுபாடில்லாமல், ஈழத்துக் கிறிஸ்தவத் தமிழர்களும் பரத நாட்டியத்தைக் கற்கிறார்கள். ஆனால் சிவநடனத்தின் எழிலையும், கண்ணனின் லீலைகளையும் தமிழ்பாட்டிற்கு ஆடுவது மட்டுமல்ல, யேசு காவியம், வீரமாமுனிவரின் தேம்பாவணி, மற்றும் பைபிள் கதைகளையும் நாட்டிய நாடகமாக்கிப் பரதநாட்டியத்தில் தமிழில் பாடி ஆடுகிறார்கள். பல சைவத் தமிழர்களை விட, பரதநாட்டியத்தைத் தமிழாக்குவதில் அவர்கள் முன்னணியில் நிற்கிறார்கள்</b>,

ஈழ விடுதலைக்கும், தமிழின் வளர்ச்சிக்கும், கிறிஸ்வத் தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறுவனரும் கூட ஈழத்துக் கிறிஸ்தவப் பாதிரியாரான தவத்திரு தனிநாயகம் அடிகளாராவார்,
அவரின் நினைவாக உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் மதுரையில் அவரின் சிலையும் திறந்து வைக்கப் பட்டுள்ளது. <b>ஈழத்தில் தமிழை வளர்ப்பதில் கிறிஸ்தவத் தமிழர்களும் சளைத்தவர்களல்ல எனபதை நிரூபித்துள்ளார்கள்.</b>

<b>அதனால் பரதநாட்டியத்தை தமிழாக்கும் பணியில் அவர்களும் தங்களின் பங்களிப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் அதைத் தொடர்ந்து செய்வார்கள்</b>, நான் அதைச் சொன்னால் உமக்கு விளக்கம் குறைவென்ற காரணத்தால் கிறிஸ்தவர்கள் எப்பொழுது வந்தார்கள் என்று புலம்புகிறீர். வடிவாக வாசித்து விட்டும் பதிலெழுதிப் பழகும்.


Reply


Messages In This Thread
[No subject] - by Sukumaran - 01-22-2006, 05:48 AM
[No subject] - by vengaayam - 01-22-2006, 07:47 AM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:39 AM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:43 AM
[No subject] - by yarlpaadi - 01-22-2006, 09:05 AM
[No subject] - by Aaruran - 01-22-2006, 10:09 AM
[No subject] - by vengaayam - 01-22-2006, 07:06 PM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:01 PM
[No subject] - by vengaayam - 01-22-2006, 08:25 PM
[No subject] - by Aaruran - 01-22-2006, 08:44 PM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 09:20 PM
[No subject] - by Luckyluke - 01-23-2006, 07:47 AM
[No subject] - by Sukumaran - 01-24-2006, 04:15 AM
[No subject] - by Aaruran - 01-24-2006, 05:41 AM
[No subject] - by Sukumaran - 01-26-2006, 05:04 AM
[No subject] - by vengaayam - 01-26-2006, 07:29 AM
[No subject] - by vengaayam - 01-27-2006, 05:04 AM
[No subject] - by வர்ணன் - 01-27-2006, 05:21 AM
[No subject] - by Sukumaran - 01-27-2006, 07:34 AM
[No subject] - by Luckyluke - 01-27-2006, 09:11 AM
[No subject] - by narathar - 01-27-2006, 11:14 AM
[No subject] - by Sukumaran - 01-31-2006, 10:56 PM
[No subject] - by Aaruran - 02-01-2006, 03:37 AM
[No subject] - by Sukumaran - 02-04-2006, 11:32 AM

Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)