Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பரதநாட்டியம் தமிழரதா -சில பதில்கள்.
#31
*******
<span style='color:green'>விவரமில்லாமல் தன்னுடைய மதவெறியைக் காட்டி, தனக்குத் தெரியாத விடயத்தில் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டு ஆப்பிழுத்த குரங்கு மாதிரி இருந்த சுகுமாரு மாமாவுக்கு, தன்னுடைய கடைசிப் பதிலுடன் தலைப்பு மூடப்பட்டவுடன், அப்பாடா தப்பித்தேன் என்றிருந்தார், ஆனால் யாழ் களம் மீண்டும் தலைப்பைத் திறந்தது அவர்கள் மேல் கோபத்தை மூட்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அது அவருடைய எழுத்திலும் தெரிகிறது.
ஐயோ சுகுமாரு அங்கிள், நான் உங்களுக்கு உணர்வுகள் களத்தில் எழுதியதை யாரோ இங்கு பதிவு செய்ததால் இத் தலைப்பு மீண்டும் திறக்கப்பட்டது. இணையத் தளத்தை திறக்கவும், இழுத்து மூடவுமுள்ள உரிமை, எந்த தளத்திலும், நிர்வாகத்துக்கு மட்டும் தானுள்ளது என்பது இன்னுமா தெரியாது. அதெல்லாம் இருக்கட்டும் அது என்ன \"ஸ்திரம் தரம்\" தமிழா, அல்லது உங்களின் தேவபாசையா? ஆனால் தேவபாசை எப்படிச் செத்த மொழியானதென்பது அந்த தேவனுக்குத் தான் வெளிச்சம்


<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->[size=12]வெங்காயண்ணா.. பரதநாட்டியம் இலங்கைத்தமிழருக்கோ வெள்ளைத்துரைககளின் வரவுக்குப்பின் வந்த எட்டப்பர்கூட்டத்துக்கோ சொந்தமானதல்லதென்பது நீங்கள் இருவரும் தந்த தரவுகளிலிருந்து தெளிவாகியுள்ளது.. பரதநாட்டியத்தை தலைப்பாகக் கொடுத்துவிட்டு சதிர்ஆட்டம் ஆடுவது இந்துக்கள் அல்லாதவர்களாலேயே முடியும்.
இங்குதான் ஒட்டுண்ணிகள் யாரென்பதை கோடிட்டு காட்டியுள்ளீர்கள்.. நன்றியண்ணா.. </span><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<span style='color:green'>ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு என்பார்கள், சுகுமாரு மாமா தன்னுடைய சுய உருவைக் காட்டுகிறார். தமிழர்களை, இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர் என்று பிரித்தாள நினைக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர் இந்த சுகுமாரு என்பதை இன்றாவது இங்குள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

வெள்ளைத் துரைகளுக்குப் பந்தம் பிடித்து, தமிழர்களுக்குக் கொள்ளி வைத்த குள்ளநரிகள் யாரென்பதும், இன்றும் ஒரு பக்கவாயால் ஆரியப் படையெடுப்பு நடக்கவில்லையென்று சொல்லிக் கொண்டு, மறுபக்க வாயால் ஆரிய சமாஜம், அமைத்து, தங்களுடைய ஆரியத் தொடர்பை பற்றிப் பீற்றிக் கொண்டும், தமிழையும், தமிழரையும், தூற்றிக் கொண்டு, தமிழரிடம் ஒன்றுமில்லை, எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து இரவல் வாங்கியதென்று திரித்துக் கொண்டு, கூடவிருந்தே குழி பறிக்கும் குள்ளநரிகளும், ஓட்டுண்ணிகளும் எட்டப்பர்களும் யாரென்று தெரிய வேண்டுமானால் சுகுமாரு மாமா அக்கம் பக்கம் பார்க்காமல் கண்ணாடியைப் பார்த்தால் அவருக்கே தெரியும்.

தமிழர்களுடைய கலைகளில், பண்பாட்டில், பழந்தமிழ இலக்கியங்களில், பண்டைய கோயில்களில், தமிழர்கள் அனைவருக்கும் உரிமையுண்டு. தமிழன் ஆபிரிக்காவிலிருந்தாலென்ன,அமெரிக்காவிலிருந்தாலென்ன தமிழன், தமிழன் தான். கிறிஸ்தவத்தமிழர்கள் தமிழுக்கோ தமிழருக்கோ என்ன சதி செய்தார்களென்று சுகுமாரு மாமா, ஒரு தலைப்பைத் திறந்து வெளியிட்டால், அவருடைய கூட்டம் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த, செய்து கொண்டிருக்கிற சதிகளையும் மற்றவர்களும் தெரியப் படுத்துவார்கள்.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->[size=12]நீங்கள் இருவரும்; பரதநாட்டியம் இந்தியக்கலை என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.. இந்திய இந்துக்களுக்குச் சொந்தமான ஒரு நடன வடிவமைப்பை.. இசையை.. கலையை.. அதனுடைய பெயரை கபளீகரம் செய்யப்போகிறோம் என்று வெள்ளைத்துரைக்குச் சாமரம் வீசும் இலங்கையைச்சேர்ந்த ஒரு கிறிஸ்தவக்குழுமம் சொல்வது வேடிக்கையாயிருக்கிறதண்ணா.. </span><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<span style='color:green'>சுகுமாருக்குத் தமிழ் கூட விளங்கவில்லை, நாங்கள் பரதநாட்டியம் என்று இன்று அழைக்கப்படும் சதிர் என்ற நாட்டிய வடிவம் தமிழருடையதென்று தான் கூறுகிறோம், இந்தியருடையதென்றல்ல. ஒரு அலகபாத்திலுள்ள இந்தியனை விட ஆபிரிக்காவிலுள்ள தமிழனுக்கு இந்த நாட்டிய வடிவத்தில் உரிமை கொண்டாட முடியுமென்பது தான் என்னுடைய கருத்து.

விடியம விடிய ராமர் கதை, விடிஞ்ச பிறகு ராமனுக்கு சீதை என்ன முறையென்றவன் மாதிரி தான் சுகுமாரு மாமாவும். இந்த தலைப்பின் சாரமே தமிழரின் சதிராட்டத்துக்குப் பரதம் என்ற பெயரை மாற்றி, அதன் தமிழ் வேர்களை மறைக்கப் பார்க்கிறார்கள், தமிழர்களே உங்கள் கண் முன்னாலேயே உங்களின் கலைகள் பறி போகிறதென்பது தான், சதிர் இன்றும் தமிழருடைய நாட்டியம் தான், அவா பெயரைத் தான் மாற்றிச் சுத்துமாத்து செய்து விட்டார்கள். பரதநாட்டியம் என்று பெயர் மாற்றப் பட்ட தமிழரின் சதிராட்டம், தமிழரின் நாட்டியக் கலை, அது எல்லாத் தமிழருக்கும் சொந்தமானது.
இந்திய அரசோ, அல்லது தமிழ்நாடு அரசோ, தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை கூட இந்துக்களின் நாட்டியமென்று சொல்லவில்லை ஆனால் தமிழரின் நாட்டியவடிவம் என்று தான் சொல்கிறது. மாறாக அதைத் தமிழரின் நாட்டியம் என்று சதிரின் (பரதத்தின்) உண்மையான வேரை ஒத்துக்கொள்கிறார்கள்.


<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->[size=12]நான் ஏற்கெனவே சொல்லியபடி நீங்கள் சொல்லும் சதிர் பெயரிட்டு உங்களுக்கு விருப்பமான இசையில் வடிவமைத்து அதற்கு உங்களுக்குப்பிடித்த உடையலங்காரத்தையும் உருவாக்கி உங்களுக்கு ஏற்ற நடனவடிவமைத்து ஆடுங்கள்.. அல்லது துள்ளுங்கள்.. யார் வேண்டாமென்றார்கள்.. நீங்கள் செல்லியதுபோல யாரோ உருவாக்கிய கலைக்கு ஏன் ஆசைப்படுகின்றார்கள????</span><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[size=15]இதற்குப் பெயர் தான் வரட்டு வாதம், இதனால் வெறும் அடியும், நுனியும் தெரியாமல் கதைத்ததன் ஆற்றாமை தான் வெளிப்படுகிறது. அந்தக் கலையை உருவாக்கிய யாரோ, வேறு யாருமல்ல தமிழர்கள் தான், தமிழர்களுடைய கலையை அப்படியே தமிழரிடமிருந்து கற்று விட்டுப் பெயரை மாற்றி, வேற்று மொழியைப் புகுத்தி, கற்றுக் கொடுத்த குருவின் முதுகிலேயே குத்தி, தமிழ்வேரை மறைத்து, அதற்கு ஒரு இதிகாசக் கதையை உருவாக்கி, தமிழர்களின் கலையை, தமிழர்களின் கண் முன்னாலேயே, இந்த இருபதாம் நூற்றாண்டில் மாற்றிக் காட்டிய இவர்கள், இவர்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலத்தில் எத்தனை செப்படி வித்தைகளைத் தமிழரின் வரலாற்றுக்குச் செய்திருப்பார்கள், அதைச் சிந்தியுங்கள் தமிழர்களே என்பதைத் தான் இந்த தலைப்பில் நான் சொல்ல வந்த விடயமென்பது சுகுமாரு மாமாவுக்கு இன்னும் விளங்கவில்லை. <b>என்னுடைய நோக்கமெல்லாம் தமிழருக்குப் புரிய வைப்பது தான், தமிழ் பேசுபவர்களுக்கல்ல.</b>

<b>மூலக்கருத்தில் அப்பகுதி நீக்கப்பட்டதால், அதற்கான பதிலும் நீக்கப்படுள்ளது-</b>
Reply


Messages In This Thread
[No subject] - by Sukumaran - 01-22-2006, 05:48 AM
[No subject] - by vengaayam - 01-22-2006, 07:47 AM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:39 AM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:43 AM
[No subject] - by yarlpaadi - 01-22-2006, 09:05 AM
[No subject] - by Aaruran - 01-22-2006, 10:09 AM
[No subject] - by vengaayam - 01-22-2006, 07:06 PM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:01 PM
[No subject] - by vengaayam - 01-22-2006, 08:25 PM
[No subject] - by Aaruran - 01-22-2006, 08:44 PM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 09:20 PM
[No subject] - by Luckyluke - 01-23-2006, 07:47 AM
[No subject] - by Sukumaran - 01-24-2006, 04:15 AM
[No subject] - by Aaruran - 01-24-2006, 05:41 AM
[No subject] - by Sukumaran - 01-26-2006, 05:04 AM
[No subject] - by vengaayam - 01-26-2006, 07:29 AM
[No subject] - by vengaayam - 01-27-2006, 05:04 AM
[No subject] - by வர்ணன் - 01-27-2006, 05:21 AM
[No subject] - by Sukumaran - 01-27-2006, 07:34 AM
[No subject] - by Luckyluke - 01-27-2006, 09:11 AM
[No subject] - by narathar - 01-27-2006, 11:14 AM
[No subject] - by Sukumaran - 01-31-2006, 10:56 PM
[No subject] - by Aaruran - 02-01-2006, 03:37 AM
[No subject] - by Sukumaran - 02-04-2006, 11:32 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)