Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம்பெயர்ந்தோரை அந்நியப்படுத்துதல்
#13
BBC Wrote:
Kanani Wrote:கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் உபதேசம் உங்களுக்கு..............

இங்கு நாங்கள் காய்கறி
வாங்கும் கூடையைப்போல,
கைக்குழந்தையைக் கிடத்த ஒன்று
வைத்திருப்பீர்களே, அதையும்
எடுங்கள். ஏனென்று கேட்கிறீர்களா?
அப்போதுதான், பக்கத்துவீட்டுச்
சின்னம்மா, "உதென்ன தங்கச்சி"
என்று கேட்க, "அதெங்கட
பபாவைக் கிடத்துறதுக்கு" என்று
உங்கள் மனைவி பெருமையாய்ச்
சொல்லலாம். "குழந்தயக்
கிடத்துறத்துக்கு என்னத்துக்கு
மேனே கூடை? தோளில கிடத்தலாம்
தானே! கூடையோட வச்சிட்டு
அங்கால பார்க்கேக்க, நாய் கீய்
கொண்டு போனா என்ன செய்யுறது?"
சின்னம்மா பேத்தனமாக் கேக்கும்.
'என்ன அன்ரி? நீங்கள் சரியான
கன்றி புறூட்டா| இருக்கிறீங்க,
பேபியைத் தோளில் போட்டா, அது
"சூ" செய்து, டிரெஸ்ச எல்லாம்
பழுதாக்கியெல்லே போடும்"
உங்கள் மனைவி பெருமையாகச்
சொல்லுவா. அவா குழந்தையா
இருக்கேக்க, தன்ட தோளில் கிடந்து,
பெஞ்ச "சூ"வை, என்ட சின்னக்
குஞ்சு தேன்மாரி பொழியுது|
எனக்சொல்லி, தன்ட சீலைத்
தலைப்பால துடைச்சு விட்டத
சின்னம்மா பெருமையாகச் சொல்லும்.
'யூறினை சீலையால
துடைக்கிறனீங்களோ? "டேட்டி
ஹபிற்" 'லண்டனில் டெற்றோல்
போட்டுத் துடைக்காமல் நாங்கள்
பிள்ளையத் தொடமாட்டோம்." உங்கட
மனைவி பெருமையாய்ச் சொல்ல,
சின்னம்மா பாவம் வாயை மூடிக்
கொள்ளும். இவையெல்லாவற்றுக்கு
மாகத்தான் அந்தக் கூடையையும்
எடுத்து வைக்கச் சொல்கிறேன்.

கட்டுநாயக்கா விமான நிலையம்
கொண்டுவந்த பெரிய|சூட்கேசுகளை
நீங்கள் ஏற்ற, அங்குள்ள பழைய
தள்ளுவண்டிகள், தள்ளாத
வண்டிகளாய்த் தடுமாறும். உங்கள்
மனைவி, வேறு பலவற்றோடு
அதையும் தள்ளிக்கொண்டு வெளியே
வர,"பெரியண்ண! குஞ்சக்கா!
எடி பேபி! பெரியவன்!
இப்படிப் பலகுரல்கள் ஒருமித்து
வரவேற்கும். உங்களை வரவேற்கவென
யாழ்ப்பாணத்திலிருந்து,
|வான்| பிடித்துவந்த உங்கள்
உறவுக்கூட்டத்தின் கூக்குரல் அது.
பதினைந்து வருஷத்திற்கு முன்
பழகிய பழைய உறவாய் நினைந்து,
உங்களைக்கண்டு அதுகள்
பரவசப்படும். உங்கள் பாடு கொஞ்சம்
சங்கடம்தான். 'இதுகள் என்ன "டீசன்ற்"
இல்லாமல் கத்துதுகள்?" இங்க
இருக்கேக்க "சுத்து"க்குப் போன
உங்கள் மனைவி, சுறுசுறுவென்று
கோபிப்பா. "ஹாய்! ஹவ் ஆர் யூ"
ஏதோ வெளிநாட்டுத் தலைவர்போல,
நீங்கள் தூர இருந்து கைகாட்டுவீர்கள்.
உங்கள் ஆங்கிலப் புலமையை
வெளிப்படுத்தியதில், உங்களுக்கோர்
மகிழ்ச்சி. உறவுகள் உங்களைச்
சூழ்ந்து கொள்ளும். "எடேய்! எங்கட
சித்தண்ட பெட்டையே இது! பார்
மொழுமொழுவென்று என்ன வடிவா
நிக்குது" என்று சொல்லி, குஞ்சம்மா
தன்ட வெத்தில வாயால, உங்கட
மேளப்பிடிச்சு ஒருதரம் கொஞ்சும்,
அருவருப்பில் உங்கள் மகள்
முகத்தைச் சுழித்துக் கொள்வாள்.
"என்ட ராசாத்தி! என்னைப்
பாக்கவெண்டோ ஓடி வந்தனீ?"
.........................................

இப்படியான குஞ்சம்மாக்களையும் குஞ்சையாக்களையும் வயோதிபர் மடம் அனுப்புவதுதான் உங்கள் தேவை!
அதற்கான தேவை எமது சமுகத்திற்கு அவசியமாகக் கூடாது!!! அணைவரையும் அவரவர் இயல்பிற்கேற்ப அரவணைக்கும் இயல்பை உங்களிடத்தும் உங்கள் சந்ததியிடத்தும் வளர்த்துக்கொள்ளுங்கள்

அப்படிச் செய்யின் வயோதிபர் இல்லங்களுக்கு மூடுவிழாக் கொண்டாடலாம்

மேட்டர் யார் சொன்னாலும் ஏத்துக்கதான் வேணும். உபதேசம் செய்யுற தகுதி கம்பவாருதிக்கு இருக்கா என்றது தான் பிரச்சனை. லண்டன் கோயில்ல இருந்து அவர வீட்ட விட்டுட்டு வரும்போது யோககுமார் என்ற பையன் ஆக்சிடன்ட்ல செத்து போயிட்டான். அது பத்தி அவர் பேச்சே இல்ல. பொடி(Body) இங்க கொழும்பு வந்தபோது கூட போகல. இதுக்கு என்ன செய்ய பொஸ்?
Reply


Messages In This Thread
[No subject] - by anpagam - 12-31-2003, 04:28 PM
[No subject] - by kuruvikal - 12-31-2003, 05:16 PM
[No subject] - by kuruvikal - 12-31-2003, 05:36 PM
[No subject] - by yarl - 12-31-2003, 05:56 PM
[No subject] - by kuruvikal - 12-31-2003, 06:30 PM
[No subject] - by nalayiny - 12-31-2003, 07:37 PM
[No subject] - by kuruvikal - 01-01-2004, 12:16 PM
[No subject] - by Kanani - 01-01-2004, 06:36 PM
[No subject] - by Mathivathanan - 01-01-2004, 07:10 PM
[No subject] - by Mathan - 02-01-2004, 12:49 PM
[No subject] - by Mathan - 02-01-2004, 01:11 PM
[No subject] - by Mathan - 02-01-2004, 01:48 PM
[No subject] - by kuruvikal - 02-01-2004, 09:10 PM
[No subject] - by Mathan - 02-02-2004, 07:53 AM
[No subject] - by Mathan - 02-02-2004, 07:59 AM
[No subject] - by Mathivathanan - 02-02-2004, 08:38 AM
[No subject] - by Eelavan - 02-03-2004, 10:45 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)