Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Mr. Haukland's remarks LTTE are freedom fighters
#2
கண்காணிப்புக் குழு முன்னாள் தலைவரின் கூற்றுக்கு தவறான முறையில் வியாக்கியானம்!
பிரச்சினைக்குத் தீர்வுகாணும் பொறுப் பைத் தட்டிக்கழித்து பிறர் மீது பழியைப் போடாமல், பாதுகாப்பு அமைச்சின் செயலா ளர் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட முன் வரவேண்டும் என்று யுத்தநிறுத்தக் கண் காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவர் ஹக்ரப் ஹொக்லண்ட் தெரிவிக்கிறார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலா ளருடன் தாம் நடத்திய சந்திப்பில் பேசப்பட்ட பல விடயங்கள் தவறான முறையில் பத்திரிகை யொன்றில் பிரசுரமாகியுள்ளது.
அந்தத் தவறான கூற்றுகளை திருத்தக் கோரி அவர் அந்தப் பத்திரிகை ஆசிரியருக்கு நீண்ட கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கிறார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
<b>""பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை நான் மார்ச் 23ஆம் திகதி சந்தித்தபொழுது புலிகளை "விடுதலைப் போராளிகள்' என்று "லேபல்' குத்திப் பேசினேன் என இக்பால் அத்தாஸ் என்ற பத்திரிகையாளர் கடந்த வார "சண்டே ரைம்ஸ்' பத்திரிகையில் "கள நிலை வர அறிக்கை'ப் பக்கத்தில் எழுதியிருக்கிறார். நான் ஒருபோதும் புலிகளை இத்தகைய சொற்றொடர்களைப் பிரயோகித்து வகைப் படுத்தியது கிடையாது. இவ்வாறு வகைப் படுத்தும் தேவையும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு இல்லை என்றே நான் நினைக்கிறேன். </b>
""அத்தாஸின் இந்த மேற்கோள் கூற்று யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு பார தூரமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது மட்டு மல்ல, பல்வேறு அரசியல்வாதிகளாலும் இந்தக் கூற்று மேற்கோள் காட்டிப் பேசப்பட் டும் வருகிறது. இது போன்ற பொய்யான கூற்றுகளை எழுதுவது, யுத்த நிறுத்தக் கண் காணிப்புக் குழு மீது பாரதூரமான தாக்கத்தை மட்டும் ஏற்படுத்துவதோடு நின்றுவிடாது முழு சமாதான முயற்சிகளுக்கும் கூட பாரதூரமான தாக்கத்தை விளைவித்து விடும். இது அத்தாஸின் கட்டுரையில் எடுத்தாளப் பட்ட முதலாவது பொய்க் கூற்றாகும்.
""அடுத்து இரண்டாவதாக இக்பால் அத் தாஸ் தனது கட்டுரையில், பாதுகாப்புச் செய லாளருடன் நடந்த அதே சந்திப்பின்போது ஆயுத மோதல் ஒன்று வருமிடத்து, விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவப் படையினரால் வெற்றிகொள்ளமுடியும் என்று நான் நினைக்கவில்லை என்று நான் பாது காப்பு அமைச்சின் செயலாளருக்குச் கூறினேன் என எழுதியிருக்கிறார். இது நான் அந் தச் சந்திப்பின்போது பேசியவற்றை சந்தர்ப்ப சூழ்நிலைக்குப் புறம்பான சூழ்நிலையில் வைத்து தமக்குப் பிடித்தமான முறையில் எடுத்தாளப்பட்டிருப்பதாகவே உள்ளது. நான் அந்த வார்த்தைகள் மூலம் என்ன சொல்ல வந்தேன் என்பதை அத்தாஸ் முற்றாகவே புறந்தள்ளத் தீர்மானித்திருக்கிறார். இங்குள்ள முரண்பாட்டுக்கு இராணுவத் தீர்வு சாத்திய மாகும் என்று நான் நம்பவில்லை. இலங்கை யில் நான் கண்ட அனுபவத்தை அடிப்படை யாக வைத்துப் பார்க்கும்பொழுது, இலங்கை அரசுக்கு எதிரான போரில், வெற்றிவாகை சூடுவதற்கான இராணுவ வலிமை புலிகளிடம் இருப்பதாகவோ, அதேபால் விடு தலைப் புலிகளை யுத்தத்தில் வெற்றிகொள் வதற்கான வலிமை இலங்கை அரசிடம் இருப்பதாகவோ தெரியவில்லை என்பதே எனது அபிப்பிராயமாகும். இதனையே நான் அந்த சந்திப்பின்போது கூறினேன்.
""சந்திப்பின்போது நான் கூறிய இக் கூற்றுகள் எனது சொந்தக் கருத்து மட்டு மல்ல, சர்வதேச சமூகத்தினதுமாகும். ஆயுத மோதலில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அத்தகைய ஆயுத மோதல்கள் இலங் கையின் சமகாலப் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வையும் தந்துவிடாது என்றும் சர்வதேச சமூகம் தெட்டத்தெளிவாகக் குரல் கொடுத்தே வந்தி ருக்கிறது.
""குறிப்பிட்ட இந்தச் சந்திப்பு அமர்வின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாள ரின் பங்களிப்போடு, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவர் மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்ஸனின் பங்களிப்பும் இருந்தது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழு, நோர்வே அனுசரணையாளர்கள் ஆகியோர் மீது மட்டுமல்ல, சர்வதேச சமூகத்தின் மீதும் கோபக்கனல் கொண்டவராகவே இருந் தார். இந்த முரண்பாடுகளுக்கு இணக்கத் தீர்வொன்றையும் அடைய முடியாமல் இருப்பது குறித்து இலங்கை யுத்த நிறுத்தக் கண் காணிப்புக் குழு மீதும், சர்வதேச சமூகத்தின் மீதும் பழியைப் போட்டுக் குறை கூறினார். இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தாமே சர்ச்சைக்குரிய பல கூற்றுக்களைக் கூறினார். அவரது இந்தக் கூற்றுகள் அதிரவைக்கும் கொந்தளிப்பு நிலைமைகளை தோற்றுவிக்கக்கூடியவையாக வும் இருந்தன. அவரது இந்தக் கூற்றுகள், இலங்கை அரசின் உத்தியோக பூர்வமான நிலைப்பாட்டை பிரதிபலிப்பனவையாக இருக்கமாட்டா என்பதே எனது நம்பிக்கையாகும்.
""இந்த யுத்தநிறுத்த உடன்படிக்கை ஆவண மானது, சமாதானத்தைப் பேணுவதற்காக, சம் பந்தப்பட்ட இரு தரப்பாரினதும் விருப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். எனவே, சமாதானத்தை எட்டுவதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட அந்த இரு தரப்பாரையும் பொறுத்த தேயாகும். அத்தோடு அந்த சமாதானத்துக்கு சர்வதேச சமூகம் நோர்வேயின் அனுசரணை, யுத்தநிறுத்த கண்காணிப்பு குழு ஆகியவற்றின் உதவியும் பெறப்பட்ட தாயிருக்க வேண்டும். எனது நேர்மையான கருத்து என்ன வென்றால், பாதுகாப்பு அமைச் சின் செயலா ளர், இந்தப் பிணக்கு நிலைக்கான எந்த ஒரு பொறுப்பையும் ஏற்காமல் தட்டிக் கழிக்கவே பார்க்கிறார் என்பது மட்டுமல்ல, அந்த முரண் பாட்டுக்குத் தீர்வைக் கண்டு அதற்கு முடிவொன்றைக் காண்பதற்காக இலங்கை வந்தி ருந்து தமது அதிகாரத்துக்கு உட்பட்ட முறையில் தீர்வொன்றைக் காண விசுவாசமாக முயற்சிப்போர் மீதே பிழையையும், பழியை யும் போடவும், சுமத்தவும் முயல்கிறார் என்பதே எனது கருத்தாகும்.
""எனவே, இந்தத் தவறான கூற்றுகளை அரசியல் கட்சிகள் இனியும் எடுத்துக் கையா ளாமல் இருக்க வேண்டும். எனவே, அதற்கு முன்னதாக எனது இந்தத் திருத்தத்தைப் பிரசுரித்து கண்காணிப்புக் குழுவுக்கு ஏற் படக்கூடிய பாதிப்பைத் தவிர்க்குமாறு கேட் டுக்கொள்கிறேன்.'' என்று உள்ளது.
இணைப்பு :kugan Saturday, 08 Apr 2006 USA

http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Vaanampaadi - 04-09-2006, 08:18 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)