Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா?
#47
nirmalan Wrote:லக்கிலுக், ஆரோக்கியமான விவாதத்திற்கு முன்வந்தமைக்கு உங்களுக்கு முதன்மையான நன்றி.

ஜாலியன் வாலா படுகொலைகளை நீங்கள் மறக்காத போது எப்படி எம்மீது இந்தியப்படைகள் கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகளை மறந்திருப்போம் என்று நியாயமான கேள்வியை நீங்கள் கேட்டிருந்தீர்கள் உண்மைதான்.

அன்றிலிருந்து இன்று வரை விடுதலைப் புலிகளும் சரி, ஈழத்தமிழர்களும் சரி இந்திய மக்களை வெறுக்கவோ, எதிர்க்கவோ இல்லை என்றுதான் கூறிவந்தார்கள். கூறியும் வருகின்றார்கள்.

ஒருசிலர் இந்தியாவை அடியோடு வெறுக்கின்றார்கள். ஏனெனில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்திய இராணுவம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக அவர்கள் அதனை வெளிப்படுத்துகின்றார்கள். அக்கருத்தினை கூறுவதற்கு அவர்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு.

ஈழத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் இந்தியாவிற்கு எதிராக திருப்பிவிட்டதில் 'றோ"வுக்கு எவ்வளவு பங்கு உண்டோ அதேபோன்று இந்தியாவில் ஊடகத்தை தமது கைக்குள் வைத்திருக்கும் சில மேலான்மையாளர்கள் விடுதலைப் புலிகள் இந்தியர்களுக்கு எதிரானவர்கள் என்றும் அவர்கள் அடையப் போகின்ற 'ஈழம்" இந்திய தேசியத்துக்கு எதிரானது என்றும் பரப்புரை செய்து வருகின்றனர்.

இந்திய இராணுவத்தினால் எனது குடும்பம் பாரிய சொத்தழிவுகள், மன உளைச்சல்களை சந்தித்தது. அதில் ஒரு விடயத்தைக் கூறுகின்றேன். இது முக்கிய தர நிலையிலிருந்த 2 ஆம் நிலை தமிழ் இராணுவ அதிகாரி சம்பவ இடத்தில் இருந்த போது நடந்தது.

சம்பவம் இதுதான், விடுதலைப் புலிகளின் தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட ஏழு இராணுவத்தினர் கொல்லப்பட்ட போது விடுதலைப் புலிகளை தேடிப்போக வக்கில்லாதவர்கள் எமது கிராமத்தை சுற்றிவளைத்தனர். அப்போது எமது வீட்டிற்கு வந்த 5 பேரடங்கிய குழுவினர் முதல் தர இராணுவ அதிகாரி ஹிந்தி மொழி பேசுபவர். 2 ஆம் நிலை அதிகாரி தமிழ் பேசுபவர். (இதில் முக்கியமான விடயம். இந்த தமிழ் இராணுவ அதிகாரிக்கு எம்மைப்பற்றியும் நன்கு தெரியும் எம்முடன் அடிக்கடி உரையாடியும் உள்ளார்.) எனது அண்ணா, அண்ணி ஆகியோரை அடித்தது மட்டுமல்லாது இதில் மிலேச்சத்தனமான செயலையும் செய்தார்கள். கையில் வைத்திருந்த அவர்களுடைய 8 மாத கைக்குழந்தைக்கும் கன்னத்தில் அடித்தார்கள் ஐயா. இன்றும் அதனை நினைக்க நெஞ்சம் பதறுகிறது.

ஒரு இராணுவத்தினது கை அதுவும் 8 மாத பச்சைக்குழந்தையின் கன்னத்தில் பட்டால் எப்படியான வேதனையாக இருக்கும் என்று சற்று யோசித்துப்பாருங்கள்.

பின்னர், அந்த தமிழ் இராணுவ அதிகாரியிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டபோது 'அப்போது தாங்கள் இருந்த மனநிலையில் அப்படித்தான் செய்யத் தோன்றியது" என்றார் மிக சர்வசாதாரணமாக.

ஆக, இந்திய இராணுவத்தினரிடம் மனிதத் தன்மை இல்லையா? மகாத்மா உதித்த மண்ணில் மனிதநேயம் என்பது இல்லையா? இப்டித்தான் எமக்கு கேட்கத் தோன்றும்.

அடுத்து, 'றோ" வைப் பற்றி இங்கே கூற வேண்டும். 'றோ" வின் தெளிவற்ற பார்வையினால் தான் இன்று இந்தியா ஈழத் தமிழர்களுக்கு எதிர்நிலை எடுப்பதற்கு காரணம்.

உதாரணத்திற்கு, இந்திய மத்திய புலனாய்வுத்துறை என்றழைக்கப்படும் (சிபிஐ) விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றது. இது இன்றும் நிலவுகின்றது. ஆனால் அவர்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. காரணம் 'றோ" வின் தலையீடு அதிகம்.

'றோ" தன்நாட்டிற்குள் ஊடுருவும் உளவாளிகளையோ அல்லது தனது நாட்டின் பாதுகாப்பு குறித்து அதிகம் கவலைப்படாது எப்போதும் ஈழத் தமிழ்ப் போராட்டத்தை சிதைப்பதற்கே அதிக நேரம் செலவு செய்கின்றது.

உதாரணத்திற்கு கடந்த வருடம் ஜ_னியர் விகடனில் 'றோ" வுக்குள் ஒரு கறுத்த ஆடு என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டு அந்நபர் எப்படி அமெரிக்காவால் விலைக்கு வாங்கப்பட்டார் என்று விரிவான கட்டுரை வெளிவந்தது.

இதனை அவர்களால் கவனிக்க முடியவில்லையே அதாவது தமக்குள்ளேயே ஒரு கறுப்பு ஆடு உள்ளது என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியாமற் போய்விட்டதே. அந்த அதிகாரி இன்று அமெரிக்காவில் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றாராம்.

அண்மையில் பாகிஸ்தான் மற்றும் காஸ்மீர் தீவிரவாதிகளின் ஊடுருவல்களை தடுக்க முடியாமற் போனமை. நாடாளுமன்ற துப்பாக்கிச் சூடு. பல ஊடுருவல்கள். இவ்வாறே அடுக்கிக் கொண்டே போகலாம். முதலில் 'றோ" தனது நாட்டிற்குள் நுழைந்து அநியாயம் செய்கின்றவர்களை அறிய முற்பட வேண்டும். என்றோ எதிரிகளாக கணிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் எதிரிகளாகவே நினைத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு அருகில் உண்மையான எதிரி தோன்றி இந்திய தேசத்துக்கு நாசம் செய்வான். ஆகையால் உண்மையாக அந்நாட்டிற்கு எதிராகச் செயற்படுபவர்களை 'றோ" கண்டுபிடிக்க வேண்டும்.

இந்திய இராணுவம் எமது நாட்டிற்கு நுழைந்து செய்த அநியாயத்தை நாம் மறந்துதானே இருந்தோம்.

ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி விடுதலைப் புலிகளை தடை செய்தார்கள். சரி, அது அந்த நாட்டின் சட்டப்படி என்று நாம் வாளாதிருக்கலாம்.

இது எப்படி நடந்தது இதன் பின்புல காரணம் என்ன? இதனை சரிசெய்து ஈழத் தமிழர்களிடம் நட்பு பாராட்ட அல்லவா வேண்டும்.

ராஜீவ் காந்தி அன்று சரியானவர்களின் சொற்கேட்டு நடந்திருந்தால் இந்திய இராணுவம் எமது பகுதிக்குள் வந்து அநியாய அழிவுகளையும் அதேவேளை இந்தியாவுக்கு கெட்டபெயரையும் சந்தித்திருக்குமா?

டிக்சிட் மற்றும் கொள்கை வகுப்பாளர்களால் தான் ராஜீவ் காந்தி தவறாக நடத்தப்பட்டதாக ஏ.பி.வெங்கடேஸ்வரன் மற்றும் முன்னாள் முக்கிய புள்ளிகள் கூறினரே.

இதில் ஒன்றை கூறுகின்றேன். நான் ராஜீவ் காந்தி கொலையை இங்கே நியாயப்படுத்த முன்வரவில்லை.

இந்தியாவில் உள்ள பல விடுதலைப் போராட்டங்களை தடை செய்துவிட்டு அவர்களுடன் பேச்சு நடத்துகிறார்கள் இந்திய அரசு.

சீக்கிய இனத்தைச் சேர்ந்த ஒருவர், இந்திரா காந்தியை கொலை செய்தார். அவர்களை மன்னிக்கக்கூடிய இந்திய அரசு அவர்களுக்கு எதிராக முன்னர் நடத்திய படுகொலைகளுக்கு மன்னிப்கேட்ட இந்திய அரசு ஈழத் தமிழர்கள் மீது நடத்திய படுகொலைகளுக்கு மன்னிப்பு கேட்குமா?

இந்திய அரசின் கொள்கை வகுப்பை லக்கிலுக் நீங்கள் சரியாக ஆராய வேண்டும். ஏனெனில் அவர்கள் திட்டமிட்டுத்தான் ஈழத் தமிழர்களை அடக்க நினைக்கிறார்கள். ஒருபோதும் அவர்கள் இதில் வெல்லப்போவதில்லை.

'பொய்யின் பயணம் குறுகிய. உண்மையின் பயணம் மிகவும் நெடியது" இந்த பொன்மொழிக்கு இணங்க நாம் என்றோ ஒருநாள் வெற்றிபெறுவோம்.

இந்தியா தொடர்ந்தும் பேசாமல் இருந்ததா? இல்லையே.

விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் விவரத்தை சிறிலங்காப் படைகளுக்கு அறிவித்தது.

இந்திய கடற்பரப்பில் நுழையாது சர்வதேச கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த கேணல் கிட்டுவின் கப்பலை மடக்கி அவர்களை சரணடைய வைக்க முனைந்து அது தோல்வியில் முடிந்தமை. அவர்கள் தம்மை அழித்தது.

தமிழர்களின் கலாச்சார நகரான யாழை விடுதலைப் புலிகள் கைப்பற்ற விடமாமல் பின்கதவு வழியாக நரி்த்தன வேலையில் ஈடுபட்டு தடுத்தது.

இதில் இன்னொரு விடயத்தையும் கூற வேண்டும். இந்தியா எப்போதும் ஈழத்தில் ஒரு தளம்பல் நிலை அதாவது பிரச்சனை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றது.

காரணம் இலங்கையில் சமாதானம் தோன்றினால் இலங்கை சிங்கப்பூர் போன்று அதீத வளர்ச்சியடையும். அப்போது இந்தியாவில் வளர்ச்சிநிலை பாதிக்கப்பட்டு முதலீடுகள் வரவு குறைந்துவிடும் என்று இந்தியா அச்சப்படுகின்றது.

பாருங்கள், அன்று ஜே.வி.பி. முற்றாக அழிந்தது என்று பலர் கருதிக்கொண்டிருக்க தற்போதைய ஜே.வி.பி. தலைவரான சோமவன்ச அமரசிங்கவை அன்றைய டிக்சிட் கடல்வழியாக இந்தியாவிற்கு அழைத்துச் சென்று பின்னர் லண்டன் அனுப்பியிருந்தார்.

மனிதாபிமான உதவி என்று நினைத்தீர்களா இல்லவே இல்லை.

இதே ஜே.வி.பி.யை பின்னர் புத்துயிரூட்டி சிறிலங்கா அரசிற்கு எதிராக அவர்கள் பாவிக்க எண்ணியது. ஏன் இப்படி செய்ய அவர்கள் முனைகின்றார்கள் என்று உங்களுக்குள் கேள்வி எழலாம்.

பிற்காலத்தில் தமக்கு சாதகமற்ற அரசு சிறிலங்காவில் இல்லாத சமயம் ஜே.வி.பி.யை பயன்படுத்தலாம் என்று எண்ணினார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள் என்றே கூற வேண்டும். ஏனெனில் முன்னர் ஐ.தே.க. அல்லது சுதந்திரக்கட்சி அறுதிப் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியில் அமரும். இப்போது அந்த நிலை இல்லை.

அதுதான் அடிக்கடி சிறிலங்காவில் தேர்தல் வருகின்றதே அதனை கண்கூடாக நீங்கள் காணாலாம்.

ஜே.வி.வி. மற்றும் ஹெல உறுமய (ஹெல உறுமயவும் இந்தியாவின் உருவாக்கம்தான். அதற்கான ஆதாரங்களும் உண்டு) வந்ததன் பின்னர் சிறிலங்காவின் வாக்குகள் சிதைவடைந்தன.

லக்கிலுக், இதில் ஒரு விடயத்தில் ஒரு உண்மையை கவனியுங்கள்.

இந்தியாவினால் புத்தூக்கம் பெற்ற ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமய இன்று இந்திய சொற்படி நடக்க முன்வரவில்லை. இந்தியா அழைத்த போதும் செல்லவில்லை.

ஆனால் ஈழத் தமிழர்கள் இந்தியா எமது தந்தையர் நாடு என்றும் இந்தியா எமது பிரச்சனையில் நல்ல நண்பனாக செயற்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கேட்டு வருகின்றார்கள். ஆனால் இந்தியா கண் திறந்ததா? இல்லையே ஏன்?

உங்களைப் போன்ற படித்தவர்கள் கடிதங்களை அனுப்பி எமது போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கும் படி இந்திய அரசிடம் கேட்கலாமே?

மீண்டும் கூறுகின்றோம். இந்தியாவுக்கு எப்போதும் உண்மையான நண்பர்கள் விடுதலைப் புலிகளும் ஈழத் தமிழர்களும் மட்டுமே.

ஆனால் இந்தியா சிங்களத்தை நாடித்தான் போகின்றது.

மனைவி இருக்கும் போது மாற்றான் மனைவியை நாடிப் போகின்றது இந்தியா. ஒருவேளை புராணக் கதைகளில் (மகாபாரதம், இராமாயணம்) வருவது போன்று பல மனைவிகளை அரசன் வைத்திருந்த கதையைப் போன்று இந்தியா, தானும் இந்த நவீன யுகத்தின் செய்ய முற்படுகின்றதோ என்னவோ.

அடுத்து முக்கியமானது யாவரும் அறிந்த விடயம். ஈழத்துக்கான கொள்கையோடு களமிறங்கிய விடுதலை இயக்கங்களை சிதைவடைய வைத்ததில் பெரும்பங்கு இந்தியாவுக்கும் இந்திய உளவுத்துறைக்கும் உண்டு.

எல்லோரும் விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டுகின்றார்கள். உண்மை அதுவல்ல. விடுதலை இயக்கங்களுக்குள் மோதல் மனப்பான்மையை உருவாக்கியவர்கள் இந்தியா இது உண்மையிலும் உண்மை.

இந்தியா எம்மீது கண்திறக்க வேண்டும். எமது விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்காமல் விட்டாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டும்.

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் நிர்மலன் ஆனால் லக்கி லுக்க்கால் விளங்கிகொள்ள முடியுமா என்பதுதான் சந்தேகம் எனெனில் அவரைப்பொறுத்தவரை றோவுக்கும் இலங்கைப்பிரச்சின்னைக்கும் சம்பந்தமெயில்லை என்னும் கருத்துடைய முதிர்ந்த அரசியல் ஆராய்ச்சியாளன்(political analyst).
Reply


Messages In This Thread
[No subject] - by Ilayathambi - 04-20-2006, 08:47 AM
[No subject] - by Luckyluke - 04-20-2006, 09:10 AM
[No subject] - by Mathuran - 04-20-2006, 09:21 AM
[No subject] - by sinnakuddy - 04-20-2006, 09:25 AM
[No subject] - by அருவி - 04-20-2006, 10:03 AM
[No subject] - by aathipan - 04-20-2006, 10:30 AM
[No subject] - by Danklas - 04-20-2006, 11:03 AM
[No subject] - by Danklas - 04-20-2006, 11:04 AM
[No subject] - by Kishaan - 04-20-2006, 11:11 AM
[No subject] - by Ilayathambi - 04-20-2006, 11:15 AM
[No subject] - by Kishaan - 04-20-2006, 11:57 AM
[No subject] - by rajathiraja - 04-20-2006, 12:13 PM
[No subject] - by Danklas - 04-20-2006, 12:16 PM
[No subject] - by Aaruran - 04-20-2006, 12:22 PM
[No subject] - by rajathiraja - 04-20-2006, 12:22 PM
[No subject] - by rajathiraja - 04-20-2006, 12:26 PM
[No subject] - by Danklas - 04-20-2006, 12:31 PM
[No subject] - by Danklas - 04-20-2006, 12:33 PM
[No subject] - by rajathiraja - 04-20-2006, 12:34 PM
[No subject] - by Danklas - 04-20-2006, 12:40 PM
[No subject] - by rajathiraja - 04-20-2006, 12:43 PM
[No subject] - by Danklas - 04-20-2006, 12:49 PM
[No subject] - by Luckyluke - 04-20-2006, 01:10 PM
[No subject] - by தூயவன் - 04-20-2006, 01:30 PM
[No subject] - by pepsi - 04-20-2006, 02:26 PM
[No subject] - by Mathuran - 04-20-2006, 02:54 PM
[No subject] - by Aaruran - 04-20-2006, 05:21 PM
[No subject] - by Nilavan. - 04-20-2006, 05:47 PM
[No subject] - by angali - 04-20-2006, 06:00 PM
[No subject] - by angali - 04-20-2006, 06:10 PM
[No subject] - by Vasampu - 04-20-2006, 06:19 PM
[No subject] - by kurukaalapoovan - 04-20-2006, 06:25 PM
[No subject] - by Thala - 04-20-2006, 06:39 PM
[No subject] - by Vasampu - 04-20-2006, 06:49 PM
[No subject] - by Thala - 04-20-2006, 06:55 PM
[No subject] - by angali - 04-20-2006, 06:57 PM
[No subject] - by Vasampu - 04-20-2006, 06:58 PM
[No subject] - by Thala - 04-20-2006, 07:03 PM
[No subject] - by Mathuran - 04-20-2006, 07:03 PM
[No subject] - by Vasampu - 04-20-2006, 07:04 PM
[No subject] - by வினித் - 04-20-2006, 08:39 PM
[No subject] - by nirmalan - 04-21-2006, 12:02 AM
[No subject] - by paandiyan - 04-21-2006, 02:10 AM
[No subject] - by paandiyan - 04-21-2006, 02:23 AM
[No subject] - by paandiyan - 04-21-2006, 02:36 AM
[No subject] - by rajathiraja - 04-21-2006, 04:36 AM
[No subject] - by rajathiraja - 04-21-2006, 04:42 AM
[No subject] - by தூயவன் - 04-21-2006, 04:53 AM
[No subject] - by rajathiraja - 04-21-2006, 04:56 AM
[No subject] - by தூயவன் - 04-21-2006, 05:01 AM
[No subject] - by வர்ணன் - 04-21-2006, 05:08 AM
[No subject] - by angali - 04-21-2006, 06:04 AM
[No subject] - by mathanarasa - 04-21-2006, 06:09 AM
[No subject] - by வர்ணன் - 04-21-2006, 06:27 AM
[No subject] - by Luckyluke - 04-21-2006, 07:17 AM
[No subject] - by kurukaalapoovan - 04-21-2006, 08:22 AM
[No subject] - by Mathuran - 04-21-2006, 08:44 AM
[No subject] - by Luckyluke - 04-21-2006, 09:21 AM
[No subject] - by Mathuran - 04-21-2006, 10:39 AM
[No subject] - by Luckyluke - 04-21-2006, 11:18 AM
[No subject] - by Vasampu - 04-21-2006, 01:28 PM
[No subject] - by தூயவன் - 04-21-2006, 01:32 PM
[No subject] - by தூயவன் - 04-21-2006, 01:35 PM
[No subject] - by Luckyluke - 04-21-2006, 02:02 PM
[No subject] - by தூயவன் - 04-21-2006, 02:14 PM
[No subject] - by தூயவன் - 04-21-2006, 02:18 PM
[No subject] - by Luckyluke - 04-21-2006, 03:21 PM
[No subject] - by Luckyluke - 04-21-2006, 03:22 PM
[No subject] - by Subiththiran - 04-21-2006, 03:29 PM
[No subject] - by நேசன் - 04-21-2006, 03:31 PM
[No subject] - by தூயவன் - 04-21-2006, 03:45 PM
[No subject] - by தூயவன் - 04-21-2006, 03:46 PM
[No subject] - by Subiththiran - 04-21-2006, 03:47 PM
[No subject] - by தூயவன் - 04-21-2006, 03:50 PM
[No subject] - by Mathuran - 04-21-2006, 09:25 PM
[No subject] - by Luckyluke - 04-24-2006, 06:37 AM
[No subject] - by Danklas - 04-24-2006, 06:55 AM
[No subject] - by Luckyluke - 04-24-2006, 10:52 AM
[No subject] - by Mathuran - 04-24-2006, 06:01 PM
[No subject] - by paandiyan - 04-25-2006, 01:26 AM
[No subject] - by Maruthankerny - 04-25-2006, 02:00 AM
[No subject] - by Maruthankerny - 04-25-2006, 04:39 AM
[No subject] - by putthan - 04-25-2006, 05:01 AM
[No subject] - by thaiman.ch - 04-25-2006, 06:55 AM
[No subject] - by Luckyluke - 04-25-2006, 07:45 AM
[No subject] - by Mathuran - 04-25-2006, 08:35 AM
[No subject] - by narathar - 04-25-2006, 08:39 AM
[No subject] - by Thala - 04-25-2006, 09:25 AM
[No subject] - by Luckyluke - 04-25-2006, 11:23 AM
[No subject] - by Maruthankerny - 04-25-2006, 10:55 PM

Forum Jump:


Users browsing this thread: 8 Guest(s)