Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கலாச்சார ரீதியிலான இனத்தற்கொலைக்கு முடிவு கட்டுவோம் வாரீர்!
#32
மொழிபற்றி ஓர் அறிவுப்பதிவு -

மொழி என்பது என்ன ?


மொழி என்பது உயிருக்கு நிகரானது; மாந்தனின் அடிப்படை உரிமை மொழியாகும் என்றெல்லாம் உலக மாந்தர் தத்தம் மொழியினைப்பற்றிக் கூறிடுவர். இஃது உணர்வு நிலைப்பட்ட கூற்றாகும் . இதில் தப்பேதும் இல்லை. தாய் தன் பிள்ளைகளைப் பொத்திக் காக்கும் செயற்பாட்டிற்கும் மேலானது; மாந்தன் தான் சார்ந்திருக்கும் மொழியைக் காக்கும் செயல்.


காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சென்று மிக
இயல்பாய் மொழியும் தமிழர் வாய்ச்சொல்லில் பொருள் பொதிந்துள்ளது. தமிழ் எங்கள் உயிருக்கும் மேலென்று கூறிய பெருமகனாரின் கூற்றில் குறை கிஞ்சித்தும் இல்லை.

தாயைப் பழித்தாலும் தமிழைப் பழிக்காதே என்று கதைத்த பாட்டனின் பூட்டன் பேருள்ளம் வியப்பிற்குரியதாகும் .

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன்னே முகிழ்த்த மூத்தகுடி, மூத்த மொழி தமிழ் என்பதுவும் தமிழே அனைத்து மொழிகளுக்கும் அன்னை என்பதுவும் உணர்வின் அடிப்படையில் அமைந்த கருத்தூற்றுகள். இதில் உணர்வு உண்டு, தெளிந்து அறிதல் இல்லை. ஆய்ந்தறிந்த நிலைப்பாடில்லை. இவ்வாறான கூற்றுகளில் அறிவும் உணர்வும் ஒன்றுபடவில்லை. ஆனால் இவ்வாறான மொழிச்சிந்தல்களால் தப்பேதும் இல்லை. ஒரு மனிதன் தன் தாய்மொழியின் ஆளுமையையும் ஆற்றலையும் உற்றுணர்ந்து கொண்டிட இதுபோன்ற சொல்லாடல்கள் பயன்படுகின்றன.

அறிவின் தளத்தில் உற்றுநோக்கின், இவையெல்லாம் உயர்வுநவிற்சியின் பொருட்டான சொல்லாடல்கள். இவற்றால் மொழியின்பம் கூடிடும், மனம் குளிரும். இவ்வகை உணர்வுகளை அனுபவித்திட வேண்டும். மாறாக, அறிவின் தளத்தில் நின்று கொண்டு கேள்விகள் கேட்கலாகாது.

தமிழ் எப்படி உலக மொழிகளுக் கெல்லாம் தாயாகியது?

கல் தோன்றி மண் தோன்றா முன்னே, தமிழர் தோன்றியது எவ்வாறு ?

மொழித் தொடர்பு கருவிதானே, அதைப் பழித்தல் கூடாது ஏன் ?


இதுபோன்ற கேள்விகளுக்கு அறிவார்ந்த பதில் இல்லை. இவை பொருட்டான சான்றுகளுடைய ஆய்வு களும் இல்லை. இருந்தும் இவ்வாறு கேட்பதே அறிவிலித்தன்மையாகும். இதில் உணர்வினைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதனை முதலில் அறிந்து தெளிதல் வேண்டும்.

மொழியின் பேராற்றலைக் கண்டு இவ்வாறு கூறுவதெல்லாம் உணர்வு நிலைப்பட்டது. உளவியல் தளத் தினைக் கொண்டியங்குவது. உயிர், உரிமை, உடைமை என்ற சொல்லா டல்களின் கட்டமைப்பில் இயங்கு கின்றது.

இவற்றினைத் தாண்டி , மொழிக்கு அறிவுநிலை சார்ந்த முகமும் உண்டு. மனிதனின் அறிவாற்றல் விரிவாக்கத்திற்கு மிகப் பொருத்தமான தெளிவுகளைக் கொடுக்கும் ஆற்றலைக் கொண்டியங்குகின்றது. இங்கு மொழி என்பது உலகளாவிய மொழியியல் சிந்தனைக்குரியதாகும். உலகில் தனிப்பட்ட ஒரு மொழியின்பால் கூறிடும் கருத்தன்று.

மொழி என்பது மாந்தரினத்திற்கான முழுமை பெற்ற தொடர்புக் கருவி என்றே அறிவியல் ஆய்வுகள் முன்மொழிகின்றன. ஒலிகளின் துணையுடன் மொழியாளுமை நிகழ்கின்றது. கால வளர்ச்சியால் மொழியைக் கையாள்வதில் பல்வேறு ஒழுங்குகள் உருவாக்கப்பட்டன; இலக்கண வரையறைகள் உருவாக்கப்பட்டன . இவற்றிற்கு இயற்கை துணை நின்றது. பின்னாளில் குறிப்பிட்ட ஒரு மாந்தர் குழுவினரைக் குறிக்கும் குறியீடாக மொழி மறுஉருமாற்றம் பெற்றது. இது மாந்தரினத்தின் ஒட்டுமொத்த அறிவால் ஏற்பட்டது.

தமிழர்களாகிய நாம் மொழியைப் பெருவாரியாக உணர்வின் அடிப்படையில் கண்டுணர்ந்து பழகிவிட்டோ ம். அதன்பொருட்டான சிந்தனைகளும் செயற்பாடுகளும் உணர்வின் தளத்திலேயே கண்டியங்குகின்றன. எல்லாவற்றிலும் அறிவைவிட உணர்வே முந்தி நிற்கின்றது.

மொழி ஒத்த இனம் சார்ந்துள்ள மக்களிடையே கருத்துப் பரிமாற்றம் செய்திடுவதற்குரிய ஊடகம். ஒரு மனிதன் தன் குழுவைச் சார்ந்துள்ள இன்னொருவனுக்குத் தான் கண்டுணர்ந்தவற்றினை வெளிப்படுத்த மொழி பயன்படுகின்றது. அதன் பயன்பாட்டுத்தளம் விரிவாக்கம் கொள்ளும்போழ்தில் வேறுபட்ட இனத்தாரிடையேயும் கருத்துப் பரிமாறிக்கொள்வதற்குரிய ஊடகமாகவும் மறுஉருப் பெறும். இந்நாட்டில் வழங்கப்படும் மலாய்மொழி, மலாய் இனத்தாரிடையே கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்தவும் இந் நாட்டில் வாழும் பிற இன மக்களான தமிழர், சீனர் ஆகியோரிடையே தொடர்பினை ஏற்படுத்தும் கருவியாகவும் இருக் கின்றது. இது பயன்பாட்டுத் தளத்தினை விரிவாக்கிய நிலை. ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகள் பயன்பாட்டுத் தளத்தில் உச்சத்தில் இருக்கின்றன. பல்வேறு இன மாந்தரை இணைப்ப தோடு, பல்வேறு துறைகளில் பயன்படுத்தும் முகாமை மொழியாகவும் அம் மொழிகள் விளங்குகின்றன. உலகில் அதிகமான மக்களால் பேசப்படும் மொழியாகவும் அதிகமான துறைகளில் பயன்படுத்தும் முகாமை மொழியாகவும் ஆங்கிலம் விளங்குகின்றது. இந் நிலைப் பாட்டினை அடைவது எளிதன்று. மிக நேர்த்தியான திட்டங்களாலும் கடின உழைப்பாலும் மட்டுமே இந் நிலையினை அடைய இயலும். இஃது அறிவின் நிலைப்பாட்டில் அடைந்த வெற்றியாகும்.

உலக மொழிகளில் பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டுள்ள மொழியாக நம்மவரால் கருத்துரைக் கப்படும் தமிழ்மொழியின் நிலைப்பாடும் இம் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள வாழ்வியல் தளத்தினையும் சற்று உற்றுணர்ந்து பாருங்கள். நம் மொழிக்குரிய அறிவார்ந்த நிலைப்பாடெங்கே?

தமிழர்களின் வாழ்வியல் வரலாற்று அடிப்படை யின்பால் உற்று நோக்கின், மொழி நிலைப்பாட்டில் தமிழர்கள் பெரும்பாலும் உணர்வு தளத்தின் அடிப்படையி லேயே செயற்பட்டிருக்கின்றனர். சங்ககால வாழ்வியல் தொடங்கி, நாட்டுடைமைப் போர் முதலாக இன்றைய வாழ்வியல் வரையிலாகத் தமிழர்தம் உள்ளத்தினை உண ர்வே முற்றும் முழுமாக ஆட்கொண்டுள்ளது. உணர்வார்ந்த நிலையும் செயலும் வேண்டியதில்லை என்பது பொரு ளன்று. மாறாக முற்றும் முழுதும் உணர்ச்சியாக இராமல், அறிவும் சரிபாதியாகக் கலந்திருத்தல் வேண்டியதாகிறது.

தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் தமிழ்ப் படங்களுக்குத் தமிழில் பெயரிட வேண்டுமென்பது இயற்கையின் இயல்பாய் உள்ளது. இது எந்தவிதமான கேள்விகளுக்கும் இடமில்லாமல், கிஞ்சித்தும் சிந்திக்காமல் செயல்படவும் செயல்படுத்தவும் வேண்டியதாகும். இஃது அறிவின் அடிப்படையில் துலங்க வேண்டியது. இருந்தும் மாற்றுக் கருத்தும் செயலும் தோன்றுவதற்குரிய காரணம் என்ன? தமிழர்கள் அறிவார்ந்த நிலைப்பாட்டில் செயற்படாததே இதற்குரிய முகாமைக் காரணமாகும்.

அரசியல், பொருளியல், சமூகவியல் என்ற மூன்று நிலைப்பாடுகளிலும் தமிழர்களுக்குரிய அடிப்படை உரிமைகளைப் பிறர் கையில் தாரைவார்த்துக் கொடுத்ததன் விளைவே இன்றைய உணர்வின் விளிம்பான போராட் டங்கள். ஆளுமையும் ஆற்றலுமற்ற தலைவர்களை நம்பி ஏமாந்துப் போகின்றனர், தமிழர்கள். தமிழர்களின் ஏமாற்றம் என்பது தமிழின் ஏமாற்றமாகும்.

ஏதோவொரு காலகட்டத்தில் உணர்வின் உச்ச ங்களின் எதிரொலிகளாய் நிகழ்ந்த தமிழ்மொழிப் போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் என்பதற்காப், பின்னாளில் மொழியின் வளர்ச்சிக்கு மாறாக அவர்கள் ஆற்றிய அறம் துறந்த செயல்களுக்கெல்லாம் அறம் கற் பித்தல் எந்த வகையில் அறமாகும் ? தமிழர்களின் அறிவெங்கே வீழ்ந்துகிடக்கின்றது?

இந்தக் கருத்தின்பால் மாற்றுச் சிந்தனை உடையவர்கள் :

வரலாற்றினை மறப்பதா ?
தமிழ் காத்த ஆன்றோரைத் துச்சமென நினைப்பதா?

தமிழ்பால் ஆற்றும் செயல்பாடுகள் உணர்வு நிலைப்பட்டதா ? என்றவாறெல்லாம் கேள்விகள் எழுப்பலாம்.

இதுகாறும் உலகெங்கும் நிகழ்ந்தேறிய பல்நிலைப்பட்ட மாநாடுகள், பெருங்கூட்டங்கள் இவற்றால் விளைந்த பயன்கள் யாவை ? எட்டு மாபெரும் உலக ளாவிய மாநாடுகளைக் கண்டபின்பு தமிழ்மொழியின் வளர்ச்சி யாது ?

முழுக்க முழுக்க உணர்வின் செயலாக்கத் தளத்தில் நிகழும் மேடைப் பேச்சுகளால் அடைந்த அடைவுகள் என்னென்ன ?

உணர்வும் அறிவும் சமநிலையில் இயங்கிச் செயற்பட்ட தமிழ்த்தென்றல் திரு.வி.க. திரு. உ.வே.சாமிநாதனார், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் ஆகியோரின் இயங்குதளத்தினைத் கண்ணுற்றுப் பாருங்களேன். இச் சான்றோர்கள் மொழியினை அறிவும் உணர்வுமாய்க் கண்டுணர்ந்தவர்கள். அதனால் அன்னவர் மொழிக்கு ஆற்றியபாடு பெரும்பாடாயிற்று.

இனி, தமிழர்கள் அறிவுத் தளத்திற்கு மொழியைக் கொண்டு சென்றிட வேண்டும். தமிழின் பயன்பாட்டுத்தளம் விரிவு பெற்றிடல் வேண்டும். சிந்திப்போம்...செயற்படுவோம்.

நன்றி செம்பருத்தி.
,
,
Reply


Messages In This Thread
[No subject] - by Mathivathanan - 06-20-2004, 11:40 PM
[No subject] - by vallai - 06-21-2004, 08:35 AM
[No subject] - by vasisutha - 06-21-2004, 08:35 PM
[No subject] - by tamilini - 06-21-2004, 09:33 PM
[No subject] - by kavithan - 06-22-2004, 04:44 AM
[No subject] - by Aravinthan - 03-20-2006, 05:41 AM
[No subject] - by Sujeenthan - 03-20-2006, 02:52 PM
[No subject] - by கந்தப்பு - 03-21-2006, 12:44 AM
[No subject] - by Aravinthan - 03-23-2006, 11:08 AM
[No subject] - by putthan - 03-23-2006, 11:58 AM
[No subject] - by Nitharsan - 03-24-2006, 06:51 AM
[No subject] - by Snegethy - 03-24-2006, 07:09 AM
[No subject] - by Aravinthan - 03-27-2006, 05:32 AM
[No subject] - by கந்தப்பு - 03-28-2006, 02:53 AM
[No subject] - by SUNDHAL - 03-28-2006, 01:58 PM
[No subject] - by thaiman.ch - 03-28-2006, 02:32 PM
[No subject] - by thaiman.ch - 03-28-2006, 02:49 PM
[No subject] - by SUNDHAL - 03-28-2006, 03:02 PM
[No subject] - by TRAITOR - 03-28-2006, 06:52 PM
[No subject] - by SUNDHAL - 03-28-2006, 07:19 PM
[No subject] - by Aravinthan - 03-29-2006, 01:09 AM
[No subject] - by Aravinthan - 03-29-2006, 02:11 AM
[No subject] - by Aravinthan - 03-29-2006, 02:13 AM
[No subject] - by TRAITOR - 03-29-2006, 03:01 AM
[No subject] - by கந்தப்பு - 03-29-2006, 04:04 AM
[No subject] - by putthan - 03-29-2006, 07:09 AM
[No subject] - by Aravinthan - 04-19-2006, 05:45 AM
[No subject] - by narathar - 04-20-2006, 02:16 PM
[No subject] - by கந்தப்பு - 04-21-2006, 02:19 AM
[No subject] - by Aravinthan - 04-21-2006, 03:51 AM
[No subject] - by Aravinthan - 04-21-2006, 06:39 AM
[No subject] - by Aravinthan - 04-21-2006, 06:43 AM
[No subject] - by Aravinthan - 04-21-2006, 06:49 AM
[No subject] - by Aravinthan - 04-21-2006, 06:57 AM
[No subject] - by தூயா - 04-21-2006, 09:13 AM
[No subject] - by narathar - 04-21-2006, 09:43 AM
[No subject] - by தூயா - 04-21-2006, 11:09 AM
[No subject] - by கந்தப்பு - 04-22-2006, 02:36 AM
[No subject] - by தூயா - 04-23-2006, 07:45 AM
[No subject] - by putthan - 04-23-2006, 01:20 PM
[No subject] - by கந்தப்பு - 04-24-2006, 12:05 AM
[No subject] - by தூயா - 04-24-2006, 01:26 AM
[No subject] - by கந்தப்பு - 04-24-2006, 02:14 AM
[No subject] - by கந்தப்பு - 04-24-2006, 02:58 AM
[No subject] - by தூயா - 04-24-2006, 03:32 AM
[No subject] - by narathar - 04-24-2006, 11:31 AM
[No subject] - by putthan - 04-25-2006, 01:31 AM
[No subject] - by அருவி - 04-25-2006, 05:41 AM
[No subject] - by Aravinthan - 04-26-2006, 07:19 AM
[No subject] - by Aravinthan - 04-28-2006, 05:36 AM
[No subject] - by தூயா - 04-28-2006, 06:02 AM
[No subject] - by narathar - 04-28-2006, 08:36 AM

Forum Jump:


Users browsing this thread: 13 Guest(s)