Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்......... நன்றி கி.பி
#5
கி பி அரவிந்தனின் பதிலில் உள்ள கோபம், ஜெயராஜாவின் 'வராதே வரவல்லாய்' வெளிவந்து கிட்டத்தட்ட அரை ஆண்டுகள் கடந்தபின் வந்திருப்பினும் இன்னும் விவாதிக்க அதற்குள் பல்வேறு பரிமாணங்கள் இருக்கின்றன என்கின்றது.

ஒரு சாதாரண தமிழ் சினிமா போல் வாசிப்பவனுக்கு கிளுகிளுப்பூட்டும் நடையில் சொல்லிச் செல்லும் ஜெயராஜாவின் நகைசுவை உணர்வு சராசரியானது அல்லது அதை விட குறைவானது என்பதற்கு யாழ் களமாடிகள் ஒரு பட்டி மன்றம் நடத்துவது அரவிந்தனுக்கோ அல்லது அதை களத்தில் விரித்த நளாயினிக்கோ நோக்கம் அல்ல என்பதுடன் தான் நான் இங்கு முரண்படவேண்டி வருகின்றது.

அரவிந்தனின் 'வராதே வரவல்லாய்' பற்றி கீறிக்கிழித்து செய்யும் 'Post mortem' முட்டையில் மயிர் புடுங்கும் வேலையாக போய்விடக்கூடிய ஆபத்தை எதிர் நோக்கி இருப்பதாக எனக்குப்படுகிறது. ஏனெனில் ஜெயராஜாவின் பேச்சுகளும் எழுத்துகளும் யாழ்பாண சைவ வேளாளர் சமூகத்தின் அந்தரங்க ஆசைகளிக்கு தீனி போட கொழும்பில் வியாபார மையம் கொண்டுள்ளதே அன்றி அரவிந்தன் எழுதிச் செல்வதுபோல் 'Hidden Agenda' உள்ள அரசியல் சித்துவிளையாட்டு அல்ல. போதாததற்கு வால்மீயையும் கம்பனையும் இராவணனையும் சீதையையும் ராமனையும் இந்திய உப கண்ட விஸ்தரிப்பையும் ஒரு நோர் கோட்டில் வைத்து தனது சமன் பாட்டை நிறுவ முயல்வது சமூக பொருளாதார அரசியல் கலாச்சாரத்தின் நான்கு பரிமாணங்களையும் அரவிந்தன் உள்வாங்கியதில் ஏதோ குழறுபடி உள்ளதென்பதே தொக்கி நிற்கிறது.

விமர்சனத்திற்கு அப்பால் எதுவும் இருக்க முடியாதுதான்.
அதற்காக சர்வலோக நிவாரண விமர்சனம் என்ற கோதாவில் மல்லுகட்டவும் கூடாது.
<b>I would never die for my beliefs because I might be wrong</b>

- Bertrand Russell
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 02-29-2004, 10:58 AM
[No subject] - by Mathan - 02-29-2004, 11:48 AM
[No subject] - by Paranee - 02-29-2004, 12:39 PM
[No subject] - by thampu - 02-29-2004, 04:51 PM
[No subject] - by kuruvikal - 02-29-2004, 09:06 PM
[No subject] - by manimaran - 02-29-2004, 10:05 PM
[No subject] - by kuruvikal - 02-29-2004, 10:34 PM
[No subject] - by vasisutha - 02-29-2004, 10:41 PM
[No subject] - by Eelavan - 03-01-2004, 11:39 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)