Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய ஊடகங்களும் தமிழர் தாயக இளம் தலைமுறையும்.
#1
முன்பை விட தற்போது தமிழர் தாயகமெங்கும் இந்திய ஊடகங்கள் குறிப்பாக சின்னத்திரை நிகழ்ச்சிகள் புகழ் பெற்று வருவது அவதானிக்க முடிகிறது. இது எவ்வகையான தாக்கத்தை எமது இளைஞர்கள் மனதில் உருவாக்குகிறது? எவ்வகையான கலாச்சாரத்திற்கு வித்திடுகிறது? அனைத்து சின்னத்திரைத் தொடர்களும் பெண்களை குறிவைத்தே இயற்றப்படுகிறது. அதில் வரும் பெண் கதாபாத்திரங்கள் முற்போக்கானவாகளாக காட்டமுற்பட்டிருப்பினும் உண்மையில் மூடநம்பிக்கைகளிலும் எப்பொழுதும் சொத்தையோ அல்லது கணவனை வேறோருவளிடமிருந்து மீட்பதிலோ மும்முரமாக இருக்கிறனர். இது முற்போக்கு சிந்தனை இல்லை. இது வேலிச்சண்டை. இது தமிழர் தாயகத்திலுள்ள பெண்களிடத்தில் எவ்வகையான தாக்கத்தை உண்டாக்குகிறது?

அதை விடவும் சின்னத்திரை எமது சிறார்களின் கல்வியில் ஏற்படுத்தும் தாக்கம் எவ்வகையானது? அவர்களின் மனஓட்டத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு என்னவென்ன?

இளைஞர்களை கலாச்சாரச் சீகேட்டுக்கு தள்ளுவதாக இன்னோர் குற்றச்சாட்டு. இது எமது இனத்தின் சிந்திக்கும் ஆற்றலை சிதறடிக்கிறது?
எம்மவரின் வாழ்க்கையும் இனத்தின் து}ண்களான இளைய சமுதாயமும் தொலைக்காட்சியின் முன்னால் அடக்கிக்கிடக்கப் போகிறதா?

கேள்விகள் உங்களிடம், பதில்கள் விழிப்புற வைக்கட்டும்.
மேலும் கேள்விகள் எழும்.
Smile
Reply


Messages In This Thread
இந்திய ஊடகங்களும் தமி - by Ramanan - 03-04-2004, 06:44 AM
[No subject] - by phozhil - 03-04-2004, 11:05 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)