Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
net உதவிகள்
#15
<span style='color:#a300ff'>இன்டர்நெற் தந்துள்ள வசதிகளையும், சேவைகளையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிற நமக்கு, குப்பை ஈமெயில்களைப் பார்க்கும்போது இன்டர்நெற்டின் மேல் வெறுப்பு வருவது இயற்கையே.

junk mail அல்லது spam என அழைக்கப்படுகிற குப்பை மெயில்களால் இன்டர்நெற் உலகமே திணறுகிறது. தினமும் கோடிக் கணக்கான குப்பை மெயில்கள் அனுப்பப்படுகின்றன.

Aol என்ற இன்டர்நெட் சேவையை வழங்குகிற அமெரிக்க நிறுவனத்திற்கு தினமும் 1.8 மில்லியன் குப்பை மெயில்களை cyber promotions என்ற நிறுவனம் அனுப்பிக் கொண்டிருந்தது. Aol நிறுவனம் வழக்குத் தொடர்ந்து வெற்றி கண்டதால் குப்பை மெயில்களை அனுப்புவதை cyber promotions நிறுவனம் நிறுத்தியது. நமக்கு வருகிற குப்பை மெயில்களைப் பார்த்து நாம் வழக்கு தொடர்ந்து கொண்டிருக்க முடியுமா? அதற்கான நேரமும், பணமும் நம்மிடம் உள்ளதா? இல்லையே.


<b>குப்பை மெயில் என்றால் என்ன?</b>

ஒரே விஷயத்தைப் பற்றிய மெயிலின் பல காப்பிகளை உங்களுக்கு அனுப்பி உங்களை கட்டாயப்படுத்தி படிக்க வைக்கிற அல்லது படிக்காமல் அழிக்கத் தூண்டுகிற மெயில்களை Spam என்கின்றனர். நாம் தமிழில் இவற்றை குப்பை மெயில்கள் என்கிறோம்.

பெரும்பாலும், பொருட்களுக்கான விளம்பரங்களே. \"\"அதிகம் சம்பாதிக்க வழி'', \"\"உங்களுக்கான வெகுமதி'', \"\"ஏராளமான செக்ஸ் படங்கள்'' போன்ற பொருளடக்கங்கள் கொண்ட மெயில்கள் குப்பை மெயில்களே. மத, இன, மொழி வெறிகளை தூண்டுகிற மெயில்களும் குப்பை மெயில்களே. வைரஸ்கள் பற்றி தவறான கருத்துக்களை பரப்புகிற மெயில்களும் குப்பை மெயில்களே.

பொதுவாக முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வருகிற பெரும்பாலான மெயில்கள் குப்பை மெயில்களே.

<b>குப்பை மெயில்களால் என்ன இழப்பு ஏற்படுகிறது?</b>

குப்பை மெயில்களை அனுப்புபவருக்கு ஒன்றும் செலவாகப் போவதில்லை. ஆனால் இந்த மெயில்கள் இன்டர்நெற் வழியாகப் பயணம் செய்வதால் அங்கு நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் முக்கியமான நல்ல தகவல்கள் பயணம் செய்ய நேரம் பிடிக்கிறது.

இந்த குப்பை மெயில்களை உங்கள் கணணிக்கு டவுன்லோட் செய்வதால் உங்கள் இன்டர்நெற் அக்கவுன்டிற்கான பணம், தொலைபேசிக் கட்டணம் எல்லாம் விரயமாகிறது. மெயில்களைப் பார்த்து அவற்றுள் குப்பை மெயில்களைத் தேடிக் கண்டு பிடித்து அழிப்பதால் நமது விலை மதிப்பற்ற நேரம் வீணாகிறது.

<b>ஏன் குப்பை மெயில்களை அனுப்புகிறார்கள்?</b>

எவ்வித செலவும் இன்றி, உடனடியாக ஈமெயில்களை அனுப்ப முடியும் என்பதை பல வியாபாரிகள், தயாரிப்பாளர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். தயாரிப்புகளை விளம்பரப்படுத்தலாம் எனில் பணம் செலவாகும். இந்த விளம்பரங்களால் வியாபாரம் பெருகும் என்பதை உறுதியாகக் கூறமுடியாது. எனவே பைசா செலவில்லாத ஈமெயில்கள் மூலம் விளம்பரப்படுத்தலாம். யாராவது கொஞ்சம் நபர்களாவது அந்த மெயில்களைப் படிப்பார்கள், அவர்களில் கொஞ்சபேர் பொருட்களை வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் குப்பை மெயில்களை அனுப்புகின்றனர்.

இப்படி வியாபாரத்தை பெருக்க வேண்டும் என அனுப்பப்படுகிற மெயில்களை Unsolicited Commercial Email என அழைப்பார்கள்.

அடுத்தவர்களை பயமுறுத்த வேண்டும், துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கில் பீதிகளை பரப்புகிறவர்கள் மெயில்களை அனுப்புகிறார்கள். அற்ப மகிழ்ச்சிக்காக வதந்திகள் கொண்ட மெயில்களை அனுப்புகிறார்கள்.

மது, மாது போன்றவை கொண்ட மெயில்களை அனுப்புகிறார்கள். சிற்றின்ப ஆசையைத் தூண்டி விடுகிற இந்த மெயில்கள் வியாபார நோக்கத்திற்கானவைதான்.

நமது மதத்தை நசுக்கிறார்கள், நமது மொழியை இழிவுபடுத்துகிறார்கள் என்பன போன்ற மெயில்களை அனுப்பி வெறியைத் தூண்டுகிறார்கள்.

<b>எப்படி நமது முகவரி கிடைக்கிறது?</b>

""நமது ஈமெயில் முகவரியை எப்படி தெரிந்து கொண்டு நமக்கு குப்பை மெயில்களை அனுப்புகிறார்கள்?'' என்ற கேள்வி எழுவது இயற்கையே.

பல வெப் தளங்களில், பயனாளர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்யும்படி கூறப்பட்டிருக்கும். ஈமெயில் முகவரியைக் குறிப்பிடும்படி அதில் கண்டிப்பாக கூறியிருப்பார்கள். நாமும் பெருமையுடன் நமது முகவரியை கொடுத்து விடுகிறோம். வந்தது வினை. நமது முகவரி, குப்பை மெயில்களை அனுப்புகிறவர்களிடம் சென்றடைந்து விடும்.

அரட்டை அடிப்பதற்காக இன்டர்நெற் IB (IRC) தளங்களில் நுழைபவர்கள் ஈமெயில் முகவரிகளைக் கொடுத்து விடுகின்றனர். அவை கைமாறி விடும்.

நியூஸ்குரூப் எனப்படுகிற செய்திக் குழுக்களுக்கு கட்டுரை அனுப்புகிறவரா நீங்கள்? அப்படியானால் கண்டிப்பாக உங்கள் ஈமெயில் முகவரி, குப்பைகளை அனுப்புகிறவர்களிடம் சேர்ந்து விடும் கவலைப்படாதீர்கள்.
\"\"மெயிலிங் லிஸ்ட்'' என்ற இன்டர்நெற் சேவையைப் பயன்படுத்துபவர்களின் ஈமெயில் முகவரிகளும் விஷமிகளிடம் போய்ச் சேர்ந்து விடும்.

வெப் தளங்கள், IB செர்வர்கள், நியூஸ்குரூப்புகள் போன்றவற்றில் இருந்து ஈமெயில் முகவரிகளை அறுவடை செய்கிற வழக்கத்தை ஆங்கிலத்தில் harvesting எனவே அழைக்கின்றனர். இதற்காக ஸ்பைடர்கள் (Spiders) எனப்படுகிற சிறப்பு புரோகிராம்கள் பயன்படுத்தப்படுகின்றன.

<b>குப்பை மெயில்களை எப்படி வடிகட்ட?</b>

நீங்கள் பயன்படுத்துகிற ஈமெயில் புரோகிராம்களில் மெயில்களை வடிகட்டுவதற்கான வசதிகள் உண்டு.

எடுத்துக்காட்டு: அவுட்லுக் எக்ஸ்பிரஸ் (Outlook Express) என்ற ஈமெயில் புரோகிராமில் Message Rules என்ற வசதி உண்டு. குப்பை மெயில்களை அடையாளம் கண்டு அழிப்பதற்கான விதியை நீங்கள் வகுத்தால் போதும், மீதியை ஈமெயில் புரோகிராம் பார்த்துக் கொள்ளும்.

Hotmail, Yahoo போன்ற வெப் தளங்களில் ஈமெயில் அக்கவுன்ட் வைத்துள்ளவர்கள், அந்த தளத்தில் உள்ள குப்பை மெயில்களை அழிப்பதற்கான வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஹொட் மெயிலில் Block Sender என்ற வசதி உள்ளது. அதைப் பயன்படுத்தி குப்பை மெயில்களை அழிக்கலாம்.

குப்பை மெயில்களை உங்களுக்கு யார் அனுப்புகிறார்கள் எனக் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கப் பல தளங்கள் உள்ளன. உங்களுக்கு வந்துள்ள குப்பை மெயில்களின் நகல்களை இங்கு அனுப்பி வைக்க வேண்டும். இதோ அவற்றின் முகவரிகள்: The Voalition Against Unsolivted commercial EMail (CAUSE)

http://www.vause.org

The Mail Abuse Prevention System Realtine Blackholt List

http://mailabuse.org/rbl </span>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
net உதவிகள் - by vasisutha - 02-17-2004, 07:11 PM
[No subject] - by Mathan - 02-17-2004, 07:38 PM
[No subject] - by TMR - 02-18-2004, 04:00 PM
[No subject] - by shanmuhi - 02-18-2004, 04:04 PM
[No subject] - by vasisutha - 02-18-2004, 04:18 PM
[No subject] - by yarl - 02-18-2004, 05:38 PM
[No subject] - by shanmuhi - 02-18-2004, 05:40 PM
[No subject] - by vasisutha - 02-18-2004, 09:51 PM
[No subject] - by vasisutha - 02-18-2004, 10:37 PM
[No subject] - by anpagam - 02-18-2004, 11:36 PM
[No subject] - by vasisutha - 02-19-2004, 12:24 AM
[No subject] - by Mathan - 02-19-2004, 03:48 PM
[No subject] - by Paranee - 02-20-2004, 08:19 AM
[No subject] - by வழுதி - 02-28-2004, 12:46 AM
குப்பை மெயில்களை தவிர - by vasisutha - 03-04-2004, 11:21 PM

Forum Jump:


Users browsing this thread: 7 Guest(s)