Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நல்ல பாஸ்வேர்டை எப்படி அமைப்பது ?
#1
நல்ல பாஸ்வேர்டை எப்படி அமைப்பது ?

<span style='color:#ff00d1'>கணிப்பொறி பயன் படுத்துபவர்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்தாதவர்கள் இருக்க முடியாது. ஏதாவது ஒரு வகையில் தங்களுக்கென ஒன்றோ அல்லது அதற்கு மேலாகவோ பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள் பல உண்டு. சீமாஸ் அமைப்பில் நுழைய, குறிப்பிட்ட கோப்பைப் பாதுகாத்து பின் பயன்படுத்த, லேன் எனப்படும் உள் வலை(LAN) அமைப்பில் நுழைய, இணையத்தில் கணிப்பொறியை இணைக்க, மின்னஞ்சல்களைப் பார்வையிட, டெல்நெட் (TELNET) பயன்பாட்டை அனுபவிக்க என பாஸ்வேர்ட் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் கணிப்பொறி உலகில் மிக அதிகம். அடிப்படையான இதனை முறையாக அமைத்திடாவிட்டால் அதன் சரியான பயன்பாடு நமக்குக் கிடைக்காமலேயே போய்விடும்.

<b>பலருக்கு ஒரு பாஸ்வேர்டை எப்படி அமைத்திட வேண்டும் என்று அறியாமலேயே இருக்கின்றனர். பாஸ்வேர்ட் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு எண்ணிப் பார்க்க எளிதாகவும் மற்றவர்கள் அறிய கடினமாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு எப்படி அமைக்க முடியும் என்பதனையும் அதற்கான சில குறிப்புகளையும் இங்கு காண்போம்.
</b>
* எண்கள் ( 4,8,2,7,9 etc.), எழுத் துக்கள் (d,z,e,t,y etc) சிறப்புக் குறியீடுகள் (&,%,$,@ etc) போன்றவை கலந்தவையாக ஒரு பாஸ்வேர்டை அமைக்கலாம்.

* பாஸ்வேர்ட் ஆங்கிலத்தில் சிறிய பெரிய எழுத்துக்களின் வேறுபாட்டைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடியதாக, அதாவது case sensitive ஆக, இருக்க முடியும் என்றால் அவற்றைக் கலந்து அமைக்கலாம். எடுத்துக் காட்டாக Thiru&Valluvar என அமைக்கலாம்.

* பாஸ்வேர்டில் குறைந்தது ஆறு அல்லது எட்டு எழுத்துக்களைப் பயன்படுத்தி நீளமாக அமைப்பது நல்லது. அதற்காக மிக நீளமாக அமைப்பதுவும் தவறு. எனவே நினைவில் வைத்து மீண்டும் எண்ணிப் பார்த்து பயன்படுத்தத்தக்க வகையில் அமைப்பது நல்லது.

* உங்கள் பெயர், மனைவியின் பெயர், கணவனின் பெயர், மகன் / மகளின் பெயர், செல்லப் பிராணியின் பெயர், பிறந்த ஊர் பெயர், பிறந்த நாள், பெற்றோர் பெயர் இவற்றில் ஒன்றைப் பலரும் அமைக் கின்றனர். இது தவறு. ஏனென்றால் உங்களுடன் இருப்பவர்கள் நிச்சயமாய் இவற்றைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்கள் உங்கள் பாஸ்வேர்டை அறிந்து கொள்வது எளிதாகிவிடும்.

* பொதுவாக ஒரு அகராதியில் உள்ள சொல் எதனையும் பாஸ்வேர்டாக வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பாஸ்வேர்டைக் கண்டு பிடித்து தருவதற்கென்றே சில புரோகிராம்கள் உள்ளன. இந்த புரோகிராம்கள் அகராதியில் உள்ள சொல் என்றால் விரைவில் கண்டு பிடித்துவிடும்.

* அகராதியில் உள்ள இரண்டு சொற்களை இணைத்து பயன்படுத்தலாமா என்று நீங்கள் கேட்கக் கூடும். இதுவும் தவறுதான். ஏனென்றால் மேலே குறிப்பிட்ட புரோகிராம்கள் இவற்றையும் கண்டுபிடித்துவிடும்.

<b>* ஒரு சிலர் பாஸ்வேர்ட் ( password ) என்ற சொல்லையே பாஸ்வேர்டாகப் பயன்படுத்துவார்கள். அவர்கள் கணிப்பில் அது எண்ணிப் பார்க்க எளிதானது என்று எண்ணுகிறார்கள். இதுவும் தவறுதான். இந்த சொல்லில் முதல் சில எழுத்துக்களை கணிக்க முடிந்தால் அடுத்து வரும் எழுத்துக்களைக் கண்டுபிடிப்பது எளிதாகிவிடும்</b>

* நினைவில் இருக்கிற பழமொழிகள் பல இருக்கின்றன. இவற்றின் முதல் எழுத்துக்களை சேர்த்து ஒரு சொல்லாக அமைத்து பாஸ்வேர்ட் அமைக்கலாம். எடுத்துக்காட்டாக East or West Home is the Best இந்த பழமொழியில் உள்ள சொற்களின் முதல் எழுத்துக்களைச் சேர்த்து EoWHitB என்று அமைக்கலாம். இந்த மாதிரி பாஸ்வேர்ட் அமைத்தால் எவராலும் கண்டுபிடிக்க முடியாது.

* நல்ல அடிக்கடி கேட்கும் அல்லது பயன்படுத்தும் வாக்கியம் ஒன்றை நினை வில் வைத்து அதிலுள்ள சொற்களின் முதல் எழுத்துக்களை ஒரு சொல்லாக அமைத்து பாஸ்வேர்ட் அமைக்கலாம். எடுத்துக் காட்டாக My Native Place is Jaffna என்ற வாக்கியத்திலிருந்து MNPiJ என்று ஒரு பாஸ்வேர்ட் அமைக்கலாம். இதில் 8 எழுத்துக்கள் வேண்டுமென்றால் இத்துடன் சில எண்கள் அல்லது சிறப்பு குறியீடுகளைச் சேர்த்துக் கொள்ளலாம். அந்த வகையில் இதனை MNPiJ5{} என அமைக்கலாம்.

* கீ போர்டைப் பார்க்காமல் சரியாக அடிக்கும் வகையில் பாஸ்வேர்டை அமைக் கலாம். கீ போர்டைப் பார்த்து பாஸ்வேர்ட் அமைத்தால் பாஸ்வேர்ட் அடிக்க நேரம் அதிகமாகும். இதனால் உங்களைச் சுற்றி உள்ளவர்கள் நீங்கள் டைப் செய்யும் வார்த்தையை ஓரளவிற்கு கிரகித்துக் கொண்டு பாஸ்வேர்டை அறிந்து கொள்ளும் சாத்தியக் கூறுகள் அதிகம். கூடுமானவரை கரங்களை கீ போர்டின் மீது வைத்து அவ்வளவாக அவற்றை விலக்காமல் அடிக்கும் வகையில் பாஸ்வேர்ட் அமைப்பதே நல்லது. அவ்வகையில் aandimadam, sadayan என்பன போன்ற சொற்களை அமைக்கலாம்.

<b>* பாஸ்வேர்டை எப்போது நினைவில் வைத்திருங்கள். எங்கும் எழுதி வைக்காதீர்கள்.</b>

* அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றிக் கொண்டிருங்கள். ஒரே பாஸ்வேர்டை பல நாட்கள் வைத்திருக்காதீர்கள். அது மற்றவர்கள் அறிந்து கொள்வதற்கான சூழ்நிலையை அமைத்துவிடும்.

* Login பெயர் என நாம் இணைய தளங்களில் மற்றும் பிற இடங்களில் நுழைய பெயர் வைத்திருப்போம். இதனையே சிலர் பாஸ்வேர்டாக வைத்திருப்பார்கள். அவ்வாறு வைத்திருப்பது மிகவும் ஆபத்தான விஷயமாகும். பிறர் முதலில் இதனைத்தான் பாஸ்வேர்டாகச் சோதித்துப் பார்ப்பார்கள். எனவே Login பெயரை பாஸ்வேர்டாக அமைத்துக் கொள்வதனை அறவே தவிர்க்க வேண்டும்.

* யாருக்கும் உங்களுடைய பாஸ்வேர் டைக் கொடுக்காதீர்கள். அப்படியே பாஸ்வேர்டைக் கொடுக்கும் சூழ்நிலை வந்தால் உடனே உங்கள் பாஸ்வேர்டை மாற்றிவிடுங்கள்.

மின்னஞ்சல் மூலம் உங்கள் பாஸ்வேர்டை அனுப்பாதீர்கள். அப்படி அனுப்பினால் அது பலருக்குப் போய்ச் சேரும் அபாயம் உள்ளது. அதனைப் பெறுபவர் அந்த கடிதத்தை அழிக்காமல் வைத்திருந்தால் அந்த கணிப்பொறியைப் பயன்படுத்தும் எவரும் அதனை அறிய முடியும்.

* பக்கத்தில் உங்களை ஒருவர் கவனித் துக் கொண்டிருக்கும்போது பாஸ்வேர்டை டைப் செய்யாதீர்கள். அப்படி டைப் செய் தால் அவர் அறியாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி சுற்றி இருப்பவர் அறிந்து கொள்ளும் வகையில் டைப் செய்தால் அவர்கள் சென்ற பின்னர் பாஸ்வேர்டை மாற்றி விடுங்கள்.

* உங்களுக்குப் பல அக்கவுண்டுகள் இருக்கும். எல்லாவற்றிற்கும் வசதியாக ஒரே பாஸ்வேர்டை வைத்துக் கொள்ளா தீர்கள். நினைவில் வைத்துக் கொள்ள கஷ்டமாக இருந்தாலும் வெவ்வேறு பாஸ்வேர்டை வைத்துக் கொள்வதே நல்லது. </span>

நன்றி:கணணிமலர். dinakaran
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
நல்ல பாஸ்வேர்டை எப்பட - by vasisutha - 03-09-2004, 04:08 AM
[No subject] - by shanmuhi - 03-09-2004, 06:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)