Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆங்கிலம் தெரியாதவங்க தான் தனி தமிழ் பத்தி பேசுராங்க???
#95
தனித்தமிழ்

கிரந்த எழுத்துகள் பயன்படுத்துவதை நான் ஏற்கிறேன். புஷ்பம் என்பதைப் புட்பம் என்றும் கஷ்டம் என்பதைக் கட்டம் என்றும் எழுதுவதைக் காட்டிலும் புஷ்பம் என்றும் கஷ்டம் என்றும் எழுதுவது நல்லது என்பது என் அபிப்பிராயம். மிகப்பழங்காலம் முதல் தமிழுக்கும் சமிஸ்கிரதத்திற்குமான இருந்துவரும் தொடர்பினால் கிரந்த எழுத்துகள் மக்களின் வழக்கோடும் எழுத்தோடும் ஒன்றாகக் கலந்துவிட்டன. இதை நீக்கவேண்டும் என்று சொல்லி ஒரு மொழியை மக்களிடமிருந்து அன்னியப்படுத்தக்கூடாது. அதே சமயம் தன் கொள்கை அளவில் தனித்தமிழில்தான் எழுதுவேன் என்பவர்கள் கிண்டலுக்கோ நக்கலுக்கோ உரியவர்கள் அல்லர். அவர்கள் செய்யும் பணியின் மூலம் சில நல்ல, இலகுவான, தமிழ்ச்சொற்கள் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. இணையம், கணினி, ஏப்புநோய் போன்றவை தனித்தமிழ் ஆர்வலர்களிடமிருந்து தமிழுக்குக் கிடைத்த அழகான வார்த்தைகள் என்பதை மறுப்பதற்கில்லை. என்னளவில் தனித்தமிழைப் பயன்படுத்த முடியாவிட்டாலும் அதைச் செய்பவர்களை மிகுந்த ஆச்சரியத்தோடும் மரியாதையோடும் பார்க்கிறேன். அதனால் *தனித் தமிழ் போலி* எனச் சொல்ல முடியாது.

பஸ்ஸ?க்குப் பேருந்து என்பது நல்ல மாற்று. கிராமத்தில் இருப்பவர்கள் பஸ் என்றுதான் பயன்படுத்துகிறார்கள்; ஏன் மாற்றவேண்டும் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. அவர்களுக்குப் பேருந்து என்று சொன்னாலும் புரியும் என்றுதான் நினைக்கிறேன். இதுமாதிரி, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, புரிந்துகொள்ளக் கூடிய தமிழ் வார்த்தைகளைத் தொடர்ந்து பயன்படுத்துதல் நலம். மொழியில் மேலும் சில பிறமொழிச்சொற்கள் கலப்பதைத் தவிர்க்கலாம். ஏற்கனவே கலந்துவிட்ட சில சொற்களை எளிதான வார்த்தைகள் கொண்டு பெயர்க்கலாம். இந்த வேலையே தேவையற்றது என்கிற கருத்து ஏற்பதற்கில்லை.

காப்பி, சன் டிவி போன்ற பெயர்கள் அவையாகவே இருக்கட்டும். கொட்டைவடிநீரோ, சூரியத் தொலைக்காட்சியோ பயமுறுத்த உதவுமே ஒழிய, தமிழை வளப்படுத்துவதற்கு உதவாது. இவைக்குத் தனித்தமிழ் வார்த்தைகள் தேவையுமில்லை.

இலகுவான, சிறிய புதிய சொற்கள் கிடைக்குமானால், புழக்கத்தில் இருக்கும் வேற்று மொழிச் சொற்களை மாற்றலாம். அப்படிக் கிடைக்காத சூழலில், புழக்கத்திலிருக்கும் வேற்றுமொழிச்சொற்களே இருக்கட்டும். இங்கே வேற்று மொழி என்பது ஆங்கிலத்தை குறிக்கிறது. பன்னெடுங்காலமாக நம்முடன் நிலவி வரும் ஒரு சொல், சம்ஸ்கிரதம் என்பதால் அதை நீக்கவேண்டுமா என்றால் வேண்டியதில்லை. நம் கண்முன்னே கலக்கும் சொற்களை, நல்ல தமிழ்வார்த்தைகள் கிடைக்கும் பட்சத்தில் தவிர்க்கவேண்டும். இந்த உணர்வு வராத பட்சத்தில் பேசும் தமிழில் பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகள் கலக்கும் அபாயமிருக்கிறது.

இன்றைய ஊடகங்கள் மனதுவைத்தால் அதிகமான தமிழ்வார்த்தைகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கலாம். மீடியா என்பதற்கு மிக அழகான தமிழ்ச்சொல் ஊடகம். இது மாதிரியான வார்த்தைகளைத் தேடிக்கண்டுபிடித்து பயன்படுத்துதல் தமிழுக்கு நாம் செய்யும் சேவை. செய்யவேண்டிய கடமை.

இப்போதைய நமது தேவை தமிழில் நல்ல புதிய மாற்றுவார்த்தைகளைக் கண்டுபிடித்தல். ப்ளாக் அறிமுகப்படுத்தப்பட்டபோது வலைப்பூ, வலைப்பதிவு, வலைக்குறிப்பு, உலாக்குகள் போன்ற பல பெயர்கள் யோசிக்கப்பட்டன. கடைசியில் வலைப்பதிவு ஏற்றுக்கொள்ளப் பட்டிருப்பதைப் போல் தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாள்கள் போனால் வலைப்பதிவு புழக்கத்திற்கு வந்துவிடும். ஏதேனும் ஒரு வெகுஜனப்பத்திரிகை ப்ளாக்குகளை அறிமுகம் செய்யும்போது ப்ளாக்குகள் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாது வலைப்பதிவு என்று மட்டும் குறிப்பிட்டால் அந்த வார்த்தைக்கு வெகுஜன அந்தஸ்தும் கிடைத்துவிடும். இப்படி ஒரு வார்த்தையை வெகுஜன அந்தஸ்து பெறச்செய்துவிட்டால் அது தமிழுக்கு நாம் செய்யும் பெரிய தொண்டு.

லக்குவன் என்பதை இலக்குவன் என எழுதுவது, தமிழின் முதல் எழுத்து லகரத்தில் தொடங்கக்கூடாது என்பதற்காக. அதே மாதிரி மொழிக்கு முதலில் மெய்யெழுத்துகள் வராது என்பது. க்ருபா என்று எழுதுவது தவறு; கிருபா என்று எழுதுவதுதான் சரி. லக்குவன்/இலக்குவன்; க்ருபா/கிருபா போன்றவை தொடர்பாக ஒரு முடிவான கருத்து என்னிடம் இல்லை. இது சரி, இது தவறு என வரையறுக்க முடியவில்லை. விவாதம் தனித்தமிழ் விவாதத்திற்குள் வருமா எனத் தெரியவில்லை. அனாலும் இயன்ற வரையில் நான் இராமு என்றும் இரஷ்யா என்றும் இராமகிருஷ்ணன் என்றும்தான் பயன்படுத்துகிறேன். (க்ருபா தன்பெயரைக் க்ருபா என்று எழுதுவதால் நானும் அப்படியே எழுதுகிறேன். இல்லையென்றால் கிருபா என்றுதான் பயன்படுத்தியிருப்பேன்)

தனித்தமிழ் பேசுவது பற்றி. என்னைப் பொறுத்தவரை நான் பேசும்போது பயன்படுத்தப் போகும் மொழியின் தமிழ்ச்சதவீதம் என்னுடன் பேசும் எதிராளியைப் பொறுத்தது. ஆசி?ப் போன்றவர்கள் பேசும்போது தமிழ்ச்சதவீதம் கூடுதலாக இருக்கும். முன்பின் தெரியாத தமிழ்நண்பர்களுடன் பேசும்போதும் முதலில் தமிழ்ச்சதவீதத்தைக் கூடுதலாகத்தான் பயன்படுத்துவேன். அவர்களால் அந்தத் தமிழை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் மெல்ல மெல்ல அவர்களுக்கு ஏற்றவாறு மாறுவேன்.

தனித்தமிழ் ஆர்வலர்கள் யாரும் வட்டார வழக்கு மொழிக்கு எதிராக எழுதி/பேசியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. "அந்த வண்டி ஏன்ட்டி அங்க நிக்கி?" என்பதை "அந்த வண்டி ஏன் அங்கே நிற்கிறது?" என்றுதான் கேட்கவேண்டும் என்று சொல்பவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் தமிழின் அழிவின்மைக்கு எதிரானவர்கள். பிறமொழிக்கலப்பு இயன்ற அளவு தவிர்க்கப்பட்ட, வட்டார வழக்கை ஏற்காத ஒரு மொழி மெல்லச் சாகவேண்டியதுதான்.

நன்றி - பிரசன்னா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Eelavan - 02-04-2004, 08:22 AM
[No subject] - by Mathan - 02-04-2004, 09:29 AM
[No subject] - by Mathivathanan - 02-04-2004, 11:13 AM
[No subject] - by Mathan - 02-04-2004, 02:06 PM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:36 PM
[No subject] - by Mathan - 02-04-2004, 02:46 PM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:53 PM
[No subject] - by Mathan - 02-04-2004, 03:00 PM
[No subject] - by Mathivathanan - 02-04-2004, 04:58 PM
[No subject] - by Mathan - 02-04-2004, 05:38 PM
[No subject] - by Mathivathanan - 02-04-2004, 05:47 PM
[No subject] - by Mathan - 02-04-2004, 07:29 PM
[No subject] - by kuruvikal - 02-04-2004, 08:48 PM
[No subject] - by Mathan - 02-04-2004, 09:22 PM
[No subject] - by Mathivathanan - 02-04-2004, 09:34 PM
[No subject] - by kuruvikal - 02-04-2004, 09:51 PM
[No subject] - by Mathan - 02-04-2004, 10:04 PM
[No subject] - by kuruvikal - 02-04-2004, 10:18 PM
[No subject] - by Mathan - 02-04-2004, 10:32 PM
[No subject] - by vasisutha - 02-04-2004, 10:54 PM
[No subject] - by Mathivathanan - 02-04-2004, 11:02 PM
[No subject] - by vasisutha - 02-04-2004, 11:05 PM
[No subject] - by Mathan - 02-04-2004, 11:12 PM
[No subject] - by Mathivathanan - 02-04-2004, 11:16 PM
[No subject] - by Mathan - 02-04-2004, 11:34 PM
[No subject] - by vasisutha - 02-04-2004, 11:39 PM
[No subject] - by sOliyAn - 02-04-2004, 11:45 PM
[No subject] - by Mathan - 02-04-2004, 11:46 PM
[No subject] - by Mathan - 02-04-2004, 11:49 PM
[No subject] - by sOliyAn - 02-04-2004, 11:53 PM
[No subject] - by Mathivathanan - 02-04-2004, 11:58 PM
[No subject] - by Mathan - 02-05-2004, 12:04 AM
[No subject] - by sOliyAn - 02-05-2004, 12:13 AM
[No subject] - by anpagam - 02-05-2004, 12:23 AM
[No subject] - by Mathivathanan - 02-05-2004, 12:27 AM
[No subject] - by Mathan - 02-05-2004, 12:30 AM
[No subject] - by sOliyAn - 02-05-2004, 12:34 AM
[No subject] - by Mathivathanan - 02-05-2004, 12:37 AM
[No subject] - by Mathan - 02-05-2004, 12:40 AM
[No subject] - by anpagam - 02-05-2004, 12:40 AM
[No subject] - by Mathan - 02-05-2004, 12:41 AM
[No subject] - by Mathivathanan - 02-05-2004, 12:43 AM
[No subject] - by Mathan - 02-05-2004, 12:48 AM
[No subject] - by Mathivathanan - 02-05-2004, 12:53 AM
[No subject] - by Mathan - 02-05-2004, 01:01 AM
[No subject] - by adipadda_tamilan - 02-05-2004, 03:29 AM
[No subject] - by adipadda_tamilan - 02-05-2004, 03:30 AM
[No subject] - by Eelavan - 02-05-2004, 04:09 AM
[No subject] - by Eelavan - 02-05-2004, 04:16 AM
[No subject] - by Mathan - 02-05-2004, 06:57 AM
[No subject] - by Mathivathanan - 02-05-2004, 09:02 AM
[No subject] - by Eelavan - 02-05-2004, 11:21 AM
[No subject] - by Eelavan - 02-05-2004, 11:22 AM
[No subject] - by Mathivathanan - 02-05-2004, 11:47 AM
[No subject] - by anpagam - 02-05-2004, 12:50 PM
[No subject] - by Mathan - 02-05-2004, 01:04 PM
[No subject] - by anpagam - 02-05-2004, 01:05 PM
[No subject] - by Mathan - 02-05-2004, 01:18 PM
[No subject] - by Paranee - 02-05-2004, 01:27 PM
[No subject] - by kuruvikal - 02-05-2004, 01:29 PM
[No subject] - by anpagam - 02-05-2004, 01:32 PM
[No subject] - by Paranee - 02-05-2004, 01:34 PM
[No subject] - by Paranee - 02-05-2004, 01:38 PM
[No subject] - by Mathan - 02-05-2004, 01:45 PM
[No subject] - by Mathan - 02-05-2004, 01:48 PM
[No subject] - by Paranee - 02-05-2004, 01:55 PM
[No subject] - by Mathan - 02-05-2004, 01:57 PM
[No subject] - by anpagam - 02-05-2004, 02:01 PM
[No subject] - by Mathan - 02-05-2004, 02:01 PM
[No subject] - by Mathan - 02-05-2004, 02:08 PM
[No subject] - by Paranee - 02-05-2004, 02:09 PM
[No subject] - by Mathan - 02-05-2004, 02:23 PM
[No subject] - by anpagam - 02-05-2004, 02:48 PM
[No subject] - by Mathan - 02-05-2004, 03:42 PM
[No subject] - by Mathivathanan - 02-05-2004, 05:32 PM
[No subject] - by anpagam - 02-05-2004, 11:23 PM
[No subject] - by Mathan - 02-06-2004, 12:37 AM
[No subject] - by Mathivathanan - 02-06-2004, 03:51 AM
[No subject] - by கெளஷிகன் - 02-06-2004, 10:40 AM
[No subject] - by Eelavan - 02-06-2004, 11:01 AM
[No subject] - by Eelavan - 02-06-2004, 11:02 AM
[No subject] - by kuruvikal - 02-06-2004, 11:41 AM
[No subject] - by Mathan - 02-06-2004, 12:02 PM
[No subject] - by kuruvikal - 02-06-2004, 12:17 PM
[No subject] - by Mathan - 02-06-2004, 12:31 PM
[No subject] - by Mathan - 02-06-2004, 05:07 PM
[No subject] - by Mathivathanan - 02-06-2004, 05:45 PM
[No subject] - by Mathan - 02-06-2004, 09:30 PM
[No subject] - by manimaran - 02-07-2004, 01:41 AM
[No subject] - by Mathivathanan - 02-07-2004, 09:16 AM
[No subject] - by kuruvikal - 02-07-2004, 11:28 AM
[No subject] - by Mathan - 02-16-2004, 10:35 PM
[No subject] - by Mathivathanan - 02-17-2004, 11:58 AM
[No subject] - by Mathan - 03-13-2004, 02:48 PM
[No subject] - by Mathan - 03-14-2004, 08:06 PM
[No subject] - by Mathan - 04-07-2004, 09:52 AM
[No subject] - by Eelavan - 04-07-2004, 04:26 PM
[No subject] - by Paranee - 04-08-2004, 03:03 PM

Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)