05-26-2004, 06:13 PM
இலங்கை அமைதி முயற்சிக்கு ஆதரவு - மன்மோகன்!
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண அந்நாட்டு அரசு விடுதலைப் புலிகளும் நடத்திவரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா முழு ஆதரவு தரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்!
பிரதமராக பொறுப்பேற்ற மன்மோகன் சிங்கிற்கு இலங்கைப் பிரதமர் மஹிண்டா ராஜபச்சே வாழ்த்து தெரிவித்து தொலைபேசியில் பேசியபோது, இலங்கை அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக மன்மோகன் தெரிவித்தார் என அயலுறவு பேச்சாளர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இலங்கையின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் உள்ளிட்டு அங்கு வாழும் அனைத்துப் பிரிவு மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றக் கூடிய எந்தத் தீர்வையும் இந்தியா ஆதரிக்கும் என்று மன்மோகன் கூறியுள்ளார்.
இந்தியா - இலங்கை இடையே விரிவான பொருளாதார ஒப்பந்தம் உருவாக்குவது குறித்து இருவரும் விவாதித்ததாகவும் அயலுறவு பேச்சாளர் தெரிவித்தார்.
Webulagam

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>