Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் டிக்சிட்
#12
ராஜீவ் படுகொலை: விசாரணைக் குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்க அர்ஜூன் சிங் கோரிக்கை


புதுதில்லி, மே 27} முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான விசாரணைக் குழுவின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பரிந்துரை செய்துள்ளார் மனிதவள மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் அர்ஜூன் சிங்.


பாஜக ஆட்சியின்போது இதுகுறித்து விசாரிக்க 'எம்எம்டிஏ' என்னும் பன்முக விசாரணை அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டது. இதன் பதவிக்காலம் தற்போது மே 31ம் தேதியுடன் முடிவடிகிறது. இந்நிலையில், இந்த அமைப்பிற்கு கால நீட்டிப்பு வழங்க அர்ஜூன் சிங் முடிவு செய்துள்ளார். இதற்கான ஒப்புதலை பெறுவதற்காக பிரதமருக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.


காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் தங்களுக்கு தேவையான இலாகாக்களை 2 நாட்களுக்கு முன்னர் தான் திமுக கேட்டுப் பெற்றது. அமைச்சரவையில் திமுக சார்பாக இடம்பெற்றுள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக 'எம்எம்டிஏ' விசாரணைக் குழுவால் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், அந்த விசாரணைக் குழுவின் காலத்தை நீட்டிப்பு செய்ய அர்ஜூன் சிங் முடிவெடுத்துள்ளதும், இந்த குழுவின் இறுதி அறிக்கையை பெறுவதில் விரைவு காட்டவேண்டும் என்று கூறியிருப்பதும் காங்கிரஸ் கூட்டணியில் சர்ச்சையை கிளப்பும் என்று கூறப்படுகிறது.


'எம்எம்டிஏ' விசாரணைக் குழு பற்றி பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் சிபிஐ இயக்குனர் புதன்கிழமையன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். மேலும், உள்துறை செயலாளரும் இதுகுறித்து தனது சக அதிகாரிகளுடன் விவாதித்துள்ளார்.


காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே, ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக் குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் முடிவெடுத்திருப்பது கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 05-26-2004, 05:55 PM
[No subject] - by Mathan - 05-26-2004, 06:11 PM
[No subject] - by Mathan - 05-26-2004, 06:13 PM
[No subject] - by Eelavan - 05-26-2004, 06:16 PM
[No subject] - by Mathan - 05-26-2004, 06:22 PM
[No subject] - by Eelavan - 05-26-2004, 06:28 PM
[No subject] - by Mathan - 05-26-2004, 06:37 PM
[No subject] - by Manithaasan - 05-26-2004, 11:52 PM
[No subject] - by kuruvikal - 05-27-2004, 12:08 PM
[No subject] - by Mathan - 05-27-2004, 03:02 PM
[No subject] - by Mathan - 05-27-2004, 03:24 PM
[No subject] - by Mathan - 05-27-2004, 03:59 PM
[No subject] - by Eelavan - 05-27-2004, 09:08 PM
[No subject] - by tamilini - 05-27-2004, 09:47 PM
[No subject] - by Mathan - 05-28-2004, 10:07 PM
[No subject] - by Mathan - 05-29-2004, 02:47 AM
[No subject] - by Eelavan - 05-29-2004, 05:05 PM
[No subject] - by Mathivathanan - 05-29-2004, 05:51 PM
[No subject] - by Eelavan - 05-29-2004, 07:24 PM
[No subject] - by Mathivathanan - 05-29-2004, 09:32 PM
[No subject] - by Eelavan - 05-29-2004, 09:59 PM
[No subject] - by Mathan - 05-30-2004, 07:12 AM
[No subject] - by Mathan - 05-30-2004, 07:13 AM
[No subject] - by Mathan - 05-30-2004, 07:16 AM
[No subject] - by Mathan - 05-30-2004, 03:16 PM
[No subject] - by Mathan - 05-30-2004, 07:03 PM
[No subject] - by Mathan - 05-30-2004, 07:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)