05-28-2004, 10:07 PM
சோனியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்த ஜெயலலிதா வகுத்த வியூகமே புலிகள் மீதான தடை நீடிப்பு
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதித்திருந்த தடையை, இந்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிýத்துள்ளது. கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவை அடுத்து 'இந்தியாவின் புதிய அரசு, விடுதலைப்புலிகள் இயக்கம் மீது கடும் போக்கை கடைப்பிடிýக்க உள்ளது" என்ற கருத்துப்பட, கட்டுரைகள் எழுதப்படுவதையும், அதையொட்டிý அரசியல் ஆய்வுகளும் பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் காணக்கூýடிýயதாகவுள்ளது.
காங்கிரஸ் கட்சிக் கூýட்டணியின் தலைமையில், புதிய அரசு அமைக்கப்பட்டிýருந்த போதிலும், இந்தப் புதிய அரசிற்கும், இத் தடைச்சட்ட நீடிýப்பிற்கும் சம்பந்தம் இல்லை என்பதே உண்மையாகும். சற்று ஊன்றிக் கவனித்தால் சில விடயங்கள் புலனாகும்.
சில கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, நடாத்தப்பட்ட இந்தியப் பொதுத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்களிப்பு, மே மாதம் 10 ஆம் திகதியன்று நடைபெற்றது. இப்பொதுத் தேர்தலின் தீர்க்கமான முடிýவுகள் 13 ஆம் திகதியன்று வெளிவந்து விட்டன. சோனியா காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக் கூýட்டணியானது, எதிர்பாராத வெற்றியைப் பெற்று, ஆட்சியை அமைக்கக் கூýடிýய நிலை மே மாதம் 13 ஆம் திகதியன்று தெளிவாக உருவாகியது. அதற்கு அடுத்த நாள், அதாவது மே மாதம் 14 ஆம் திகதியன்று இந்திய உள்துறை அமைச்சு, ஓர் ஆணையொன்றைப் பிறப்பிக்கின்றது. சட்டவிரோத நடவடிýக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு, முன்னைய மத்திய அரசு நீடிýக்கின்றது. விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு சட்டவிரோத இயக்கம் என்றும் 'இந்திய நாட்டிýன் இறையாண்மைக்கும், ஒற்றுமைப்பாட்டிýற்கும், விடுதலைப்புலிகளின் வன்முறைச் செயற்பாடுகள் அச்சுறுத்தலாக இருக்கும்" என்றும் இந்த தடை நீடிýப்புக்கு இந்திய உள்துறை அமைச்சு காரணம் காட்டிýயிருந்தது.
இந்த ஆணையை, இந்திய உள்துறை அமைச்சு தமிழ்நாடு மாநில அரசிற்கு அனுப்பிய தினம் மே மாதம் 14 ஆம் திகதி வெள்ளக்கிழமை.
ஆனால், இந்த தடை உத்தரவை தமிழ்நாடு மாநில அரசு தன்னுடைய சிறப்பு அரச வர்த்தமானி ஊடாக வெளியிட்ட தினம் மே மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை.
அதாவது, இந்தியாவின் முன்னைய மத்திய அரசு பிறப்பித்த இந்த தடையுத்தரவை, சரியாக ஒருவாரம் கழித்து, ஜெயலலிதாவின் மாநில அரசு வர்த்தமானிய10டாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. அந்த வர்த்தமானிப் பிரகடனத்தைக் கூýர்ந்து கவனித்தால், இந்தியாவின் முன்னைய அரசு இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்த தினம் மே மாதம் 14 ஆம் திகதி என்று இருப்பதைக் காண முடிýயும். ஜெயலலிதா சரியாக ஒரு வாரம் காத்திருந்து மே மாதம் 21 ஆம் திகதி அன்று, இத்தடையாணையைப் பிரகடனப்படுத்தியதன் காரணங்கள் யாதோ?
சிலவற்றை நாம் எளிதாகவே ஊகிக்க முடிýகின்றது. மே மாதம் 21 ஆம் திகதி ராஜீவ் காந்தியின் நினைவு தினமாகும்! சோனியா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கூýட்டணி வெற்றி பெற்று, அரசு அமைக்கும் இந்த வேளையில், வை. கோபாலசாமியின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற விடுதலைப்புலிகள் ஆதரவுக் கட்சிகள் காங்கிரஸ் கூýட்டணியில் இடம் பெற்றுள்ள இந்த வேளையில் இலங்கைப் பிரச்சினை குறித்து, இந்தியாவின் புதிய அரசு உத்தியோகப10ர்வமாக எதுவும் சொல்வதற்கு முன்னால், சோனியா காந்தி அம்மையாருக்கு ஒரு தர்மசங்கட நிலையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட செயற்பாடுதான் இது.
ஏற்கனவே, தன்னுடைய கீழ்த்தரமான அரசியல் பிரசாரங்கள் ஊடாக, திருமதி சோனியா காந்தியைக் கேவலமாக விமர்சித்து வந்த ஜெயலலிதா இம்முறை ஒரு அரசியல் பின்னடைவை புதிய அரசிற்கு ஏற்படுத்த முனைந்திருக்கின்றார்.
இந்த முயற்சிகளின் எதிர்வினைகள் மீண்டும் ஜெயலலிதாவுக்கு எதிராகவே வந்து முடிýயும் என்பதை ஏனோ அவர் உணர முடிýயாதவராகவே இருக்கின்றார்.
விடுதலைப்புலிகள் மீதான இந்தத் தடை நீடிýப்பு துரதிர்ர்;டவசமான ஒன்றுதான்! அதில் சந்தேகமில்லை. ஆயினும் இத்தடை நீடிýப்புக்கான காரணங்களை இன்றைய காலகட்டத்தில வைத்து ஆராய்ந்தால், அவை வலுவில்லாத, பொருத்தமில்லாத காரணங்களாக இருப்பதையே காண முடிýகின்றது.
சட்டவிரோத நடவடிýக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ், விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை, மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிýத்தமைக்கு இவ்வர்த்தமானியில் கூýறப்பட்ட காரணங்களில் முக்கியமான ஒன்றாக கீழ்வரும் காரணம் கூýறப்பட்டுள்ளது.
'தனது வன்முறை மற்றும் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டிýனை விடுதலைப்புலிகள் கைவிடாத பட்சத்தில் அவர்களது நடவடிýக்கைகள் காரணமாக, இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிýற்கும் ஆபத்து ஏற்படக் கூýடும்" என்று, இத்தடை நீடிýப்பின் முக்கிய காரணம் தெரிவிக்கின்றது. இது சரியான காரணமா? இந்தக் காரணத்தில் ஏதேனும் உண்மை இருக்கின்றதா?கடந்த இரண்டு ஆண்டு காலத்திற்கும் மேலாக, யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டு, }லங்கா அரசோடு சமாதானப் பேச்சுவார்த்தைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டு வந்துள்ளார்கள். }லங்காவின் அரசு இந்த ஆண்டு மாறியபோதும் கூýட, ஜனாதிபதி சந்திரிகா புதிய அரசோடு, சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு ஒன்றினை அடைவதற்கு விடுதலைப்புலிகள் முயன்று வருகின்றனர். ஆகவே முன்னாள் இந்திய மத்திய அரசு குறிப்பிட்டுள்ள வன்முறை நிலைப்பாடு என்ற சொற்றொடர் உண்மையற்றதும், பொருத்தமற்றதுமாகும்.
அடுத்து இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டிýனை, விடுதலைப்புலிகள் கொண்டுள்ளார்கள் என்று தடை நீடிýப்பிற்கான காரணத்தை முன்னைய இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள், இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டிýனை கொண்டிýருக்கின்றார்களா?இந்தியாவுடனான உளப்ப10ர்வமான, ஆத்மார்த்தமான நட்புறவை நாடிý, தன்னுடைய உள்ளக் கிடக்கையை, விருப்பத்தை, வேண்டுகோளை தமிழீழத் தேசியத் தலைமை தொடர்ந்தும் தெரிவித்தே வந்துள்ளது. தன்மீது இந்திய அரசியல் இராணுவ அழுத்தங்கள் இருந்த நேரத்திலும் சரி, அத்தகைய அழுத்தங்களை வெற்றி கொண்ட வேளையிலும் சரி, சிங்கள அரசுகளுடனான போரில், இராணுவ வெற்றிகளையும், அரசியல் வெற்றிகளையும் பெற்றிட்ட போதும் சரி, தமிழீழத் தேசியத் தலைமை, தன்னுடைய உள்ளக் கிடக்கையை, இந்திய தேசத்தின் மீதான தன்னுடைய நட்புணர்வை வெளிப்படுத்தியே வந்துள்ளது. வரலாற்றிலிருந்து, சில சம்பவங்களைச் சுட்டிýக் காட்டுவது இவ்வேளையில் பொருத்தமாக இருக்கும்.
இந்திய- இலங்கை ஒப்பந்தக் காலகட்டத்தின் போது அதாவது சுமார் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னுடைய சுதுமலைப் பிரகடனப் பேச்சின் போதும், இந்தியாவுடனான நட்புறவை வலியுறுத்திப் பேசி இருந்ததை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுக் காட்ட விழைகின்றோம். 'இந்திய- இலங்கை ஒப்பந்தமானது தமிழ் மக்களுக்கு எந்த விதமான உரிமையையும் பெற்றுத் தராது" என்பதை விளக்கிய பிரபாகரன், அதே மேடையிலேயே, இந்தியாவின் மீதான தன்னுடைய நம்பிக்கையையும், நட்புணர்வையும், தெளிவுபடுத்தியிருந்தார், 'நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம், நாம் இந்தியாவிற்கு எதிரானவர்கள் அல்ல" என்று விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை அன்றே தலைவர் தெளிவாக்கியிருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், உலக நாடுகள் அனைத்தினது கவனத்தையும் ஈர்த்து, நடைபெற்ற சர்வதேச ஊடகவியலாளர் மாநாட்டின் போதும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவுடனான நட்புறவு குறித்து மீண்டும் வலியுறுத்திப் பேசி இருந்தார்.
1987 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் கொண்டிருந்த இராணுவ அரசியல் பலம் வேறு, 2002 ஆம் ஆண்டு புலிகள் கொண்டிருந்த இராணுவ அரசியல் பலம் வேறு! இந்தப் பதினைந்து ஆண்ட காலத்தில் விடுதலைப்புலிகளின் இராணுவ அரசியல் வளர்ச்சி மிகப்பெரிய பரிமாணத்தை எட்டிவிட்டது. ஆயினும், இந்த இரண்டு வித்தியாசமான காலப்பகுதியிலும் அதாவது 1987 இலும், 2002 இலும் இந்தியாவுடனான நட்புறவு குறித்து ஒரே கருத்தைத்தான் தமிழீழ தேசியத் தலைமை கொண்டிருந்தது.
பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுடனான பேச்சுவார்த்தைகளின் போதும், இந்தியாவின் அனுசரணையையும், நட்பையும் விடுதலைப்புலிகள் நாடியதையும் நாம் சுட்டிக் காட்ட விழைகின்றோம். ஆனால், துரதிர்ர்;ட வசமாக முன்னைய இந்திய அரசு விடுதலைப் புலிகளின் நேசக்கரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்திய அமைதி காக்கும் படையினருடனான போர் குறித்து நாம் விருப்பு வெறுப்பின்றி சிந்தித்துப் பார்த்தால் அதில் ஓர் அடிப்படை நியாயம் பலமாக இருப்பதை நாம் புரிந்து கொள்ள முடி யும். சுருக்கமாகக் கூறினால், ஈழத் தமிழர்கள் குறித்த ஆனால், ஈழத் தமிழர்கள் சம்பந்தப்படாத 'இலங்கை- இந்திய" ஒப்பந்தம் ஒன்றை ஈழத் தமிழர்கள் மீது திணிக்க முனைந்த போது, தனது உரிமையையும், சுதந்திரத்தையும் காப்பாற்ற ஈழத் தமிழினம் போராடியது. இதேபோல், வேறு ஒரு வல்லரசு இந்தியா சம்பந்தப்படாத ஒப்பந்தம் ஒன்றை இந்தியா மீது திணிக்க முனைந்திருந்தால், இந்தியா தன்னுடைய உரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடியிருக்கும். இதில் இருக்கும் அடிப்படை நியாயத்தை நாம் புரிந்து கொள்வது கடினமான ஒன்றல்ல.
ஆகவே, இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை விடுதலைப்புலிகள் இயக்கம் கொண்டிருக்கின்றது என்பதை தடை நீடிப்புக்கான காரணமாக, இந்திய முன்னாள் மத்திய அரசு கூறியிருப்பது மிகத் தவறானதாகும்.
அடுத்து, 'விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் ஆபத்து ஏற்படக் கூடும் என்ற குற்றச்சாட்டு, இத்தடை நீடிப்பின் ஊடே முன் வைக்கப்பட்டுள்ளது. இதுவும் மிகத் தவறான கருத்தாகும்.
இந்தியாவின் பிராந்திய மேலாண்மைக்கும், இறையாண்மைக்கும் எதிராக }லங்கா அரசுகள் தான் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளன. காலாகாலமாக இந்தியாவின் விரோத சக்திகளுடன்தான் }லங்கா அரசுகள் நட்பு பாராட்டி வந்துள்ளன. சீனா-பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நெருங்கிய உறவை }லங்கா அரசுகள் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாது அமெரிக்காவின் மேலாண்மையை, தென் கிழக்காசியப் பகுதிகளில் மேலோங்கச் செய்வதற்கும் }லங்கா உதவி செய்து வந்துள்ளது.
ஆனால், தமிழரின் விடுதலைப் போராட்டம் இந்தியாவுக்கு உண்மையிலேயே நன்மையைத்தான் அளித்துள்ளது. சரியாக சொல்லப் போனால், விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் இந்தியாவின் பிராந்திய மேலாண்மைக்குத் துணையாகத்தான் இருந்துள்ளது.இன்று தமிழர் தேசம், தனது நிலப்பரப்புகளைத் தம்மிடமே தக்க வைத்துக் கொண்டிருப்பதனால்தான், இந்தப் பகுதிகளுக்குள் இந்திய விரோத சக்திகள் புகமுடியாமல் போனது. இல்லாவிட்டால் அந்தப் பகுதிகளையெல்லாம் இந்திய விரோத நாடுகளுக்கு }லங்கா அரசு குத்தகைக்குக் கொடுத்திருக்கும்! இப்பொழுது வாயளவிலும், காகிதத்திலும் போடப்படுவதாகச் சொல்லப்படுகின்ற வெளிநாட்டு ஒப்பந்தங்கள், முழுமையாகச் செயற்படுத்தப்பட்டு, இலங்கைத் தீவின் கரையோரப் பகுதிகளில், இந்திய விரோத சக்திகள் தான் குடியிருந்திருக்கும்!
பல்வேறு சமயங்களிலும் தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தியா குறித்தும், இந்தியாவுடனான நட்புறவு குறித்தும் வெளியிட்ட கருத்துகளை நாம் மீண்டும் இப்போது குறிப்பிட விரும்புகின்றோம். விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு வருமாறு:
'இந்தியாவின் பிராந்திய மேலாண்மைக்குப் பங்கம் விளைவிக்க விடுதலைப்புலிகள் விரும்பவில்லை".
'இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் விடுதலைப்புலிகள் எதிரானவர்கள் அல்ல".
'இந்தியாவின் தேசிய நலன்களுக்கு விடுதலைப்புலிகள் தடையாக இருக்கப் போவதில்லை".
'இந்தியாவின் புவியியல் கேந்திர நலனுக்கு எதிராக பொருளாதார நலன்களுக்கு எதிராக, விடுதலைப்புலிகள் செயற்படுபவர்கள் அல்லர்".
'இந்தியாவின் பிராந்திய அரசியல் களத்தில் குழப்பம் எதையும் விளைவிக்க விடுதலைப்புலிகள் விரும்பவில்லை".
'இந்தியாவுடன் நல்லுறவைப் பேணி நட்புறவோடு இணங்கிச் செயற்படவே விடுதலைப்புலிகள் மனப்ப10ர்வமாக விரும்புகிறார்கள்".
'இந்தியாவை ஒரு நட்புச் சக்தியாக நேச சக்தியாகவே விடுதலைப்புலிகள் கருதுகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில், இந்தியாவின் முன்னைய அரசால் விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டுள்ள வேளையில் இந்தியாவின் புதிய அரசு ஆக்கப10ர்வமானதும், நியாய ப10ர்வமானதுமான முடிவுகளை எடுக்கும் என்று நாம் நம்புகின்றோம். இன்றைய காலகட்டத்தில் இலங்கைத் தீவின் அரசியல் இராணுவக் களங்களில் விடுதலைப்புலிகளும் }லங்கா அரசும் சம பங்காளிகளாக இருக்கும் நிலை உருவாகி உள்ளது. விடுதலைப்புலிகளே, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற உண்மை வெளிப்படையாகவே நிரூ பிக்கப்பட்டு விட்டது. மதச் சார்பற்ற ஆட்சியை வழங்குவதற்கு உறுதி ப10ண்டுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, அதே போன்ற மதச்சார்பற்ற நிர்வாகத்தை தன்னுடைய இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை ஊடாக வழங்க இருப்பதாகத் தெரிவித்திருக்கும் விடுதலைப்புலிகளின் நேசக்கரத்தைப் பற்றிக் கொள்ளக் காலமும் கனிந்து வந்துள்ளது.
விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு குறித்தும் செயற்பாடுகள் குறித்தும் மேலும் விளக்கமும், தெளிவும் தேவைப்படும் பட்சத்தில அவற்றை இரு தரப்பும் பேசித் தீர்த்துக் கொள்வதற்கான காலமும் இதுவே! இந்தியாவின் புதிய அரசு, புதிய பாதையினூடே பயணம் செய்வதன் மூலம் ஈழத் தமிழினத்தோடு நேர்மையான நல்லுறவை, நட்புணர்வை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நல்லவை நடக்க வேண்டும். அவை விரைவிலேயே நடைபெற வேண்டும்.
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>