Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கையில் பிறந்தது அதிஷ்டமா துரதிஷ்டமா?
#1
நான் அதிர்ஷ்டசாலியா?துரதிர்ஷ்டசாலியா?

மணிரத்தனம் அவர்கள் இயக்கி கமலகாசன் நடித்த 'நாயகன்" படத்தில் ஒரு காட்சி வரும்,ஆரம்பத்தில் தந்தையைக் கொன்றவனை ஆத்திரத்தில் கொலை செய்த கமலகாசன் (நாயக்கர்) பின்னர் அதனையே நல்லவர்களைக் காக்கவும் தீயதை அழிக்கவும் ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்,"நாலு பேருக்கு நல்லது நடக்குமென்றா ஒருத்தன் அழிவதில் தப்பில்லை" என்பது அவர் கொள்கை.அப்படிப்பட்ட வாழ்க்கை நடத்தி வரும் 'நாயக்கரை'ப் பார்த்து அவரது பேர்த்தி கேட்பதாக ஒரு காட்சி வரும்.

"தாத்தா நீங்கள் நல்லவரா கெட்டவரா' என்று பேர்த்தி கேட்க கமல் சிறிது நேரம் யோசித்துவிட்டு "தெரியலைம்மா' என்று பதில் சொல்வார்

அந்தத் திரைப்படத்தில் என்னை மிகவும் பாதித்த காட்சி அது,இன்னும் நிறையப் பேர் அந்த ஒரு கேள்வியில் கலங்கிப் போயிருக்கிறார்கள்.இன்னும் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தீர்களானால் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை,ஈழத்தில் நடக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் அந்தத் திரைப்படத்தின் கதைக்கருவுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பது தோன்றும்.


இங்கு நான் சொல்ல வந்தது அதுவல்ல,நீங்கள் நல்லவரா கெட்டவரா என்றே திடுக்கிடும் கேள்வி மாதிரி ஒரு கேள்வி வீரம் செறிந்த மண்ணில் பிறந்த நீங்கள் அதிர்ஷட்க்காரரா, துரதிருஷ்டக்காரரா? என்று மிகவும் கஷ்டமான ஒரு கேள்வியை சுந்தர்வடிவேல் அண்ணா எனது ஓடுகிற வண்டியோட தொடரின் பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்காவிட்டால் வேதாளத்துக்குப் பதில் சொல்லாத விக்கிரமாதித்தன் கணக்கில் எனது தலை சுக்கு நூறாகிவிடும் என்றெல்லாம் அவர் மிரட்டவில்லை.ஆனாலும் அவர் மிரட்டவில்லை என்பதற்காக அதனை என்னால் கூறாமல் இருக்க முடியவில்லை.

இப்போது மீண்டும் கதைக்கு வருவோம்,நாயக்கர் ஒரு கொள்கையுடன் போராடுகிறார் அதற்காகக் கொலை கூடச் செய்கிறார்,இது நாயக்கர் கொள்கை அவரது பிரச்சனை ஆனால் அடியுங்கடா என்று சொன்னவுடன் அடித்துவிட்டு வரும்,கொண்டுவா என்றவுடன் வெட்டிக் கொண்டுவரும் கூட்டமொன்று அவருடன் இருக்கிறது.

அது கூலிக்கு மாரடிக்கும் கூட்டமென்று இலகுவில் கூறிவிடலாம் ஏன் கூலிக்கு இந்தத் தொழிலைச் செய்யவேண்டும் வேறு தொழில்கள் இல்லையா? என்று கேட்டால் கூலியை விட தாமும் நாயக்கர் செய்யும் நல்ல காரியங்களில் பங்கெடுக்கிறோம் என்றொரு மனச்சாந்திதான் அவர்களை வழிநடத்துகின்றது.

இப்படி இந்தக் கதை சொன்னவுடன் ஈழத்தில் நடக்கும் போராட்டத்தை தாதா சாம்ராஜ்ஜியமாகவும் பிரபகரனை நாயக்கர் மாதிரியும் கற்பனை பண்ணிவிடவேண்டாம் ஒரு யதார்த்தமான உவமை அவ்வளவே.

என்னிடம் நிறையப் பேர் இதைவிட வித்தியாசமான கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள்,வெறும் மண்னுக்கு,மொழிக்கு இவ்வளவு உயிரிழப்புக்கள் தேவையா என்று அப்போது எனக்குத் தோன்றியது இதே கேள்விதான் வெறுமனே ஒரு சீலைத்துணி அதற்கு தேசியக் கொடியென்று பேர் சூட்டி அது ஏற்றப்படும் போது காலிழந்தவன் கூட ஒருகணம் எழுந்திருக்க முயற்சிக்கிறானே அது ஏன் வெறும் துணிக்கு ஏன் இத்தனை மரியாதை?

சிங்களம் மட்டும் தனிச்சட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டபோது அதனை எதிர்த்து அரசாங்கத்தில் தாம் வகித்து வந்த பெரிய பெரிய பணமும் புகழும் நிரம்பிய பதவிகளை உதறித்தள்ளிவிட்டு விவசாயம் செய்தார்களே எமக்கு முந்திய தலைமுறை.அவர்களுக்கு தமது தமிழ் மொழியின் மீது ஏன் இத்தனை வெறி?

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை போனார்களே தமிழகத்துப் பெருமக்கள் வெறுமனே ஒரு மொழிக்காக ஏன் இத்தனை வெறி?

சுதந்திரம் என்ற ஒரு சொல்லுக்காக செய்து கொண்டிருந்த வேலைகளைத் தூக்கிப் போட்டுவிட்டு சுபாஷ் சந்திரபோஸ் பின்னால் திரண்டார்களே ஒரு கூட்டம் அவர்களுக்கு ஏன் மண்மீது இத்தனை வெறி.அதே சுதந்திரத்துக்காக உயிரைக் கொடுத்த பகத்சிங்,வாஞ்சிநாதன் போன்றொருக்கு ஏன் வன்முறையில் இவ்வளவு ஆசை?

அதேபோல இங்கே கணணியின் முன்னால் உட்கார்ந்து நான் கவிதையும் கதையும் எழுதிக் கொண்டிருக்க என் நாட்டைக் காப்பாற்ற தன் உயிரைத் தியாகம் செய்யக் காத்திருக்கும் என்னுடன் கூடப்படித்தவர்கள்,இவர்களுக்கு என்ன தேவை போராடவேண்டும் அதற்காக உயிரைக் கொடுக்க வேண்டுமென்று?

வெறுமனே கங்கை கொண்ட கடாரம் வென்ற தமிழர் என்ற பெருமையை நிலைநாட்டவா இத்தனை ஆண்கள் போராடப் போகின்றார்கள்?.ஆனையடக்கிய அரியாத்தையின் வம்சம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கவா இத்தனை பெண்கள் போராடப் போகிறார்கள்?எல்லாவற்றையும் கால் மேல் கால் போட்டுக் கொண்டிருந்து செய்யும் சினிமா விமர்சனம் மாதிரி ஒரு வரியில் சொல்லிவிடலாம்
தமிழீழப் போராட்டம்...அபத்தம்.
கரும்புலிகள் உயிர்த்தியாகத்தால் கிளாலி கடந்த எத்தனை பேர் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் போய் இருந்து கொண்டு இப்படிச் சொன்னார்கள்?

நாங்கள் கவிதை எழுதுவோம் கட்டுரை எழுதுவோம்,தேவையான போதெல்லாம் விமர்சனம் கூடச் செய்வோம்.எல்லாம் இன்னொருவன் குருதியிலும் எலும்பிலும் நாங்கள் கட்டிய வீடுகளில்...விடுதலைப் போராட்டத்தை விமர்சிப்பதாகச் சொல்லிக் கொண்டு செத்தவர்கள் மீது சேறள்ளிப் போடுகிறோம் அவர்களின் ஆவி திரும்ப வந்து என்னால் தானே நீ உயிரோடிருக்கிறாய் என்று கேட்கமாட்டாது என்ற துணிவு எங்களுக்கு.

என் மண்ணில் பிறந்ததற்காய் நான் அதிர்ஷ்டசாலியா துரதிர்ஷ்டசாலியா என்று என்னால் சொல்ல முடியவில்லை.இன்னொருவன் உயிர்த்தியாகத்தில் உயிர் தப்பி வாழ்வது எனது 'அதிர்ஷ்டம்' என்று சொல்லமுடியவில்லை.அதே போல நான் நேசிக்கும் மண்ணை விட்டு வர நேரிட்டதற்கு நான் 'துரதிர்ஷ்டசாலி' என்பதை சொல்லாமலும் இருக்க முடியவில்லை

நன்றி - ஈழநாதன் http://kavithai.yarl.net/archives/000985.html#more
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
இலங்கையில் பிறந்தது அ - by Mathan - 05-31-2004, 01:11 PM
[No subject] - by Mathivathanan - 05-31-2004, 09:40 PM
[No subject] - by Eelavan - 06-01-2004, 06:31 AM
[No subject] - by kuruvikal - 06-01-2004, 03:48 PM
[No subject] - by Eelavan - 06-02-2004, 02:56 PM
[No subject] - by kuruvikal - 06-02-2004, 03:31 PM
[No subject] - by Eelavan - 06-02-2004, 03:44 PM
[No subject] - by kuruvikal - 06-02-2004, 03:50 PM
[No subject] - by Eelavan - 06-02-2004, 03:58 PM
[No subject] - by kuruvikal - 06-02-2004, 04:42 PM
[No subject] - by Mathivathanan - 06-03-2004, 03:12 AM
[No subject] - by Mathan - 06-03-2004, 04:05 AM
[No subject] - by Eelavan - 06-03-2004, 06:48 AM
[No subject] - by Mathivathanan - 06-03-2004, 12:26 PM
[No subject] - by kuruvikal - 06-03-2004, 01:18 PM
[No subject] - by Eelavan - 06-03-2004, 01:24 PM
[No subject] - by Eelavan - 06-03-2004, 01:27 PM
[No subject] - by kuruvikal - 06-03-2004, 01:59 PM
[No subject] - by Eelavan - 06-03-2004, 02:09 PM
[No subject] - by kuruvikal - 06-03-2004, 02:19 PM
[No subject] - by Eelavan - 06-03-2004, 02:30 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 01:52 AM
[No subject] - by Eelavan - 06-04-2004, 06:24 AM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 11:34 AM
[No subject] - by Eelavan - 06-04-2004, 12:44 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 01:05 PM
[No subject] - by Eelavan - 06-04-2004, 01:08 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 01:24 PM
[No subject] - by Eelavan - 06-04-2004, 01:32 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 01:58 PM
[No subject] - by Eelavan - 06-04-2004, 02:41 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 03:33 PM
[No subject] - by Rajan - 06-11-2004, 03:18 AM

Forum Jump:


Users browsing this thread: 9 Guest(s)